Posts

Showing posts with the label திராவிடக் கட்சிகளின் 50 ஆண்டுக் கால ஆட்சி

திராவிடக் கட்சிகளின் 50 ஆண்டுக் கால ஆட்சி... நமக்குச் சொல்லும் பாடம் என்ன? - பொழிலன்

Image
திராவிடக் கட்சிகள் தமிழ்நாட்டின் ஆட்சிக் கட்டிலில் ஏறி 50 ஆண்டுகள் ஆகிவிட்டதாகப் பெருமைப்பட்டுக் கொள்கின்றனர் சிலர். 67-ல் திமுக ஆட்சியைப் பிடித்த ஆண்டி லிருந்து ஐம்பதாண்டுகள் ஆகிவிட்டன என்கின்றனர். ஆனால், திமுக ஆட்சிக் கட்டிலுக்குள் நுழைய முயன்ற 1952-லிருந்து அது வெற்றி பெற்ற 1967 வரை அதைத் ‘திராவிடக் கட்சி’ என்று பெரியார் அறிவிக்கவில்லை. 1949-இல் திமுக தொடங்கப்பட்டு 1952-இன் தேர்தலின் போது திராவிட நாடு விடுதலைக் கொள்கையை ஏற்பவர்களுக்குத் தாங்கள் ஆதரவளிப்பதாக அறிவித்தது தி.மு.க. 1957-இல் நடந்த தேர்தலில்தான் திமுக நேரிடையாகப் பங்கேற்றது. எனவே 1957-ஆம் ஆண்டுத் தேர்தலின் அரசியல் முகமை குறித்து அறியும்போதுதான் திமுகவின் தேர்தல் அரசியல் நுழைவு எந்த வகையில் திராவிடக் கொள்கையுடையதாயில்லை என்பதையும் தமிழக நலனுக்கு அடித்தளமாக அமையவில்லை என்பதையும் உணர முடியும். திராவிடர் கழகம் கொண்டிருந்த பார்ப்பன எதிர்ப்பு, சாதி எதிர்ப்பு, மூடநம்பிக்கை எதிர்ப்பு, இந்திய எதிர்ப்பு, கடவுள் மறுப்பு உள்ளிட்ட எவற்றையும் தி.மு.க. முன்னெடுத்துத் தங்கள் கொள்கையாக அறிவித்துக் கொள்ளவும் இல்லை,...