செட்யூல்ட் காஸ்ட் [Scheduled Caste] என்ற பிரயோகம் தான், சட்டப்படியும், அரசியல் நிர்ணய சாசனப்படியும் செல்லும்

செட்யூல்ட் காஸ்ட் [Scheduled Caste] என்ற பிரயோகம் தான், சட்டப்படியும், அரசியல் நிர்ணய சாசனப்படியும் செல்லும் 




Dalit not to be used-Tamil one India
எஸ்.சிக்களில் பல ஜாதிகள் உள்ளன: “தலித்” என்று அழைத்துக்கொள்வதால் அவர்கள் ஒரே ஜாதியாகி விடமுடியாது. பட்டியலின ஜாதிகளின் மக்கள் தொகை இந்திய அரசு தளத்தில் உள்ள 2011 தகவலின்படி16.6% என்றுள்ளது. எஸ்.டிக்கள் – 8.6%. தமிழ்நாட்டளவில் இந்த சதவீதம் 2011 கணக்கெடுப்பின்படி 7.2% ஆகும். தமிழக அளவில் பட்டியலின ஜாதிகளாக வருபவை அரசு அட்டவணைப்படி 87 ஜாதிகளாக உள்ளது. இந்தியாவில் உள்ள 29 மாநிலங்களில் 1,108 ஜாதிகள் இருப்பதாக, இந்திய ஆசியல் நிர்ணய சட்ட (செட்யூல்ட் காஸ்ட்) ஆணை, 1950 அறிவிக்கிறது. அதே போல, 22 மாநிலங்களில், 744 பழங்குடிகள் இருப்பதாக இந்திய ஆசியல் நிர்ணய சட்ட (செட்யூல்ட் டிரைப்) ஆணை, 1950 கூறுகிறது. இவர்களை ஒன்று படுத்த எந்த தாழ்த்தப் பட்ட தலைவர், மதத்தலைவர், அரசியல்வாதி என்று யாரும் முன்வருவதில்லை. மாறாக அப்பிரிவுகளை வைத்துக் கொண்டு, தங்களை வளர்த்துக் கொண்டு, காலம் தள்ளி வருகின்றனர். ஆகவே, இவர்களை “தலித்” என்ற மாயையில், கட்டுக்கதையில் கட்ட முடியாது. வர்க்க போராட்டம், ஜாதி மோதல்கள், புரட்சி போன்றவை எல்லாமே அமைதியைக் குலைத்து, கலவரங்களை உண்டாக்கும் வழிமுறைகளாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இங்குதான், கம்யூனிஸ்ட் மற்றும் சித்தாந்தவாதிகள் தேசவிரோதத்தையும் வளர்க்கின்றனர்.
Dalit not to be used-Vedaprakash
அரசியலாக்கப் படும்தலித்பிரச்சினை: தலித் போர்வையில் மதம் மாறிய பிறகும், கிருத்துவர், முகமதியர் குழப்பத்தை ஏற்படுத்தி, கலவரம் உண்டாக்கி வருகின்றனர். “தலித் கிருத்துவர்,” மற்றும் “தலித் முஸ்லிம்” என்று கூறிக் கொண்டு ஏமாற்றி வருகின்றனர். உண்மையிலேயே கிருத்துவம் மற்றும் இஸ்லாம்/ முகதியம் அவர்களுக்கு க்ஷ்சமத்துவத்தைக் கொடுக்கவில்லை என்றால், அந்த ஜேஹோவா, ஏசு, மேரி, அல்லா, முகமது கடவுளர்கள் அவர்களை ஏமாற்றி விட்டன என்றாகிறது. அதேபோல, “ஏல்லோரும் ஒன்று, எந்தவித வேறுபாடும் இல்லை” என்பதெல்லாம் பொய் என்றாகிறது. 2008லேயே எஸ்-எஸ்டி ஆணையம், தலித் என்ற பிரயோகம் சட்டப்படியும், இந்திய அரசியல் நிர்ணய சட்டப்படியும் செல்லாது என்று அறிவித்தது. சூசை வெர்சஸ் யூனியன் ஆப் இந்தியா [Soosai vs Union of India (AIR 1986 SC 733)] என்ற உச்சநீதி மன்றத்தில் 1986லேயே தெளிவாக முடிவு செய்யப் பட்ட விஷயமாகி விட்டது. செப்டம்பர் 30, 1985ல் உச்சநீதி மன்றம், தள்ளுபடி செய்தபோது,  மதம் மாறிய கிருத்துவர்களுக்கு எஸ்.சி சலுகைக் கொடுக்க முடியாது, ஏனெனில், அது இந்துக்களுக்கு மட்டும் தான் பொருந்தும், கிருத்துவமதத்திலும் தீண்டாமை உள்ளது, மதம் மாறிய பிறகும் அவர்கள் நிலை எதுவும் மாறவில்லை என்று நிருபிக்கவில்லை என்று விளக்கியது[1]. இதனால், உண்மையினை மறைத்து, கிருத்துவ இயக்கங்கள் இந்துமதத்தினைத் தாக்கி வர்கின்றன.
Dalit-note-by-Government March 2018
