ஊடகத்துறை Media
Source :-https://tamiljournalism.wordpress.com
செய்தி, வரையறை, வகைகள்
இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
இந்தப் பாடம் இதழியல் செய்தி பற்றியது. செய்தி எவ்வாறு கருவாகி உருவாகி மலர்கிறது என்கிற வரையறையைக் கூறுகிறது. மேலும் செய்தியின் முக்கிய வகைகள் பற்றியும் பேசுகிறது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
கருத்தியலை கட்டமைப்பதில் ஊடகவியலின் முதன்மைப் பாத்திரம்
நான் .. ஊடகம் …. இன்னும் சில…
டிஜிட்டல் ஊடகத்தின் சவால்கள் : நியூயோர்க் டைம்ஸ் இணையப் பத்திரிகை ஆசிரியர் நேர்காணல்
பேனா போராளிகள் மரணிப்பதில்லை விதைக்கப்படுகின்றனர். மீண்டும் எழுவர் - வி.தேவராஜ்
தமிழ் தளத்தில் ஊடகவியல் – மக்களுக்கான ஊடகமும்-ஊடகவியலும்
ஊடகம் என்றால் என்ன?
பொதுவாக ஊடகம் என்றால் கடத்துவது, காவுவது என்று தமிழில் அர்த்தம் கொள்ளப்படுகிறது.
ஒரு செப்புக்கம்பி ஒரு முனையில் இருந்து மறுமுனைக்கு மின்சாரத்தை கடத்திச் செல்லும் போது அது அங்கே ஒரு ஊடகமாகச் செயற்படுகிறது.அதே போல ஒருவர் பேசும்பேச்சை,மற்றவர் கேட்பதற்கு அதை ஒலி அலைகளாகச் சுமந்து செல்லும் காற்று ஊடகமாகச் செயற்படுகிறது.
ஊடகவியல் என்கிறபோது அது மனிதர்களுக்கிடையி;ல் கருத்துக்களை –தகவல்களை காவிச் செல்கின்ற -பரப்புகின்ற வேலையைச் செய்கின்ற தொடர்பாடல் சம்மந்தப்பட்ட துறையைக் குறிக்கிறது என்று சாதாரணமாகச் சொல்லலாம்.
குறிப்பாகச் சொல்வதானால் கருத்தியலை கட்டமைப்பது,மனிதர்களினதும் சமுகத்தினதும் இருப்பை தீர்மானிப்பது, சந்தைப் பொருளாதாரத்தின் இருப்பை தீர்மானிப்பது,அரசியல் தத்துவம் விஞ்ஞானம் சட்டம் மருத்துவம் பொறியியல் என்று பல்துறை சார்ந்த விடயங்களில் தீர்மானகரமான சக்தியாக விளங்குவது என்று ஊடகவியலில் சர்வ வியாபகத் தன்மையை விளக்கலாம்.
ஒரு செப்புக்கம்பி ஒரு முனையில் இருந்து மறுமுனைக்கு மின்சாரத்தை கடத்திச் செல்லும் போது அது அங்கே ஒரு ஊடகமாகச் செயற்படுகிறது.அதே போல ஒருவர் பேசும்பேச்சை,மற்றவர் கேட்பதற்கு அதை ஒலி அலைகளாகச் சுமந்து செல்லும் காற்று ஊடகமாகச் செயற்படுகிறது.
ஊடகவியல் என்கிறபோது அது மனிதர்களுக்கிடையி;ல் கருத்துக்களை –தகவல்களை காவிச் செல்கின்ற -பரப்புகின்ற வேலையைச் செய்கின்ற தொடர்பாடல் சம்மந்தப்பட்ட துறையைக் குறிக்கிறது என்று சாதாரணமாகச் சொல்லலாம்.
குறிப்பாகச் சொல்வதானால் கருத்தியலை கட்டமைப்பது,மனிதர்களினதும் சமுகத்தினதும் இருப்பை தீர்மானிப்பது, சந்தைப் பொருளாதாரத்தின் இருப்பை தீர்மானிப்பது,அரசியல் தத்துவம் விஞ்ஞானம் சட்டம் மருத்துவம் பொறியியல் என்று பல்துறை சார்ந்த விடயங்களில் தீர்மானகரமான சக்தியாக விளங்குவது என்று ஊடகவியலில் சர்வ வியாபகத் தன்மையை விளக்கலாம்.
ஊடகவியலின் செயற்பாடு
முதல்கட்டமாக ஊடகவிலின்; செயற்பாடுகளை தகவல் தெரிவித்தல், அறிக்கையிடுதல், பிரதிபலிப்பை உருவாக்குதல் என்கின்ற மூன்று வரையறைகளுக்குள் அடக்கலாம்.
தகவல் தெரிவித்தல்
கருத்தை மக்களிடம் எடுத்துச் செல்கின்ற பணி தான் ஒரு ஊடகத்தின் முதல் பணியாகும்.
கருத்து என்பது இதழியலில் செய்தி, கட்டுரை, விவாதம், விமர்சனம், சிறுகதை, தொடர்கதை, நாவல், கவிதை, பாடல் என்று பல்வேறு வடிவங்களில் மக்களிடம் எடுத்துச் செல்லப்படுகிறது.
ஓலி ஒளி ஊடகங்களில் இவற்றுடன் கலந்துரையாடல் பாடல் நாடகம் விவரணச் சித்திரம் குறும் படம் ஆவணப்படம் சினிமா என்று இந்த வடிவம் இன்னும் விரிவுபெறுகிறது.
ஒரு விளம்பரமாக அறிவித்தலாகக் கூட ஒரு கருத்து மக்களிடம் எடுத்துச் செல்லப்படலாம்.கருத்து ஊடகங்களுடாக மக்களிடம் எடுத்துச் செல்லப் படுகின்ற போது முதலில் தகவல் தெரிவித்தல் என்ற பணி அங்கு நடைபெறுகிறது.
கருத்து என்பது இதழியலில் செய்தி, கட்டுரை, விவாதம், விமர்சனம், சிறுகதை, தொடர்கதை, நாவல், கவிதை, பாடல் என்று பல்வேறு வடிவங்களில் மக்களிடம் எடுத்துச் செல்லப்படுகிறது.
ஓலி ஒளி ஊடகங்களில் இவற்றுடன் கலந்துரையாடல் பாடல் நாடகம் விவரணச் சித்திரம் குறும் படம் ஆவணப்படம் சினிமா என்று இந்த வடிவம் இன்னும் விரிவுபெறுகிறது.
ஒரு விளம்பரமாக அறிவித்தலாகக் கூட ஒரு கருத்து மக்களிடம் எடுத்துச் செல்லப்படலாம்.கருத்து ஊடகங்களுடாக மக்களிடம் எடுத்துச் செல்லப் படுகின்ற போது முதலில் தகவல் தெரிவித்தல் என்ற பணி அங்கு நடைபெறுகிறது.
அறிக்கையிடுதல்
அறிக்கையிடுதல் என்பது ஊடகவியலில் மிக முக்கியமான ஒரு விடயமாகும். ஒரு கருத்தை கட்டமைத்து, அதை மக்கள் நம்புகின்ற விதத்தில்,அவர்கள் விருப்பத்தக்கவகையில் அவர்களுடைய அறிவுத் தளத்தை நோக்கி நகர்த்துவதை ஊடகவியலில் அறிக்கையிடுதல் என்று சொல்லலாம்.
அதாவது ஒரு மனிதனின் சிந்தனைத் தளத்தில் ஊடுருவி அவன் எதைச் செய்ய வேண்டும், எதைச் சார்ந்திருக்க வேண்டும், எதைச் சாப்பிட வேண்டும் எதை உடுக்கவேண்டும், எதைக் குடிக்கவேண்டும், எதைப் படிக்க வேண்டும், எதைப் பார்க்க வேண்டும் என்ற அவனது அனைத்துச் செயற்பாடுகளையும் அவனையறியாமலோ அல்லது அவன் அறியும் படியாகவோ புறநிலையில் இருந்து இயக்குகின்ற தீர்மானகரமான சக்தியாக ஊடகவியல் விளங்குதற்கு இந்த அறிக்ககையிடுதல் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
உதாரணமாக இந்தியா இலங்கை போன்ற நாடுகளிலே உள்ளுரில் தயாரிக்கப்படுகின்ற ஒரு குளிர் பானம், தரமும் சுவையும் ஊட்டச்சத்தும் நிறைந்ததாக இருந்தாலும், சர்வதேச பிரபல்யம் வாய்ந்த குளிர் பானங்களுடன் சந்தையில் அதனால் போட்டிபோட முடிவதில்லை.
இதற்கு பொருளாதார ரீதியாக பலகாரணங்கள் இருப்பதாகச் சொல்லப்பட்டாலும் அவை எல்லாவற்றiயும் விட , உள்ளுர் குளிர் பானத்தைவிட சர்வதேசப் புகழ்பெற்ற குளிர் பானந்தான் சிறந்தது, அவற்றை மற்றவர்களுக்கு முன்பாக குடிப்பதே கௌரவத்துக்குரியது என்று நுகர்வேருடைய மனங்களிலே கட்டமைக்கப்பட்டிருக்கின்ற பிம்பம் முக்கியமானதாகும்.
இந்தப் பிம்பம் ஊடகங்களால் தான் கட்டமைக்கப்படுகிறது. இதைக் கட்டமைப்பதற்காக ஊடகவியலில் கையாளப்படும் முறைதான் அறிக்கையிடுதல் எனப்படுகிறது.
பொதுவாக அறிக்கையிடுதலில் தகவல் தெரிவித்தல், ஓப்பீட்டுக் குள்ளாக்கல், அம்பலப்படுத்தல், நம்பிக்கையூட்டல் என்கின்ற வழிமுறைகள் கையாளப்படுகின்றன.
உதாரணமாக சர்வதேச சந்தையில் இடம் பிடித்திருக்கும் ஒரு பிரபலமான நிறுவனத்தின் தயாரிப்பான ஒரு செருப்பு, அல்லது சப்பாத்து முதன் முதலாக ஒரு நாட்டின் உள்ளூர் சந்தைக்கு வருகின்றதென்று வைத்துக்கொண்டால் அந்தப் பொருள் சந்தைக்கு வருவதற்கு முன்னர் அதைப்பற்றிய விளம்பரம் செய்யப்படும்.
அதிலே முதலில் அந்தத் தயாரிப்பு மற்றும் அதை தயாரித்த நிறுவனம் பற்றிய தகவல் இருக்கும். அடுத்தபடியாக அந்த நிறுவனத்தின் சர்வதேசப் பிரபல்யம் மற்றும் அந்த நிறுவனத் தயாரிப்புக்களின் விற்பனைச் சாதனை (அதிக மக்கள் வாங்கிப் பாவிக்கின்றார்கள் என்கின்ற புள்ளி விபரம்) என்கின்ற ஒப்பீட்டுத் தன்மை இருக்கும்.
அடுத்து அந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் பாதுகாப்பானவை, உறுதியானவை நீடித்து உழைக்கக் கூடியவை என்கின்ற அம்பலப்படுத்தும் (மற்றய தயாரிப்புக்கள் தரமற்றவை என்று மறைமுகமாக அம்பலப்படுத்தவது) தன்மை இருக்கும்.
இறுதியாக மக்களின் அபிமானத்தை பெற்ற ஒரு விளையாட்டு வீரர் அந்த செருப்பை அல்லது சப்பாத்தை பாவிப்பது போன்று காண்பிக்கப்படும். இதன் மூலம் இந்தத் தயாரிப்பு சிறந்ததாகத் தான் இருக்கும் என்ற நம்பிக்கை அல்லது பிரமை நுகர்வோருடைய மனங்களிலே கட்டமைக்கப்படும்.
அறிக்கையிடுதல் என்பது ஒரு விளம்பரத்தில் மட்டுமல்லாமல் ஊடகத்துறை சார்ந்த அனைத்து கருத்தியல் வெளிப்பாட்டு வடிவங்களில் இந்த அடிப்படையிலே தான் மேற்கொள்ளப்படுகிறது.
பொதுவாக ஊடகத்துறையில் அறிக்கையிடுதல் என்பது இருவழித் தன்மை கொண்டதாகும்.
முதலாவது ஒரு அதிகார மையத்திலிருந்து மக்களை நோக்கி அறிக்கையிடப்படுவது. இது அதிகார மையத்தின் தேவைகளுக்காக மக்களை தயார் படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. பெரும்பாரும் அனைத்து ஊடகங்களினதும் 90 வீதமான செயற்பாடுகள் இந்த வகையயை அதாவது மேலிருந்து கீழ்நோக்கி கருத்தை கொண்டுசெல்லும் தன்மையைக் கொண்டவை.
அது செய்தியும் செய்திசார்ந்த வடிவங்களாக இருக்கலாம். அல்லது நாடகம் சினிமா சின்னத்திரை என்று அழகியல் சார்ந்த வடிவங்களாக இருக்கலாம். அனைத்துமே இந்த வரையறைக்கள் அடங்குகின்றன.
இரண்டாவது மக்களிடமிருந்து தகவல்களைத் திரட்டி, அதிகார மையத்தை நோக்கி அறிக்கையிடுவது. இது அதிகார மையத்தின் தேவைகளுக்காக மக்களை தயார்படுத்துவதற்கு மக்களிடமிருந்து தகவல்களை திரட்டி அதிகார மையத்துக்குக் கொடுப்பது. இது அநேகமாக ஒரு புலனாய்வு செயற்பாட்டுக்கு ஒப்பானது. இதற்கு சிறந்த உதாரணமாக தேர்தல் காலங்களில் ஊடகங்கள் நடத்தும் கருத்துக் கணிப்புக்களை குறிப்பிடலாம். அதேபோல இந்திய ஊடகங்கள் நடத்தும் இது கதையல்ல நிஜம், சொல்வதெல்லாம் உண்மை, திரை வரிசை ரொப் ரென் போன்ற நிகழ்ச்சிகளை குறிப்பிடலாம்.
அதாவது ஒரு மனிதனின் சிந்தனைத் தளத்தில் ஊடுருவி அவன் எதைச் செய்ய வேண்டும், எதைச் சார்ந்திருக்க வேண்டும், எதைச் சாப்பிட வேண்டும் எதை உடுக்கவேண்டும், எதைக் குடிக்கவேண்டும், எதைப் படிக்க வேண்டும், எதைப் பார்க்க வேண்டும் என்ற அவனது அனைத்துச் செயற்பாடுகளையும் அவனையறியாமலோ அல்லது அவன் அறியும் படியாகவோ புறநிலையில் இருந்து இயக்குகின்ற தீர்மானகரமான சக்தியாக ஊடகவியல் விளங்குதற்கு இந்த அறிக்ககையிடுதல் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
உதாரணமாக இந்தியா இலங்கை போன்ற நாடுகளிலே உள்ளுரில் தயாரிக்கப்படுகின்ற ஒரு குளிர் பானம், தரமும் சுவையும் ஊட்டச்சத்தும் நிறைந்ததாக இருந்தாலும், சர்வதேச பிரபல்யம் வாய்ந்த குளிர் பானங்களுடன் சந்தையில் அதனால் போட்டிபோட முடிவதில்லை.
