சோபியா


#சோபியா...*
தூத்துக்குடியை சார்ந்த சோபியா,  நடுவானில் பாஜக மாநிலத் தலைவரின் பின்னிருக்கையில் அமர்ந்து கொண்டு பாசிச பாஜக ஒழிக என்று கோஷமிட்டது சற்று பொருத்தமற்றதாகவும் சக பயணிகளுக்கு தொந்திரவு தருவதாகவும் அமைந்திருக்கலாம்.. 
அவர் கனடாவில் பட்ட மேற்படிப்பு ஆராய்ச்சி மாணவி...
ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அவருக்கு ஒரு ஆதங்கத்தை ஏற்படுத்தி இருக்கலாம்...
பகுத்தறிவாளர்கள் கொல்லப்படுவது கோபத்தை ஏற்படுத்தி இருக்கலாம்...
பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் குண்டர்கள் உருவாகி வருவது கோபத்தை ஏற்படுத்தி இருக்கலாம்...
ரோமியோ ஸ்குவாட் என்ற பெயரில் கலாச்சார போலீஸ் வலம் வருவது கோபத்தை ஏற்படுத்தி இருக்கலாம்...
கறுப்பு பண ஒழிப்பு என்ற பெயரில் சாமானிய மக்கள் வங்கிகள் வாசலில் சுருண்டு விழுந்து மடிந்தது கோபத்தை ஏற்படுத்தி இருக்கலாம்...  
சிறு குறு தொழில்கள் அடியோடு அழிந்தது கோபத்தை ஏற்படுத்தி இருக்கலாம்....
ரபேல் கொள்முதலில் மர்மம் நீடிப்பது கோபத்தை ஏற்படுத்தி இருக்கலாம்...
பெட்ரோல் விலை எகிறுவது கோபத்தை ஏற்படுத்தி இருக்கலாம்...
கிராமப்புற மாணவர்களின் வயிற்றில் அடித்த நீட் தேர்வு, வலிந்து திணிக்கப்பட்டது கோபத்தை ஏற்படுத்தி இருக்கலாம்...  
அத்தேர்வை விலக்கக் கோரி அனுப்பப்பட்ட சட்ட மன்ற தீர்மானம் எங்கே உள்ளது என இன்னும் விசாரித்துக் கொண்டே இருப்பது கோபத்தை ஏற்படுத்தி இருக்கலாம்...
ஒற்றை வரி விகிதம் என்ற பெயரில் கொண்டு வரப்பட்ட GST வரிவிகிதம் ஏற்படுத்திய விலையேற்றம் கோபத்தை ஏற்படுத்தி இருக்கலாம்.... 
உலகம் முழுதும் சுற்றி பெரு முதலாளிகளுக்கு ஒப்பந்தங்கள் கொண்டு வருவது கோபத்தை ஏற்படுத்தி இருக்கலாம்....
வங்கிகளில் மக்கள் பணம் குறிப்பிட்ட சிலரிடம் வராக் கடனாய் கை மாறிப்போனது கோபத்தை ஏற்படுத்தி இருக்கலாம்...
அர்பன் நக்ஸல்கள் உள்ளிட்ட புதிய புதிய கண்டுபிடிப்புகள் கோபத்தை ஏற்படுத்தி இருக்கலாம்...
மண்ணையும், மலையையும், இயற்கை வளங்களையும், மீத்தேன், நியுட்ரினோ என ஆழக்குழி தோண்டி புதைப்பது கோபத்தை ஏற்படுத்தி இருக்கலாம்...
புதைந்து போன தொல்நாகரீக கீழடி அடையாளங்களை மீட்டெடுக்க மறுப்பது கோபத்தை ஏற்படுத்தி இருக்கலாம்...
ஒரு பேரிடர் நிகழும் போது உதவிக்கரம் நீட்டாமல்,  ஒவ்வாத கருத்துக்களை உதிர்ப்பது கோபத்தை ஏற்படுத்தி இருக்கலாம்...
அவர் ஒரு குடிமகள்...
இவ்வளவிற்கு பிறகும் பாசிசம் வாழ்க என்றா கோஷம் இடுவார்???

Comments

Popular posts from this blog

தமிழகத்தில் சாதிகள் வரலாறு

ஊடகத்துறை Media

தமிழர்களின் கலை தொகுப்பு - அங்கள பரமேஸ்வரி