Posts

Showing posts with the label தமிழ் ஆளுமை எம்.சி.ராஜா

எம்.சி.ராஜா : மறக்கப்பட்ட இன்னொரு தமிழ் ஆளுமை - இரா.வினோத்

எம்.சி.ராஜா : மறக்கப்பட்ட இன்னொரு தமிழ் ஆளுமை ================================================== -இரா.வினோத் வரலாற்றில் ம‌றக்கப்பட்ட, மறுதலிக்கப்பட்ட தலைவர்களில் ஒருவர் எம்.சி.ராஜா. 20-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இந்திய தலித் அரசியல் வரலாற்றில், ஒரே நம்பிக்கை நட்சத்திரமாய் மின்னிய தமிழக ஆளுமை. தலித் அரசியலின் முன்னோடிகளில் ஒருவரான அயோத்திதாசப் பண்டிதர் 1914-ல் மறைந்தார். மற்றொரு தலைவர் இரட்டைமலை சீனிவாசன் தென்னாப்பிரிக்காவில் நிலைக்கொண்டிருந்தார். புரட்சியாளர் அம்பேத்கரின் அரசியல் செயல்பாடுகள் சூடுபிடிக்காத நிலையில், நாடு தழுவிய‌ அளவில் தலித் அரசியலை தீவிரமாக முன்னெடுத்தவர் எம்.சி.ராஜா. எனவே தான் அக்காலத்து ஆளுமைகளால் 'பெருந்தலைவர்' என மரியாதையோடு அழைக்கப்பட்டார். கல்வியின் மூலம் அதிகாரம் எம்.சி.ராஜா (17.06.1883 – 20.08.1945) ஆதிதிராவிட மகாஜன சங்கத்தின் ஆரம்பகால‌ நிர்வாகிகளுல் ஒருவரான மயிலை சின்னத்தம்பி பிள்ளையின் மகனாக சென்னை செயிண்ட் தாமஸ் மவுண்டில் பிறந்தார். ராய‌ப்பேட்டை வெஸ்லி மிஷன் பள்ளியிலும், சென்னை கிருத்துவக் கல்லூரியில் படிப்பை முடித்த இவர், பின் அதே ...