மருத்துவ நல உரிமைகளும் ஹீலர் பாஸ்கர் கைதும்!
மருத்துவ நல உரிமைகளும் ஹீலர் பாஸ்கர் கைதும்! சிறப்புக் கட்டுரை: மருத்துவ நல உரிமைகளும் ஹீலர் பாஸ்கர் கைதும்! ராஜன் குறை கிருஷ்ணன் முதலீட்டிய, பிற்காலனிய எதிர்ப்பாக நினைத்துக்கொண்டு சமூக வலைதளங்களில் மரபு ஆதரவு கோஷங்கள் பல கண்ணில்படுகின்றன. குறிப்பாக ஹீலர் பாஸ்கர் கைது தவறு என்ற கருத்து பலரால் கூறப்படுகிறது. சில விஷயங்களைத் தெளிவாகப் பார்க்க விரும்புகிறேன். 1. எல்லாக் காலங்களிலும் பிரசவம் என்பது ஓடும் ரயிலில், வாகனங்களில், பொது இடங்களில் என்று பல சந்தர்ப்பங்களில் திடீரென பிரசவ வலி அதிகமாகி நிகழத்தான் செய்கின்றன. கூட இருக்க நேரும் முகமறியாப் பெண்கள் உதவுகின்றனர். எந்தப் பெண்ணும் தானாக, இயற்கையாகப் பிரசவிக்க முடியும் என்பதில் யாருக்கும் ஐயம் இருக்க முடியாது. 2. ஆனால், இன்றைய நிலையில் வீட்டிலேயே பிரசவம் பார்ப்பதாக முடிவு செய்வதற்கு மனத் தெளிவும், அனுபவமிக்கவர்களின் அண்மையும் வேண்டும். குறிப்பாக, வலியால் பெண்கள் நீண்ட நேரம் அவதிப்பட நேர்ந்தால் அதை மனம் பதைக்காமல் இயல்பு என்று ஏற்றுக்கொள்ள முடிய வேண்டும். எதிர்பாராத சிக்கல்கள் ஏதும் ஏற்பட்டால் என்ன செய்வது என்ற கவலையும் இருக்கத்தான் ச...