தலை தப்பிய தமிழறிஞர்கள்..கர்நாடக தமிழர் மீது சுமத்தப்பட்ட பழி நீங்கியது!
தலை தப்பிய தமிழறிஞர்கள்..கர்நாடக தமிழர் மீது சுமத்தப்பட்ட பழி நீங்கியது ! 'மூன்று ஜெலட்டின் குச்சிகள், கால் கிலோ வெடி மருந்தைவைத்து பெங்களூருவை முழுவதுமாக அழிக்கவும் இந்தியாவில் இருந்து தனித் தமிழ்நாட்டை உருவாக்கவும் சதிசெய்தார்கள்’ என்று இரண்டு தமிழறிஞர்கள் மீது வழக்குப் போட்டு, அதை நம்பவைக்க முடியுமா? அரசாங்கமும் காவல் துறையும் நினைத்தால் எதையும் செய்யலாம். கர்நாடக காவல் துறை இரண்டு தமிழ் அறிஞர்கள் உள்ளிட்ட 15 அப்பாவி தமிழர்கள் மீது இப்படித்தான் ஒரு வழக்கைப் போட்டது. 11 ஆண்டுகளாக அவர்களை வாட்டி வதைத்த இந்த வழக்கில் அனைவரையும் விடுதலைசெய்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது பெங்களூரு சிறப்பு நீதிமன்றம். திருச்சி தந்தைப் பெரியார் கல்லூரி பேராசிரியராக இருந்த முனைவர் நெடுஞ்செழியன், தமிழகத்தில் உள்ள முக்கியமான தத்துவ, அரசியல் பேராசிரியர்களில் ஒருவர். பெங்களூரு குணா, மிக முக்கியமான சமூகவியல் ஆய்வாளர். இவர்களோடு சில தமிழ் உணர்வாளர்களும் சம்பந்தமே இல்லாமல் பெங்களூரு வெடிகுண்டு வழக்கில் சேர்த்து கைதுசெய்யப்பட்டனர். அதில் மூவர் மரணம், அவமானங்கள், அலைச்சல் என்று ...