இதற்கு பொருளாதார ரீதியாக பலகாரணங்கள் இருப்பதாகச் சொல்லப்பட்டாலும் அவை எல்லாவற்றiயும் விட , உள்ளுர் குளிர் பானத்தைவிட சர்வதேசப் புகழ்பெற்ற குளிர் பானந்தான் சிறந்தது, அவற்றை மற்றவர்களுக்கு முன்பாக குடிப்பதே கௌரவத்துக்குரியது என்று நுகர்வேருடைய மனங்களிலே கட்டமைக்கப்பட்டிருக்கின்ற பிம்பம் முக்கியமானதாகும்.
இந்தப் பிம்பம் ஊடகங்களால் தான் கட்டமைக்கப்படுகிறது. இதைக் கட்டமைப்பதற்காக ஊடகவியலில் கையாளப்படும் முறைதான் அறிக்கையிடுதல் எனப்படுகிறது.
பொதுவாக அறிக்கையிடுதலில் தகவல் தெரிவித்தல், ஓப்பீட்டுக் குள்ளாக்கல், அம்பலப்படுத்தல், நம்பிக்கையூட்டல் என்கின்ற வழிமுறைகள் கையாளப்படுகின்றன.
உதாரணமாக சர்வதேச சந்தையில் இடம் பிடித்திருக்கும் ஒரு பிரபலமான நிறுவனத்தின் தயாரிப்பான ஒரு செருப்பு, அல்லது சப்பாத்து முதன் முதலாக ஒரு நாட்டின் உள்ளூர் சந்தைக்கு வருகின்றதென்று வைத்துக்கொண்டால் அந்தப் பொருள் சந்தைக்கு வருவதற்கு முன்னர் அதைப்பற்றிய விளம்பரம் செய்யப்படும்.
அதிலே முதலில் அந்தத் தயாரிப்பு மற்றும் அதை தயாரித்த நிறுவனம் பற்றிய தகவல் இருக்கும். அடுத்தபடியாக அந்த நிறுவனத்தின் சர்வதேசப் பிரபல்யம் மற்றும் அந்த நிறுவனத் தயாரிப்புக்களின் விற்பனைச் சாதனை (அதிக மக்கள் வாங்கிப் பாவிக்கின்றார்கள் என்கின்ற புள்ளி விபரம்) என்கின்ற ஒப்பீட்டுத் தன்மை இருக்கும்.
அடுத்து அந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் பாதுகாப்பானவை, உறுதியானவை நீடித்து உழைக்கக் கூடியவை என்கின்ற அம்பலப்படுத்தும் (மற்றய தயாரிப்புக்கள் தரமற்றவை என்று மறைமுகமாக அம்பலப்படுத்தவது) தன்மை இருக்கும்.
இறுதியாக மக்களின் அபிமானத்தை பெற்ற ஒரு விளையாட்டு வீரர் அந்த செருப்பை அல்லது சப்பாத்தை பாவிப்பது போன்று காண்பிக்கப்படும். இதன் மூலம் இந்தத் தயாரிப்பு சிறந்ததாகத் தான் இருக்கும் என்ற நம்பிக்கை அல்லது பிரமை நுகர்வோருடைய மனங்களிலே கட்டமைக்கப்படும்.
அறிக்கையிடுதல் என்பது ஒரு விளம்பரத்தில் மட்டுமல்லாமல் ஊடகத்துறை சார்ந்த அனைத்து கருத்தியல் வெளிப்பாட்டு வடிவங்களில் இந்த அடிப்படையிலே தான் மேற்கொள்ளப்படுகிறது.
பொதுவாக ஊடகத்துறையில் அறிக்கையிடுதல் என்பது இருவழித் தன்மை கொண்டதாகும்.
முதலாவது ஒரு அதிகார மையத்திலிருந்து மக்களை நோக்கி அறிக்கையிடப்படுவது. இது அதிகார மையத்தின் தேவைகளுக்காக மக்களை தயார் படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. பெரும்பாரும் அனைத்து ஊடகங்களினதும் 90 வீதமான செயற்பாடுகள் இந்த வகையயை அதாவது மேலிருந்து கீழ்நோக்கி கருத்தை கொண்டுசெல்லும் தன்மையைக் கொண்டவை.
அது செய்தியும் செய்திசார்ந்த வடிவங்களாக இருக்கலாம். அல்லது நாடகம் சினிமா சின்னத்திரை என்று அழகியல் சார்ந்த வடிவங்களாக இருக்கலாம். அனைத்துமே இந்த வரையறைக்கள் அடங்குகின்றன.
இரண்டாவது மக்களிடமிருந்து தகவல்களைத் திரட்டி, அதிகார மையத்தை நோக்கி அறிக்கையிடுவது. இது அதிகார மையத்தின் தேவைகளுக்காக மக்களை தயார்படுத்துவதற்கு மக்களிடமிருந்து தகவல்களை திரட்டி அதிகார மையத்துக்குக் கொடுப்பது. இது அநேகமாக ஒரு புலனாய்வு செயற்பாட்டுக்கு ஒப்பானது. இதற்கு சிறந்த உதாரணமாக தேர்தல் காலங்களில் ஊடகங்கள் நடத்தும் கருத்துக் கணிப்புக்களை குறிப்பிடலாம். அதேபோல இந்திய ஊடகங்கள் நடத்தும் இது கதையல்ல நிஜம், சொல்வதெல்லாம் உண்மை, திரை வரிசை ரொப் ரென் போன்ற நிகழ்ச்சிகளை குறிப்பிடலாம்.
பிரதிபலிப்பை உருவாக்குதல்
ஒரு கருத்து ஒரு ஊடகத்தினூடாக ஏதாவதுதொரு வடிவத்தில் மக்களுக்கு தெரிவிக்கப்படும் போது அல்லது மக்கள் மத்தியிலே பரப்பப்படும் போது மக்களுடைய மனங்களிலே அறிதல் தெளிதல் வினையாற்றுதல் என்ற மூன்று செயற்பாடுகள் நடக்கின்றன.
உதாரணமாக காச்சல் தலைவலி என்பது உலகிலுள்ள அனைவருக்கும் வரக்கூடிய ஒரு நோயாகும். இந்த நோய்க்கு பல்வேறு பெயர்களில் மருந்துகளும் இருக்கின்றன. இந்த நோயை ஏற்படுத்தும் கிருமிகளை அழிக்கக் கூடிய மருந்தின் அடிப்படை மூலக்கூறுகள் மருத்துவ ரீதியாக ஒன்றாக இருந்தாலும்; நாட்டுக்கு நாடு இந்த மருந்துகள் அவற்றை தயாரிக்கின்ற நிறுவனங்களின் கொடுக்கப்படும் வௌ;;வேறு பெயர்களில் தான் மக்களால் அறியப்படுகின்றன.
இலங்கையில் காச்சலுக்கென்று ‘எக்ஸ்’ என்ற மருந்து பாவனையில் இருக்கிறதென்று வைத்துக் கொண்டால் இப்போது ‘வை என்ற சிறந்த மருந்து வெளிநாடுகளில் பாவிக்கப்படுவதாகவும்; அது இலங்கையில் விற்பனைக்கு வந்துள்ள தென்றும் இந்த புதிய மருந்து துரித நிவாரணம் தருவதாகவும் ஊடகங்களில் செய்தி அல்லது விளம்பரம்; வெளியிடப்படும்; போது அதை கிரகிக்கும் ஒரு மனிதன் முதலில் இந்தப் புதிய மருந்து வந்திருக்கும் தகவலை அறிந்து கொள்கிறான். அதற்கு அடுத்தபடியாக அந்த தகவலூடான இந்த புதிய மருந்து வெளிநாடுகளில் பாவிக்கப்படுவதால் சிறந்த மருந்தாக இருக்கும் என்ற கருத்து (அவனுடைய அறிதலுக்கு ஊடாக) அவனுக்கு ஏற்படுகிறது. அதன் பின்னர் அந்த மருந்தை வாங்கவேண்டும் என்ற வினையாற்றும் எண்ணம் அவனுக்கு உருவாகிறது. மருத்துவர் பழைய மருந்தை கொடுத்தால் புதிய மருந்தை எழுதித் தாருங்கள் என்று கேட்கும் நிலைக்கு அவன் வருகிறான்.
இதற்கு இன்னொரு உதாரணமாக கடந்த 2005ம் ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தன்று மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராசசிங்கம் படுகொலை செய்யப்பட்ட செய்;தியை எடுத்துக் கொள்ளலாம்.
இந்தச் செய்தி ஊடகங்கள் வாயிலாக ஐரோப்பாவில் உள்ள புலம் பெயர்ந்த தமிழர்களை எட்டிய போது அதன் மூலம் ஜோசப் பரராசசிங்கம் துப்பாக்கிச்; சூடுபட்டு இறந்துவிட்டார் என்ற தகவல் முதலில் அவர்களுக்கு தெரிகிறது.அடுத்து அவர் எங்கே வைத்து சுடப்பட்டார்? எப்போது சுடப்பட்டார்? யார் அவரைச் சுட்டார்கள்? யார் அவரின் எதிரிகள் என்கின்ற தகவல்கள் மூலம் அவரைச் சுட்டுக் கொன்றவர்கள் தமிழின துரோகிகள் என்ற தெழிவு அல்லது புரிதல் அவர்களுக்கு ஏற்படுகிறது.
அதற்கு அடுத்த கட்டமாக இந்தப் புரிதல் தெழிதல்களுக்கூடாக இந்தப் படுகொலையைக் கண்டிக்க வேண்டும் என்ற செயலாற்றும் என்ணம் இந்தச்செய்தியைப் படிப்பவர்களுடைய மனதிலே உருவாகிறது. இந்த செய்தி சொல்லப்பட்ட விதத்தையும் அதை உள்வாக்கிக் கொண்டவருடைய கருத்தியல் தளம் மற்றும் இருப்பையும் பொறுத்து இந்தப் படுகொலைக்கு எதிராக வினையாற்றும் செயற்பாடு அமைகின்றது.
ஓரு தீவிரமான கிறிஸ்தவருக்கு ஜேசு பாலன் பிறந்த நேரத்தில் அவரது பிறப்புக்கான ஆராதனை நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் இந்தச் சம்பவம் நடந்துவிட்டதே என்ற கொதிப்பு அவரை ஆட்கொண்டிருக்கும்.தமிழ் தேசிய உணர்வாளர் ஒருவருக்கு அது துயரத்துடன் கூடிய ஆத்திர உணர்வை தூண்டியிருக்கும.;அதேவேளை இனவிரோதச் செயற்பாடுகளில் ஈடுபடும் நபருக்கு இந்தச் செய்தி மகிழ்ச்சிதரும் ஒன்றாக இருந்திருக்கும்.
பொதுவாக ஊடகங்கள் தங்களது நோக்கம் இருப்பு மற்றும் செயற்பாடுகள் பற்றி பல்வேறு காரணங்களையும் வியாக்கியானங்களையும் கொள்கை விளக்கங்களையும் கூறினாலும் உண்மையில் மக்களின் மனங்களில் பிரதிபலிப்பை உருவாக்குவது என்பது தான் அனைத்து ஊடகங்களினதும் அடிப்படைக் குறிக்கோளாகும்.
அதாவது மக்களின் சிந்தனைத் தளத்துக்குள் ஊடுருவி அதில் செல்வாக்குச் செலுத்தி சார்புத் தன்மை ஒன்றை உருவாக்கி அவர்களை இயக்குகின்ற சக்தியாக இன்றைய நவீன ஊடகம் தன்னை நிலை நிறுத்திக் கொள்கிறது.
பொதுவாக ஊடகவியல் என்று இன்று அழைக்கப்படும் இந்தத்துறையிலுள்ள அனைத்து ஊடகங்களும் இந்த மூன்று அடிப்படை நோக்கங்களை ஆதாரமாகக் கொண்டுதான் செயற்படுகின்றன.
செய்தி சார்ந்த விடயங்களாக இருந்தாலும்,அறிவியல் சார்ந்த விடயங்களாக இருந்தாலும் அல்லது கலைத்துவம் சார்ந்த மகிழ்வூட்டும் விடயங்களாக இருந்தாலும் ஊடகங்களால் கட்டமைக்கப்படுகின்ற அனைத்து வடிவங்களுமே மனிதனுடைய சிந்தனைத் தளத்தை ஆக்கிரமிப்பதை நோக்கமாகக் கொண்டவையாகும்.
‘தேவைக்கான உற்பத்தி’ என்பது பொருளியலிலே ஒரு முக்கியமான விடயம். அதாவது மக்களுடைய தேவையை பூர்த்தி செய்வதற்காக பொருட்களை உற்பத்தி செய்வது ஒரு வகை. உற்பத்தி செய்யப்பட்ட அல்லது செய்யப்படவுள்ள பொருட்களுக்கான தேவையை மக்கள் மத்தியில் வலிந்து உருவாக்குவது இன்னொரு வகை. இன்றைய உலகமயமாதல் சூழலில் பொருட்களுக்கான தேவையை மக்கள் மத்தியில் வலிந்து உருவாக்கும் வேலையை அதாவது மக்களை கட்டாய நுகர்வோராக்கும் வேலையை அனைத்து மேலாதிக்க ஊடகங்களும் செய்து வருகின்றன.
‘பொதுவாக இந்த ஊடகங்கள் வலியுறுத்துகின்ற அல்லது நமக்குப்போதிக்கின்ற மேற்குலகின் ஜனநாயக அக்கறை, தனிமனித சுதந்திரத்தின் மீதான கரிசனம், மனித உரிமை செயற்பாட்டை வலியுறுத்துவதிலுள்ள அதீத ஈடுபாடு,கருத்தியல் சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்து வதிலுள்ள ஆர்வம்’ இவை அனைத்தையும் கட்டுடைத்தால், சந்தைப் பொருளாதார நலன் தான் இவற்றின் அடிப்படை என்பது தெரியவரும்.
நாம் வாழுகின்ற இந்த உலகிலே ஒவ்வொரு நிமிடமும் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட சம்பவங்கள் நடக்கின்றன.இந்தச் சம்பவங்களில் மக்களுக்கு பாதகமான அல்லது சாதகமான பொது தளத்தில் வெளிக் கொண்டுவரப்பட வேண்டிய பல வியடங்கள் இருக்கும்.
ஆனால் இந்த சம்பங்கள் எல்லாம் ஊடகவடிவம் பெறுவதில்லை.அதற்குக் காரணம் இந்த சம்பங்களுக்கான ஊடகப் பெறுமதியை தீர்மானிக்கின்ற சக்திகளாக விரல் விட்டு எண்ணக் கூடிய செய்தி நிறுவனங்களே இருக்கின்றன.
இந்த செய்தி நிறுவனங்கள் தமது வணிக நலன் மற்றும் வர்க்க நலன் சார்ந்தே செய்திப் பெறுமதியை தீர்மானிக்கின்றன.இதனால் ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டங்கள் பற்றி பல செய்திகளும் விடுதலைப் போராட்டங்கள் பற்றிய செய்திகளும் மறைக்கப்பட்டு அல்லது திரிக்கப்பட்டு தவறான அர்த்தங்கொள்ள வைக்கப்படுகின்றன.குரலற்றவர்களின் குரல்கள் திட்டமிட்டு அமுக்கப்படுகின்றன.
இந்த ஏகபோகத் தன்மை என்பது ஊடகத்துறையை மக்களுக்கான தளத்தைவிட்டு அந்நியப்படுத்தி அதிகார வர்க்க நலன்களை பிரதிபலிக்கும் ஒரு துறையாக மாற்றிவிட்டது.
