Posts

டாப் சிலிப்” தமிழகத்தின் இயற்கை எழில் மிகுந்த இடம்.

"டாப் சிலிப்" தமிழகத்தின் இயற்கை எழில் மிகுந்த இடம்.  மேற்கு தொடர்ச்சி மலையின் பல்லுயிர் பெருக்கும் மிகுந்த பத்து இடங்களில் இதுவே முதன்மையானது. 1800-1900-க்கு இடைப்பட்ட காலத்தில், இந்த மலையிலிருந்த ஏராளமான தேக்கு மரங்கள் வெட்டி இங்கிலாந்துக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர், மொட்டைக் காடாக கிடந்த இந்த மலைத்தொடருக்கு 1917-இல் வந்த ஆங்கிலேயே வனத்துறை அலுவலரான ஹூகோ வுட் என்ற IFS அலுவலர், இந்த மலைப்பகுதியை மறு சீரமைப்பு செய்யும் நோக்கில் நீலாம்பூர் தேக்கு மரக்கன்றுகளை இந்த மலையில் நடவு செய்துள்ளார். இன்று ஆனைமலை புலிகள் சரணாலயம் மற்றும் பரம்பிக்குளம் புலிகள் சரணாலய பகுதியில் இருக்கும் பல இலட்சம் தேக்கு மரங்களும் ஹூகோ வுட் அவர்களால் நடப்பட்டது. இந்த மலைப்பகுதியில் மரம் நடுவதை மட்டுமே வேலையாக கொண்டிருந்த ஹூகோ வுட் அவர்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை. தனக்கென சொத்து எதையும் சேர்த்து வைக்கவில்லை. கடைசிவரை உலாந்தி பள்ளத்தாக்கில் உள்ள மவுன்ட் ஷ்வாட்ஸ் என்ற பெயருடைய வீட்டில் வசித்து வந்தவர் தனது 63-வது வயதில் மரணமடைந்துள்ளார். அவரது உடல் உலந்தி பள்ளத்தில் உள்ள ஹூகோ வுட் இல்லத்துக்கு...

அழகு முத்துக் கோன் தமிழ் பாளையக்கரர?தெலுங்குப் பாளையக்காரா?வரலாறு சொல்லும் உண்மை என்ன?-

அழகு முத்துக்கோன்...!  அருள்நிலா. 2018.09.15 அழகு முத்துக் கோன் தமிழ் பாளையக்கரர?தெலுங்குப் பாளையக்காரா?வரலாறு சொல்லும் உண்மை என்ன?- அழகு முத்துக்கோன் ஒரு பாளையக்காரன் அல்ல.எட்டையாபுரம் தெலுங்குப் பாளையக்காரன் எட்டப்பநாயக்கனிடம் படைவீரனாக செயல்பட்டார்.கான்சாகிப் என்ற யூசுப்கானால் சுட்டுக் கொல்லப்பட்டார்.அழகுமுத்துக்கோன் தமிழரே .-R Shunmugaraj  தூய தமிழரை தன்னினமாக்கி தமிழரை அழிப்பதை வாடிக்கையாக கொண்டது வடுக இனம்..அழகுக்கோன் இனம் தமிழினம். - தமிழ்நாடு தமிழர் கூட்டாட்சி =============================================================== { “இவ்வளவு காலமாக,அழகு முத்துக்கோன், அழகான தமிழ்ப் பெயராக இருக்கிறதே, தமிழனாக இருப்பான் என்று நினைத்தேன். ஆனால், நேற்றுத்தான் (2018.09.13) அவன் வரலாறு படித்தேன். அவன் ஒரு பச்சைத் தெலுங்கன்! இதில் என்ன வியப்பு என்றால், அவன் அப்பன் பெயர் ‘முத்து’. இவன் பெயர் ‘அழகு முத்து’.முத்து என்பவன் விசய நகரத்திலிருந்து வருகிறான். அப்ப, அங்கு வரைக்கும் தமிழ்ப்பகுதியாகவே இருந்திருக்கிறது.இன்றும் பல அழகிய தமிழ்ப் பெயர்களை தெலுங்கர்கள் கொண்டுள்ளார்கள்...”-அருட்க...

