காலாக்களுக்கு அழிவில்லை - ஆய்வாளர் -ஸ்டாலின் ராஜாங்கம்
காலாக்களுக்கு அழிவில்லை - ஆய்வாளர் -ஸ்டாலின் ராஜாங்கம் றப்புக் கட்டுரை: ஆணவம் கொண்ட மாபலி என்ற அரசன் விஷ்ணுவால் கொல்லப்பட்ட கதையை நினைவுபடுத்தும் பொருட்டே கேரளா உள்ளிட்ட பகுதிகளில் ஓணம் பண்டிகை இன்றும் கொண்டாடப்படுகிறது. இப்புனைவை வரலாறு என்று நம்பியே விழா நடத்துகிறார்கள். இவ்வாறுதான் இங்கு நிலவும் எல்லாக் கதையாடல்களும் வரலாறாகக் கருதப்படுகின்றன. எனவே கதையாடலை மாற்றி எழுதுவது வரலாற்றை மாற்றி எழுதும் பணியாகிவிடுகிறது. தமிழகத்தின் முன்னோடி தலித் சிந்தனையாளரான அயோத்திதாசப் பண்டிதர் (1845-1914) மாபலியின் மேற்கண்ட கதைக்கு மாற்றுக் கதையாடலொன்றை 1907ஆம் ஆண்டு எழுதினார். அவர் காட்டும் கதையாடலில் மாபலி ஒரு பௌத்த அரசன். மாபலிபுரம் என்ற ஊரை ஆண்ட அவன் பௌத்த சங்கத்தில் சேர்ந்து அறம் செய்து புரட்டாசி மாத அமாவாசையில் மரணமடைந்தான். தொடர்ந்து அந்நாளையே மக்கள் மாபலி அமாவாசி என்று நினைவெடுத்து வந்தார்கள். அதன் செல்வாக்கைக் கண்ட விஷ்ணு மதத்தார் பிற்காலத்தில் மாபலியைத் தங்கள் கடவுள் மிதித்துக் கொன்றார் என்ற கதையாக்கி அதையே உண்மைபோல் நிலவச் செய்துவிட்டார்கள் என்றெழுதினார். ஒரு கதைக்குப் ...