Posts

மும்பையில் தமிழ் வளர்த்த, தமிழ் இலக்கியம் வளர்த்த பெரும்புலவர் பாலையா

இரங்கல் செய்தி: மிகச் சிறந்த தமிழாசிரியராகப் பணியாற்றி மும்பையில் தமிழ் வளர்த்த, தமிழ் இலக்கியம ் வளர்த்த பெரும்புலவர்_பாலையா மும்பை முலுண்ட்  -ல் வசித்து வந்த எனது அய்யா  பாலையா ( முன்னாள் தமிழ் ஆசிரியர், வாணி வித்யாலயா, முலுண்ட்  )அவர்கள் இன்று 10.9.18 அதிகாலையில், ஶ்ரீவைகுண்டம், திருப்புலியங்குடி -தோப்படியூரில் இயற்க்கையுடன்  சேர்ந்துவிட்டார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.  அன்னாரின் பூத உடல் நாளை , தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடுக்கு அருகில் உள்ள செட்டிமலன்பட்டியில் அடக்கம் செய்யப்படும். பேத்தி

கமல் ஹாசனுக்கு சமர்ப்பணம்

கமல் ஹாசனுக்கு சமர்ப்பணம் #ஊரு_சேரியென வாழறதுக்கு ரெண்டு இடம்.. #டீ_காபியென குடிக்கறதுக்கு ரெண்டு குவளை #படியோட_நின்னுக்கன்னு சாமி கும்பிடறத்துக்கு ரெண்டு இடம் #கேஸ்ட்நோ பாருன்னு போட்டுட்டு எஸ்ஸி மட்டும் தவிர்க்கவும்னு நாலுகால விளம்பரம் நாள்தோறும் #முற்போக்கு_பேசினாலும் தாம் பெத்த பொண்ணு புள்ளைக்கு சொந்த சாதியிலயே கல்யாணம் #மாத்து_சாதியில காதலித்தால் காதலித்தவன்  தலைபார்க்குது தண்டவாளம் #படிச்சி_வாங்கின பட்டத்தைப்போல தம்பேருக்குப் பின்னால சாதிபேரு #தேர்தல்னு_வந்துட்டா எந்தக் கட்சியில இருந்தாலும் சொந்த சாதிக்காரனுக்கு விழுகிறது ஓட்டு #வாழும்போதுதான்_ரெட்டை இடம்னு பார்த்தால் சாகும்போதும் ரெட்டைச் சுடுகாடு இதையெல்லாம் கிழிக்காம சாதிச் சான்றிதழைக் கிழிச்சிப்புட்டா  சாதி ஒழியும்னு சொல்லுறியே... ஒத்த சவாலை நான் உனக்கு விடுகின்றேன் என் பறச்சி சான்றிதழைக் கிழிச்சிப் போடறேன் கோயில் கருவறை உள்ளே என்னை விடச் சொல்லுப் பார்க்கலாம் மணியாட்டும் பார்ப்பானை என்னைக் கட்டிக்கச் சொல்லுப் பார்க்கலாம். சேரியையும் ஊரையையும் ஒன்னாக்கு பார்க்கலாம். பின்னாடி கிழிச்சிக்கலாம் எல...

யார்... இந்த இமானுவேல் (சேகரன்)??? Perumal Ammavasi Thevan (Face book page )

Perumal Ammavasi Thevan (Face book page ) for discussion யார்... இந்த இமானுவேல் (சேகரன்)??? இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே செல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் பள்ளி ஆசிரியர் இமானுவேல். மூன்று பெண் குழந்தைகளுக்கு தகப்பனார். அமிர்தம் கிரேஸ் மனைவி. இவர் ஆசிரியர் பணி சரியாக பணி புரியாததால் இடைநீக்கம் செய்யப்பட்டார். பரமக்குடி பகுதியில் இவர் அதிகம் நாட்கள் கழித்து. இவர் மனைவி குழந்தைகளுடன் சிக்கல் அருகே இதம்பாடல் என்ற ஊரில் தங்கியிருந்த காலகட்டத்தில், இளஞ்செம்பூர் முதலாளி K.K.S.இரத்தினவேல் தேவர் அவர்களிடம் ஒரு பிராது அளித்தார். ஐயா மூன்று பெண் குழந்தைகளுடன் கஷ்டப்படுகிறேன். என்னுடைய கணவர் சரியாக குடும்பத்தை கவனிக்கமாட்டார். நான் 8 வது வரை படித்து இருக்கேன். எனக்கு வேலை வேண்டும் என்றார். 1957 கால கட்டத்தில் இரத்தினவேல் தேவர் கடலாடி ஒன்றிய கிராமங்களின் தலைவராகவும் கிராம முனிசீப்பாகவும் இருந்த காலகட்டத்தில் கருணை அடிப்படையில் கடலாடி ஒன்றியத்தின் அடங்கிய பொதிகுளம் கிராமத்தில் 5 வகுப்பு வரை உள்ள ஆரம்பப்பள்ளியில் ஆசிரியர் பணி நியமனம் செய்தார். அந்த கிராமத் தலைவர் உத்தமநாதத்த...