மதம் மாறிய எஸ்.சிக்களின் அவலநிலை அவர்களது கிருத்துவமுகமதிய மதங்களால் உருவானது:  தலித், மறுப்பு மற்றும் எதிர்ப்பு இலக்கியம் என்ற போர்வையில், இந்து மதம் தான் அதிகமாக தாக்கப்பட்டு, தூஷிக்கப்பட்டு வருகிறது. அதாவது, மதமாற்றம் ஜாதிகளை நீக்கிவிடவில்லை மாறாக அவர்கள் அம்மதங்களில் உள்ள சமுதாய் பிரிப்புகளில் கட்டப்பட்டு, அடிமைகளாகக் கிடக்கின்றனர். இது கிருத்துவம் மற்றும் முகமதிய மதங்களில் உள்ள இறையியல் பிரச்சினை அல்ல மாறாக ஜாதிக் கட்டமைப்பை விட, குரூரமான, கோரமான மற்றும் பயங்கரமான சித்தாந்தமாகும். தனால் தான் சுன்னி-ஷியா, கத்தோலிக்க-புரோடெஸ்டென்ட் போர்களில் கோடிக்கணக்கில் இன்று வரை மக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். ஏசுவோ, மேரியோ, ஜேஹோவாவோ, அல்லாவோ, முகமதுவோ அவர்களை ஒற்றுமையாக வைக்கவில்லை, இணைக்கவில்லை, சாந்தத்தத்தையும் கொடுக்கவில்லை.
Dalit-note-by-Government March 2018-dalit not to be used
எஸ்.சிக்களில் ஏற்படும் பிரச்சினைகளை எஸ்.சி மற்றும் எஸ்.சி அல்லாதவர்களிடம் ஏற்படும் பிரச்சினைகளாக மாற்றுவது: கிராமங்களில் பலதரப்பட்ட பிரச்சினைகளுக்காக, எஸ்.சி மற்றும் எஸ்.சி அல்லாத ஜாதியினர் இடையே மோதல்கள் ஏற்படுகின்றன. ஆனால், பிறகு, அவையெல்லாம் “எஸ்.சி ஜாதிகளில்” உள்ளாக ஏற்பட்ட பிரச்சினைகள் என்று தெரிகிறது. மதம் மாறிய பிறகும், கிருத்துவர், முகமதியர், “இந்து” ஜாதி சான்றிதழ் வைத்துக் கொண்டு, பிளவுகளை ஏற்படுத்திக் கொண்டு வருகின்றனர். இதனால் தான், அத்தகைய மோதல்கள் ஏற்படுகின்றன. வருகின்ற பணம், வசதி முதலியவை பிர்த்துக் கொள்வதற்கு ஏற்படும் தகராறு, சண்டை,சச்சரவு முதலியவற்றை, எஸ்.சிக்களுக்கு எதிராக இழைக்கப் படும் கொடுமைகள், அநீதிகள், அக்கிரனங்கள், சட்டமீறல்கள் என்று கிருத்துவர்-முகமதியர் குழுக்கள் பிரச்சாரம் செய்து வருகின்றன. தலித் விடுதலை, அடக்குமுறையிலிருந்து மோட்சம், விமோசனம் போன்றவற்றைப் பேசிக் கொண்டு, இந்து-எச்.சிக்களை ஏமாற்றி வருகின்றனர். அவ்விசயங்களில் தான், அவர்களது முகமூடிகள் கிழிந்து, உண்மை முகங்கள் வெளிப்படுகின்றன. மாவோயிஸ, நக்ஸலிஸ, மார்க்சிஸ தீவிரவாதிகள் அம்பேத்கரிஸ முகமூடிகளில் வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.
caste, class, Ambedkar-Marx-confusion
ஒற்றுமையினைக் குலைக்கும் வெளி அமைப்புகள்: ஜாதி (caste) மற்றும் வர்க்கம் (class) என்று இரண்டாக பார்த்து குழப்பத்தையும் ஏற்படுத்தின. சமூக மற்றும் கல்வியில் பிற்படுத்தப்பட்டுள்ள வகுப்பினர் (Socially and educationally backward classes) என்று அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவுக் 15 (4) மற்றும் 16 (4)ல் இருப்பதினால், அவ்வாறு அணுக வேண்டும் என்று சில குழுக்கள் வலியுறுத்தின. ஆனால், இதனால் தலித் போராட்டம் நீர்த்து விடும் என்று சில குழுக்கள் தெரிவித்தன. தமிழகத்தில் பள்ளர் / தேவேந்திரகுல வெள்ளாளர், பறையர் மற்றும் அருந்ததியர் / சக்கிலியர் பிரிவுகள் எஸ்.சி வகுப்பினராக இருந்தாலும், அவர்களை ஒன்றாக நெருங்கி வர அரசியல் கட்சிகளும், கிறிஸ்தவ-முகமதிய குழுக்களும் தடுக்கின்றன. பள்ளர்கள் தங்களுக்கும் பறை மற்றும் மறமுழக்குதல், பசுமாமிசம் தின்னுதல் போன்ற காரியங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்கிறார்கள். தேவேந்திரகுல வெள்ளாளர் என்று அழைக்கப்படும் பள்ளர் இனத்தவர் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் அதிகம் வாழுகின்றனர். இவர்கள் 1957லிருந்துதான் எஸ்.