Posts

Showing posts with the label தமிழே கணினிப் பயன்பாட்டு

முனைவர் சி.விஜயகுமார் மறைவு

இந்திய மொழிகளில் முதன் முதலாக #தமிழே கணினிப் பயன்பாட்டுக்கு வந்தது. அந்த எழுத்துருவை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தவர்கள் #தமிழீழவிடுதலைப்புலிகளே... அதற்குப் பின்புலமாக இருந்தவர் முன்னாள் ரொரன்ரோ பல்கலைக்கழக பேராசிரியரான கணிதமேதை #விஜயகுமார் அவர்கள் ஆகும். இவர் நேற்று ரொரன்ரோவில் காலமானார். 1980களின் இறுதியில் இந்திய இராணுவத்துதோடு புலிகள் உக்கிரபோரில் ஈடுபட்டிருந்தவேளை... புலம்பெயர் நாடுகளுக்கு விடுதலைப் புலிகளின் செய்திகளை மக்களுக்கு கொண்டு செல்ல தமது கிளைகள் ஊடாக புலிகள் செய்தி ஏடுகளை நடத்தி வந்தனர். போர் செய்திகளை உடனுக்குடன் வெளியிட முன்னைய அச்சமைப்பு வேகம் போதாமல் இருந்த காரணத்தால் புலிகள் புதிய முயற்சிகளில் இறங்கினர். அப்போதுதான் முனைவர் சி.விஜயகுமார் அவர்கள் தன்னிடம் இருந்த திட்டத்தை விடுதலைப் புலிகளின் கனடாப் பொறுப்பாளர் #தொண்டைமானாறு_குணம் அவர்களிடம் தெரிவித்தார். அத்திட்டத்திற்கு கணனிகள் மற்றும் உபகரணங்கள் வாங்க பெரும் நிதி தேவைப்பட்டது. இத்திட்டத்தை விடுதலைப் புலிகளின் மத்தியகுழு உறுப்பினரும் அனைத்துலகச் செயலகப் பொறுப்பாளருமான திரு.#லோறன்ஸ்_திலகர் அவர்களிடம் தெரிவித்த...