பௌத்தம்
பௌத்தம் மாறுவது தொடர்பாக இரண்டு கேள்விகள் இங்கு எழுப்பப்படுகிறது. 1.பௌத்தம் மாறினால் மிகவும் பின்தங்கியுள்ள மக்களுக்கு அவர்களின் சமுக நீதியான இட ஒதுக்கீடு கிடைக்குமா? மேற்கண்ட கேள்விக்கு எதிராக உடனே எழும்பும் இன்னொரு கேள்வி ... 2.இடஒதுக்கீடு கிடைத்தால் சாதி சான்றிதழ் இருக்குமே இதனால் மீண்டும் சாதி உயிர்ப்புடன் இருக்குமே? முதல் கேள்விக்கான பதில்: *********** 1.பௌத்தம் மாறினாலும் இடஒதுக்கீடு கிடைக்கும். இது "சமூகநீதி காவலர் வி.பி.சிங்" அரசால் கொண்டுவரப்பட்டது. இரண்டாவது கேள்விக்கான பதில்: ************* பட்டியலின மக்கள் பௌத்தம் ஏற்பது, 1. தீண்டாமையிலிருந்து விடுதலை பெற்று, சமூக அந்தஸ்து பெறவும். 2.இந்திய முழுவதும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களை பௌத்தத்தின் கீழ் ஒருங்கிணைக்கவும், 3.அதன் மூலம் அரசியல் அதிகாரம் பெறவும் தான். பொதுவாக நாம் மூன்று நேரங்களில் மட்டுமே சாதி சான்றிதழ் பயன்படுத்துகிறோம். 1.பள்ளியில் சேரும்போது, 2.கல்லூரியில் சேரும்போது. 3.அரசு பணியில் சேரும்போது. மற்ற நேரங்களில்,எங்கோ ஒரு பெட்டியில் இருக்க போகும் சாதி சான்றிதழை ஒழித்து விட்டால், சாதி ஒழிந...