திராவிட ஆட்சியால், இடைநிலைச் சாதியினர் கண்ட எழுச்சியளவிற்கு, தாழ்த்தப்பட்ட சாதியினர் பெறவில்லை என்ற குற்றச்சாட்டு நீடிக்கிறதே?


திராவிட ஆட்சியால், இடைநிலைச் சாதியினர் கண்ட எழுச்சியளவிற்கு, தாழ்த்தப்பட்ட சாதியினர் பெறவில்லை என்ற குற்றச்சாட்டு நீடிக்கிறதே?

எழுத்தாளர்: சுப.வீரபாண்டியன் பிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - செப்டம்பர் 2018 வெளியிடப்பட்டது: 22 செப்டம்பர் 2018

திராவிடம்  தலித்...

இந்தியச் சமூகம் ஒரு சாதியச் சமூகம் மட்டுமன்று. அது படிநிலை ஏற்றத்தாழ்வுகளைக் கொண்ட சமூகமும் ஆகும் என்பார் அம்பேத்கர். அது ஒரு தந்திரமான வஞ்சகமான ஏற்பாடு. எனவே, பயன்களையும் மேல்படியில் உள்ளோர் சற்று முன்கூட்டிப் பெற்றிடும் வாய்ப்பு இருக்கவே செய்தது என்பதை மறுப்பதற்கில்லை. அதே வேளையில், திராவிட இயக்கமும், ஆட்சியும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை என்பது அவதூறு. அதில் உண்மையில்லை. அரசுப் பேருந்துகளில் தாழ்த்தப்பட்டோர் பயணம் செய்ய இருந்த தடையை நீக்கியதும், தாழ்த்தப்பட்ட மக்களைக் கோயிலுக்குள் சுயமரியாதை இயக்கம் அழைத்துச் சென்றதும் 1930களுக்கு முன்னால் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. சென்னை உயர்நீதிமன்றத்தில் தாழ்த்தப்பட்ட ஒருவர் (நீதிபதி வரதராஜன்) நீதிபதியாக அமர்த்தப்பட்டது, தலைவர் கலைஞர் முதல்வராக இருந்தபோதுதான். அவர்தான் உச்சநீதிமன்றத்திலும் பிறகு நீதிபதியானார். சாதியில் மட்டுமின்றி, பால் அடிப்படையிலும் இதனை நாம் பொருத்திப் பார்க்கலாம். 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், பொதுக்கல்வி முறை வந்தது. ஆனால் அந்த வாய்ப்பை ஆண்கள்தானே முதலில் பெற்றார்கள். அரை நூற்றாண்டுக்குப் பிறகுதானே பெண்கள் அந்தக் கல்வி வாய்ப்பைப் பெற முடிந்தது!

Comments

  1. How to Make Money from Online Sports Betting
    To be successful 메리트 카지노 쿠폰 in sports betting, you need to select the “Money” option. For example, in 샌즈카지노 a typical sportsbook bet you'll receive $30 งานออนไลน์

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தமிழகத்தில் சாதிகள் வரலாறு

ஊடகத்துறை Media

தமிழர்களின் கலை தொகுப்பு - அங்கள பரமேஸ்வரி