நாம் தமிழர்கள் சிந்திக்க வேண்டும்...

கிருஷ்ண ஜெயந்தியை மாயோன் விழாவாக கொண்டாடச் சொல்கிறது நாம் தமிழர் கட்சி.

கிருஷ்ணனை மாயோன் என்று கூறிவிட்டால் அவன் தமிழ்க் கடவுளாக தமிழ்ப் பண்பியலுக்கு உகந்தவனாக மாறி விடுவானா?
முருகனை, செந்தில்வேலனை சுப்ரமணியன் என்று கூறி பிரம்மனுக்கு அடிமை என்கிற பொருளில் மாற்றி வைத்திருக்கிறதே பார்ப்பனியம் அதை நிறுத்த முடிந்ததா?
கண்ணன் கிருஷ்ணன் ஆக்கப்பட்டான், காளி துர்க்கையாக்கப்பட்டாள், சிவன் ருத்திரன் ஆக்கப்பட்டான் இப்படி எல்லாம் மாற்றப்பட்டது பெயரளவில் மட்டும் அன்று, பண்பாட்டளவில்... ஆரியத்திற்குள், இந்து வைதிக மதத்திற்குள் புதைக்கப்பட்டிருக்கிறது..
ஆரிய புதைசேற்றை எதிர்த்து அயோத்திதாசர், பெரியார், மறைமலை அடிகள், பாவாணர், பாவலரேறு உள்ளிட்டோர் போராடிய நீண்ட வரலாற்றுக் கடமைகளெல்லாம் மடைமாற்றம் ஆகிறபடி ஆரியத்திடம் தமிழிய பண்பாட்டைப் புதிய வகையில் அடிமைப்படுத்துகிற முயற்சியை சீமான் முன்னெடுத்திருப்பது வருத்தத்திற்குரியது மட்டுமல்ல கண்டனத்திற்கும் உரியது..
திருச்செந்தூர் கோயில், பழனி கோயில், தென்காசி கோயில் உள்ளிட்ட முருகன் கோயில்கள் எல்லாம் குறிஞ்சி நிலத் தமிழர்களுக்கு உரியவைதாம் என்றும், கிருஷ்ணன் கோயில்கள் எல்லாம்  முல்லை நிலத் தமிழர்களுக்கு உரியவைதாம்  என்றும்,  அங்கிருக்கிற ஆரிய இடைத்தரகர்களை விரட்டுகிற முயற்சிகளைச் செய்யாமல், ஆரியப் பார்ப்பனியத்தை வேரறுக்கிற முயற்சியில் ஈடுபடாமல்  அதற்கு இணங்கிப்  போகிற படியான கருத்துகளை வெளிப்படுத்துவது அடிமைத்தனம் அல்லாது வேறு என்ன?
நாம் தமிழர்கள் சிந்திக்க வேண்டும்...

Comments

Popular posts from this blog

தமிழகத்தில் சாதிகள் வரலாறு

ஊடகத்துறை Media

தமிழர்களின் கலை தொகுப்பு - அங்கள பரமேஸ்வரி