சோசலிசம் என்றால் என்ன?
சோசலிசம் என்றால் என்ன ? சோசலிசம் என்பது அனைத்து உற்பத்தி கருவிகள் , ஆலைகள் அரசு ஆகியவை பாட்டாளி வர்க்கத்துக்கு சொந்தமாவதும் பாட்டாளிவர்க்கத்தால் உணர்வுபூர்வமாக விஞ்ஞான வழியில் நிர்வகிக்கப்படுவதும் ஆகும் . சோசலிசத்தில் எப்போது அடையப்பெறும் ? அடிமையாக சுரண்டப்படுபவர்களாக பல்வேறு சாதியாலும் மத்தாலும் பிரிந்து கிடப்பவர்களான வெகுளியாக வாழும் இந்த இழப்பதற்கு ஏதுமற்ற பாட்டாளிவர்க்கம் ஆயுதம் தாங்கி போராடி தனிசொத்துரிமையை ரத்து செய்து முதலாளி வர்க்கத்திடம் இருந்து அரசு , தனிசொத்து , ஆட்சி அதிகாரத்தை கைபற்றும் போது சோசலிசம் சாத்தியமாகும். சோசலிசத்திற்கும் , முதலாளித்துவத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன ? உழைப்பும் சமூக வயமாக மாறியது முதலாளித்துவத்தின் வெற்றி அதாவது பெரிய தொழிற்சாலைகள் ஆயிரக்கணக்கான மக்களை இணைத்து நடத்தப்படும் ஆலைகள் ஆகியவற்றின் மூலம் உழைப்பு என்பது சமூகமொத்தத்தின் உழைப்பு என்பதை கொண்டு வந்தது முதலாளித்துவம்தான் ஆனால் இந்த மொத்த சமூக உழைப்பின் பயன் தனிநபரின் கையில் கொடுத்தது அதனுடைய முரண்பாடு அதை ச...