தீரன் : அதிகாரம் என்பது ஒன்றல்ல ! - நெல்சன் சேவியர்
திரைப்பட விமர்சனம் தீரன் : அதிகாரம் என்பது ஒன்றல்ல ! - நெல்சன் சேவியர் *** *** *** ஒரு திரைப்படம் எப்படிப்பட்ட அனுபவத்தை ரசிகனுக்கு வழங்குகிறது என்பதை விட முக்கியமானது படம் முடிந்து வீட்டுக்கு போகி றவனுக்கு, அது மூளையிலும் மனதிலும் என்னவாக பதிவாகிறது என்பதும் உள்ளுக்குள் எதை கடத்துகிறது என்பதும்தான். ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு குடும்பங்களை சிதைத்த வடநாட்டு கொள்ளையர்களை தமிழக போலீஸ் வேட்டையாடுகிற கதைதான் தீரன் அதிகாரம் ஒன்று ! நிற்க ! ஒரு குற்றவாளியை கைது செய்ய வந்திருக்கிறோம், விசாரணைக்கு வந்திருக்கிறோம் என்கிற பெயரில் தர்மபுரியில் விழுப்புரத்தில் சத்தியமங்கலம் கிராமங்களில் நடத்தப்பட்ட வன்முறையை எல்லாம் கடுமையாக கண்டித்து விட்டு, ராஜஸ்தானில் அதே மாதிரியான தாழ்த்தப்பட்ட - பழங்குடியினர் கிராமத்தில் தமிழக போலீசார் அரங்கேற்றுகிற வன்முறையை பார்த்து ரசித்துக் கொண்டே, கொல்லுங்க என தியேட்டரில் கத்துகிற இந்த எண்ணத்தை நமக்கு விதைத்து எது ? வில்லன் - தமிழனைக் கொன்ற வடமாநிலத்தான், இரக்கமில்லாதவன், அவனை தமிழன் பழி தீர்க்கிறான் என்கிற அடிப்படையில் பல்லுக்கு பல் - கண்...