மும்பை விழித்தெழ இயக்கம் மற்றும் மும்பை தமிழர்கள் சார்பாக கேரளா மக்களுக்கு நிவாரண பொருட்கள் சேகரித்து அனுப்பப்பட்டன .

Image
 மும்பை விழித்தெழ இயக்கம் மற்றும் மும்பை தமிழர்கள்  சார்பாக கேரளா மக்களுக்கு நிவாரண பொருட்கள் சேகரித்து அனுப்பப்பட்டன . இந்த பொறுப்பை தானாக முன்வந்து எடுத்த தோழர்கள் மதன் மற்றும் முத்துகிருஷ்ணனை மனதார பாராட்டுகிறோம் . மதனுடன் துணை நின்று உதவியவர்களான மாதவன் அண்ணன், அர்ஜுன் தம்பி, தோழர் கதிர்  யையும், தோழர் முத்துகிருஷ்ணன் உடன் துணை நின்று உதவியவர்களான வீரர் மக்களையும்   சேர்த்த பாராட்டுகிறோம். ================================================================== செம்பூர் விக்னேஷ் வரன் , 1 அட்டை பாக்ஸ்  நிவாரண பொருள்களை வழங்கினார். காட்டுரான் தோழர் ரூபாய் 1000 க்கான சோப்பு வாங்கி தந்தார். அப்துல் கலாம் பவுண்டஷன், திரு. நம்பிராஜன் அண்ணன் ரூபாய் 1000 க்கான பொருட்களை  வாங்கி தந்தார். Infinity அமைப்பில் இருந்து பொருட்களை வாங்கித்தந்துள்ளனர். ஜெய் பீம் பவுண்டஷன், தோழர்  நித்தி  ரூபாய் 500 க்கான பொருட்களை வாங்கித்தந்தார்.  பொருள்கள் வாங்கி தந்த விவரங்களை இனைத்துள்ளோம். =======================...

ஆரே காலனி மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி. பொற்ச்செல்வி கருணாநிதி சிறந்த ஆசிரியர் விருதை பெற்றுள்ளார்

Image
மும்பை மாநகராட்சி பள்ளிக்கான   இந்த ஆண்டுகான 2017-2018 சிறந்த ஆசிரியருக்கான மேயர் விருதை ஆரேகாலனி தமிழ்பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி. பொற்ச்செல்வி கருணாநிதி பெற்றுள்ளார். இந்த ஆசிரியர், திருநெல்வேலி மாவட்டம்,பெருன்குளம் ஊரை சேர்ந்தவர்.   மராட்டிய மாநில விடுதலைசிறுத்தைகள் கட்சி.முற்போக்கு மாணவர் கழகம் சார்பாக விருது பெற்ற ஆசிரியருக்கு வாழ்த்துக்களை  தெரிவித்தனர்.  இதில் ஆரேகாலனி தமிழ்பள்ளி ஆசிரியர் குழுமம் திருமதி.விஜியா கனேஷ்குமார்,பொம்மி ரவிந்திரகுமார்,சுசிலா இன்பமணி,ஜெயசீலி கில்பெர்ட்,சிந்தியா விஜயன்,அந்தோனி முத்து,ஜெயராணி செம்சன், பத்மா ராஜ்குமார்,செல்வி கில்பெர்ட்,சுதா சாலமண்,மம்தா மக்வானா,லட்சுமி செட்டி உடன் இருந்தனர். இந்த பாராட்டு ஏற்பாட்டை திரு. சு சேகர். அமைப்பாளர்,மராட்டிய மாநில விடுதலைசிறுத்தைகள் கட்சி.முற்போக்கு மாணவர் கழகம்.மும்பை செய்து  இருந்தார்.