ஊடகத்துறை என்பது இன்று சந்தைப் பொருளாதார வாழ்வியலுக்காவும், அதில் ஆளுமை செலுத்துகின்ற மேலாதிக்க சக்திகளின் அரசியல் நலன்களுக்காகவும் மக்களை தயார் படுத்துகின்ற அவர்களை கருத்தியல் சிறைக்குள் தள்ளுகின்ற வேலையை செய்கின்ற முக்கியமான துறையாக மாறிவிட்டடது.
உலகெங்கும் தங்களது விடுதலைக்கும், உரிமைக்கும், சமத்துவத்திற்கும் போராடுகின்ற மக்களுடைய குரலை, திட்டமிட்டு நசுக்குவதிலும் கொச்சைப்படுத்துவதிலும் முன்னணியில் நிற்கும் மேலாதிக்க ஊடகங்களின் நோக்கத்தை நாம் இந்தப் பின்னணியில் வைத்துத் தான் பார்க்க வேண்டும்.
விடுதலைக்கும், உரிமைக்கும், சமத்துவத்திற்கும் போராடுகின்ற மக்களுடைய குரலாக ஒலிக்கும் ஊடகங்கள் தங்களுடைய தளம் எது என்பதையும் அதில் பயணிப்பதற்கான சரியான வழித்தடம் எது என்பதையும் சரியாக இனம் காணவேண்டும். அதாவது தங்களுக்கான ஊடகக் கருத்தியல் எது என்பதையும், தனித்துவமான வடிவம் எது என்பதையும் இந்த ஊடகங்கள் திர்மானிக்க வேண்டும். இந்த மேலாதிக்க ஊடகங்களின் கருத்தியல் ஆக்கிரமிப்பை தகர்த்தெறிய வேண்டும் அல்லது நிராகரிக்க வேண்டும்
மாறாக இந்த மேலாதிக்க ஊடகங்களின் வழிமுறைகளும் கருத்தியல் தளமும் தான் சிறந்தது உச்சமானது என்று நினைத்தால் இவை அவற்றின் ஊது குழல்களாகவும், தரகர்களாகவும் தான் இருக்க முடியுமே அன்றி மக்களுக்கான உண்மையான ஊடகங்களாக இருக்க முடியாது.
00000
உதாரணமாக காச்சல் தலைவலி என்பது உலகிலுள்ள அனைவருக்கும் வரக்கூடிய ஒரு நோயாகும். இந்த நோய்க்கு பல்வேறு பெயர்களில் மருந்துகளும் இருக்கின்றன. இந்த நோயை ஏற்படுத்தும் கிருமிகளை அழிக்கக் கூடிய மருந்தின் அடிப்படை மூலக்கூறுகள் மருத்துவ ரீதியாக ஒன்றாக இருந்தாலும்; நாட்டுக்கு நாடு இந்த மருந்துகள் அவற்றை தயாரிக்கின்ற நிறுவனங்களின் கொடுக்கப்படும் வௌ;;வேறு பெயர்களில் தான் மக்களால் அறியப்படுகின்றன.
இலங்கையில் காச்சலுக்கென்று ‘எக்ஸ்’ என்ற மருந்து பாவனையில் இருக்கிறதென்று வைத்துக் கொண்டால் இப்போது ‘வை என்ற சிறந்த மருந்து வெளிநாடுகளில் பாவிக்கப்படுவதாகவும்; அது இலங்கையில் விற்பனைக்கு வந்துள்ள தென்றும் இந்த புதிய மருந்து துரித நிவாரணம் தருவதாகவும் ஊடகங்களில் செய்தி அல்லது விளம்பரம்; வெளியிடப்படும்; போது அதை கிரகிக்கும் ஒரு மனிதன் முதலில் இந்தப் புதிய மருந்து வந்திருக்கும் தகவலை அறிந்து கொள்கிறான். அதற்கு அடுத்தபடியாக அந்த தகவலூடான இந்த புதிய மருந்து வெளிநாடுகளில் பாவிக்கப்படுவதால் சிறந்த மருந்தாக இருக்கும் என்ற கருத்து (அவனுடைய அறிதலுக்கு ஊடாக) அவனுக்கு ஏற்படுகிறது. அதன் பின்னர் அந்த மருந்தை வாங்கவேண்டும் என்ற வினையாற்றும் எண்ணம் அவனுக்கு உருவாகிறது. மருத்துவர் பழைய மருந்தை கொடுத்தால் புதிய மருந்தை எழுதித் தாருங்கள் என்று கேட்கும் நிலைக்கு அவன் வருகிறான்.
இதற்கு இன்னொரு உதாரணமாக கடந்த 2005ம் ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தன்று மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராசசிங்கம் படுகொலை செய்யப்பட்ட செய்;தியை எடுத்துக் கொள்ளலாம்.
இந்தச் செய்தி ஊடகங்கள் வாயிலாக ஐரோப்பாவில் உள்ள புலம் பெயர்ந்த தமிழர்களை எட்டிய போது அதன் மூலம் ஜோசப் பரராசசிங்கம் துப்பாக்கிச்; சூடுபட்டு இறந்துவிட்டார் என்ற தகவல் முதலில் அவர்களுக்கு தெரிகிறது.அடுத்து அவர் எங்கே வைத்து சுடப்பட்டார்? எப்போது சுடப்பட்டார்? யார் அவரைச் சுட்டார்கள்? யார் அவரின் எதிரிகள் என்கின்ற தகவல்கள் மூலம் அவரைச் சுட்டுக் கொன்றவர்கள் தமிழின துரோகிகள் என்ற தெழிவு அல்லது புரிதல் அவர்களுக்கு ஏற்படுகிறது.
அதற்கு அடுத்த கட்டமாக இந்தப் புரிதல் தெழிதல்களுக்கூடாக இந்தப் படுகொலையைக் கண்டிக்க வேண்டும் என்ற செயலாற்றும் என்ணம் இந்தச்செய்தியைப் படிப்பவர்களுடைய மனதிலே உருவாகிறது. இந்த செய்தி சொல்லப்பட்ட விதத்தையும் அதை உள்வாக்கிக் கொண்டவருடைய கருத்தியல் தளம் மற்றும் இருப்பையும் பொறுத்து இந்தப் படுகொலைக்கு எதிராக வினையாற்றும் செயற்பாடு அமைகின்றது.
ஓரு தீவிரமான கிறிஸ்தவருக்கு ஜேசு பாலன் பிறந்த நேரத்தில் அவரது பிறப்புக்கான ஆராதனை நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் இந்தச் சம்பவம் நடந்துவிட்டதே என்ற கொதிப்பு அவரை ஆட்கொண்டிருக்கும்.தமிழ் தேசிய உணர்வாளர் ஒருவருக்கு அது துயரத்துடன் கூடிய ஆத்திர உணர்வை தூண்டியிருக்கும.;அதேவேளை இனவிரோதச் செயற்பாடுகளில் ஈடுபடும் நபருக்கு இந்தச் செய்தி மகிழ்ச்சிதரும் ஒன்றாக இருந்திருக்கும்.
பொதுவாக ஊடகங்கள் தங்களது நோக்கம் இருப்பு மற்றும் செயற்பாடுகள் பற்றி பல்வேறு காரணங்களையும் வியாக்கியானங்களையும் கொள்கை விளக்கங்களையும் கூறினாலும் உண்மையில் மக்களின் மனங்களில் பிரதிபலிப்பை உருவாக்குவது என்பது தான் அனைத்து ஊடகங்களினதும் அடிப்படைக் குறிக்கோளாகும்.
அதாவது மக்களின் சிந்தனைத் தளத்துக்குள் ஊடுருவி அதில் செல்வாக்குச் செலுத்தி சார்புத் தன்மை ஒன்றை உருவாக்கி அவர்களை இயக்குகின்ற சக்தியாக இன்றைய நவீன ஊடகம் தன்னை நிலை நிறுத்திக் கொள்கிறது.
பொதுவாக ஊடகவியல் என்று இன்று அழைக்கப்படும் இந்தத்துறையிலுள்ள அனைத்து ஊடகங்களும் இந்த மூன்று அடிப்படை நோக்கங்களை ஆதாரமாகக் கொண்டுதான் செயற்படுகின்றன.
செய்தி சார்ந்த விடயங்களாக இருந்தாலும்,அறிவியல் சார்ந்த விடயங்களாக இருந்தாலும் அல்லது கலைத்துவம் சார்ந்த மகிழ்வூட்டும் விடயங்களாக இருந்தாலும் ஊடகங்களால் கட்டமைக்கப்படுகின்ற அனைத்து வடிவங்களுமே மனிதனுடைய சிந்தனைத் தளத்தை ஆக்கிரமிப்பதை நோக்கமாகக் கொண்டவையாகும்.
‘தேவைக்கான உற்பத்தி’ என்பது பொருளியலிலே ஒரு முக்கியமான விடயம். அதாவது மக்களுடைய தேவையை பூர்த்தி செய்வதற்காக பொருட்களை உற்பத்தி செய்வது ஒரு வகை. உற்பத்தி செய்யப்பட்ட அல்லது செய்யப்படவுள்ள பொருட்களுக்கான தேவையை மக்கள் மத்தியில் வலிந்து உருவாக்குவது இன்னொரு வகை. இன்றைய உலகமயமாதல் சூழலில் பொருட்களுக்கான தேவையை மக்கள் மத்தியில் வலிந்து உருவாக்கும் வேலையை அதாவது மக்களை கட்டாய நுகர்வோராக்கும் வேலையை அனைத்து மேலாதிக்க ஊடகங்களும் செய்து வருகின்றன.
‘பொதுவாக இந்த ஊடகங்கள் வலியுறுத்துகின்ற அல்லது நமக்குப்போதிக்கின்ற மேற்குலகின் ஜனநாயக அக்கறை, தனிமனித சுதந்திரத்தின் மீதான கரிசனம், மனித உரிமை செயற்பாட்டை வலியுறுத்துவதிலுள்ள அதீத ஈடுபாடு,கருத்தியல் சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்து வதிலுள்ள ஆர்வம்’ இவை அனைத்தையும் கட்டுடைத்தால், சந்தைப் பொருளாதார நலன் தான் இவற்றின் அடிப்படை என்பது தெரியவரும்.
நாம் வாழுகின்ற இந்த உலகிலே ஒவ்வொரு நிமிடமும் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட சம்பவங்கள் நடக்கின்றன.இந்தச் சம்பவங்களில் மக்களுக்கு பாதகமான அல்லது சாதகமான பொது தளத்தில் வெளிக் கொண்டுவரப்பட வேண்டிய பல வியடங்கள் இருக்கும்.
ஆனால் இந்த சம்பங்கள் எல்லாம் ஊடகவடிவம் பெறுவதில்லை.அதற்குக் காரணம் இந்த சம்பங்களுக்கான ஊடகப் பெறுமதியை தீர்மானிக்கின்ற சக்திகளாக விரல் விட்டு எண்ணக் கூடிய செய்தி நிறுவனங்களே இருக்கின்றன.
இந்த செய்தி நிறுவனங்கள் தமது வணிக நலன் மற்றும் வர்க்க நலன் சார்ந்தே செய்திப் பெறுமதியை தீர்மானிக்கின்றன.இதனால் ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டங்கள் பற்றி பல செய்திகளும் விடுதலைப் போராட்டங்கள் பற்றிய செய்திகளும் மறைக்கப்பட்டு அல்லது திரிக்கப்பட்டு தவறான அர்த்தங்கொள்ள வைக்கப்படுகின்றன.குரலற்றவர்களின் குரல்கள் திட்டமிட்டு அமுக்கப்படுகின்றன.
இந்த ஏகபோகத் தன்மை என்பது ஊடகத்துறையை மக்களுக்கான தளத்தைவிட்டு அந்நியப்படுத்தி அதிகார வர்க்க நலன்களை பிரதிபலிக்கும் ஒரு துறையாக மாற்றிவிட்டது.
ஊடகத்துறை என்பது இன்று சந்தைப் பொருளாதார வாழ்வியலுக்காவும், அதில் ஆளுமை செலுத்துகின்ற மேலாதிக்க சக்திகளின் அரசியல் நலன்களுக்காகவும் மக்களை தயார் படுத்துகின்ற அவர்களை கருத்தியல் சிறைக்குள் தள்ளுகின்ற வேலையை செய்கின்ற முக்கியமான துறையாக மாறிவிட்டடது.
உலகெங்கும் தங்களது விடுதலைக்கும், உரிமைக்கும், சமத்துவத்திற்கும் போராடுகின்ற மக்களுடைய குரலை, திட்டமிட்டு நசுக்குவதிலும் கொச்சைப்படுத்துவதிலும் முன்னணியில் நிற்கும் மேலாதிக்க ஊடகங்களின் நோக்கத்தை நாம் இந்தப் பின்னணியில் வைத்துத் தான் பார்க்க வேண்டும்.
விடுதலைக்கும், உரிமைக்கும், சமத்துவத்திற்கும் போராடுகின்ற மக்களுடைய குரலாக ஒலிக்கும் ஊடகங்கள் தங்களுடைய தளம் எது என்பதையும் அதில் பயணிப்பதற்கான சரியான வழித்தடம் எது என்பதையும் சரியாக இனம் காணவேண்டும். அதாவது தங்களுக்கான ஊடகக் கருத்தியல் எது என்பதையும், தனித்துவமான வடிவம் எது என்பதையும் இந்த ஊடகங்கள் திர்மானிக்க வேண்டும். இந்த மேலாதிக்க ஊடகங்களின் கருத்தியல் ஆக்கிரமிப்பை தகர்த்தெறிய வேண்டும் அல்லது நிராகரிக்க வேண்டும்
மாறாக இந்த மேலாதிக்க ஊடகங்களின் வழிமுறைகளும் கருத்தியல் தளமும் தான் சிறந்தது உச்சமானது என்று நினைத்தால் இவை அவற்றின் ஊது குழல்களாகவும், தரகர்களாகவும் தான் இருக்க முடியுமே அன்றி மக்களுக்கான உண்மையான ஊடகங்களாக இருக்க முடியாது.
00000
செய்தி, வரையறை, வகைகள்
இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
இந்தப் பாடம் இதழியல் செய்தி பற்றியது. செய்தி எவ்வாறு கருவாகி உருவாகி மலர்கிறது என்கிற வரையறையைக் கூறுகிறது. மேலும் செய்தியின் முக்கிய வகைகள் பற்றியும் பேசுகிறது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
இந்தப் பாடத்தைப் படித்து முடிக்கும் போது நீங்கள் கீழ்க்காணும் கருத்துகள் வாயிலாகச் சக்தி வாய்ந்த இதழியலின் அவசியத்தை அறிந்து பயன் பெறுவீர்கள்.
•ஆக்கல், அழித்தல் தன்மை கொண்ட செய்தி என்பதன் வரையறை, விளக்கம் ஆகியவற்றை அறியலாம்.
•ஆக்கல், அழித்தல் தன்மை கொண்ட செய்தி என்பதன் வரையறை, விளக்கம் ஆகியவற்றை அறியலாம்.
•பாவேந்தர் பாரதிதாசன் கவிதை வாயிலாகச் செய்தித் தாளின் ஆற்றல், சிறப்புக்கள் பற்றிக் கூறியுள்ள செய்திகளைத் தெரிந்துகொள்ளலாம்.
•செய்தியின் இயல்புகள் இன்னின்ன என்பதைத் தெளிவாக அறியலாம்.
•செய்தியின் முக்கிய வகைகளைப் பற்றி விளக்கமாகப் புரிந்து கொள்ளலாம்.
