காலா யாருடைய படம்? - மகிழ்நன் பா.ம
காலா யாருடைய படம்? - மகிழ்நன் பா.ம ( இந்த கட்டுரை எழுதியவர் தோழர் மகிழ்நன் பா.ம, மும்பை விழித்தெழு இயக்க முதன்மை ஒருங்கிணைப்பாளர் , காலா திரைப்படத்தில் வசனம் மற்றும் இணை இயக்குனராக பணிபுரிந்துள்ளார் ) அது பேசும் அரசியல் தாராவியுடையது, என்னுடையது…உலகெங்கும் உள்ள விளிம்புநிலை மக்களுடைய நிலவுரிமை பற்றியது, வாழ்வாதார உரிமை பற்றியது…தமிழகத்தில் போதுமான வாழ்வாதார வாய்ப்பு இல்லாத நிலையில் பஞ்சம் பிழைக்க 100 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இடம்பெயர்ந்து போன தாராவி தமிழர்களின், தாராவியின் பிற உழைக்கும் மக்களை பற்றிய படம்… நான் தாராவியில் 25 ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறேன். எங்களுக்கு சினிமா, அரசியல் எல்லாமே தமிழகத்தின் பிரதிபலிப்புதான். எங்களை பற்றிய அரசியல் எதையும் தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சிகள் ஏதும் பேசி நாங்கள் கேள்விப்பட வில்லை…. எங்களது அரசியல் நிகழ்ச்சி நிரலும் அப்படியேதான் இருந்தது. நாங்கள் ஆரம்ப காலத்திலிருந்து சேதுசமுத்திர திட்டம், ஈழ பிரச்சினை, மூவர் தூக்கு போன்றவற்றைதான் பிரதானமாக பேசினோம். முள்வேலிகள் குறித்து சேறும், சகதியுமான சால்களில் பேசி திரிந்...