வீட்டில் ஒரு அம்பேத்கர் படத்தை மாட்டிப்பாருங்கள். இந்த நாட்டின் ஜாதி வெறி புரியும்.

Image
வீட்டில் ஒரு அம்பேத்கர் படத்தை மாட்டிப்பாருங்கள். இந்த நாட்டின் ஜாதி வெறி புரியும். நன்றி Vijay Bhaskarvijay 💙 //நான் ஒரு செட்டியார். நான் ஒரு நாடார். நான் ஒரு நாயக்கர் நான் ஒரு தேவர். ஒரு சாதி இந்து அல்லது பார்ப்பனர். எனக்கு சமூகநீதி ஒரளவுக்கு புரிகிறது. எனக்கு தெருவில் இறங்கி போராடவோ எழுதவோ எல்லாம் தெரியாது. முடியாது. ஆனால் சமூக நீதி தளத்தில் ஏதோ கொஞ்சமாவது செய்ய விரும்புகிறேன். இப்படி உங்களுக்கு தோன்றுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் என்ன செய்யலாம்? ஒரே ஒரு காரியம் செய்யுங்கள். உங்கள் வீட்டில் ஒரு அம்பேத்கர் படத்தை ஒட்டி வையுங்கள். வேறு ஒன்றுமே செய்ய வேண்டாம். கையளவு அகலம் உடைய ஒரு அம்பேத்கர் படத்தை அனைவரும் பார்க்கும்படி ஒட்டி வையுங்கள். சேகுவரா, ஃபிடல் காஸ்டிரோ, பெரியார், மார்க்ஸ் என்று யார் போட்டோ வேண்டுமானாலும் ஒட்டுங்கள் ஒட்டாமல் இருங்கள். ஆனால் அம்பேத்கர் படத்தை ஒட்டிவிடுங்கள். புற்கள் நிறைய இருந்தால்தான் காட்டில் மான்கள் நிறைய இருக்கும், மான்கள் நிறைய இருக்கும் காட்டில் புலி இருக்கும். So ஒரு காடு வளமாய் இருக்கிறதா என...

மேற்குத் தொடர்ச்சி மலை - யமுனா ராஜேந்திரன்

Image
உலகில் இரண்டு வகையான சினிமாக்கள்தான் உண்டு.  புத்திசாலித்தனமான சினிமா ஒன்று. ஆத்மார்த்தமான, சகமனிதர் மீது பேரன்பு கொண்ட சினிமா இன்னொன்று. மணிரத்னம், குவின்டின் டரான்டினோ, தியாகராஜன் குமாரராஜா போன்றவர்கள் உருவாக்குபவை முதல் வகை சினிமா. தியோ ஆஞ்சல பெலோஸ், சத்யஜித் ரே, கென் லோச், லெனின் பாரதி (‘மேற்குத் தொடர்ச்சி மலை’) போன்றவர்கள் உருவாக்குபவை இரண்டாவது வகை. ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ போன்ற படங்கள் எனது தலைமுறையில் தமிழில் வரும் என்கிற நம்பிக்கையைக் கொண்டிராதவன் நான். அதுவும் ‘மேற ்குத் தொடர்ச்சி மலை’ படம் துவங்கி முதல் 20 நிமிடங்கள் எழுப்பிய உணர்வுகள் எந்த உலக சினிமா கிளாசிக்கும் எழுப்பும் உணர்வுக்கும் கொஞ்சமும் குறையாதவை. வாழ்க்கையை, வாழும் சூழலை, இயற்கையின் கருணையை, அன்றாட மனிதரின் இயல்பை, மனிதர் மீதான பேரன்பை இது போல் சொன்ன உலக சினிமாக்கள் மிக மிகக் குறைவு. பிரபஞ்சம் கைக்கெட்டும் தூரத்தில்தான் இருக்கிறது. தமிழ் சினிமா இனி மேற்செல்ல வேண்டுமானால் அது ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ படத்தைக் கடந்து செல்வதால் மட்டுமே சாத்தியம். இது இனி வரும் லெனின் பாரதியின் படங்களுக்கும் பொருந்தும். ...