திருமண உறவைத்தாண்டிய உடலுறவுக்கு அனுமதி தந்ததா உச்சநீதிமன்றம்?’ இந்திய தண்டனைச்சட்டம் பிரிவு 497 என்ன தான் சொல்கிறது

மனைவியின் காதலனை கணவன் புகார் கொடுத்து தண்டிக்கமுடியும். ஆனால், கணவனின் காதலி மீது மனைவி புகார் கொடுத்து கணவனையும் தண்டிக்கமுடியாது; கணவனின் காதலியையும் தண்டிக்கமுடியாது. இதுதான், 497 சட்டப்பிரிவின் முரண்பாடு. அதாவது, இந்திய அரசிலைமைப்பு சட்டம் ஆர்ட்டிக்கிள்- 14 சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிறது. ஆர்டிக்கிள்-15  பாலின பாகுபாடு கூடாது என்கிறது. ஆர்ட்டிக்கிள்-21 தனிமனித பாதுகாப்பு, சுதந்திரத்தை வலியுறுத்துகிறது. இந்திய அரசியல் அமைப்புச்சட்டத்தின் மூன்று உரைகற்களையும் வைத்து இந்திய தண்டனைச்சட்டப்பிரிவு 497 உரசிப்பார்க்கும்போது… இச்சட்டப்பிரிவு தங்கம் இல்லை. பித்தளையாக பல்லிளிக்கிறது. இது, தெரியாமல் என்னமோ இப்போது 497 சட்டப்பிரிவை நீக்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பு கொடுத்தபிறகுதான், கணவன் மீது மனைவி புகார் கொடுக்கமுடியாது என்று நினைத்துக்கொண்டு சென்னை எம்.ஜி.ஆர். நகர் ஜான்பால் ஃப்ராங்ளின் என்பவர் திருமணத்தை தாண்டிய உறவை தொடர்வேன் என்று சொல்ல… இனி காவல்துறையால் ஒன்றும் செய்யமுடியாது என்று தவறாக நினைத்து தற்கொலை செய்துகொண்டிருக்கிறார் அவரது மனைவி புஷ்பலதா. ஆனால், குடும்ப வன்முறைச் சட...

சாதிய ஒழிக்காமல் புரட்சியை நிகழ்த்த முடியாது ?..

சாதிய ஒழிக்காமல் புரட்சியை நிகழ்த்த முடியாது...ஆகையால், முதலில் சாதியை ஒழிப்போம் என்று கூறும் கருத்து வரலாற்று பார்வையில்லாத, குறைபாடுடைய கருத்து.... இந்த அமைப்பிற்குள்ளேயே, இந்த அரசின் கீழேயே சாதியை ஒழித்துவிட முடியுமென்று நம்புகிறவர்கள் பெரியாரிஸ்டாக, அம்பேட்கரிஸ்டாக, கம்யூனிஸ்டாக பிரகடனம் செய்து கொண்டாலும். சாதிக்கும், இந்தியாவில் நிலவுகிற அமைப்புக்கும் தொடர்பு, இந்தியாவில் நிறுவப்பட்டிருக்கிற அரசு குறித்தும் கவலைப்படாமல் சொல்லுகிற மேம்போக்கான கருத்து... சாதியின் கொடூரத்தை உணராமல் உதிர்க்கிற சோம்பேறித்தனமான கருத்து.. நடைமுறையில் இருக்கிற அமைப்பு பிரிட்டிஷ் காலத்தில் தன்னுடைய நிர்வாக தேவைக்காக லேசாக நெகிழ்ந்து கொடுத்திருந்தாலும், சுவாசிக்க இடம் கொடுத்திருந்தாலும், சாதியை ஒழிப்பது அதன் நோக்கம் கிடையாது, ஒழிக்கவும் செய்யாது.. அம்பேட்கர் பிரிட்டிஷாரை நோக்கி அதைத்தான் சொன்னார்....அதே விதி நடப்பிலிருக்கிற ஆளும் வர்க்கத்திற்கும் பொருந்தும்.. அதை மீறி, வாங்க கைல மை வைக்கலாம்னு யாராது சொன்னா... உங்க வாய்ல...........விரல் வச்சிருக்கீங்கன்னு நினைச்சிருக்காங்கன்னு அர்த்தம்..... வரலாற்று...

ஆதார் எங்கு அவசியம் ? எதற்கு அவசியம் இல்லை ?..

ஆதார் கட்டாய சட்டத்திற்கு எதிரான வழக்கின் தீர்ப்பின் காரணமாக ஆதார் பல முக்கியமான விஷயங்களுக்கு அவசியம் இல்லாமல் போய் இருக்கிறது. பொதுமக்களுக்கு ஆதார் எண் கட்டாயமா என்று வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஏஎம் கான்வில்கர், ஏ.கே சிக்ரி, டி.ஒய் சந்திரசூட், அசோக் பூஷன் ஆகிய ஐந்து நீதிபதிகளின் தலைமையிலான அமர்வு இந்த தீர்ப்பை வழங்கி இருக்கிறது.[வருமான வரி கணக்கு தாக்கலுக்கு பான் எண்ணுடன் ஆதார் இணைப்பது கட்டாயம்] இதில் ஆதார் பாதுகாப்பானது. ஆதார் அட்டையை அரசு பணிகளுக்கு கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும் என்று 4 நீதிபதிகள் தீர்ப்பு வழங்கி உள்ளார். இதன் காரணமாக பின்வரும் விஷ்யங்களுக்கு ஆதார் தேவைப்படுகிறது. ஆதார் எங்கு அவசியம்? 1)ஆதார் அட்டையை அரசு பணிகளுக்கு கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும். அரசு சார்ந்த திட்டங்களில் பெற ஆதார் அவசியம் ஆகும். 2)பான் கார்ட் பெற ஆதார் கட்டாயம். 3)மத்திய, மாநில அரசு வகுத்து இருக்கும் திட்டங்களுக்கும் ஆதார் அவசியம். 4)ரேஷன் கடைகளில் ஆதார் அவசியம் 5)சமையல் காஸ் மானியம் பெற ஆதார் அவசியம். 6)வருமான வரி தாக்கல் செய்ய ஆதார் அவசியம் ...

