நிறுத்தற்குறிகள் அறிவோம்...!!! 1. காற்புள்ளி (,) 2. அரைப்புள்ளி( ; ) 3. முக்காற்புள்ளி (:) 4. முற்றுப்புள்ளி ( . ) 5. வினாக்குறி (?) 6. உணர்ச்சிக்குறி (!) 7. இடையீட்டுக்குறி ( – ) 8. பிறைக்குறி அல்லது அடைப்புக்குறி ( () ) 9. ஒற்றை மேற்கோள்குறி (' ') 10.இரட்டை மேற்கோள்குறி (" ") 11. விழுக்காடு குறி (%) 12. விண்மீன் குறி (*) 13. வலம் சாய்க்கோடு (/) 14. இடம் சாய்க்கோடு (\) 15.கொத்துக்குறி(#) 16. தொப்பிக்குறி(^) 👇🏻 📚 காற்புள்ளி 1) பொருட்களைத் தனித்தனியே கூறும்போது காற்புள்ளி இடவேண்டும். அ) தாய், தந்தை, தமையன், தங்கை என்னும் நால்வர் வீட்டில் உள்ளனர். ஆ) நான் வங்கிக்குச் சென்று, பணத்தை எடுத்து, பின்பு கடையில் சில பொருட்கள வாங்கிக் கொண்டு, வரும்வழியில் கோவிலுக்கும் சென்றுவந்தேன். இ) ஆடுகள், மாடுகள், நாய்கள், கோழிகள் ஊரில் வாழ்கின்றன. 2) விளிப்பெயர்களை அடுத்து, காற்புள்ளி இடவேண்டும். அ) ஆருயிர்த் தந்தையே, வணக்கம் ஆ) இன்பத்திலும், துன்பத்திலும் இணைபிரியா நண்பரே, வருக. 3)...
Comments
Post a Comment