எங்களுக்கு ஒருவர் கூட வாழ்த்து தெரிவிக்கவில்லை - காவியா, பிரியதர்ஷினி
எங்களுக்கு ஒருவர் கூட வாழ்த்து தெரிவிக்கவில்லை..
மன்னார்குடி ஒன்றியம் சவளக்காரன் ஆதிதிராவிட நல மேல்நிலைப் பள்ளி மாணவிகள் காவியா,பிரியதர்ஷினி ஆகிய இருவர் கோவாவில் அகில இந்திய அளவில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் தமிழக அணியில் விளையாடி தங்க கோப்பை வெல்ல காரணமாயிருந்துருக்கிறார்கள்.
இதில் என்ன சிறப்பு என்றால் சவளக்காரன் பள்ளியில் முறையான விளையாட்டு மைதானமே இல்லை .
மேலும் அங்கு முழு நேர உடற் கல்வி ஆசிரியரும் கிடையாது.
வாய்ப்புக் கிடைத்தால் யாரும் சாதிக்கலாம் என நிருபித்த மாணவிகளை மனதாரப் பாராட்டுகிறோம்.
கல்வியிலும் அப்பள்ளி சிறந்தப் பள்ளி என்பது கூடுதல் தகவல் .முடிந்தால் நாமும் வாழ்த்தலாமே...
Comments
Post a Comment