- 1.0 பாட முன்னுரைஉலகினைப் பத்திரிகைகள் இன்று ஆட்சி செய்கின்றன; பத்திரிகை பற்றிய அறிவும், உணர்வும், தெளிவும் எல்லாருக்கும் இருக்க வேண்டும். விரைந்து, வியக்கும் வண்ணம் வளர்ந்து வரும் இதழியல் பற்றி ஆய்வதும், மாணவர்களுக்கும் மக்களுக்கும் போதிப்பதும், இன்றியமையாத் தேவை ஆகின்றன.உலகில் உள்ள அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் இதழியல் துறை வளர்ந்து வருகின்றது. அறிவியல், மின்னணுத் தொழில் நுட்பம் போன்றவற்றின் முன்னேற்றம் காரணமாக இதழ்கள், செய்தித்தாள்கள் அளவிலும், இயல்பிலும், பரப்பிலும் வகையிலும் பெருகியுள்ளன; அரசியல், பொருளாதார, சமுதாய வாழ்க்கையில் சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளன.
- 1.1 செய்திசெய்தித்தாளின் மூலப் பொருள் செய்தி. செய்தி இல்லையென்றால் செய்தித்தாள் இல்லை. செய்தி என்ற சொல்லுக்குத் தரும் விளக்கம் செய்தியைப் புரிந்து கொள்ள உதவுகிறது.• சொல் – விளக்கம்
செய்தி என்ற தமிழ்ச்சொல்லை ஆங்கிலத்தில் நியூஸ் (NEWS) என்று குறிக்கிறோம். நியூஸ் என்ற ஆங்கிலச் சொல் நான்கு ஆங்கில எழுத்துகளால் ஆனது. நான்கு எழுத்துகளும் நான்கு திசைகளைக் குறிக்கின்றன.N என்ற எழுத்து வடக்குத் திசையைக் குறிக்கிறது (North). E என்ற எழுத்து கிழக்குத் திசையைக் குறிக்கிறது (East). W என்ற எழுத்து மேற்குத் திசையைக் குறிக்கிறது (West). S என்ற எழுத்து தெற்குத் திசையைக் குறிக்கிறது (South). அதாவது நான்கு திசைகளிலிருந்தும் பெறப்படுவது செய்தி என்ற பொருளில் திசைகளைக் குறிக்கும் சொற்களின் முதல் எழுத்துகளைக் கொண்டு நியூஸ் (NEWS) என்ற ஆங்கிலச் சொல் உருவானதாகக் கூறுவார்கள்.• பொருள்நியூ (New) என்றால் புதியது என்று பொருள். இதனைப் பன்மையில் கூறும் பொழுது ‘நியூஸ்’ (News) அதாவது புதியன என்று பொருள்படுகிறது. புகழ்பெற்ற சேம்பர்ஸ் ஆங்கில அகராதி நியூஸ் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு, புதிதாகக் கேட்கப்படுகின்ற ஒன்று: இப்பொழுதுதான் நடைபெற்ற, ஏதாவது ஒன்றைப் பற்றிய முதல் தகவல் என்று விளக்கம் தருகின்றது. செய்தி என்ற சொல்லுக்குப் பலர் இலக்கணம் வகுக்க முயன்றனர். ஆனால் எந்த இலக்கணமும் முழுமையானதாக அமையவில்லை. செய்திக்குத் தரும் விளக்கம் நாட்டிற்கு நாடு வேறுபடுகிறது.1.1.1 செய்தி பற்றிய விளக்கம்செய்திக்குத் தரும் விளக்கத்தினைத் தொகுத்துக் கூறலாம். (1) எதனையாவது வெளிக்காட்டுவது செய்தி. (2) நடைமுறையிலிருந்து, சாதாரணமானவற்றிலிருந்து, மாறுபட்ட எதுவும் செய்தியாகும். (3) ஒரு சமுதாயத்தில் பெரும்பாலான மக்களைப் பாதிக்கின்ற, அவர்களால் புரிந்து கொள்ளக் கூடிய எந்த ஒரு நிகழ்ச்சியும், கருத்தும் செய்தியாக உருவம் பெறுகின்றன.பெருந்தலைவர்களின் பேச்சுக்கள் செய்தியாக மலர்கின்றன. வாசகர்களுக்குச் சுவையூட்டும் நடப்பு, நிகழ்ச்சிகளின் உண்மைத் தொகுப்புகளே செய்திகள். வாழ்க்கைக்குச் சுவைதரும் எதுவும், அது வெளிப்படுத்தும் முறைகளில் செய்தியாக மலர்ந்து மணம் பரப்புகின்றது. மிகப்பெரிய, புகழ்பெற்ற பெயர்கள் செய்திகளாகின்றன. மக்களைப் பற்றி மக்களுக்காக மக்களால் எழுதப்படுபவை செய்திகள் ஆகும். இன்றைய செய்திகள் நாளைய வரலாறு என்று கூறப்படுகிறது
• பழமையான விளக்கம்பல ஆண்டுக் காலமாக, நாய் மனிதனைக் கடித்தால், அது செய்தி அல்ல, ஆனால் மனிதன் நாயைக் கடித்தால் அது செய்தி என்று ஓர் ஆங்கில ஆசிரியர் கூறியதையும் செய்திக்கு விளக்கமாகப் பலரும் எடுத்துக் கூறுவதுண்டு.இந்த எடுத்துக்காட்டு மூலம், நடைமுறைக்கும், இயற்கைக்கும் மாறுபட்ட புதுமையான நிகழ்ச்சிகள் செய்தியாகின்றன என்று அழுத்தமாகக் கூறலாம்.• பொது விளக்கம்செய்தி பற்றிய எல்லா விளக்கங்களையும் உள்ளடக்கித் தரும் முறையில், செய்தியினை, ஒரு கருத்து, ஒரு நிகழ்ச்சி, சிக்கல் பற்றிய உண்மையான, சரியான, நடுவுநிலையான குறிப்பு, உண்மையானதாக, நிகழ்காலத்தோடு தொடர்புடையதாக, மக்களின் ஆர்வத்தினைத் தூண்டும் வகையில் நடைமுறைக்கு மாறுபட்டதாக இருக்கும் சிலவற்றைப் பற்றிய விளக்கம் என்று இதழியல் ஆசிரியர் ஆர். இராமச்சந்திர ஐயர் கூறுகிறார்.1.1.2 செய்தியின் சிறப்புசெய்தித்தாள் வலிமை மிக்கது. நினைத்ததை முடிக்கும் வல்லமை வாய்ந்தது. செய்தியைக் கூறும் செய்தித்தாளின் பேராற்றலை மக்கள் எளிதில் உணரும் வகையில் புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் கீழ்க்காணும் கவிதை மூலம் விளக்குகிறார்.காரிருள் அகத்தில் நல்ல
கதிரொளி நீதான்! இந்தப்
பாரிடைத் துயில்வோர் கண்ணிற்
பாய்ந்திடும் எழுச்சி நீதான்
ஊரினை நாட்டை இந்த
உலகினை ஒன்று சேர்க்கப்
பேரறி வாளர் நெஞ்சில்
பிறந்தபத் திரிகைப் பெண்ணேஎன்று போற்றிப் பாடுகிறார்மேலும் அவர், இந்த உலகில் உள்ள இளைஞர் முதல் முதியவர் வரை அனைவரும் காலையில் கையில் செய்தித்தாளோடு வலம் வரவேண்டும் என்று மற்றொரு பாடல் மூலம் கூறுகிறார். குறுகிய எண்ணங்களை, செயல்களை நீக்கி இந்த உலகத்தினைப் புகழ்பெறச் செய்வாய்! நறுமணம் மிக்க இதழாகிய பெண்ணே! உனது சிறப்பைக் காணாதவர்கள் இந்த உலகினைக் காண மாட்டார்கள் என்கிறார்.1.2 செய்திகளின் பின்புலம்ஒவ்வொரு செய்தியும் ஒவ்வொரு வகையான பின்புலத்திலேயே தோன்றுகின்றது.1.2.1 புதுமை (Novelty)எவையெல்லாம் இதுவரை நடைபெறாமல் இப்பொழுது புதுமையாக நடக்கின்றனவோ அவை எல்லாம் செய்திகளாகின்றன. ஏனெனில் புதுமைக்கு மக்களைக் கவரும் ஆற்றல் அதிகம். கால் ஊனம் உற்ற பெண் அதிக நேரம் நாட்டியம் ஆடினால் அது செய்தி. மனிதன் பாம்புகளோடும், தேள்களோடும் தங்கி இருந்தால் புதுமை; அது செய்தியாகிறது. மனிதன் தனது உடல் முழுதும் தேனீக்களைத் தங்கவைத்துக் கொண்டால் அது செய்தியாகிறது.பழ வியாபாரி தனது கடையில் வாடிக்கையாளர்கள் பார்வையில் படும்படி பழங்களை மூன்று அல்லது நான்கு வரிசைகளில் அடுக்கி வைத்திருந்தால் அது வழக்கமான செயல். மாறாக மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக, அடுக்குமாடி வீடுபோல் பழங்களை மிக உயரமாகப் பல அடுக்குகளில் அடுக்கி வைத்திருப்பது புதுமையாகப் படுகிறது. அது செய்தியாகப் படத்துடன் வெளிவருகிறது. இது போன்ற புதுமைகள்தாம் செய்தியாக மாறுகின்றன.1.2.2 குற்றம் (crime) தொடர்பானவைநாட்டில் நடைபெறும் குற்றங்களைப் பற்றிய செய்திகள் சூடான செய்திகளாகும் (Hot news). கொள்ளை, கொலை, கற்பழிப்பு, திருட்டு போன்ற செய்திகளை அறிந்து கொள்ளப் பலரும் விரும்புகின்றனர். ஆதலால் பத்திரிகைகள் அவற்றிற்கு முக்கியத்துவம் அளித்துச் செய்திகளாக வெளியிடுகின்றன. இச்செய்திகள் இடம்பெறாத நாளிதழே இல்லையெனலாம்.தமிழ்நாட்டில், மதுரையில் டாக்டர் ஒருவர், தனது மனைவி குழந்தை உட்படக் குடும்பத்தினர் அனைவரையும் கொலை செய்த செய்தி பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அவரைக் கைது செய்து நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் வழியில் தற்கொலை செய்து கொண்ட செய்தி மக்களின் கவனத்தை ஈர்த்த செய்தியாகும். இதே போல் பல செய்திகள் தொடர்கதைபோல் பத்திரிகைகளில் வருவதை அறியலாம்.• பால் உணர்வு (Sex) தொடர்பானவைஆண்-பெண் பால் உணர்வு தொடர்பானவற்றில் சமுதாயத்திற்கு எப்பொழுதும் ஈடுபாடு அதிகம் இருப்பது அனைவரும் அறிந்ததே. மிகவும் மரியாதைக்குரிய இதழ்களும் பால் உணர்வுச் செய்திகளுக்குச் சிறப்பிடம் கொடுக்கின்றன. செய்தித்தாள்கள் இச்செய்திகளை, முக்கியத்துவம் கருதி வெளியிடுவதில் இருந்து இதன் தன்மையை அறிந்து கொள்ளலாம். கற்பழிப்பதும், அதனை மறைக்க அப்பெண்ணைக் கொலை செய்வதும் போன்ற நிகழ்ச்சிகளைப் பத்திரிகைகள் வெளியிட்டு மக்கள் கவனத்தை ஈர்க்கின்றன.• மோதல் (Conflict)இரண்டு மனிதர்களோ, இரண்டு அணிகளோ, இரண்டு நாடுகளோ மோதிக் கொள்ளும் பொழுது செய்தி பிறக்கின்றது. மோதலையும் அதன் விளைவுகளையும் அறிந்து கொள்வதில் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். கணவன் மனைவி இடையே சண்டை, மண விலக்கு, தொழிலாளர் போராட்டம், மாணவர்கள் விடுதியில் மோதிக் கொள்வது, மாணவர்களுக்கும் பேருந்து நடத்துநருக்கும் இடையே நடைபெறும் மோதல், சண்டை, அதனால் பேருந்துகள் நிறுத்தம், போக்குவரத்துத்தடை, மக்கள் அவதி போன்ற நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து நிகழ்கின்றன. இவைகள் எல்லாம் செய்திகளாக வெளிவருகின்றன.• சமயம் (Religion)மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான் என்ற கவிஞர் கண்ணதாசன் கூற்றுப்படி மக்கள் மதத்தில் அதிக அக்கறை காட்டத் தொடங்கி விட்டார்கள். அதனால் செய்தித்தாள்கள் சமயச் சார்புடைய செய்திகளைக் கவனமாக வெளியிடுகின்றன. சமய இதழ்கள் தனியாக வார, மாத இதழ்களாக வெளிவருகின்றன. தமிழகத்தில் பல மடங்கள் தோன்றிச் சமயத் தொண்டும் இலக்கியத்தொண்டும் ஆற்றி வருகின்றன. சமயத் தலைவர்களைப் பற்றிய செய்திகளை அறிய மக்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.நாட்டின் மதத்தலைவர்களைப் பெருந்தலைவர்கள் சந்தித்துப் பேசுவதும் ஆசி பெறுவதும் வழக்கமாக நடைபெறுகின்றன. இந்தச் செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, ஒளிப்படத்துடன் முதல் பக்கச் செய்தியாகச் செய்தித்தாள்கள் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.எனவே செய்திகள் மலர்வதற்கு மதங்களின் செயல்பாடுகள் பின்னணியாக இருக்கின்றன என்பதில் ஐயம் இல்லை.1.2.3 அழிவும் (Disaster) துயரமும் (Tragedy)நாட்டில் ஏதாவது ஓர் இடத்தில் அழிவு ஏற்படுமானால் அது செய்தித்தாளில் படத்துடன் செய்தியாக இடம்பெறுகின்றது. கப்பல் மூழ்குதல், விமானம் விழுந்து நொறுங்குவது, இரயில் கவிழ்தல், நிலநடுக்கம் (பூகம்பம்), தீ விபத்து, புயல், வெள்ளம் போன்றவை மக்களின் இதயத்தைத் தொடுகின்றன. துயரமான நிகழ்ச்சிகள் நடைபெறுகிற நேரத்தில் அவை மக்களிடம் அதிக இரக்கத்தைப் பெறுகின்றன. இந்தியாவில் குஜராத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம், தமிழ்நாட்டில் திருச்சியில் உள்ள திருவரங்கத்தில் திருமண மண்டபத்தில் 2004 ஜனவரி மாதம் ஏற்பட்ட தீ விபத்தில், மணமகன் உட்பட 67 பேர்களுக்கு மேல் மாண்ட துயரமான நிகழ்ச்சி, காந்தியடிகள், கென்னடி, இந்திரா காந்தி ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்டவை உலகையே துயரத்தில் ஆழ்த்திய செய்திகள். பெருந்தலைவர் காமராசர், புரட்சித்தலைவர் எம்.