கமல் ஹாசனுக்கு சமர்ப்பணம்

கமல் ஹாசனுக்கு சமர்ப்பணம்
#ஊரு_சேரியென
வாழறதுக்கு ரெண்டு இடம்..
#டீ_காபியென
குடிக்கறதுக்கு ரெண்டு குவளை
#படியோட_நின்னுக்கன்னு
சாமி கும்பிடறத்துக்கு ரெண்டு இடம்
#கேஸ்ட்நோ பாருன்னு போட்டுட்டு
எஸ்ஸி மட்டும் தவிர்க்கவும்னு
நாலுகால விளம்பரம் நாள்தோறும்
#முற்போக்கு_பேசினாலும்
தாம் பெத்த பொண்ணு புள்ளைக்கு
சொந்த சாதியிலயே கல்யாணம்
#மாத்து_சாதியில காதலித்தால்
காதலித்தவன்  தலைபார்க்குது தண்டவாளம்
#படிச்சி_வாங்கின பட்டத்தைப்போல
தம்பேருக்குப் பின்னால சாதிபேரு
#தேர்தல்னு_வந்துட்டா
எந்தக் கட்சியில இருந்தாலும்
சொந்த சாதிக்காரனுக்கு விழுகிறது ஓட்டு
#வாழும்போதுதான்_ரெட்டை இடம்னு பார்த்தால்
சாகும்போதும் ரெட்டைச் சுடுகாடு
இதையெல்லாம் கிழிக்காம
சாதிச் சான்றிதழைக் கிழிச்சிப்புட்டா  சாதி ஒழியும்னு சொல்லுறியே...
ஒத்த சவாலை நான் உனக்கு விடுகின்றேன்
என் பறச்சி சான்றிதழைக் கிழிச்சிப் போடறேன்
கோயில் கருவறை உள்ளே என்னை விடச் சொல்லுப் பார்க்கலாம்
மணியாட்டும் பார்ப்பானை
என்னைக் கட்டிக்கச் சொல்லுப் பார்க்கலாம்.

சேரியையும் ஊரையையும்
ஒன்னாக்கு பார்க்கலாம்.
பின்னாடி கிழிச்சிக்கலாம் எல்லாத்தையும்....                                                              ((கவிஞர் சுகிர்தராணி))

Comments

Popular posts from this blog

தமிழகத்தில் சாதிகள் வரலாறு

ஊடகத்துறை Media

தமிழர்களின் கலை தொகுப்பு - அங்கள பரமேஸ்வரி