Posts

Showing posts with the label PRPC யின் அறிக்கை

கைதுகளால் எங்களை மக்களிடமிருந்து பிரிக்க முடியாது ! - என்ற PRPC யின் அறிக்கை மக்கள் இயக்கங்களுக்கே உண்டான துணிச்சல் இது...

கைதுகளால் எங்களை மக்களிடமிருந்து பிரிக்க முடியாது ! - என்ற PRPC யின் அறிக்கை மக்கள் இயக்கங்களுக்கே உண்டான துணிச்சல் இது... தூத்துக்குடி போலீசால் சட்ட விரோதமாகக் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் வாஞ்சிநாதன் யார்? அவரது பணிகள் என்ன? மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் விரிவான பத்திரிகை செய்தி! சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வில் வழக்கறிஞராக பணியாற்றிவரும் மனித உரிமை செயற்பாட்டாளர் திரு. வாஞ்சிநாதன் (37) அவர்களின் கைதை மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் வன்மையாக கண்டிக்கிறது. கடந்த 20.06.2018 அன்று, மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் தகுதிநீக்க வழக்கில், உச்சநீதிமன்றத்தில் வழக்காடிவிட்டு டில்லியிலிருந்து கிளம்பி இரவு 11.45 மணியளவில், சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய போது போலீசால் கைது செய்யப்பட்டார். திரு. வாஞ்சிநாதன், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வருகிறார். இந்த அமைப்பு இதற்கு முன்னர் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் என்ற பெயரில் செயல்பட்டது. வளர்ந்து வரும் வழக்கறிஞரான வாஞ்சிநாதன், மக்களின் உரிமைகளுக்காக நீதிமன்றங்களிலும், களத்திலும் தொட...