ஜி. இராமச்சந்திரன், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஆகியோர் மறைவு நாட்டையே துயரத்தில் ஆழ்த்தியது எல்லாரும் அறிந்த செய்தியாகும்.1.2.4 பொழுதுபோக்கு (Entertainment)பொழுதுபோக்குச் சாதனங்களைப் பற்றி அறியும் ஆர்வம் மக்களிடம் இருக்கின்றது. அவற்றைச் செய்தித்தாள்கள் தீர்த்து வைக்கின்றன. திரைப்படங்கள், நாடகங்கள், வானொலி, தொலைக்காட்சி, விளையாட்டு போன்றவை பொழுது போக்குவதற்கு மக்களுக்கு உதவுகின்றன. பத்திரிகைகளில் வெளிவரும் திரைப்படச் செய்திகள், தொலைக்காட்சிச் செய்திகள், விளையாட்டுச் செய்திகள் மக்களுக்குப் பொழுது போக்குவதற்கு உதவி செய்கின்றன. திரைப்படச் செய்திகள் இடம் பெறாத செய்தித்தாள்களே இல்லை எனலாம். திரைப்பட நட்சத்திரங்கள் மீதும், விளையாட்டுப் போட்டிகள் குறிப்பாக கிரிக்கெட் போட்டிகளின் மீதும், கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் மீதும் மக்கள் வைத்திருக்கும் குன்றாத ஆர்வம் பொழுதுபோக்கிற்குப் பயன்படுகின்றது.மேலும் இசைக் கச்சேரிகள், நாட்டிய நிகழ்ச்சிகள், இலக்கியச் சொற்பொழிவுகள், பட்டிமன்றங்கள், சமயச் சொற்பொழிவுகள் ஆகியவற்றிலும் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இவைகளும் பொழுது போக்க அவர்களுக்கு உதவுகின்றன. இதழ்கள் இவைகள் தொடர்பான செய்திகளைத் தெளிவாக வெளியிடுகின்றன.1.2.5 பிற பின்புலங்கள்மேற்குறிப்பிட்டவற்றைத் தவிர, மனிதத் தாக்கம் (Personal Impact), நகைச்சுவை, மர்மம், அறிவியல், புகழ்பெற்ற மக்கள், தட்பவெப்ப நிலை ஆகியவையும் செய்தி உருவாவதற்கு உரிய பின்புலங்களாக அமைகின்றன.• மனிதத் தாக்கம்சராசரி மனிதனுக்குச் சுவையூட்டுவதும், அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கக் கூடியதும் செய்தியாகப் பிறக்கிறது. நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய் போன்றவற்றின் அளவுகளிலும், விலைகளிலும் மாற்றம் ஏற்படும் பொழுது மனிதனைப் பாதிக்கும் நிகழ்ச்சியாக மாறி அது செய்தியாகிறது. வேலை நிறுத்தத்தின்போது பேருந்துகள் ஓடாமல் மக்கள் அவதிப்படுவதும் செய்தியாக இடம் பெறுகிறது.• நகைச்சுவைதமிழில் பழமையான இலக்கண நூலாகிய தொல்காப்பியத்தின் ஆசிரியர் மெய்ப்பாட்டியலில் மெய்ப்பாடுகள் பற்றிக் கூறும்பொழுது ‘நகையே’ என்று நகைச்சுவையை முதலாகக் குறிப்பிடுகிறார். மக்கள் நகைச்சுவையைப் பெரிதும் விரும்புகின்றனர். அவர்களின் நகைச்சுவை உணர்வுக்குத் தீனியாக நகைச்சுவைச் செய்திகளைப் பத்திரிகைகள் வெளியிடுகின்றன. நாடாளுமன்றம், சட்டமன்றம் போன்ற முக்கிய இடங்களில் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாகும் வகையில் ஒருவர் நடந்துகொண்டால், அதனைச் செய்தியாக வெளியிடுகின்றன. சட்ட மன்றத்தில் விவாதம் நடைபெறுகிற பொழுது, பகலில் குறட்டைவிட்டுத் தூங்குவது போன்ற நிகழ்ச்சிகளை எடுத்துக்காட்டாகக் கூறலாம்.• மர்மம் (Mystery)நாட்டில் புரிந்து கொள்ள முடியாத மர்மமான நிகழ்வுகள் எங்கு நடந்தாலும் அவை செய்தி மதிப்பினைப் பெறுகின்றன. ஓரிடத்தில் கத்திக் குத்துக் காயங்களுடன் ஓர் உடல் கிடந்தால் அதனைப் பற்றி அறிய எல்லாரும் ஆர்வம் காட்டுவார்கள். அந்த உடல் யாருடையது? எப்படி இது நடந்தது? போன்ற அடுக்கடுக்கான கேள்விகள் எழும். விடை கிடைக்கிற பொழுது சுவையான செய்தியாக மலரும்.மர்மமான நிகழ்ச்சி பற்றிய செய்திகள் துப்பறியும் கதை போல இருப்பதால் மக்களிடையே செல்வாக்குடன் விளங்குகின்றன. அதனால் சில பத்திரிகைகள் இச்செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் தருகின்றன.• அறிவியல் (science)அறிவியலால் இன்று உலகம் சுருங்கிவிட்டது என்று கூறலாம். அறிவியல் விந்தைகளும், சாதனைகளும் தினமும் நடைபெறுகின்றன. அவை செய்திகளாக வருகின்றன. மக்கள் அறிவியல் செய்திகளைத் தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். முதன்முதலில் விண்ணில் உலகைச் சுற்றிவந்த விண்வெளி வீரர்களைப் பற்றி அறிந்து கொள்ள மக்கள் காட்டிய ஆர்வம் எல்லாரும் அறிந்த செய்தியாகும். புதிய கண்டுபிடிப்புகளும், கண்டுபிடித்த அறிவியல் அறிஞர்களின் விவரங்களும் செய்தியில் இடம் பெறுகின்றன. நோபல் பரிசு பெற்ற அறிவியல் அறிஞர்களை உலக மக்கள் அனைவரும் அறிந்து பாராட்டிப் புகழாரம் சூட்டுகின்றனர். எனவே அறிவியல் தொடர்பான புதுமைகள் செய்திகளாக மலர்கின்றன. அறிவியல் செய்திகளை மட்டும் வெளியிடும் அறிவியல் இதழ்கள், செய்தித்தாள்கள் நாட்டில் இருப்பது நமது நாட்டின் அறிவியல் முன்னேற்றத்தைக் காட்டுவதாகும்.• புகழ்பெற்ற மக்கள் (Famous People)சமுதாயம், சமயம், அரசியல், விளையாட்டு, அறிவியல், திரைப்படம், மருத்துவம், இலக்கியம் போன்ற துறைகளில் புகழ் வாய்ந்த மனிதர்களின் அனைத்து விவரங்களும் செய்திகளாக வருகின்றன. கிரிக்கெட் விளையாட்டில் சாதனை படைத்த புகழ்பெற்ற டெண்டுல்கர் பற்றிய செய்திகள் வந்ததை அனைவரும் அறிவர்.• தட்பவெப்ப நிலை (Weather)அதிக மழை, புயல், அதிகமான வெயில் போன்றவை மக்களைப் பாதிக்கின்றன. மனிதனின் வாழ்க்கை இயற்கைக்குத் தகுந்தபடி அமைந்துள்ளது. பருவ மழை தவறுமானால் நாட்டில் வேளாண்மைத் தொழில் பாதிக்கப்படுகிறது. கடுமையான வெப்பம் மனிதனைப் பெரிதும் பாதிக்கிறது. சிலர் வெயிலின் கொடுமைக்குப் பலியாவதைப் பார்க்கிறோம். இவ்வாறு மனிதனைப் பாதிக்கும் தட்பவெப்ப நிலையினைப் பத்திரிகைகள் கவனித்துச் செய்தியாக அளிக்கின்றன.இங்கிலாந்து போன்ற நாடுகளில் மாலைப்பொழுதை மிகவும் விலை மதிப்பு உடையதாகக் கருதுவார்களாம். அப்படிப்பட்ட மாலைப் பொழுது இயற்கைச் சீற்றத்தால் சேதம் ஏற்பட்டு வீணாகிவிடாமல் இருக்கவேண்டிக் கொள்வார்களாம். அதனால் அன்றைய வானிலை அறிக்கையை முன்கூட்டியே அறிந்து கொள்ளத் துடிப்பார்கள் என்று செய்திகள் கூறுகின்றன. சில நேரங்களில் முக்கிய விளையாட்டின் முடிவைத் தீர்மானிக்கும் நடுவராக மழை அமைந்த நிகழ்ச்சிகள் செய்தியாக வந்துள்ளன.மக்களைப் பெரிதும் பாதிக்கும் இயற்கைச் சீற்றங்கள் தொடர்பான செய்திகளை முன்கூட்டியே தெரிவித்துமக்களைக் காப்பதில் செய்தித்தாள்கள் கண்ணும் கருத்துமாக உள்ளன.மேலும், உள்ளூர் நடவடிக்கைகள், மனித ஆர்வம், உடல் நலம், உணவுப் பொருள், முதலியவையும் செய்திகளைப் பிறப்பிக்கின்றன.- 1.3 செய்தியின் இயல்புகள்நிகழ்ச்சி ஒன்றை, அது செய்தியா இல்லையா என்பதை முதலில் செய்தியாளர் தீர்மானித்து விட்டு, பிறகு செய்திகளைச் சேகரிக்கிறார். அவர் சேகரிக்கிற எல்லாம் செய்தியாக வருவதில்லை. ஆசிரியர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படும் செய்திகள் செய்தித்தாளில் வெளியிடப்படுகின்றன.செய்தித்தாளில் வெளிவரும் அனைத்தையும் மக்கள் செய்திகளாக ஏற்பதில்லை. சிலவற்றைத் தேவையற்றவை, குப்பை என்று கருதிப் படிக்காமல் ஒதுக்கிவைத்து விடுகின்றனர். ஆனால் ஒன்றைச் செய்தியாகக் கருத, பொதுவாக அதில் என்னென்ன இயல்புகள் அல்லது அம்சங்கள் இருக்க வேண்டும் என்பதைக் குறிப்பிட்டுக் கூறலாம்.• கால அண்மை (Timeliness)காலம் (time) என்பது செய்திக்கு உயிர்மூச்சு. செய்திகள் சுடச்சுட இருக்க வேண்டும். புத்தம் புதிய மலர்களைப் பெண்கள் விரும்புவதுபோல் புதிய செய்திகளையே மக்கள் பெரிதும் படிக்க விரும்புகின்றனர். காலம் கடந்து தாமதமாக வரும் செய்தி உயிர் இல்லாத உடலுக்குச் சமம். ஆறின கஞ்சி பழங்கஞ்சி என்று கூறும் பழமொழி போன்றதாகும். எனவே காலம் என்பது செய்திகளுக்கு இருக்க வேண்டிய அடிப்படையான அம்சமாகும்.• இட அண்மை (Proximity)மக்கள் தங்களுக்கு அருகில் நடைபெறும் நிகழ்ச்சிகளை அறிந்து கொள்வதில்தான் அக்கறை காட்டுகிறார்கள். தமிழ்நாட்டில் இருக்கும் ஒருவர் டெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியைவிடச் சென்னையில் நடைபெற்ற ஒன்றைப் பற்றி அறிவதில் ஆர்வம் காட்டுவார். பக்கத்து மாநிலத்தில் நடைபெறும் தேர்தலைப் பற்றியும் அதன் முடிவுகளைப் பற்றியும் சாதாரண மக்கள் கவலைப்படுவதில்லை. ஆனால் தங்களது மாநிலத்தில் நடைபெறும் தேர்தலைப் பற்றியும் யார் ஆட்சி அமைப்பார்கள் என்பது பற்றியும் அறிந்து கொள்ள ஆர்வம் காட்டுவார்கள். அதுவே எல்லா இடங்களிலும் பொதுப் பேச்சாக அமையும். அதனால் செய்தியில் இடம் முக்கிய அங்கம் வகிக்கின்றது.• உடனடியானவை (Immediacy)செய்திகளை உடனுக்குடன் கொடுக்க வேண்டும். முதலில் வரும் செய்திக்கு மதிப்பு அதிகம். அதனால்தான் செய்தித்தாள்கள் செய்திகளை முதலில் தருவதில் ஆர்வம் காட்டுகின்றன. செய்திகளை முந்தித் தரும் இதழ்கள் மக்களிடம் செல்வாக்கினைப் பெறுகின்றன.• முன்னிடம் பெறுபவை (Prominence)நாட்டில் எவையெல்லாம் முதன்மையான இடத்தினையும், புகழையும் பெறுகின்றனவோ அவைகளெல்லாம் செய்திகளாகப் பேசப்படுகின்றன. முதன்மை பெறும் மனிதர்கள், இடங்கள், நிகழ்ச்சிகள் ஆகியவை செய்தித்தாள்களில் இடம் பெறுகின்றன.• அளவு (size)செய்தி அதன் கருப்பொருளால் மட்டும் செய்தியாவதில்லை. அதனோடு தொடர்புடைய மக்களின் பரப்பளவை, எண்ணிக்கையை ஒட்டியும் செய்தியாகின்றது. புகழ்பெற்ற எழுத்தாளரின் இறுதி ஊர்வலத்தில் பத்துப்பேர் மட்டுமே கலந்து கொண்டால் அது செய்தி. ஓர் அமைச்சரை வரவேற்க இருவர் மட்டுமே வந்திருந்தால் அது செய்தியாகின்றது. முதலமைச்சர் எம்.ஜி. இராமச்சந்திரன் இறுதி ஊர்வலத்தில் இதுவரை சென்னையில் யாருடைய இறுதி ஊர்வலத்திலும் கூடாத அளவிற்கு மக்கள் அதிகமாகக் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்க செய்தியாகின்றது. செய்தியின் இயல்பை அறிய அதனுடன் தொடர்புடைய மக்களின் அளவு அளவுகோலாக இருக்கிறது.• நிகழ்விடத்திலேயே கிடைப்பவை (spot news)நிகழ்ச்சி நடைபெறும் இடத்திலிருந்து நேரடியாகப் பங்கு பெற்றவர்கள் அல்லது பாதிக்கப்பட்டவர்கள் தரும் செய்தி சிறப்பிடம் பெறுகிறது. விபத்து நடந்த இரயிலில் பயணம் செய்து உயிர் தப்பிய ஒருவர் விபத்தினைக் கண்ணால் கண்டபடி விவரிப்பது சிறப்புச் செய்தியாகும். அண்மையில் தமிழ்நாட்டில் திருச்சி திருவரங்கத்தில் திருமண மண்டபத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிர் பிழைத்த ஒருவர் விபத்தினை விவரித்தது சிறந்த செய்தியாக இருந்தது குறிப்பிடத் தக்கதாகும்.• பின்விளைவுகளை உடையவை (Consequences)பின்விளைவுகளை உண்டாக்கும் எந்த நிகழ்ச்சியும் நடவடிக்கையும் மக்களின் ஆர்வத்தைத் தூண்டும் செய்தியாக மாறுகின்றது. வங்கிகளை நாட்டுடைமை ஆக்கினால் பல பொருளாதார விளைவுகளை எதிர்பார்க்கலாம். அரசே மதுபானக் கடைகளைத் திறந்து நடத்துவதால் அதன் விளைவாக அதிக வருமானத்தை அரசு பெறலாம். ஒரு கட்சியில் புகழ்பெற்ற ஒருவரைத் திடீரென்று கட்சியிலிருந்து நீக்கினால் அரசியல் விளைவுகள் ஏற்படலாம். கறிக் கோழிகள் நோய் பற்றிய செய்தியின் விளைவால் மனிதர்களின் வயிற்றில் புதைய வேண்டிய கோழிகள் பூமியில் புதைந்தன. எனவே பின்விளைவுகளை உடையவை செய்தியாக மலர்கின்றன.