கேரளாவில் ஹிந்ததுவ எழுச்சி.

கேரளாவில் ஹிந்ததுவ எழுச்சி.

whatsaap msg for discussion
       கடந்த வாரம் கேரளாவில் அதிகம் சர்ச்சையான விஷயங்கள் சபரிமலையும், மீசையும், சபரிமலை விஷயம் இங்கு பெரும்பாலோனோர்க்கு தெரிந்திருந்தாலும் மீசை பற்றி அதிகம் பேர் தெரிந்துகொள்ள வாய்ப்பில்லை.
         மாத்ருபூமி பத்திரிகையின் வாரப்பதிப்பில் வந்த தொடர் நாவலின் தலைப்பு தான் மீசை, எழுதியவர் இடதுசாரி சிந்தனையாளர் எஸ்.ஹரீஷ்,
சர்ச்சைக்கு காரணம் என்னவென்றால் நாவலின் இரண்டாவது அத்தியாயத்தில் அவர் குறிப்பிட்ட ஒரு விஷயம், ஹிந்து பெண்கள் குளித்து, பொட்டு வைத்து, பூச்சூடி, நல்ல உடையணிந்து கோவில்களுக்கு செல்வது நான் "அதற்கு" தயாராக இருக்கிறேன் என ஆண்களுக்கு உணர்த்தவே என்றும், விலக்கான மூன்று நாட்கள் கோவிலுக்கு வராதது அதற்கு தயாரில்லை என்பதை காட்டவும் தான் எனவும், இதற்கு அர்ச்சகர்கள் துணையாய் இருக்கிறார்கள் என்றும் எழுதியிருந்தார்.
          ஒட்டுமொத்த ஹைந்தவ சமூகமும் கொதித்தெழுந்தது போராடியது, மாத்ருபூமி அந்த தொடரை வெளியிடமாட்டோம் என்றும், ஹரீஷ் இனி எழுதபோவதில்லை என சொல்லும் அளவுக்கு பெண்கள் போராடினார்கள், இங்குள்ள பிரசன்னா வகையறா கேரள காம்ரேடுகள் வழக்கம் போல போராடியவர்களுக்கு சங்கி முத்திரை குத்த, எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் என பொங்கி பதிவிட்ட பிணராயி, கோடியேறி, ரமேஷ் சென்னித்தல, எம்.ஏ. பேபி போன்ற அரசியல் தலைவர்களின் பதிவுகளில் இணைய ஹிந்துக்கள் பொங்கலிட்டனர்.
         கோவிலுக்கு செல்லும், ஆனால் பரம்பரை காம்ரேடு, காங்கிரஸ் குடும்பத்தினர் தொகுதிக்கு இரண்டாயிரம் பேராவது கடந்த வாரத்தில் மட்டும் பிஜேபியில் சேர்ந்ததாக தகவல்கள் வருகிறது.
         ஷாகா செல்பவனை மட்டும் சங்கி என அழைத்தவர்கள் இப்போது கோவிலுக்கு சென்றாலே அவன் சங்கி என முத்திரை குத்த, பல பெண்கள் ஆம், நானும் சங்கி தான் என பேஸ்புக்கில் லைவ்வுகிறார்கள். எது எப்படியோ பிஜேபிக்கு உறுப்பினர்கள் சேர்க்கும் வேலையை காங்கிரஸ், கம்மியூனிஸ்ட் தலைவர்களும், தொண்டர்களும் ஒருங்கே செய்கிறார்கள். இந்த தன்னெழுச்சி எப்போது நம்மூர் ஹிந்துக்களுக்கு வருமோ என்ற ஆயாசத்தில் காத்திருக்கிறேன்.
      படத்தில் பிணராயி விஜயனின் பேஸ்புக் போஸ்ட், கூடவே ஹிந்து உணர்வாளரான சினிமா டைரக்டர் அலி அக்பரின் கமெண்ட், போஸ்ட்டை விட கமெண்டுக்கு லைக் அதிகமாவதை கண்டு கமெண்டை தூக்கிவிட்டார்கள் என்பது கொசுறு தகவல்.😝😜
படித்ததில்... பிடித்தது

Comments

Popular posts from this blog

தமிழகத்தில் சாதிகள் வரலாறு

ஊடகத்துறை Media

தமிழர்களின் கலை தொகுப்பு - அங்கள பரமேஸ்வரி