கேரளா நடந்தது என்ன.? தமிழர்கள் மறந்தது என்ன.?

கேரளா நடந்தது என்ன.?
தமிழர்கள் மறந்தது என்ன.?

கேரளா மலை பகுதியில் அதிகமான மழை காரணமாக அணைகளில் நீர் நிரம்பின. மேலும் குடியிருப்பு பகுதியிலும் அதிகமான மழையினால் அணைகள் நிரம்பும் முன்பே, ஒரு சில கிராமத்தில் மூட்டு அளவு தண்ணீர் வந்துள்ளது, உடனே அரசாங்கம் மற்றும் மக்கள் அதற்கான முன்னேற்பாடுகள் பற்றி சிந்தித்திருக்க வேண்டும். ஆனால் மூட்டு அளவு தண்ணீரில் இருந்து சீட்டு  ஆடிக்கொண்டும், மேலிருந்து தண்ணீரில் குதித்தும் Enjoy செய்துள்ளனர்.
இப்போது கேரளாவில் ஆளும் அரசாங்கமோ இயற்கை சீற்றத்தால் அணைகளை திறந்துள்ளது, ஆனால் அதற்கான முன்னேற்பாடுகள் என்ன எடுத்துள்ளார்கள் என்று யாருக்கும் தெரியாது. கேட்டால் இயற்கை சீற்றம் என்று ஒரு சாமானியன் போல் சொல்லிவிடவேண்டியது.
கேரளாவை பொறுத்தவரைக்கும் NRI persons அதிகமாக இருக்கும் மாநிலம். ஒரு இயற்கை சேதம் என்றால் பணம் குவியும். பிற மாநில மக்களும் தனது பங்கினை அள்ளி வழங்குவார்கள். (ஏனென்றால் கேரள மக்களை விட கேரளாவை அனைத்து மக்களுக்கும் பிடிக்கும்.)
ஆனால் நம் தமிழகத்தில் ஓக்கி புயல் வந்தபோது எத்தனை பேர் உதவ முன்வந்தார்கள், இன்னும் மேற்கு தொடர்ச்சி மலையில் வீடு இல்லாமல் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று யாருக்காது தெரியுமா..? அது இருக்கட்டும் ஓக்கி புயலுக்கு கேரள அரசு நிவாரண தொகை அறிவித்தது, இது ஆளும் அரசாங்கத்தின் கட்டாயம். ஒரு சில கேரள  மனிதர்கள் தவிர எத்தனை பேர் நம்முடன் ஓக்கி புயலுக்கு உதவி செய்தார்கள் என்று தெரியுமா.?
இன்று தமிழகமே, கேரளா மக்களுக்கு அதிகமாக உதவுகிறது. அனைவரும் அனைத்து மக்களுக்கும்  உதவுங்கள். ஒரு சில மாநில மக்களை பார்த்து உதவுவது தான் குற்றம் என்கிறேன்.
கேரளா அரசு இத்தனை அணைகள் திறந்து விட்டார்களே.! இதனை கேள்வி கேட்க கேரள மக்கள் சமூக வலைதளத்தில் மீம்ஸ் போட அவர்கள் முன்வரமாட்டார்கள். ஒற்றுமை அவர்களிடம் உண்டு.
சென்னையில் நமக்கு வந்த வெள்ளத்தை பார்த்து கைதட்டி சிரித்தவர்கள் எல்லோரும், இன்று நம்மை பெருமையாக பேசி கொண்டு இருக்கின்றனர். இன்று நீங்கள் இல்லை என்றால் நாங்கள் இல்லை என்று.!
ஒருசிலர் முட்டாள்தனமாக தண்ணீர் மட்டும் வெளியேறினால் போதும் என்று இடும்புடன் பதில்.! யார் மேல் உள்ள கோபமே.?
இதனால் தான் இந்த இயற்கை சீற்றத்திலும் காடுகள் அழியாமல், மனிதர்கள் திருந்துவதற்கு ஒரு வாய்ப்பு கொடுத்துள்ளது.
யாவரும் யாவருக்கும் துரோகம் செய்ய மாட்டார்கள். நேரம், காலங்கள் பொறுத்து தீயவை அமைந்து விடுகிறது.
தமிழன் என்றும் யாருக்கும் துரோகம் செய்யாதவன்.
சிவநடராஜ்
நெல்லை.
https://m.facebook.com/story.php?story_fbid=2255224831430762&id=100008298010481

Comments

Popular posts from this blog

தமிழகத்தில் சாதிகள் வரலாறு

ஊடகத்துறை Media

தமிழர்களின் கலை தொகுப்பு - அங்கள பரமேஸ்வரி