Posts

Showing posts with the label மொழிப்போர் ஈகியர் நாள்

சனவரி 25 மொழிப்போர் ஈகியர் நாள் ஆனது எப்படி?

சனவரி 25 மொழிப்போர் ஈகியர் நாள் ஆனது எப்படி?-வரலாற்றைத் திரும்பிப் பார்ப்போம் 1963ஆம் ஆண்டு திசம்பர் மாதம் எழும்பூர் தொடர்வண்டி நிலையம். காவல் துறை புடை சூழ வருகிறார் முதல்வர் பக்தவச்சலம். கூட்டத்தை விலக்கிக் கொண்டு வந்த ஒரு இளைஞன் பக்தவச்சலத்தின் காலில் விழுந்து கதறினான். “ஐயா, தமிழைக் காப்பாற்றுங்கள். இந்தியை நுழைய விடாதீர்கள். நீங்களும் தமிழர்தானே” பக்தவச்சலம் காவல்துறைக்கு உத்தரவு போட்டார். “இந்தப் பைத்தியத்தைக் கைது செய்யுங்கள்”. ஒரு மாத காலத்திற்குப் பின்- 25.1.1964ஆம் நாள் அந்த இளைஞன், திருச்சி தொடர்வண்டி நிலையத்தின் வாசலில் விடியற்காலை 4.30 மணிக்குப் பெட்ரோல் ஊற்றித் தீ வைத்துக் கொண்டு, ‘தமிழ் வாழ்க, இந்தி ஒழிக’ என்று கத்தியவாறு கருகிப் போனான். தமிழக முதல்வர் பக்தவச்சலத்தால் ‘பைத்தியம்’ என்று அழைக்கப்பட்ட அந்த வீர இளைஞன் தான் கீழப்பளூவூர் சின்னச்சாமி. இறக்கும் போது அவன் வயது 27. சின்னச்சாமி. அவன் பெற்றோருக்கு ஒரே பிள்ளை. திருமணமாகி 23 ஆண்டுகள் கழித்து பிறந்த மகன். திருச்சி மாவட்டம் அரியலூர் வட்டத்தைச் சேர்ந்த கிராமம் கீழப்பளூவூர்.ஆறுமுகம் தங்கத்தம்மாள...