மருத்துவ நல உரிமைகளும் ஹீலர் பாஸ்கர் கைதும்!

சிறப்புக் கட்டுரை: மருத்துவ நல உரிமைகளும் ஹீலர் பாஸ்கர் கைதும்!
ராஜன் குறை கிருஷ்ணன்
முதலீட்டிய, பிற்காலனிய எதிர்ப்பாக நினைத்துக்கொண்டு சமூக வலைதளங்களில் மரபு ஆதரவு கோஷங்கள் பல கண்ணில்படுகின்றன. குறிப்பாக ஹீலர் பாஸ்கர் கைது தவறு என்ற கருத்து பலரால் கூறப்படுகிறது. சில விஷயங்களைத் தெளிவாகப் பார்க்க விரும்புகிறேன்.
1. எல்லாக் காலங்களிலும் பிரசவம் என்பது ஓடும் ரயிலில், வாகனங்களில், பொது இடங்களில் என்று பல சந்தர்ப்பங்களில் திடீரென பிரசவ வலி அதிகமாகி நிகழத்தான் செய்கின்றன. கூட இருக்க நேரும் முகமறியாப் பெண்கள் உதவுகின்றனர். எந்தப் பெண்ணும் தானாக, இயற்கையாகப் பிரசவிக்க முடியும் என்பதில் யாருக்கும் ஐயம் இருக்க முடியாது.
2. ஆனால், இன்றைய நிலையில் வீட்டிலேயே பிரசவம் பார்ப்பதாக முடிவு செய்வதற்கு மனத் தெளிவும், அனுபவமிக்கவர்களின் அண்மையும் வேண்டும். குறிப்பாக, வலியால் பெண்கள் நீண்ட நேரம் அவதிப்பட நேர்ந்தால் அதை மனம் பதைக்காமல் இயல்பு என்று ஏற்றுக்கொள்ள முடிய வேண்டும். எதிர்பாராத சிக்கல்கள் ஏதும் ஏற்பட்டால் என்ன செய்வது என்ற கவலையும் இருக்கத்தான் செய்யும். இது முதலில் அந்தப் பெண்ணின் உடல்நிலை, எண்ணங்கள் ஆகியவற்றின் அடிப்படையிலும், பின்னர் குடும்ப உறுப்பினர்கள் கருத்தின் அடிப்படையிலும் தீர்மானிக்கப்பட வேண்டும்.
மருத்துவமனை ஏன் அவசியம்?
3. இவ்வாறு திடீரென ஏற்படக்கூடிய சாத்தியமான சிக்கல்கள், மன அழுத்தங்கள் ஆகியவற்றின் பொருட்டே மருத்துவர்கள், செவிலியர், தேவையான உபகரணங்கள், சிகிச்சைக்கான மருந்துகள் கொண்ட மருத்துவ நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் போன்றவை பிரசவத்திற்குப் பொருத்தமானவையாகக் கருதப்படுகின்றன. இது பகுத்தறிவு சார்ந்தது. பிரசவம் பார்த்த அனுபவம் கொண்டவர்கள் இருப்பதே பக்கபலம் என்னும்போது, அதை அனுதினமும் செய்பவர்களிடம் செல்வது நிச்சயம் உதவிகரமானது.
4. பேறுகால உதவிகள், மருத்துவ நலன் பேணுதல் போன்றவற்றில் தமிழகம் எட்டியுள்ள அரசு சார்ந்த பொது மருத்துவ நிலைய வலைப்பின்னல் இந்திய அளவில் மிகவும் சிறப்பானதாக ஆய்வாளர்களால் கருதப்படுகிறது. சில குறைபாடுகள் ஆங்காங்கே இருக்கலாம் என்றாலும்கூட பொதுவாக சிறப்பான செயல்பாடாகவே குறிப்பிடப்படுகிறது.
உரிமையை மறுப்பது சரியல்ல
5. இருப்பினும் தங்கள் உரிமை என்ற அடிப்படையில் வீட்டிலேயே பிரசவம் பார்க்க நினைப்பவர்கள் அருகிலுள்ள அரசு மருத்துவமனையிலோ, ஆரம்ப சுகாதார நிலையத்திலோ தங்கள் விருப்புறுதியைத் தெரிவித்துத் தங்கள் பொறுப்பில் வீட்டிலேயே பிரசவிக்கப் பதிவு செய்துகொள்ளும் முறையை ஏற்படுத்தலாம். அவர்களுக்குச் சில அறிவுரைக் கையேடுகளை அரசே வழங்கலாம். இந்த உரிமையைச் சட்ட ரீதியாக மறுப்பது என்பது சரியானதல்ல.
