ஐநா சபையில் இருந்து திரும்பியவர் கைதா? ஊடகங்கள் உண்மையை பேச வேண்டும்!"
ஐநா சபையில் இருந்து திரும்பியவர் கைதா? ஊடகங்கள் உண்மையை பேச வேண்டும்!"
-----------------
அடக்குமுறை சட்டங்களை பயன்படுத்தி எந்தவொரு நபரையும் கைது செய்வதை நாம் எதிர்க்கிறோம். அதே நேரத்தில் ஒரு நபர் கைது செய்யப்படும் போது, அந்த நபர் எதற்காக கைது செய்யப்படுகிறார் என்கிற தகவலை ஊடகங்கள் துல்லியமாகக் கூற வேண்டும்.
அடக்குமுறை சட்டங்களை பயன்படுத்தி எந்தவொரு நபரையும் கைது செய்வதை நாம் எதிர்க்கிறோம். அதே நேரத்தில் ஒரு நபர் கைது செய்யப்படும் போது, அந்த நபர் எதற்காக கைது செய்யப்படுகிறார் என்கிற தகவலை ஊடகங்கள் துல்லியமாகக் கூற வேண்டும்.
கைது செய்யப்பட்டுள்ள ஒரு நபர் குறித்து குறிப்பிடும் செய்திகளும், அறிக்கைகளும் "நடப்பு ஐநா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில்" தூத்துக்குடி பிரச்சினை குறித்து பேசி விட்டு வந்ததால் ஒருவர் கைது செய்யப்பட்டதாக கூறுகின்றன.
-----------------
இது குறித்து சில தகவல்கள்:
இது குறித்து சில தகவல்கள்:
1. நடப்பு கூட்டத்தொடர் என்று தற்போது ஐநா மனித உரிமைகள் பேரவையில் எந்த கூட்டமும் நடக்கவில்லை. ஐநா மனித உரிமைகள் பேரவையின் 38 ஆவது கூட்டம் கடந்த ஜூன் 18 முதல் ஜூலை 6 வரை நடந்து முடிந்துவிட்டது. அடுத்த 39 ஆவது கூட்டம் வரும் செப்டம்பர் 10 ஆம் நாள் தொடங்க இருக்கிறது.
அதாவது, ஐநா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடர் முடிந்து ஒரு மாத காலத்துக்கும் மேல் ஆகிவிட்டது. எனவே, நேற்றோ, அதற்கு முந்தின நாளோ, கடந்த வாரமோ ஐநா சபையில் பேசியது போன்ற தொனியில் "ஐநா மனித உரிமைகள் பேரவையில் இருந்து திரும்பிய போது கைது செய்யப்பட்டார்" என்று எழுதுவது சரியான செய்தி அல்ல.
2. ஐநா மனித உரிமைகள் பேரவை என்பது, பன்னாட்டளவிலான ஒரு அரசியல் அரங்கம். அது ஒரு நீதிமன்றம் அல்ல. பொதுவாக, ஐநா அமைப்புகளில் அந்தக் கூட்டத்தொடரில் பேசுவதற்கான செயற்குறிப்பு (agenda) வெளியிடுவார்கள். அத்தகைய செயற்குறிப்புகளுக்கு வெளியே உள்ள விஷயங்களை அங்கு பேசுவதால் எந்தப் பயனும் இல்லை.
பன்னாட்டு நிறுவனங்களின் மனித உரிமைகள் மீறல் குறித்த ஒரு பன்னாட்டு உடன்படிக்கையை உருவாக்குவதற்கான அதிகாரப்பூர்வ விவாதங்கள் கடந்த 2014 முதல் நடந்துவருகிறது. இதற்கான விவாதம் (Forum on Business and Human Rights) 2018 ஜூன் 27 ஆம் நாள் ஐநா மனித உரிமைகள் பேரவையில் நடந்தது. அந்த விவாதத்தில் இந்தியாவில் இருந்து யாரும் பேசவில்லை.
அதாவது, தூத்துக்குடி நிகழ்வு குறித்து பேசுவதற்கு 'தொலைதூர' வாய்ப்புள்ள ஒரு நிகழ்வில் (Forum on Business and Human Rights) இந்தியாவில் இருந்து யாரும் பேசவில்லை.
-----------------
"ஊடகங்கள் என்ன செய்ய வேண்டும்?"
"ஊடகங்கள் என்ன செய்ய வேண்டும்?"
1. ஐநா மனித உரிமைகள் பேரவையின் செயற்குறிப்பில் (agenda) தூத்துக்குடி விவகாரமோ, அது தொடர்பான வேறு விவகாரங்களோ விவாதத்தில் இல்லை. எனவே, தூத்துக்குடி நிகழ்வு குறித்து ஐநா மனித உரிமைகள் பேரவையில் பேசுவதால் எந்தப் பயனும் இல்லை என்கிற உண்மையை ஊடகங்கள் உணர்ந்து, அதற்கேற்ப செய்திகளை வெளியிட வேண்டும்!
(குறிப்பு: ஐநா மனித உரிமைகள் ஆணையம் (Human Rights Commission) என்பது வேறு, ஐநா மனித உரிமைகள் பேரவை (Human Rights Council) என்பது வேறு. ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் (Commission) புகார் அளிக்க வழி இருக்கிறது. ஆனால், ஐநா மனித உரிமைகள் பேரவையில் (Council) செயற்குறிப்பில் இல்லாத தூத்துக்குடி நிகழ்வு குறித்து பேசுவது குறிப்பிடத்தக்க பயன் எதையும் அளிக்காது. இந்த வேறுபாட்டை உணர வேண்டும்).
2. ஐநா மனித உரிமைகள் பேரவையின் கூட்டம் முடிந்து ஒரு மாதத்திற்கும் மேல் ஆகிவிட்டது. எனவே, கடந்த ஜூன் மாதம் நடந்த கூட்டம் என்று குறிப்பிட வேண்டுமே தவிர, கடந்த வாரத்தில் நடந்த கூட்டம் என்பது போல எழுதக் கூடாது.
-----------------
குறிப்பு: மேற்கண்ட விவகாரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விடயம் அல்ல. ஆனாலும், ஐநா மனித உரிமைகள் பேரவை தொடர்பாக மிதமிஞ்சிய நம்பிக்கையை (hype) ஏற்படுத்தும் தகவல்களை ஊடகங்கள் தவிற்க வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்!
குறிப்பு: மேற்கண்ட விவகாரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விடயம் அல்ல. ஆனாலும், ஐநா மனித உரிமைகள் பேரவை தொடர்பாக மிதமிஞ்சிய நம்பிக்கையை (hype) ஏற்படுத்தும் தகவல்களை ஊடகங்கள் தவிற்க வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்!
Frw mgs
Comments
Post a Comment