இன்றைக்குத் தமிழ்ச் சமூகம் மறந்துவிட்ட, ஆனால் கட்டாயம் நினைவில் வைத்திருக்க வேண்டிய தலைவர் யார் ?. திருமாவேலன் ஆசிரியர்
ப.திருமாவேலன் ஆசிரியர். ஆனந்தவிகடன் வினா: "இன்றைக்குத் தமிழ்ச் சமூகம் மறந்துவிட்ட, ஆனால் கட்டாயம் நினைவில் வைத்திருக்க வேண்டிய தலைவர் என்று யாரைக் குறிப்பிடுவீர்கள்?" பதில்: " நிச்சயமாக பெரியார்தான். வெறும் கடவுள் மறுப்பாளராகவும் பார்ப்பன எதிர்ப்பாளராகவும் மட்டுமே நாம் பெரியாரை அடையாளப்படுத்துகிறோம். அதையும் முழுமையாக புரிந்துகொள்ளாமல் விமர்சிக்கிறோம். பெரியார் பல்வேறு தளங்களில் இயங்கினார். அவற்றுள் இரண்டுதான் மேலேசொன்னவை. அவரை அவற்றுக்குள் அடக்குவதே தவறான கற்பிதம். பெரியாரின் அடிப்படைக் கொள்கைகள் இரண்டு.ஒன்று சாதிஒழிப்பு, மற்றொன்று பெண்உரிமை. இவற்றிற்கு எவையெல்லாம் தடையாக இருந்தனவோ அவற்றையெல்லாம் எதிர்த்தார். சாதியைஎதிர்த்தார். அதை மதம் காப்பாற்றுகிறது என்றார்கள்; மதத்தை எதிர்த்தார்.மதம் தன் கொள்கைகளை வேதத்திலிருந்து எடுத்துக்கொள்கிறது என்றார்கள்; வேதத்தை எதிர்த்தார்.அதுதான் சாத்திரம் என்றார்கள். அந்த சாத்திரத்தை யார் உருவாக்கியது என்று கேட்டார். கடவுள் என்றார்கள். சாதியை உருவாக்குகிற, மக்களைப் பிளவுபடுத்துகிற கடவுளும் இருக்க முடியுமா என்றார்...