வீட்டில் ஒரு அம்பேத்கர் படத்தை மாட்டிப்பாருங்கள். இந்த நாட்டின் ஜாதி வெறி புரியும்.

வீட்டில் ஒரு அம்பேத்கர் படத்தை மாட்டிப்பாருங்கள். இந்த நாட்டின் ஜாதி வெறி புரியும்.
நன்றி Vijay Bhaskarvijay 💙
//நான் ஒரு செட்டியார்.
நான் ஒரு நாடார்.
நான் ஒரு நாயக்கர்
நான் ஒரு தேவர்.
ஒரு சாதி இந்து அல்லது பார்ப்பனர்.
எனக்கு சமூகநீதி ஒரளவுக்கு புரிகிறது.
எனக்கு தெருவில் இறங்கி போராடவோ
எழுதவோ எல்லாம் தெரியாது. முடியாது.
ஆனால் சமூக நீதி தளத்தில் ஏதோ கொஞ்சமாவது செய்ய விரும்புகிறேன்.
இப்படி உங்களுக்கு தோன்றுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் என்ன செய்யலாம்?
ஒரே ஒரு காரியம் செய்யுங்கள். உங்கள் வீட்டில் ஒரு அம்பேத்கர் படத்தை ஒட்டி வையுங்கள்.
வேறு ஒன்றுமே செய்ய வேண்டாம். கையளவு அகலம் உடைய ஒரு அம்பேத்கர் படத்தை அனைவரும் பார்க்கும்படி ஒட்டி வையுங்கள்.
சேகுவரா, ஃபிடல் காஸ்டிரோ, பெரியார், மார்க்ஸ் என்று யார் போட்டோ வேண்டுமானாலும் ஒட்டுங்கள் ஒட்டாமல் இருங்கள்.
ஆனால் அம்பேத்கர் படத்தை ஒட்டிவிடுங்கள்.
புற்கள் நிறைய இருந்தால்தான் காட்டில் மான்கள் நிறைய இருக்கும்,
மான்கள் நிறைய இருக்கும் காட்டில் புலி இருக்கும்.
So ஒரு காடு வளமாய் இருக்கிறதா என்பதை காட்டில் புலிகள் இருக்கிறதா என்பதை வைத்து சொல்லிவிடுவார்கள்.
புலி இருக்கா.. அப்போ காடு நல்லாயிருக்கு என்பார்கள்.
புலிக்குள் காட்டு வளம் என்ற Term அடங்கி விடுகிறது.
அதே மாதிரிதான் அம்பேத்கர் படம் இருந்தால் அதற்குள் மார்க்ஸ் படமும், பெரியார் படமும் அடங்கி விடுகிறது.
இதை அம்பேத்கர் தத்துவத்துக்குள் அவர்கள் அடங்கி விடுகிறார்கள் என்று கூட சொல்லவில்லை ( நான் அப்படி நம்பினாலும்)
ஒருவர் வீட்டில் பெரியார் படம் மட்டும் இருந்து அம்பேத்கர் படம் இல்லையென்றால்
அவர் ஒரு பார்ப்பனராக இருக்க வாய்ப்பில்லை. ஆனால் சாதி இந்துவாக இருக்க வாய்பிருக்கிறது.
மார்க்ஸ் படமிருந்து பெரியார் அம்பேத்கர் படமில்லாவிட்டால் அவர் பார்ப்பனராக இருக்க வாய்ப்பிருக்கிறது.
மார்க்ஸும் பெரியாரும் இருந்து அம்பேத்கர் படம் இல்லாவிட்டால் அவர் சாதி இந்துவாக இருக்க வாய்ப்பிருக்கிறது.
இந்த இடைவெளியில்தான் பல சாதி இந்துக்களும் பார்ப்பனர்களும் பெரியாருடனும், மார்க்ஸுடனும் தங்களை ஐக்கியப்படுத்தி “நாங்களும் சமூகநீதி ஆர்வலர்தான்” என்று எஸ்கேப்பாகி வருகிறார்கள்.
நீங்கள் அம்பேத்கர் படத்தை ஒட்டி வைப்பதால் நீங்கள் மார்க்ஸையும் ஆதரிக்கிறீர்கள், பெரியாரையும் ஆதரிக்கிறீர்கள், அம்பேத்கரையும் ஆதரிக்கிறீர்கள் என்றுதான் பொருள் வருமே தவிர அம்பேத்கரை மட்டுமே ஆதரிப்பதாக பொருள் வராது.
அம்பேத்கர் என்னும் புலிக்குள் “சமூகநீதி வளம்” என்பது அடக்கம்.
அதனால் அவர் படத்தை வீட்டில் ஏதாவது ஒரு இடத்தில் ஒட்டி வையுங்கள்.
இதனால் உடனே சமூகம் திருந்தி விடுமா என்றால் திருந்தி விடாது. ஆனால் அந்த சாதி இந்துக்கள் மட்டும் பார்ப்பனர்களிடையே அம்பேத்கேர் மேல் இருக்கும் வெறுப்பு குறையக் கூடும்.
சாதி இந்துவாக பார்ப்பனராக பிறந்துவிட்டாலும் எங்களுக்கும் அம்பேத்கர் மேல் மரியாதை இருக்கிறது என்பதை அந்த படம் ஒட்டல் சுட்டிக்காட்டும்.
அம்பேத்கர் மேல் மரியாதை என்பது சமூகநீதி மேல் உள்ள மரியாதைதான் என்பதை நீங்களே போக போக உணர்ந்து கொள்வீர்கள்.
நீங்கள் ஒட்டிப்பாருங்கள். உங்கள் உறவினர்கள் ரியாக்சனை மட்டும் பாருங்கள்.
அப்போதுதான் நீங்கள் நம் நாட்டில் இருக்கும் சாதி வெறி விஷத்தை முழுமையாக பார்க்க முடியும்...//

Comments

Popular posts from this blog

தமிழகத்தில் சாதிகள் வரலாறு

ஊடகத்துறை Media

தமிழர்களின் கலை தொகுப்பு - அங்கள பரமேஸ்வரி