• வியப்புக்குரியவை (oddity)செய்தியில் புதுமையானதாக, வியப்புக்குரியதாக ஏதாவது இருந்தால் அதனை அறிந்து கொள்வதில் மக்கள் ஆர்வம் காட்டுவார்கள். நூறாவது நாள் என்ற தமிழ்த் திரைப்படத்தைப் பார்த்த ஒருவன் தனது குடும்பத்தினர் அனைவரையும் கொலை செய்த நிகழ்ச்சி, தமிழ்நாட்டில் பெரிதும் பரபரப்பை ஏற்படுத்திய செய்தியாகும்.கண்ணாடித் துண்டுகளைச் சாப்பிட்டு உயிர் வாழும் மனிதன், இரும்புத் துண்டுகளையும், ஆணிகளையும் சாப்பிட்டு உயிர்வாழும் மனிதன் பற்றிய செய்திகள் வியப்பைத் தருகின்றன.• மோதல் தொடர்பானவை (Conflict)முரண்பாடுகளும், மோதல்களும் செய்திகளாக வருகின்றன. மனமொத்து அன்புடன் வாழும் கணவன் மனைவி பற்றிச் செய்தி வருவதில்லை. ஆனால் மோதல் ஏற்பட்டு விவாகரத்து, தற்கொலை, கொலை என்ற நிலைக்குப் போய்விட்டால் அது செய்தியாக மாறிவிடுகிறது. திரைப்பட நடிகர்களின் ரசிகர் சங்கத்தினர் மோதிக்கொள்வது தமிழ்நாட்டில் அடிக்கடி நடைபெறுகிறது. இவைகளும் செய்தியாக இதழ்களில் இடம் பெறுகின்றன.டாக்டர் தம்பதியரிடையே அடிக்கடி ஏற்பட்ட சண்டை காரணமாக, சென்னையில் பெண் டாக்டர் ஒருவர் தனது மருத்துவ மனையில் விஷ ஊசி போட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக, நாளேடுகளில் செய்தி வந்திருப்பதை எடுத்துக்காட்டாகக் கூறலாம்.• ஐயப்பாட்டிற்குரியவைதாய் தனது பெண் குழந்தையைக் கொன்று வீட்டின் பின்புறத்தில் புதைத்து விடுகிறாள். இச்செயல் அருகில் இருப்பவர்களுக்கு ஐயத்தை ஏற்படுத்துகிறது. உண்மை வெளியாகிக் காவல்துறை வரை சென்று, பத்திரிகையில் செய்தியாக இடம் பெறுகின்றது. இவ்வாறு ஐயப்படும் படியான செயல்களைச் செய்து, அதை மறைக்க முயன்று தோல்வி அடைந்து, காவல் துறையிடம் சிக்கித் தண்டனை அடைந்த நிகழ்வுகள் செய்தியாகின்றன.• உணர்வு பூர்வமானவை (Emotional Appeal)மக்களின் உணர்வுகளைத் தூண்டும் நிகழ்ச்சிகளை செய்தித்தாள்கள் உடனடியாக வெளியிடுகின்றன. இந்தியாவின் முன்னாள் பிரதமர் திருமதி. இந்திரா காந்தி அம்மையார் சுடப்பட்ட நிகழ்ச்சியை இதற்கு உதாரணமாகக் கூறலாம். மக்களின் உணர்வுகளைத் தூண்டும் செய்திகள் பல வருவதை இப்பொழுது பார்க்கிறோம்.இவ்வகைச் செய்திக்கு எடுத்துக்காட்டாக, சென்ற 2003ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டு துயர நிகழ்ச்சிகளைக் காட்டலாம்.1) அமெரிக்காவின் கொலம்பியா விண்கலம் ஏழு விண்வெளி அறிஞர்களை ஏற்றிக்கொண்டு 01-02-2003ஆம் நாள் விண்ணை நோக்கிச் சென்றது. ஆனால் ஏதோ கோளாறு காரணமாக டெக்சாஸ் (Texas) மாநிலத்தில் ஓர் இடத்தில் சிதறி விழுந்து விபத்துக்கு உள்ளானது. அதில் சென்ற ஏழு பேரும் பலியானார்கள். அவர்களில் ஒருவர் இந்திய நாட்டைச் சேர்ந்த அமெரிக்கப் பெண்மணி கல்பனா சாவ்லா (Kalpana Chawla) என்பவராவார். இச்செய்தி கேட்டு இந்திய மக்கள் துடித்துப்போனார்கள் என்று கூறினால் அது மிகையாகாது.2) அடுத்தது, தலை ஒட்டிப் பிறந்து, பிரியாமல் ஒட்டியே 29 ஆண்டுகள் வாழ்ந்த ஈரான் நாட்டைச் சேர்ந்த மகளிர் இரட்டையர் பற்றிய சோக நிகழ்ச்சி. லாடன் (Ladan), பிஜானி (BIJANI) என்ற மகளிர் பிறக்கும் போதே தலை ஒட்டிப் பிறந்தார்கள். சேர்ந்தே 29 வயது வரை மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள். மருத்துவச் சிகிச்சை மூலம் பிரிந்து வாழலாம் என்று விரும்பி, சிகிச்சைக்குச் சிங்கப்பூர் சென்றார்கள். அங்கு 11-06-2003ஆம் நாள் செய்தியாளர்களுக்குச் சிரித்த முகத்தோடு பேட்டி அளித்தார்கள். ஆனால் 08-07-2003ஆம் நாள் நடைபெற்ற அறுவை சிகிச்சை பலன் அளிக்காததால் அன்று இருவரும் மாண்டு போனார்கள். இச்செய்தியும் மக்கள் நெஞ்சைத் தொட்ட செய்தியாகும்.
- 1.4 செய்தி வகைகள்செய்திகளை அவற்றின் தன்மையைக் கருதிப் பலவகைகளாகப் பகுக்கலாம். அவற்றின் முக்கியமான வகைகளை இங்குக் காணலாம்.
1.4.1 குற்றச் செய்திகள் (Crime News)குற்றச் செய்திகள் இடம் பெறாத செய்தித்தாள்களே இல்லை என்று கூறும் அளவுக்குக் குற்றச் செய்திகள் முக்கிய அங்கம் வகிக்கின்றன. குற்றச் செய்திகள் கதைகளைப் போல் அமைவதால் அவற்றைப் படிப்பதில் வாசகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். இதழ்கள் பொறுப்போடும் கவனத்தோடும் வெளியிட வேண்டிய செய்திகள் குற்றச் செய்திகளாகும்.• குற்றச் செய்திகள் என்றால் என்ன?பொதுவாக, சட்டத்திற்கு எதிராகவோ, மீறியோ, புறம்பாகவோ செய்யும் எந்தச் செயலையும் குற்றம் என்கிறோம். சட்டப்படி தண்டனைக்குரிய எந்தச் செயலும் குற்றமாகிறது. திருட்டு, கொலை, கொள்ளை, கற்பழிப்பு, விபத்து, ஏமாற்றுவது, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவது, அடிதடி, இலஞ்சம் வாங்குவது போன்றவை எல்லாம் குற்றங்களாகின்றன. இவைகள் பற்றிய விவரங்களைச் செய்தித்தாள்களில் வெளியிடும் போது அவை குற்றச் செய்தியாகின்றன.குற்றச் செய்திகளை வெளியிடும் போது தக்க ஆதாரத்துடன் வெளியிட வேண்டும். ஐயப்பாட்டிற்குரிய எதனையும் செய்தியாக வெளியிடக்கூடாது. தீர விசாரித்து அறிந்தவற்றை, உண்மையானவற்றை எழுத வேண்டும். ஊகங்களுக்குக் குற்றச் செய்தியில் இடம் இல்லை. கற்பனை கலக்காத நாடகப் பாங்கில் குற்றச் செய்தியைக் கூறலாம். நீதிமன்றங்கள், காவல் நிலையங்கள், மருத்துவ நிலையங்கள், தீயணைப்பு நிலையங்கள் ஆகியவற்றோடு தொடர்பு கொண்டு குற்றச் செய்திகளை விசாரித்து அறிவார்கள்.சட்டம், பண்பாடு, அறம், மரபு, நாகரிகம் ஆகிய உணர்வுகளோடு குற்றச் செய்திகளை எழுதுவதும் வெளியிடுவதும் தேவையாகும்.
1.4.2 அரசுச் செய்திகள் (Government News)அரசின் கொள்கைகளும், நடைமுறைகளும், செயல்திட்டங்களும் மக்களின் வாழ்க்கையில் விளைவுகளை ஏற்படுத்துகின்றன. அரசுக்கும் மக்களுக்கும் இடையே இணைப்புப் பாலமாக இருந்து அரசின் நடவடிக்கைகளை மக்களுக்கும், மக்களின் எதிர்பார்ப்புகளை அரசுக்கும் எடுத்துக் கூறும் பணியைச் செய்தித்தாள்கள் செய்துவருகின்றன.பொதுவாக, தகவல் – மக்கள் தொடர்புத் துறை, அமைச்சகங்களின் செய்திக் கூட்டங்கள்; செயலர்கள், துறைத் தலைவர்கள் கொடுக்கும் பேட்டிகள்; அரசு நடத்தும் இதழ்கள், அரசிடம் செல்லும் தூதுக் குழுக்கள், செய்திக் கசிவுகள் (Leakage) ஆகியவற்றின் மூலம் அரசின் செய்திகள் பத்திரிகைகளுக்குக் கிடைக்கின்றன.ஒவ்வொரு அமைச்சகமும் தேவையை ஒட்டிச் செய்தியாளர் கூட்டங்களை நடத்தி, தங்களது கொள்கைகளை அறிவிக்கின்றது. தலைமை அமைச்சரும், பிற அமைச்சர்களும் தேவைப்படும்போது செய்தியாளர்களை அழைத்துச் செய்திகளைத் தருகின்றனர்.பொதுவாக அரசுச் செய்திகளை வழங்க மூன்று வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அவை பத்திரிகைக் கடிதம் (Press Communique), பத்திரிகைக் குறிப்பு (Press Note), பத்திரிகை வெளியீடு (Press Release) என்ற மூன்று ஆகும்.அரசின் முக்கியமான கொள்கைத் தீர்மானங்களை மட்டுமே பத்திரிகைகளுக்குத் தெரிவிப்பது பத்திரிகைக் கடிதம் ஆகும். இது மிகவும் முக்கியமானதாகும்.அரசுத் துறைகளின் தீர்மானங்கள், சில விவகாரங்களைப் பற்றிய அரசின் நிலை ஆகியவற்றைக் கூறுவது பத்திரிகைக் குறிப்பு ஆகும்.அன்றாட நிர்வாகச் செய்திகளையும், அமைச்சகங்களின் நடவடிக்கைகளையும் நாள்தோறும் அரசு செய்தித்தாள்களுக்குத் தருகின்றது. அது பத்திரிகை வெளியீடு ஆகும்.
1.4.3 நீதிமன்றச் செய்திகள் (Court News)மனித ஆர்வத்தைத் (Human Interest) தூண்டுகின்ற வகையில் நீதிமன்றங்களில் வழக்குகள் அன்றாடம் நடைபெறுகின்றன. அப்படிப்பட்ட வழக்குகளின் விவரங்களையும் தீர்ப்புகளையும் அறிய மக்கள் ஆர்வமாக இருக்கின்றனர். அதனால் செய்தித்தாள்கள் அவற்றைச் செய்திகளாக வெளியிடுகின்றன. மேலும் சுவையான வழக்குகள் நல்ல வர்ணனையுடன் கட்டுரையாக இடம்பெறும் பொழுது வாசகர்களுக்கு அவை நல்ல தீனியாக அமைகின்றன.நீதிமன்ற வழக்குகளைப் பற்றிச் செய்தித்தாள்களில் எழுதும் பொழுது மிகக் கவனமாக எழுத வேண்டும். நீதிமன்ற அவமதிப்புக்கு ஆளாகாமலும் (Contempt of Court), வழக்கின் போக்கினையோ, வழக்கோடு தொடர்புகொண்டவர்களையோ எந்த வகையிலும் பாதிக்காமலும் செய்திகளை எழுத வேண்டும்.சட்டக் கலைச் சொற்களை அப்படியே பயன்படுத்தக்கூடாது. வேண்டிய விளக்கங்களுடன் சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் சொற்களைப் பயன்படுத்தி வழக்கு மன்றச் செய்திகளை எழுத வேண்டும்.வழக்கின் நடைமுறை பற்றிச் செய்தியாளர் தனது சொந்தக் கருத்துகளைக் கூறக் கூடாது. வழக்கு நடந்த முறையை நடுநிலையில் இருந்து விளக்க வேண்டும்.சில நீதிமன்ற வழக்குகள் சுவை மிக்கதாக இருக்கும். எடுத்துக்காட்டாக, கணவன் – மனைவி மணவிலக்கு வழக்கு, கற்பழிப்பு வழக்கு, வழுக்கி விழுந்த பெண்களின் வழக்கு ஆகியவற்றைக் கூறலாம். ஆனால் சமுதாய நலன் கருதி அவற்றை அப்படியே வெளியிடுவதை இதழ்களின் பத்திரிகை தர்மம் தடுக்கின்றது.
1.4.4 சட்டமன்ற, நாடாளு மன்றச் செய்திகள் (Legislative Assembly and Parliamentary News)மக்களாட்சி செம்மையாக நடைபெற, சட்டப் பேரவையிலும், நாடாளுமன்றத்திலும் என்ன நடைபெறுகின்றன என்பதை மக்கள் தெரிந்து கொள்ளவேண்டும். அதனால் இவற்றின் செய்திகளை வெளியிடுவது இதழ்களின் முக்கியக் கடமையாகின்றது. சட்டப் பேரவை, நாடாளுமன்றச் செய்திகளைத் திரட்டுகின்ற செய்தியாளர்கள் அவைகளின் அமைப்பு முறைகளையும், நடைமுறைகளையும் நன்கு அறிந்து செயல்பட வேண்டும்.தீர்மானங்களின் மீதும், மசோதாக்களின் மீதும் நடைபெறக் கூடிய விவாதங்களையும், அமைச்சர்களின் பதில் உரைகளையும்; தீர்மானங்கள், மசோதாக்கள் நிறைவேற்றுவதனையும் செய்தியாளர் நன்கு கவனித்துச் செய்திகளாக மக்களுக்கு வழங்க வேண்டும்.சட்டமன்ற, நாடாளுமன்றச் செய்திகளை எழுதும் பொழுது அவைகளின் நடைமுறைகளையும், சட்டங்களையும் அறிந்து எழுத வேண்டும். அவைத் தலைவர் பதிவேட்டிலிருந்து நீக்கிய நிகழ்ச்சியைச் செய்தியாக வெளியிடக் கூடாது. மீறி வெளியிட்டால் தண்டனைக்கு ஆட்பட நேரிடும்.பேரவையின் உரிமை மீறலுக்கு ஆட்படாமல் செய்திகளைத் தர வேண்டும். பேரவையினை அவமதிக்கும் வகையில் செய்திகளைத் தரக் கூடாது. செய்தியாளர்கள் தவறு செய்தால் சட்ட மன்றம் நீதிமன்றமாக மாறித் தண்டனை வழங்கவும் செய்யும்.தமிழ்நாட்டில் தமிழ் வார இதழ் ஆனந்த விகடனில் உரிமை மீறல் தன்மையுள்ள கேலிச் சித்திரத்தைப் போட்டுத் தமிழக அமைச்சர்களைக் கேலி செய்ததாக, அதன் ஆசிரியர் திரு. பாலசுப்பிரமணியன் கைதாகி விடுதலையான செய்தி பத்திரிகை உலகில் பெரிதாகப் பேசப்பட்டது.அண்மையில் தமிழ்நாட்டில் தி இந்து (THE HINDU), முரசொலி ஆகிய இரு பத்திரிகைகள் மீது உரிமை மீறல் குற்றம் சுமத்தி, அவற்றின் துணை ஆசிரியர்களை கைது செய்தமை பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.எனவே சட்ட மன்ற, நாடாளுமன்றச் செய்திகளை வெளியிடும் போது கவனமாகச் செயல்பட வேண்டும்.
