Posts

Showing posts with the label பெரியார்

தாழ்த்தப்பட்டோர் உரிமையும் உயர்வும் பெற தந்தை பெரியார் ஆற்றிய பணிகள் !

தாழ்த்தப்பட்டோர் உரிமையும் உயர்வும் பெற தந்தை பெரியார் ஆற்றிய பணிகள் !       - மஞ்சை வசந்தன்    தந்தை பெரியார் மனிதநேயத்தின் மறுவடிவம். மனிதனை மனிதன் பேதப்படுத்தி,  அடக்கி, ஒடுக்கி, அடிமைப்படுத்தி உரிமைகளைப் பறித்து கொடுமைப்படுத்துவதை  அறவே வெறுத்துக் கொதித்தெழுந்தவர்.    இப்படிப்பட்ட கொடுமைகளுக்குக் காரணமான சாஸ்திரம், புராணம், மதம், கடவுள்,  சாதி இவற்றைக் கடுமையாகச் சாடி அவற்றை ஒழிக்க ஆயுள் முழுவதும் அயராது  போராடியவர்.    அவர் ஒட்டுமொத்தத் தமிழினத்தின் மேம்பாட்டிற்குப் பாடுபட்டவர். தமிழர்  என்னும்போது குறிப்பாக பிற்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் இழிவும் தாழ்வும்  நீங்கி, உயர்ந்தெழ உரிய வழிகண்டவர். இதை இந்தியா அளவில் உள்ள பிற்பட்டோர்  தலைவர்களும், அண்ணல் அம்பேத்கர் அவர்களும் ஏன் காந்தியாருங்கூட ஒப்புக்  கொண்டுள்ளனர்.    வீதிகளில் தாழ்த்தப்பட்டோர் செல்லக்வடாது என்பதை எதிர்த்து வைக்கம்  போராட்டத்தில் பெரியார் தீவிரமாய் ஈடுபட்டிருந்த நிலையில், வீதிகளில்  தாழ்த்தப்பட்டோர் செல்ல அனுமதி கிடை...