மேற்குத் தொடர்ச்சி மலை - யமுனா ராஜேந்திரன்

உலகில் இரண்டு வகையான சினிமாக்கள்தான் உண்டு.



 புத்திசாலித்தனமான சினிமா ஒன்று. ஆத்மார்த்தமான, சகமனிதர் மீது பேரன்பு கொண்ட சினிமா இன்னொன்று. மணிரத்னம், குவின்டின் டரான்டினோ, தியாகராஜன் குமாரராஜா போன்றவர்கள் உருவாக்குபவை முதல் வகை சினிமா. தியோ ஆஞ்சல பெலோஸ், சத்யஜித் ரே, கென் லோச், லெனின் பாரதி (‘மேற்குத் தொடர்ச்சி மலை’) போன்றவர்கள் உருவாக்குபவை இரண்டாவது வகை. ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ போன்ற படங்கள் எனது தலைமுறையில் தமிழில் வரும் என்கிற நம்பிக்கையைக் கொண்டிராதவன் நான். அதுவும் ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ படம் துவங்கி முதல் 20 நிமிடங்கள் எழுப்பிய உணர்வுகள் எந்த உலக சினிமா கிளாசிக்கும் எழுப்பும் உணர்வுக்கும் கொஞ்சமும் குறையாதவை. வாழ்க்கையை, வாழும் சூழலை, இயற்கையின் கருணையை, அன்றாட மனிதரின் இயல்பை, மனிதர் மீதான பேரன்பை இது போல் சொன்ன உலக சினிமாக்கள் மிக மிகக் குறைவு. பிரபஞ்சம் கைக்கெட்டும் தூரத்தில்தான் இருக்கிறது. தமிழ் சினிமா இனி மேற்செல்ல வேண்டுமானால் அது ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ படத்தைக் கடந்து செல்வதால் மட்டுமே சாத்தியம். இது இனி வரும் லெனின் பாரதியின் படங்களுக்கும் பொருந்தும். இந்தப் படம் இருவராலும் 200 பேர்களாலும் உருவாகி இருக்கிறது. அந்த இருவர் லெனின் பாரதியும் தேனி ஈஸ்வரும். கொஞ்சம் உணர்ச்சிவசமான பதிவுதான். நிச்சயம் இது மிகை உணர்ச்சி இல்லை..


Comments

Popular posts from this blog

தமிழகத்தில் சாதிகள் வரலாறு

ஊடகத்துறை Media

தமிழர்களின் கலை தொகுப்பு - அங்கள பரமேஸ்வரி