எங்கே செல்கிறது இந்தியா? - சு.குமணராஜன்
எங்கே செல்கிறது இந்தியா? ( இந்த கட்டுரையை எழுதியவர் மராட்டிய மாநிலத்தில் இருந்து தமிழ் மனதுடன் வரும் தமிழ் இலெமூரியா மாத இதழின் முதன்மை ஆசிரியர் அய்யா சு.குமணராஜன் அவர்கள் . ) 18 ச ம உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கை விசாரித்து இன்று இந்த அபாரமான தீர்ப்பை வழங்க நீதி மன்றம் 9 மாதங்கள் எடுத்துக் கொண்டது. விசாரணை அனைத்தும் முடிந்த பின்னர் தீர்ப்பை எழுத எடுத்துக் கொண்ட நேரம் ஆறு மாதங்கள். இறுதியில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி சொல்லியிருக்கும் கருத்து சபாநாயகரின் ஆணை தவறு அல்லது சரி எனபதல்ல. சபாநாயகரின் அதிகாரத்தில் தலையிட விரும்பாததால் அவர் ஆணை செல்லுபடியாகும் என்பதே! மற்றொரு நீதிபதி அரசமைப்புச் சட்டத்தின் பல்வேறு சரத்துகளை எ டுத்துக் காட்டி சபாநாயகர் அரசமைப்பு விதிகளை மீறியிருப்பதால் ச ம உறுப்பினர்களின் பதவி நீக்க ஆணை தவறு என்பதாகும். சட்டத்தை ஆய்வு செய்து எது சரி என்று சொல்வதில் உயர்நீதி மன்ற நீதிபதிகளிடையே இவ்வளவு பெரிய வேறுபாடு இருக்குமானால் சாதாரணக் குடிமக்கள் சட்டத்தை எவ்வாறு புரிந்து கொள்வர்? இது தான் இந்திய நீதி மன்றங்களின் வழிகாட்டுதலா? தீர்ப்பு...