Posts

Showing posts with the label தந்தை பெரியார்

அவர் ‘தந்தை பெரியார்

சேரன்மாதேவியில் வ.வே.சு. ஐயர் பிரிட்டிஷ் கல்வியைத் தவிர்த்து தேசியக் கல்வி என்று கல்விச் சாலையை ஆரம்பித்தபோது அனைவருக்கும் வ.வே.சு. ஐயரின் தேசபக்தி தெரிந்தது. ஆனால் பெரியாருக்கு மட்டும் அந்தக் கல்விக் கூடத்தில் பார்ப்பனர்களுக்குத் தனி விருந்து, மற்றவர்களுக்குத் தனி விருந்து என்கிற பாகுபாடு தெரிந்தது. பொது பந்தி போடு, இல்லை என்றால் கல்விக் கூடத்தை இழுத்து மூடு என்று போராடி பொதுப் பந்தியைக் கொண்டு வந்தார். பிரிட்டிஷ் காலத்திலேயே போராடிப் பெற்ற இட ஒதுக்கீட்டை சுதந்திரத்திற்கு பிறகு இட ஒதுக்கீடு திறமை உள்ளவர்களுக்கு வாய்ப்பைக் கெடுத்துவிடும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தபோது அனைவருக்கும் அந்தத் தீர்ப்பு திறமைக்கான ஆதரவு தீர்ப்பாகத் தெரிந்தது. ஆனால் பெரியார் மட்டும் கல்வி மற்றும் சமூக ரீதியாக சமமான வாய்ப்புப் பெறாதவர்கள் சமூகரீதியாக மேற்தட்டில் உள்ளவர்களோடு போட்டியிட வாய்ப்பு இல்லை என்று சொல்லி இட ஒதுக்கீட்டை ஆதரித்து போராடினார். சமஸ்கிருதம் தெய்வீக மொழி என்று ஒரு பக்கமும் ஹிந்தி நாட்டில் பெரும்பாலான மக்கள் பேசும் மொழி என்றும் தமிழ் தாய் மொழி என்றும் ஆளாளுக்கு கம்பு சுத்திக்...