பரியேறும் பெருமாள்: திரையில் ஒரு புரட்சி!

பரியேறும் பெருமாள்: திரையில் ஒரு புரட்சி! பல படங்களை "இது படம் அல்ல பாடம்" என்று பொதுவாகச் சொல்வோம் அவற்றையெல்லாம் பொய்யாக்கி உண்மையிலேயே இது தான் "படம் அல்ல பாடம்!" என்று போற்றும் வகையில் திரையில் ஒரு புரட்சி தான் தம்பி மாரி செல்வராஜ் இயக்கி, வெளிவந்துள்ள 'பரியேறும் பெருமாள்' திரைப்படம். தம்பி மாரி செல்வராஜின் அனுபவம், வயது இவற்றையெல்லாம் தாண்டிய ஒரு ஆகச்சிறந்த படைப்பாக வெளிவந்துள்ளது. தான் சொல்லவந்த கருத்தை அழுத்தமாகச் சொல்லவேண்டும் என்றுதான் எல்லோரும் நினைப்போம்; அதற்காகக் காட்சிகளைத் திணிப்பது சத்தமான உரையாடல்களைப் பேசுவது அப்படியெல்லாம் இல்லாமல் அவனுடைய வலியை அனைவருக்கும் கடத்தியிருப்பதால் தான் இது ஆகச்சிறந்த படைப்பு! இப்படத்தைப் பார்க்கின்றபோது ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கிய 'சிண்ட்லர்ஸ் லிஸ்ட்' (Schindler's List) திரைப்படத்தை அவருடைய யூத இனம் எப்படி அழிக்கப்பட்டது என்பதை உணர்த்துவதற்காக எடுக்கிறார். அப்படத்தைப்பார்த்த ஹிடலரின் வம்சாவழியினர் எல்லோரும் எங்கள் முன்னோர்கள் இவ்வளவு கொடுமையானவர்களா? என்று எண்ணி திரையரங்கைவிட்டு வெளிவரும்போது வெ...

ஃபாசிசம், ஃபாசிஸ்ட் என்றால் என்ன?

ஃபாசிசம், ஃபாசிஸ்ட் என்றால் என்ன? "ஃபாசிசம்" "ஃபாசிஸ்ட்" என்ற சொற்கள் இரண்டு நாட்களாக தமிழ் கூறும் நல்லுலகில் அனல் பறந்து கொண்டிருக்கின்றன. அப்படி என்றால் என்ன? Fascism என்ற கோட்பாட்டை உருவாக்கியவர் இத்தாலி நாட்டின் முன்னாள் அதிபரும், சர்வாதிகாரியுமான "பெனிட்டோ முசோலினி". இவரது கோட்பாட்டின்படி ஃபாசிசம் என்பது மூன்று அடிப்படைக் கொள்கைகளைக் கொண்டது. 1 . "Everything in the state". "எல்லாமே அரசுதான். இதன்படி அனைத்து வகைகளிலும் அரசே உச்சபட்ச தலைமை. அதற்கு ஈடான வேறு எந்த சக்தியும் கிடையாது. அதிபர் வைப்பதே சட்டம். எதிர்த்துக் குரல் அல்ல சிந்திக்கக்கக்கூடக் கூடாது. 2."Nothing outside the state". "அரசுக்கு வெளியே எதுவுமில்லை" நாடு முன்னேற்றம் பெற வேண்டும். இந்த உலகை ஆள்வதற்கு ஃபாசிச கோட்பாட்டைப் பின்பற்றும் நாடுகளோடு ஒத்துச்செல்லவேண்டும். இதற்கு ஒவ்வொரு தனிமனிதரும் தம்மை அரசின் நலனுக்காக அர்ப்பணம் செய்யவேண்டும். 3."Nothing against the state". "அரசுக்கு எதிராக எதுவும் கூடாது" அரசை நோக்கி எப்படிப்பட்ட...