6. தனியார் மருத்துவமனைகளில்கூட சிசேரியன் முறையைத் தவிர்க்கவே நல்ல மருத்துவர்கள் முயல்வார்கள். ஆனால், தொடர்ந்த வலி குறித்த அச்சத்தால் பெண்களோ, குடும்பத்தினரோகூட அந்த முறையைத் தேர்ந்தெடுக்கத்தான் செய்கிறார்கள். சிசேரியன் தவிர்ப்பது என்பது ஒரு பரவலான சமூக விழைவாக, அதற்கான நீண்டகாலப் பயிற்சியுடன் நடக்க வேண்டிய ஒன்றாகும். அதைக் குறித்த விவாதம், சாத்தியமான நீண்டகால உடற்பயிற்சிகள் குறித்த அக்கறை ஆகியவை அதிகமாக வேண்டும்.
சிசேரியன் சிக்கல்கள்
7. சிசேரியன் முதலிய அதிகபட்ச மருத்துவ இடையீடுகளைப் பெரும் பொருட்செலவில் செய்வது என்பது வசதியுள்ள குடும்பங்களுக்கும் மருத்துவ நிறுவனங்களுக்கும் இடையிலான அனுசரணைகள். நல்ல நேரத்தில், நட்சத்திரத்தில் பிறக்க வேண்டும் என்பதற்காகக்கூட சிசேரியன் செய்ய ஏற்பாடு செய்பவர்கள் இருக்கிறார்கள்.
8. சிசேரியன் முதலிய மருத்துவ இடையீடுகளைத் தவிர்ப்பது என்பதும் வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது என்பதும் இருவேறு பிரச்சினைகள். உண்மையில் சிசேரியன் தவிர்ப்பவர்கள்தான் குறிப்பாக மருத்துவமனைகளை நாட வேண்டும்; ஏனென்றால் கடைசி நிமிட அச்சங்கள், கவலைகள், விபத்துகள் ஆகியவற்றைத் தவிர்க்க முடியும்.
9. இந்த நிலையில் மரபு என்ற பெயரில், வீட்டிலேயே பிரசவம் பார்க்க பயிற்சியளிப்பதாகக் கூறுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் எந்தத் தகுதியின், அனுபவத்தின் அடிப்படையில் இதைச் செய்கிறார்கள் என்பது அவசியம் விசாரணைக்கு உட்பட வேண்டும்.
ஹீலர் பாஸ்கரின் பிரச்சினைகள்
10. ஹீலர் பாஸ்கர் என்பவர் சரியான அரைவேக்காடு என்பது அவரது நேர்காணல் ஒன்றைப் பார்த்ததில் தெள்ளத் தெளிவாக தெரிகிறது. எல்லாப் பிரச்சினைகளுக்கும் தன்னிடம் விடை இருப்பதாக அவர் மார்தட்டிக்கொள்வது நகைப்புக்கு உரியது மட்டுமன்றி மிகவும் ஆபத்தானது. எந்த ஒரு பிரச்சினையையும் அவர் முழுமையாக அணுகுவதில்லை. மிகவும் எளிமைப்படுத்தி, தட்டையாகவே புரிந்துகொள்கிறார்.
11. உடல் குறித்து அவர் கூறும் பல வாழ்முறைகள், வழிமுறைகள் வருமுன் காக்கும் வழிமுறைகள் என்று வேண்டுமானால் கூறலாம். ஆனால், நோய் வந்தபின் அவற்றைக் கொண்டு என்ன செய்ய முடியும் என்பது கேள்விக்குரியது. அவரிடம் ஒரு மதப் பிரசாகருக்கே உரிய மூளைச் சலவை செய்யும் தொனியும், அதீத தன்னம்பிக்கையும் வெளிப்படுகிறது.
12. அரசுக்கும், இன்று அரசு மருத்துவமனைகளில் பயிலப்படும் மருத்துவ முறைகளுக்கும் சவால் விடும் பாஸ்கர் போன்றவர்கள் வீட்டிலேயே பிரசவம் செய்துகொள்ளப் பயற்சியளிப்பதாகச் சொல்லி அதனால் பெண்கள் பாதிக்கப்படுவதைச் சமூகமும் அரசும் வேடிக்கை பார்ப்பது சாத்தியமில்லை என்றுதான் நினைக்கிறேன். இந்தக் கைதும் விசாரணையும் அவர் கட்டணத்துடன் பயிற்சியளிக்கும் அளவு தகுதியுள்ளவரா என்பதைக் கண்டறிய நிகழ்வதைச் சமூகம் வரவேற்கத்தான் வேண்டும்.
(கட்டுரையாளர்: ராஜன் குறை கிருஷ்ணன்... பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுடெல்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com)
மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 6 ஆக 2018

Comments
Post a Comment