மனம் நொந்து போயுள்ள ஆசிரிய சமுதாயம்
மனம் நொந்து போயுள்ள ஆசிரிய சமுதாயம் செய்தி ;- மும்பை - திருவள்ளுவர் நலச்சங்கம் திரு .கஜேந்திரன் மாணவன் தவறு செய்தால் அடிக்கக் கூடாது, திட்டவும் கூடாது, மனம் புண்படும் படி பேசவும் கூடாது... எனில்... படிக்குமாறு அறிவுறுத்தக் கூடாது, ஒழுக்கத்தை வலியுறுத்தக் கூடாது, இது எதுவுமே மாணவனுக்கு பிடிக்காது, மாணவன் மனம் புண்படும். எனில் ஆசிரியரின் (பெற்றோரின் ) வேலை தான் என்ன...? பண்படுத்துவது என்பது புண்படுத்துதல் அல்ல... கற்களை சேதப்படுத்தக் கூடாது என்று சொன்னால் - இங்கு சிற்பங்கள் எப்படி கிடைக்கும்...? நிலங்களை சேதப்படுத்தக் கூடாது என்று சொன்னால் - இங்கு விளைச்சல் எப்படி கிடைக்கும்...? தங்கத்தை நெருப்பில் இடாதே என்று சொன்னால் - தங்க ஆபரணங்கள் எப்படி கிடைக்கும்...? புரிதல் வேண்டும்... பண்படுத்துவது என்பது - புண்படுத்துவது அல்ல என்ற புரிதல் மாணவர்களுக்கு மட்டுமல்ல - மற்றவர்களுக்கும் வேண்டும்...! ஒரு பச்சிளம் குழந்தைக்கு ஊசி போடுகிறார் மருத்துவர்... குழந்தைக்கு வலிக்கும் இது தவறு என்று அவரிடம் சொன்னால் குழந்தை நலமுடன் வாழ்வது எப்படி...? ஒரு வீட்டில...