பிக் பாஸ் நிகழ்ச்சியை நாம் ஏன் புறக்கணிக்க வேண்டும்?- thamizhstudio
பிக் பாஸ் நிகழ்ச்சியை நாம் ஏன் புறக்கணிக்க வேண்டும்? சினிமாவில் தோல்வியுற்றவர்களும், புதிதாக கால் பதிக்க விரும்புபவர்களும் அல்லது நாம் விரும்பி பார்க்கும் படியாக நடிப்பவர்களுமே இங்கு உள்ளார்கள். ஆனால் சில சமயம் சாதாரன மக்களும் ஐந்து நிமிட புகழ்ச்சிக்காக நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள். karuppu.thamizhstudio.com/news/why-should-we-ignore-the-big-boss -V.கோபி மனித வாழ்வு நமது எதிர்பார்ப்பிற்கு மாறாக பல திருப்பங்களை கொண்டது. ஏன் இப்படி திடீரென்று ஆழமான சிந்தனையோடு பேசுகிறேன் என் நினைக்கிறீர்களா? ஒரு வாரத்திற்கு முன்பு வரை பிக்-பாஸ் நிகழ்ச்சியை நான் பார்த்ததேயில்லை. மூன்று மாதம் தினமும் ஒரு மணி நேரம் ஒன்றுக்கும் உதவாத இந்நிகழ்ச்சியை மக்கள் பார்த்து நேரத்தை வீணாக்குகிறார்களே என நான் நினைத்ததுண்டு. என்னை பொருத்தவரை பிக்-பாஸ் நிகழ்ச்சி மிகவும் மோசமானது. ஆனால் என் நிலையும் மாறியது. என் வேலை நிமித்தமாக பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்க தொடங்கிய நான் பின் அதை நிறுத்த முடியவில்லை. அதற்காக இதை நல்ல நிகழ்ச்சி என்று கூறமாட்டேன...