ஓர் ஆண்டில் 160 போராளிகள் படுகொலை - 500 ஆதரவாளர்கள் கைது

ஓர் ஆண்டில் 160 போராளிகள் படுகொலை - 500 ஆதரவாளர்கள் கைது 


சத்தீஸ்கரில் மட்டும் நக்ஸல் ஆதரவாளர்கள் 500 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பல்வேறு மாநிலங்களில் 160 நக்ஸல் போராளிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகவும் அதிகாரபூர்வமாக தெரிவித்திருக்கிறார்.





ஓர் ஆண்டில் 160 போராளிகள் படுகொலை - 500 ஆதரவாளர்கள் கைது 

- சண்முக வசந்தன்
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இடதுசாரி தீவிரவாத ஆதரவாளர்களுக்கு எதிராக ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சிஆர்பிஎஃப் தலைமை இயக்குநர் ஆர்.ஆர்.பட்நாகர் தெரிவித்திருக்கிறார். நேற்றைய தினம் (திங்கள்கிழமை) பிடிஐ செய்தியாளருக்கு அவர் அளித்த நேர்காணலில் இதனை கூறியுள்ளார்.
ஒடிஸா, ஆந்திரம், சட்டிஸ்கர், மகாராஷ்டிரம், தெலங்கானா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் நக்ஸல் இயக்கத்தினருக்கு எதிரான நடவடிக்கைகள் என பல்வேறு செயல்திட்டங்களை மாநில காவல்துறையுடன் இணைந்து சிஆர்பிஎஃப்  முன்னெடுத்து வருகிறது.
மாவோயிஸ்ட் போராளிகள் எனக் கூறி அப்பாவி பழங்குடியினர் படுகொலை செய்யப்பட்டு வருவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதேபோல் மாவோயிஸ்ட் இயக்கத்துக்கு ஆதரவளித்ததாக கூறி ஜனநாயகவாதிகள் பலரும் கைது செய்யப்படுவது அதிகரித்திருக்கிறது.
இந்நிலையில், பிடிஐ செய்தியாளருக்கு சிஆர்பிஎஃப் தலைமை இயக்குநர் ஆர்.ஆர்.பட்நாகர் அளித்த நேர்காணலில், கடந்த ஓர் ஆண்டில் சத்தீஸ்கரில் மட்டும் நக்ஸல் ஆதரவாளர்கள் 500 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பல்வேறு மாநிலங்களில் 160 நக்ஸல் போராளிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகவும் அதிகாரபூர்வமாக தெரிவித்திருக்கிறார்.

Comments

Popular posts from this blog

தமிழகத்தில் சாதிகள் வரலாறு

ஊடகத்துறை Media

தமிழர்களின் கலை தொகுப்பு - அங்கள பரமேஸ்வரி