1.4.5 பொருளாதாரச் செய்திகள் (Economics News)மக்களுக்கு மிகவும் பயன்படக்கூடிய நிலையில் செய்தித்தாள்களில் இடம்பெறும் செய்திகளில் பொருளாதாரச் செய்தியும் ஒன்றாகும். நாட்டின் முன்னேற்றச் செய்திகளோடு சேர்ந்தவைகளாக, பொருளாதாரம் தொடர்பான புள்ளி விவரங்களும், அவற்றின் விளக்கங்களும் அமைகின்றன.பொருளாதாரச் செய்திகள் குறுகிய வட்டத்திற்குள் அடங்காமல். விரிந்து பரந்து கிடக்கின்றன. வேளாண்மை, தொழில், போக்குவரத்து, வாணிபம், வேலை வாய்ப்புகள், மின்சாரம், உணவு நிலை, நிதி தொடர்பானவை, வரி விதிப்பு, விலைவாசிகள், பணப் புழக்கம், கிராம வளர்ச்சி ஆகியவை எல்லாம் பொருளாதாரச் செய்தியில் இடம்பெறும்.அரசு தீட்டுகின்ற பொருளாதார வளர்ச்சித் திட்டங்கள், குறியீட்டளவுகள், செயல்பாடுகள், சாதனைகள் போன்றவற்றைப் பொதுமக்கள் அறிந்து கொள்வது நாட்டின் வளர்ச்சிக்குத் துணை புரியும்.பொருளாதாரச் செய்திகளையும், புள்ளி விவரங்களையும் சாதாரண மக்களும் புரிந்து கொள்கின்ற வகையில் எளிமைப்படுத்தி விளக்கங்களுடன் வெளியிட வேண்டும். புள்ளி விவரங்களை மிகுதியாகக் கூறி வாசகர்களைக் குழப்பக் கூடாது.பொருளாதாரச் செய்திகளை எழுதுகின்ற செய்தியாளர்களுக்குப் பொருளியல் பற்றிய அடிப்படை அறிவு தேவை. பொதுவாக நாட்டு வருவாய், வேளாண்மை, தொழில் ஏற்றுமதி, இறக்குமதி, வங்கி வைப்புகள் ஆகியவற்றின் வளர்ச்சி விகிதங்கள், விலைவாசிக் குறியீட்டு எண்கள், அந்நியச் செலாவணி செலுத்தும் நிலை, பல்வேறு வகையான வரிகள் ஆகியவை பற்றி அறிந்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் கோட்பாடுகளின் அடிப்படையில் செய்திகளை எளிமைப்படுத்தி விளக்கி எழுத முடியும்.பொருளாதாரச் செய்திகளைப் பல செய்தித்தாள்கள் தனிப் பக்கச் செய்திகளாக வெளியிடுவது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். கட்டுரை வடிவத்திலும், வினா-விடை வடிவிலும் இச்செய்திகள் வருகின்றன.
1.4.6 விளையாட்டுச் செய்திகள் (Sports News)காலையில் எழுந்தவுடன் பத்திரிகைப் படிப்பு என்று கூறும் அளவிற்குப் பத்திரிகை வாசிக்கும் பழக்கம் மக்களிடையே அதிகமாக வளர்ந்திருக்கிறது. சிற்றுண்டிச் சாலைக்குச் சென்று நாக்கு நாடும் ருசிக்கு ஏற்றாற்போலப் பண்டங்களை வாங்கி உண்பதைப் போல, செய்தித்தாள்கள் வாசகர்களின் ருசிக்கு ஏற்றாற் போலப் பல வகைச் செய்திகளைத் தீனியாகக் கொடுக்கின்றன.அவற்றில் ஆசிரியர் முதல் மாணவர்கள் வரையிலும், பெரியோர் முதல் சிறியவர் வரையிலும், விரும்பிப் படிக்கும் செய்தியாக விளையாட்டுச் செய்திகள் விளங்குகின்றன. காலையில் வீட்டில் செய்தித்தாள் வந்து விழுந்தவுடன் அதன் கடைசி இரண்டு பக்கங்களை முதலில் பார்க்கும் அளவிற்கு விளையாட்டுச் செய்திகள் வாசகர்களைக் கவர்ந்திழுக்கின்றன.இப்பொழுது தமிழ், ஆங்கிலம் மற்றும் எல்லா மொழிப் பத்திரிகைகளும் விளையாட்டுச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிடுகின்றன. முதன்மையான பல ஆங்கிலப் பத்திரிகைகள் ஒவ்வொரு விளையாட்டிற்கும் அதில் பயிற்சியும், தெளிவும், அனுபவமும் கொண்ட (நிருபர்களை) செய்தியாளர்களைப் பணியில் அமர்த்தியுள்ளன.வெளிநாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகள் 95 விழுக்காடு வாசகர்கள் விளையாட்டுச் செய்திகளை மிகவும் ஆர்வமாகப் படிக்கின்றனர் என்று கூறுகின்றன. நமது நாட்டிலும் விளையாட்டுச் செய்திகளைப் படிக்கும் வாசகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வளர்ந்து வருகின்றது. வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றிலும் விளையாட்டிற்குத் தனிஇடம் தருகின்றனர். வானொலியில் நேர்முக வர்ணனைகளைக் கேட்பதிலும், தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பைப் பார்ப்பதிலும் மக்கள் ஈடுபடுவதைப் பார்த்து, எந்த அளவிற்கு மக்களுக்கு விளையாட்டுப் போட்டியில் ஆர்வம் இருக்கிறது என்பதை அறியலாம்.விளையாட்டுச் செய்திகளை எழுதுகின்ற செய்தியாளர்கள் பல்வேறு விளையாட்டுகளைப் பற்றியும், அவற்றின் விதிமுறைகளைப் பற்றியும், பயன்படுத்தப்படும் கலைச்சொற்களைப் பற்றியும் நன்கு தெரிந்திருக்க வேண்டும். விளையாட்டுச் செய்திகளைச் சராசரி வாசகரும் புரிந்து கொள்ளும் வகையில் விளக்க வேண்டும்.செய்தியாளர் விளையாட்டுகளின் பழைய புள்ளி விவரங்களைத் திரட்டி வைத்திருக்க வேண்டும். நிகழ்காலச் சாதனைகளோடு முன் நாளைய சாதனைகளை ஒப்பிட்டு எழுதுதல் வேண்டும். செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரவேண்டும். ஏதாவது ஒரு பக்க ஆட்டக்காரர்களை ஆதரித்து எழுதக் கூடாது. செய்தியாளரின் விருப்பு வெறுப்புகள் வெளிப்படாமல் விளையாட்டுச் செய்திகளைத் தருவது நல்ல பணியாகும்.விளையாட்டுச் செய்திகளை எழுதுவதற்கு உரிய நடை தனி வகையானது. வாசகர்கள் விளையாட்டை நேரில் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்படும் வகையில் தக்க அடைச்சொற்களையும், தனது விமர்சனத்தையும் இணைத்துச் செய்திகளைக் கூற வேண்டும். ஒரு வகையில் விளையாட்டுச் செய்தி நாடக விமர்சனம் போல் இருக்க வேண்டும்.இந்திய விளையாட்டு வீரர்கள் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் 2002ஆம் ஆண்டு பங்கு பெற்று வெற்றியடைந்து நமது நாட்டிற்குப் புகழையும் பெருமையையும் சேர்த்துள்ளனர். இச்செய்திகளை நமது செய்தித்தாள்கள் படத்துடன் முதற்பக்கச் செய்திகளாக வெளியிட்டன.இந்தியக் கிரிக்கெட் அணியினர் 22 ஆண்டுகளுக்குப்பின்பு, உலக சாம்பியன் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை அவர்கள் நாட்டிலேயே, அடிலெய்டு ஓவல் மைதானத்தில் 4 விக்கட் வித்தியாசத்தில் 2ஆவது டெஸ்ட் போட்டியில் வென்று வாகை சூடிய வரலாற்று நிகழ்ச்சியை அனைத்துப் பத்திரிகைகளும் சிறப்புச் செய்தியாக வெளியிட்டு இந்திய அணிக்குப் பாராட்டைத் தெரிவித்தன.ஒவ்வொரு செய்தித்தாளும் வருடத்தின் கடைசி நாளான டிசம்பர் 31ஆம் நாள் அந்த ஆண்டின் முக்கிய நிகழ்ச்சிகளைத் தொகுத்து வெளியிடுவது மரபு. அதன்படி தி இந்து (THE HINDU) நாளிதழ் இந்திய விளையாட்டு வீரர்கள் 2003ஆம் ஆண்டு நிகழ்த்திய சாதனைகளைப் படத்துடன் வெளியிட்டிருக்கிறது. சில செய்திகள் கீழே குறிக்கப்பட்டுள்ளன:1) கோலாலம்பூரில் (KUALALUMPUR) நடைபெற்ற ஆசியக் கோப்பைக்கான ஹாக்கிப் போட்டியில் இந்திய அணியினர் பங்கு பெற்றுக் கோப்பையைக் கைப்பற்றினர்.2) உலக ஸ்நூக்கர் சாம்பியன் போட்டி சீனாவில் ஜெய்ன்மென் (JAINMEN) என்ற இடத்தில் நடைபெற்றது. அதில் இந்தியாவின் சார்பில் பங்கு பெற்று வாகை சூடி சாம்பியன் பட்டம் பெற்ற இந்திய வீரர் பங்கஜ்அத்வானி இந்தியாவுக்கு உலக அரங்கில் பெருமை சேர்த்தார்.3) பாரிஸ் (PARIS) நகரில் நடைபெற்ற உலக மகளிர் தடகளப் போட்டியில் (Athletics) நீளம் தாண்டுதல் (LONG JUMP) பிரிவில் இந்தியாவின் சார்பில் பங்குபெற்று வெண்கலப் பதக்கம் (BRONZE) வென்று இந்தியாவுக்குப் புகழ் தேடித்தந்தவர் அஞ்சு பாப்பிஜார்ஜ் (ANJU B GEORGE).இவ்வாறு செய்தித்தாள்கள் விளையாட்டுச் செய்திகளை முக்கியத்துவம் கொடுத்து, கவனித்து வெளியிடுகின்றன. மேலும் விளையாட்டிற்காகத் தனியாக இதழ்கள் இருப்பதும் சிறப்பு அம்சமாகும்.
1.4.7 பிற செய்தி வகைகள்மேலும், எதிர்பார்க்கும் செய்திகள், எதிர்பாராத செய்திகள், நேரடிச் செய்திகள், விளக்கச் செய்திகள், கடினமான செய்திகள், மென்மையான செய்திகள், அறிவியல் செய்திகள் எனச் செய்திகள் பலவகைப்படும்.• எதிர்பார்க்கும் செய்திகள் (Predictable News)நிகழ்ச்சி ஒன்று இப்பொழுது நடைபெறும் என்பதை முன்கூட்டியே அறிந்திருப்போம். அது நடைபெறும் போது எதிர்பார்த்த செய்தியாகிறது. அதனால் இச்செய்தியை எதிர்பார்த்த செய்தி என்ற வகையில் சேர்க்கிறோம். இந்திய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுத் தேர்தல் நடைபெறுவது; தமிழ்நாட்டிற்குக் குடியரசுத் தலைவர் வருகை; பாரதப் பிரதமர் வருகை; கடலில் புயல் உருவாகி இருப்பதால் சென்னையில் பலத்த மழை பெய்வது; பலத்த மழைக்குப் பிறகு வெள்ளம் வருவது போன்றவை எதிர்பார்த்த செய்திகளாகும்.• எதிர்பாராத செய்திகள் (Unpredictable News)யாரும் சிறிதும் எதிர்பாராத நிலையில் நடைபெறும் நிகழ்ச்சிகள் எதிர்பாராத செய்திகளாகும். இரயில் விபத்து, புயல் வீசுவது; பூகம்பம் (நில நடுக்கம்), குண்டு வெடிப்பு, அரசியல் தலைவர்கள் கொலை போன்ற நிகழ்ச்சிகள் இச்செய்திகள் மலரக் காரணமாகின்றன. இந்திய நாடாளுமன்றக் கட்டிடத்தில் கூட்டம் நடைபெறுகின்ற பொழுது, வளாகத்தில் தீவிரவாதிகள் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வீசிய நிகழ்ச்சியையும் முக்கிய உதாரணமாகக் காட்டலாம்.மேலும் 10-02-2004 அன்று இரேனியன் கிஷ் நிறுவன வான ஊர்தி (IRANIAN KISH AIRLINE) சார்ஜா (SHARJAH) விமான நிலையத்தில் தரை இறங்கும் போது மோதி விபத்துக்கு உள்ளானது. அந்த விபத்தில் 12 இந்தியர்கள் உட்பட 44 பேர் பலியான சோக நிகழ்ச்சியும் எதிர்பாராத செய்திக்கு உதாரணமாகும்.• நேரடிச் செய்தி; விளக்கச் செய்தி (Straight News; Explanatory News)ஒரு நிகழ்ச்சி எப்படி நடைபெற்றதோ அதனை அப்படியே படம் பிடித்துக் காட்டுவது போல வெளியிடுவது நேரடிச் செய்தியாகும். சட்டமன்றத் தலைவர் சில உறுப்பினர்களைப் பதவி விலகும்படி கூறியதை, அப்படியே நடந்தது நடந்தபடி கூறினால் நேரடிச் செய்தியாகும். ஆனால் நடந்ததை விளக்கும் பொழுது, என்ன காரணம் கருதிச் சட்ட மன்ற அவைத் தலைவர் அந்த நடவடிக்கை எடுத்தார் என்றும் விளக்க வேண்டும். மேலும் நடவடிக்கை எடுக்க அவருக்கு, அதிகாரம் இருக்கிறதா என்ற விளக்கத்தையும் சேர்த்து வெளியிடுவது விளக்கச் செய்தியாகும்.• கடினமான செய்திகள்; மென்மையான செய்திகள் (Hard News; Soft News)தமிழக அரசின் நிதி அமைச்சர் அவர்கள் 11-02-2004 அன்று சட்டப் பேரவையில் 2004-2005ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட அறிக்கையை அறிவித்தார். இது கடினமான செய்திக்கு உதாரணமாகும். அறிவியல் அறிஞர்கள் அறிவியல் மாநாடுகளில் வெளியிடும் செய்திகளும், தமிழ் அறிஞர்கள் தமிழ் இலக்கிய மாநாடுகளில் கூறும் செய்திகளும் கடினமான செய்திகளுக்கு எடுத்துக்காட்டாகும்.உடனடியாகப் பாமர வாசகர்கள் எளிதில் புரிந்துகொள்ளக் கூடியவை மென்மையான செய்திகளாகும். திரைப்பட வெளியீடு, தேர்தல் முடிவுகள், கிரிக்கெட் போட்டியின் முடிவுகள் ஆகியவற்றை மென்மையான செய்திகளாகக் கருதலாம். ஆனால் இவற்றைச் சூடான செய்திகள் (Hot News) என்று கூறுவதும் உண்டு. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியா அணியிடம் இறுதிப் போட்டியில் வெற்றியை இழந்தது என்ற சூடான செய்தி கேட்டவுடன் உயிரை விட்ட ஒருவரின் பரிதாபச் செய்தி நமது பத்திரிகைகளில் இடம் பெற்றதை மறக்க முடியுமா?அமெரிக்காவில் செய்திகளை, கடினமான செய்திகள் என்றும் மென்மையான செய்திகள் என்றும் பிரிக்கின்றனர்.• அறிவியல் செய்திகள் (Science News)இன்றைய உலகம் அறிவியல் உலகமாகத் திகழ்கிறது. அறிவியலும், தொழில்நுட்பமும் போட்டி போட்டுக் கொண்டு வளர்கின்றன. அவை தொடர்பாகப் புதுப்புதுச் செய்திகள் வியக்கத் தக்க வகையில் நாள்தோறும் வந்த வண்ணம் இருக்கின்றன. அவற்றை அறிவதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஆகவே அறிவியல் தொழில் நுட்பச் செய்திகளைப் பத்திரிகைகள் தினமும் வெளியிடுவது தேவையாகின்றது.அறிவியல், தொழில்நுட்பச் செய்திகள் மற்ற செய்திகளிலிருந்து வேறுபடுகின்றன. மற்ற செய்திகளைப் புரிந்து கொள்வது போல் அறிவியல் செய்திகளை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள மாட்டார்கள். ஏனெனில் பெரும்பான்மையினர் போதுமான அளவு அறிவியல் அறிவு பெற்றிருப்பதில்லை. எனவே தக்க விளக்கத்தோடு எளிமைப்படுத்தி அறிவியல் செய்திகளைத் தர வேண்டியது தேவையாகின்றது.அடிப்படை அறிவியல் அறிவு பெற்றவர்கள்தான் இச்செய்திகளைத் தவறில்லாமல் வெளியிட முடியும். செய்தி அறிவியலின் எந்தப் பிரிவு சார்ந்தது என்பதையும், அதன் பின்புலத்தையும், தன்மையையும் புரிந்து கொண்டு அறிவியல் செய்திகளை எழுத வேண்டும்.அறிவியல் இதழ்களும், தொழில்நுட்ப இதழ்களும் இன்று வெளிவருகின்றன. அவற்றில் அறிவியல் கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சி தொடர்பான கட்டுரைகள் வெளிவருகின்றன.அறிவியல் செய்திகளை எழுதும் பொழுது பயன்படுத்துகின்ற கலைச்சொற்களுக்கு விளக்கம் தரவேண்டும். பொதுமக்கள் புரிந்து கொள்ளும் வகையில் எளிமைப்படுத்திச் செய்திகளை வெளியிட வேண்டும்.
