Posts

Showing posts with the label தமிழ்த் தேசம் - எங்கே நிற்கிறது? - தங்க.செங்கதிர்

தமிழ்த் தேசம் - எங்கே நிற்கிறது? - தங்க.செங்கதிர்

தமிழ்த் தேசம் - எங்கே நிற்கிறது? -  தங்க.செங்கதிர் தமிழ்த் தேசியம்  திராவிடம்  இந்தியா  தேசிய இனப் பிரச்சினை 'தமிழ்நாடு தமிழருக்கே!’ - என்கிற முழக்கம் தமிழகத்தில் ஒலிக்கத் தொடங்கி எண்பது ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. 1937 சூலையில் திருச்சி மாநாட்டில் மறைமலையடிகள், சோமசுந்தரபாரதியார், பெரியார், கி.ஆ.பெ. விசுவநாதம் உள்ளிட்டோர் கலந்துகொண்டு இயற்றப்பட்ட தீர்மானமும், 1938-இல் திருச்சியிலிருந்து சென்னை நோக்கி நடந்த இந்தித் திணிப்பு எதிர்ப்புப் பேரணியின் நிறைவில் 'தமிழ்நாடு தமிழருக்கே!’ என்பதுதான் தீர்வு என்பதான அறிவிப்புமே தமிழ்நாட்டு விடுதலைக்கான தொடக்க தீர்மானங்களாக, முழக்கங்களாக இருந்தன. periyar anna and veeramani ஆனால் அத் தீர்மானத்திற்கோ, முழக்கத்திற்கோ - இன்றைய காலத்திற்கான தமிழ்த்தேசத்திற்குரிய பொருளைப் பொருத்திப் பார்க்க முடியாது என்பது மட்டுமல்ல அவ்வாறு பார்க்கவும் கூடாது. அன்றைக்கு எழுந்த தமிழ்நாட்டு விடுதலை முழக்கத்திற்கான அடிப்படைக் காரணிகள் தமிழ்மொழி உரிமைக்கானதாக, பார்ப்பனிய எதிர்ப்புக்கானதாக மட்டுமே இருந்தன. அதன்பிறகும் அம் முழக்கத்தின் உள்ளடக்கப் பொருள்...