Posts

Showing posts with the label கவிஞர் புதியமாதவி

காலாவில் பயணித்த எம் அப்பாக்கள் - கவிஞர் புதியமாதவி

காலாவில் பயணித்த எம் அப்பாக்கள்-கவிஞர் புதியமாதவி ( இந்த திரைப்பட விமர்சன கட்டுரை எழுதியவர் மும்பையில் வாழும் "கவிஞர் புதிய மாதவி" .) " நான் படிப்பின் மோஸ்தரில் என் அப்பாக்களை விட்டு விலகினேன்.. காலம் செல்ல செல்ல இச்சமூகம் என் அப்பாக்களின் உசரங்களைக் காட்டிக் கொண்டே இருக்கிறது! காலாவை திரையில் பார்த்தேன். (செரிடோஸ் ஐமெக்ஸ் அரங்கில்) நேற்றிரவு தூக்கம் வரவில்லை. காலாவின் வசனங்களில் மட்டுமல்ல போராட்டங்களிலும் ரத்தங்களிலும் என் அப்பாக்கள் … அவர்களின் முகம் என்னருகில் வந்தது. அவர்களின் சில பக்கங்களை நானே புரட்டாமல் இருக்கவே நினைக்கிறேன். அந்தப் பக்கங்களை காலா என்னைப் புரட்ட வைத்தது. திரையரங்கிலிருந்து வெளியில் வரும்போது தலை வலிக்க ஆரம்பித்தது. ஒவ்வொரு கண்பதி உற்சவம் கடைசி நாள் .. கையில் ஈரக்குலையை ஏந்திக்கொண்டு (ஈரக்குலை என் அம்மாவின் மொழி) இருக்கும் பெண்கள். யார் யாரை வெட்டிச் சாய்ப்பார்கள் என்று யாருக்கும் தெரியாது! பெண்கள் அச்சத்துடன் விழித்திருப்பார்கள். விடிவதற்குள் அந்தச் செய்தியும் வந்து தொலைக்கும். இன்னார் கொலை செய்யப்பட்டார் என்று. கலவரங...