மும்பை தமிழ் மாணவ மாணவிகளுக்கான தமிழ் , தமிழ்நாடு , சமூகம் குறித்தான பொது வினா விடை
தமிழ்நாடு குறிப்புகள் -பொது தகவல்கள் 1 ) தமிழகத்தில் அதிக அளவு கல்வியறிவு பெற்ற மாவட்டம் எது? கன்னியாக்குமரி (92.14 சதவீதம்) 2 ) தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்கள் எத்தனை? 13 மாவட்டங்கள் 3 ) தமிழகத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை எவ்வளவு? 234 4 ) தமிழகத்தில் உள்ள மொத்த கிராமங்களின் எண்ணிக்கை எவ்வளவு? 15979 5 ) தமிழகத்தில் உள்ள ராஜ்யசபாவின் எண்ணிக்கை எவ்வளவு? 18 6 ) தமிழகத்தில் உள்ள லோக்சபாவின் எண்ணிக்கை எவ்வளவு? 39 7 ) தமிழகத்தில் குறைந்த எழுத்தறிவு கொண்ட மாவட்டம் எது? தர்மபுரி (64.71 சதவீதம்) 8) தமிழகத்திலுள்ள மொத்த மாவட்டங்கள் எத்தனை? 32 9 ) தமிழகத்தின் கல்வியறிவு எவ்வளவு சதவீதம்? 80.33 சதவீதம் 10 ) தமிழகத்தின் காடுகளின் பரப்பு எவ்வளவு? 17.58 சதவீதம் 11 ) தமிழகத்தின் முக்கிய ஆறுகள் எது? காவேரி, வைகை, தாமிரபரணி, பாலாறு, பவானி 12 ) தமிழகத்தின் முக்கியமான 6 விமானநிலையங்கள் எங்குள்ளது? 1. சென்னை 2. கோவை 3. மதுரை 4. திருச்சி 5 தூத்துக்குடி 6 சேலம் 13) தமிழ்நாட்டில் சமத்துவபுரம் தொடங்கப்பட்ட முதல் மாவட்டம் எது? மதுரை (மேலக்கோட்டை - ஆண்டு 1997) ...