சி ஏழ்மையின் காரணமாக தகுதி பெற்றுள்ளார்கள். ஆதிதிராவிடர் என்றழைக்கப்படும் பறையர், அருந்ததியர் என்றழைக்கப்படும் சக்கிலியர்களைக் காட்டிலும் தேவேந்திரகுல வேளாளர்கள் பொருளாதார ரீதியில் சற்று முன்னேறியவர்களாகக் கருதப்படுகின்றனர். சக்கிலியர்களில் தமிழ் மற்றும் தெலுங்கு பேசும் பிரிவினர் உள்ளார்கள். கிறிஸ்தவ என்.ஜி.ஓ குழுக்கள் பள்ளர் / தேவேந்திரகுல வெள்ளாளர், பறையர் மற்றும் அருந்ததியர் / சக்கிலியர் பிரிவுகளில் வேற்றுமை உண்டாக்க முயன்று வருகின்றனர்.
Dalit - not to be used - HT 23-01-2018
இந்துத்துவவாதிகளின் முட்டாள் தனம், சோம்பேறித்தனம்: இந்து அமைப்பினர் கிராமங்களில், கள ஆய்வு மேற்கொண்டு, இளைஞர்களிடம் உள்ள பிரச்சினைகளை தீர்க்க பாடுபட வேண்டும். ஆனால், அவர்கள் அவ்வாறு செய்யாமல் தூங்கிக் கொண்டிருக்கின்றனர்.மற்றவர்கள் சொல்வதை வைத்துக் கொண்டு, தாமே கண்டு பிடித்து விட்டது போல, சொல்லிக் கொண்டு, காலத்தைக் கழிக்கின்றனர். இதனால், உண்மையில், கிராமங்களில் நடக்கும் பிரச்சினைகள் அவர்களுக்குத் தெரியதில்லை. சமூக சேவை போர்வையில் பல அரசு நிறுவனங்கள், பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில் மாவோயிஸ, நக்ஸலிஸ, மார்க்சிஸ தீவிரவாதிகள் அம்பேத்கரிஸ முகமூடிகளில் நுழைந்துள்ளனர். மத்திய-மாநில அரசு நிதிகளை பெற்று, பள்ளி, கல்லூரி, மருத்துவமனை போன்றவற்றை நடத்தி ஏமாற்றி வருகின்றனர். ஆனால், பிரச்சினைகளை உருவாக்கி, அவற்றிற்கு காரணம், இந்துத்துவவாதிகள் என்று குற்றாஞ்சாட்டுகின்றனர். ஆனால், முட்டாள் “இந்துத்துவவாதிகள்” அவற்றை அக்கறைக் கொண்டு, தீவிரமாகக் கொண்டு செயல்படாமல், சில நேரங்களில், பெருமையாகவும் கருதிக் கொண்டு, காலங்கழிக்கின்றனர்.
Dalit not to be used-IE 06-04-2018
மத்தியப் பிரதேச உயர்நீதி மன்ற தீர்ப்பு[2]: சமீபத்தில் 15.01.2018 தேதியிட்ட மத்தியப் பிரதேச உயர்நீதி மன்ற தீர்ப்பும், இதனை [தலித் பிரயோகம் கூடாது] கூறுகிறது. செட்யூல்ட் காஸ்ட் [Scheduled Caste] என்ற பிரயோகம் தான், சட்டப்படியும், அரசியல் நிர்ணய சாசனப்படியும் செல்லும். 1982லேயே “ஹரிஜன்” என்ற வார்த்தை பிரயோகிக்கக் கூடாது என்று அரசு ஆணையிட்டுள்ளது. அதுபோலத்தான், “தலித்” வார்த்தை சட்டப்படியும், அம்பேத்கரின் அரசியல் நிர்ணய சாசனப்படியும் இல்லாதது, செல்லாதது, ஆகவே உபயோகப்படுத்தக் கூடாது, என்று ஞாபகப்படுத்தப் பட்டுள்ளது, இது ஒன்றும் புதிய விசயம் அல்ல.
© வேதபிரகாஷ்
06-04-2018
THE CONSTITUTION (SCHEDULED CASTES) ORDER, 1950
THE CONSTITUTION (SCHEDULED CASTES) ORDER, 1950
[1] It is not sufficient to show that the same caste continues after conversion. It is necessary to establish further that the disabilities and handicaps suffered from such caste membership in the social order of its origin Hinduism – continue in their oppressive severity in the new environment of a different religions community. http://indiankanoon.org/doc/1724190/
[2] Mohanlal Manohar vs Union of India and Ors.

Comments

Popular posts from this blog

தமிழகத்தில் சாதிகள் வரலாறு

ஊடகத்துறை Media

தமிழர்களின் கலை தொகுப்பு - அங்கள பரமேஸ்வரி