பிக் பாஸ் நிகழ்ச்சியை நாம் ஏன் புறக்கணிக்க வேண்டும்?- thamizhstudio
பிக் பாஸ் நிகழ்ச்சியை நாம் ஏன் புறக்கணிக்க வேண்டும்?
சினிமாவில் தோல்வியுற்றவர்களும், புதிதாக கால் பதிக்க விரும்புபவர்களும் அல்லது நாம் விரும்பி பார்க்கும் படியாக நடிப்பவர்களுமே இங்கு உள்ளார்கள். ஆனால் சில சமயம் சாதாரன மக்களும் ஐந்து நிமிட புகழ்ச்சிக்காக நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள்.
karuppu.thamizhstudio.com/news/why-should-we-ignore-the-big-boss
-V.கோபி
மனித வாழ்வு நமது எதிர்பார்ப்பிற்கு மாறாக பல திருப்பங்களை கொண்டது. ஏன் இப்படி திடீரென்று ஆழமான சிந்தனையோடு பேசுகிறேன் என் நினைக்கிறீர்களா? ஒரு வாரத்திற்கு முன்பு வரை பிக்-பாஸ் நிகழ்ச்சியை நான் பார்த்ததேயில்லை. மூன்று மாதம் தினமும் ஒரு மணி நேரம் ஒன்றுக்கும் உதவாத இந்நிகழ்ச்சியை மக்கள் பார்த்து நேரத்தை வீணாக்குகிறார்களே என நான் நினைத்ததுண்டு. என்னை பொருத்தவரை பிக்-பாஸ் நிகழ்ச்சி மிகவும் மோசமானது. ஆனால் என் நிலையும் மாறியது. என் வேலை நிமித்தமாக பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்க தொடங்கிய நான் பின் அதை நிறுத்த முடியவில்லை. அதற்காக இதை நல்ல நிகழ்ச்சி என்று கூறமாட்டேன்.
முதலில் ஒன்றை கூறியே ஆக வேண்டும். இதுபோன்ற யதார்த்த நிகழ்ச்சியினைப் பார்ப்பதினால் நாம் இன்னும் கோபக்காரர்களாக மாறத் தொடங்கியுள்ளதாக சில ஆய்வுகள் கூறுகிறது. இந்த பிக்-பாஸ் வீட்டில் குடியிருக்கும் மக்கள் வேறுயாருமல்ல. நாம் அன்றாடம் கண்டுகளிக்கும் கவர்ச்சிகரமான சினிமா உலகத்தை சேர்ந்தவர்களே. சினிமாவில் தோல்வியுற்றவர்களும், புதிதாக கால் பதிக்க விரும்புபவர்களும் அல்லது நாம் விரும்பி பார்க்கும் படியாக நடிப்பவர்களுமே இங்கு உள்ளார்கள். ஆனால் சில சமயம் சாதாரன மக்களும் ஐந்து நிமிட புகழ்ச்சிக்காக நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள்.
நமது வீட்டில் உட்கார்ந்து கொண்டு இந்நிகழ்ச்சியின் மூலமாக மனித உளவியலை பருந்து பார்வையாக பார்த்து கொண்டிருப்பதாக நாம் நினைத்து கொண்டிருக்கிறோம்.அங்கு நடக்கும் சண்டைகளும், நட்புகளும், வாதங்களும், உறவுகளும் உண்மை என்று நினைத்து கொண்டிருக்கிறோம். இன்றைய சமூகத்தின் பிரதிபலிப்பே இந்நிகழ்ச்சி என நாம் நம்புகிறோம்.ஆனால் இதில் கசப்பான உண்மை என்னவென்றால் எந்த நல்ல நோக்கத்திற்காகவும் நாம் இந்த நிகழ்ச்சியை பார்ப்பதில்லை. மக்கள் ஒருவருக்கொருவர் விலங்குகளைப் போல் சண்டை போடுவதை பார்த்து ரசிக்கவே இந்நிகழ்ச்சியைப் பார்க்கிறோம்.
இருட்டு அறையில் மக்கள் ஒருவருக்கொருவர் குறை கூறியபடியும், ஏற்றுகொள்ள முடியாத அளவிற்கு சண்டை போடுவதையும் பார்க்கும் போது நாம் இந்த நாயகர்களை விட மேலானவர்கள் என நினைக்கிறோம். பெரும் நாயகர்களே இப்படி தொலைக்காட்சியில் நடிக்கும் போது நான் ஏன் என் சிறு நண்பர்கள் குழுவிடம் நடிக்ககூடாது என மனதிற்குள் கேட்டு கொள்கிறோம்.
மற்றொரு விஷயம் இந்நிகழ்ச்சியினால் நம்மிடம் மனச்சிக்கல் தோன்றுகிறது. உதாரணமாக நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஒருவரை உங்களுக்கு பிடிக்கவில்லை. அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப் பட்டதும், அவருக்கு இது தேவையானது தான், நான் அவருக்கு எதிராக வாக்களித்தேன் என அனைவரிடமும் கூறுகிறீர்கள். இது மனச் சிக்கல் இல்லாமல் வேறு என்ன?
இதுவரை உடல்ரீதியான மற்றும் காம ரீதியான சித்ரவதைகளை ரசித்த நம் கண்கள், இப்போது புதிதாக மனதளவிலான சித்ரவதைகளை—ஒருவரை கொடுமைபடுத்தி அதன்மூலம் நமது இன்பத்தை தூண்டுவது-- ரசிக்க தொடங்கியுள்ளோம். நிகழ்ச்சி முழுதும் இதுமாதிரியான பல உதாரணங்களை கூறலாம்.
இப்போது நான் கூறுவது ஒன்றுதான். தொலைக்காட்சிகளிலேயே பிக்-பாஸ் போன்ற மிகவும் கீழ்த்தரமான நிகழ்ச்சி எதுவும் இல்லை. இதை உடனடியாக நிறுத்த வேண்டும்.
Article link:https://www.popxo.com/2017/12/bigg-boss-is-bad-for-you/
Comments
Post a Comment