1.5 தொகுப்புரைநண்பர்களே!இதுவரை இதழியல் முதல் பாடத்தில் செய்தி என்பதன் விளக்கத்தினையும் வகைகளையும் அறிந்து கொண்டீர்கள். அதனை மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்திப் பாருங்கள்.செய்தி என்பது வழக்கத்திற்கு மாறாகப் புதுமையாகத் தோன்றும் நிகழ்ச்சியாகும்.செய்தியை ஏந்திவரும் செய்தித்தாள்கள் சக்தி வாய்ந்தவை ஆகும். ஆக்கவும் அழிக்கவும் அவைகளால் முடியும்.மனித ஆர்வமுடைய நிகழ்ச்சிகள் பெரும்பான்மைச் செய்தியாகிப் பத்திரிகைகளில் இடம் பெறுகின்றன.ஒரு நிகழ்வு செய்தியாக ஆவதற்குப் புதுமை முதலிய இருபது அம்சங்கள் காரணமாக உள்ளன.நேர அண்மை, இட அண்மை போன்ற 13 இயல்புகள் செய்திக்கு உள்ளன.எதிர்பார்த்த செய்திகள், எதிர்பாராத செய்திகள், விளையாட்டுச் செய்திகள் என்பன போன்ற 11 முக்கிய வகைகளாகச் செய்திகள் வகைப்படுத்தப் பட்டுள்ளன.விளையாட்டுச் செய்திகளில் மக்களுக்கு இன்றைய நாளில் அதிக ஆர்வம் இருக்கிறது. இது சாதனை புரிந்து வரும் இந்திய விளையாட்டு வீரர்களுக்கு உற்சாகம் ஏற்படுத்தும் செய்தியாக அமையும்.http://www.tamilvu.org/ta/courses-degree-p204-p2042-html-p20421sy-30974
- ஆசிரியர் (Editor); துணை ஆசிரியர் (Sub-editor) தகுதிகள், கடமைகள், பொறுப்புகள்
- இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
செய்தித்தாளின் ஆசிரியர் (Editor) மற்றும் துணை ஆசிரியரின் (sub-editor) தகுதிகள், கடமைகள், பொறுப்புகள் ஆகியன பற்றி இப்பாடம் தெளிவாகப் பேசுகிறது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
இந்தப் பாடத்தினைப் படிப்பதால் நீங்கள் கீழ்க்காணும் திறன்களையும் பயன்களையும் பெறுவீர்கள்.
• ஒரு செய்தித்தாளின் ஆசிரியர் (Editor) அலுவலகத்தில் ஓர் அணியின் தலைவன் போல, ஒரு கப்பலின் தலைவன் (Captain) போல எவ்வாறு செயல்படுகிறார் என்பதை அறிந்து கொள்வீர்கள்.• ஆசிரியரின் தகுதிகள், கடமைகள், பொறுப்புகள் பற்றி விவரமாகத் தெரிந்து கொள்வீர்கள்.• துணை ஆசிரியரின் (Sub-editor) முக்கியத்துவத்தையும் (importance) வகைகளையும் அறிவீர்கள்.• தலையங்கம் பத்திரிகையின் இதயம் போன்றது. அதனைச் சிறப்பாக எழுதத் துணை ஆசிரியர் எவ்வாறு துணை ஆகிறார் என்பதைப் புரிந்து கொள்வீர்கள்.• துணை ஆசிரியரின் தகுதிகள், கடமைகள், பணிகள் ஆகியன பற்றி அறிந்து கொள்வீர்கள்.- 4.0 பாட முன்னுரைஒரு பெரிய, நாடு தழுவிய நாளிதழின் ஆசிரியர் பணி என்பது மிகவும் பெருமைக்கு உரிய பொறுப்பான பணியாகும். எல்லாருக்கும் இந்த வாய்ப்பு எளிதில் கிட்டுவதில்லை. ஒவ்வொரு நாளிதழும் அதன் இறுதியில், அதனுடைய வெளியீட்டாளர், அச்சிடுபவர் பெயரோடு ஆசிரியர் பெயரையும் சேர்த்து வெளியிட வேண்டும் என்று செய்தித்தாள் பதிவுச் சட்டம் கூறுகின்றது. அத்தகைய பொறுப்பு வாய்ந்த ஆசிரியர் மற்றும் துணை ஆசிரியர்களின் தகுதிகள், கடமைகள், பொறுப்புகள் ஆகியவற்றைப் பற்றிய செய்திகள் இப்பாடத்தில் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.
4.1 ஆசிரியர்ஓர் அணியின் தலைவர் போல, ஒரு செய்தித்தாளின் ஆசிரியர் விளங்குகிறார். இவர் கப்பலை நடத்திச் செல்லும் தலைவர் (Captain) போலச் செயல்படுகிறார்.
4.1.1 முக்கியத்துவம்ஆசிரியர் செய்தித்தாளின் அச்சாணி ஆவார். சட்டப்படியும், நடைமுறைப் படியும், செய்தித்தாளில் வெளியிட்டவை, வெளியிடத் தவறியவை இரண்டிற்கும் பொறுப்பேற்க வேண்டியவர் அவர்தான். செய்தித்தாளில் அவதூறாக ஏதாவது வெளிவந்தால் அதற்கு அவர் மீது தான் வழக்குத் தொடர்வார்கள். அவமதிப்புக்காக நீதிமன்றம், சட்டப்பேரவை, நாடாளுமன்றம் ஆகியவற்றின் முன்னால் நிற்க வேண்டியவரும் அவரே. ‘செய்தித்தாளில் எதனையாவது வெளியிட்டதற்காகவோ, வெளியிடாததற்காகவோ, ஆத்திரப்பட்ட வாசகரோ, வாசகர்களின் குழுவோ அவரது அறையைத் தாக்கி வசை பாடுவார்கள்’ என்று இதழியல் அறிஞர் ரெங்கசாமி பார்த்தசாரதி, ஆசிரியரின் நிலையை விளக்குகிறார்.
• நல்ல ஆசிரியர்உயர்ந்த கொள்கையும் சமுதாய நோக்கமும், மனிதநலனில் நாட்டமும், நாட்டு முன்னேற்றத்தில் ஈடுபாடும், மற்றவர்களிடமிருந்து மாறுபட்ட சிந்தனைப் போக்கும், புதியன படைக்கும் வேட்கையும், படைப்பு ஆற்றலும் உடையவர்கள் நாடு போற்றும் நல்ல பத்திரிகை ஆசிரியர்களாகத் திகழ்வார்கள்.
• பொறுப்புஒரு நாளிதழின் ஆசிரியர் அமைப்பாளராகவும், எல்லாப் பகுதிகளையும் இணைப்பவராகவும் இருக்க வேண்டும். ஓர் இதழின் வெற்றியும் தோல்வியும் அதனுடைய ஆசிரியரையே சார்ந்திருக்கின்றது.
4.1.2 பணிகள்மக்கள் எப்படிப்பட்ட செய்திகளை விரும்புகிறார்கள் என்பதை அறிந்து அதன்படி செயல்பட வேண்டும். நடைமுறையில் சமுதாயத்தில் உள்ள சிக்கல்களை அறிந்து தலையங்கங்கள் வாயிலாக விளக்கித் தீர்வு சொல்ல வேண்டும். தற்காலத்தில் ஆசிரியர்தான் தலையங்கம் எழுத வேண்டும் என்று கட்டாயம் இல்லை. தலையங்கம் எப்பொருளில் அமைய வேண்டும் என்பதை ஆசிரியர் முடிவு செய்வார். தலையங்கம் எழுதும் குழு அல்லது துணை ஆசிரியர் ஒருவரால் அம்முடிவுக்கு ஏற்பத் தலையங்கம் எழுதப்படும்.
ஆசிரியர் தனித்தன்மையோடு இருக்கும் வகையில் கட்டுரைகளை எழுத வேண்டும். சிறப்பான கட்டுரைகள் எழுதுவதில் மற்ற ஆசிரியர்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும். அத்துடன் நகைச்சுவையை நயமாகக் கையாள வேண்டும். இதன் மூலம் இவர் ஆட்சியாளர்களையும் ஆட்டிப் படைக்கலாம்.
4.1.3 தகுதிகள்ஒரு பத்திரிகையில் பணியாற்றும் அனைவரையும் ஒருங்கிணைத்துச் செயல்படும் திறமை மிக்கவராக ஆசிரியர் இருக்க வேண்டும். பொறுப்புணர்வு, மக்கள் நல நாட்டம் உள்ளவராகவும், மனிதநேயம் மிக்கவராகவும், மக்களுக்கு நன்மை தரக்கூடியதை உடனே தீர்மானிக்கும் கூர்மையான அறிவு படைத்தவராகவும் இருக்க வேண்டும்.
ஒரு சிறந்த ஆசிரியர் தனக்குக் கீழ் பணிபுரியும் ஏனையோரிடம் சுமுகமான உறவு வைத்திருக்க வேண்டும். அதிகாரத்தை விட அன்பின் மூலம் பணிகளைச் சிறப்பாகச் செய்யும்படி அனைவரையும் பார்த்துக் கொள்ள வேண்டும். அவர்களின் பல்வேறு விதமான ஆற்றல்களை, முழுமையாக, பத்திரிகையின் வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எப்பொழுதும் மனவுறுதியுடன் செயல்பட வேண்டும்.
ஒரு குறிப்பிட்ட சிக்கலில் பொது மக்களின் கருத்து, தலைவர்களின் கருத்து என்னவென்று அறிந்து செயல்பட வேண்டும். எந்தச் சூழ்நிலையிலும் மனச்சாட்சிப் படி பணி ஆற்றுபவராக இருக்க வேண்டும்.
4.1.4 கடமைகள்ஆட்சியாளர்களின் நல்ல திட்டங்களை ஆதரிக்க வேண்டும். அவற்றின் சிறப்பு அம்சங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். அதேபோல் அரசின் தவறான திட்டங்களைச் சாடவும், நடுநிலையில் நின்று திறனாய்வு செய்யவும் தயங்கக் கூடாது.
அதிகார வர்க்கத்திற்கு அஞ்சியோ, அவர்கள் கொடுக்கும் கையூட்டிற்கு ஆசைப்பட்டோ சமுதாயத்திற்குத் தீங்கு தரக்கூடிய செய்திகளை வெளியிட்டு விடல் கூடாது. காலம், நேரம் பாராமல் பணியாற்றிச் செய்திகளை வெளியிட முயல வேண்டும்.
பத்திரிகைத் தர்மத்திற்கு அப்பாற்பட்டுச் செயல்படுவதன் மூலம் விற்பனையை அதிகரிப்பதற்கு ஆசிரியர் முயன்றுவிடக் கூடாது. ஆசிரியர் செய்தித்தாளின் உரிமையாளராக இல்லாவிட்டாலும், உரிமையாளருடன் இனிய உறவு கொண்டிருக்க வேண்டும். அதே சமயம் அவரது தவறான கொள்கையைத் துணிந்து எதிர்க்கும் மனத் துணிவும் வேண்டும். அடிப்படையில், இதழ் என்பது மக்கள் நலம் சார்ந்ததாகவும் மக்கள் கருத்தைப் பிரதிபலிப்பதாகவும் இருக்க வேண்டும். அத்துடன் வாசகர்கள் விரும்பும் கதைகள், கட்டுரைகள், பேட்டிகள், வாசகர் கடிதங்கள், கேள்வி பதில்கள் பகுதிகளை வெளியிடவும் கவனம் செலுத்த வேண்டும்.
4.2 துணை ஆசிரியர்கள் (Sub-editors)ஒவ்வொரு செய்தித்தாளிலும் அதன் அளவிற்கு ஏற்பத் துணை ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள். இவர்கள் செய்தித்தாளின் காரியங்கள் யாவிலும் கைகொடுப்பவர்களாக இருப்பார்கள். ஒவ்வொரு துணை ஆசிரியரும் ஏதாவது ஒரு பகுதியைத் தனது பொறுப்பில் வைத்திருப்பார்.• பெயர்கள்துணை ஆசிரியர்களை வெளி உலகம் அறிவதில்லை. உடம்புக்குள் இருக்கும் எலும்புகள் போல இவர்கள் செய்தித்தாள் அமைப்பிற்கு உறுதி அளிப்பவர்களாக இருப்பார்கள். மாநிலச் செய்தி ஆசிரியர் (State Editor), நகரச் செய்தி ஆசிரியர் (City-Editor), செய்தி ஆசிரியர் (News Editor), ஞாயிறு மலர் ஆசிரியர் (Sunday Editor), கலைப்பிரிவு ஆசிரியர் (Art Editor), விளையாட்டுப் பகுதி ஆசிரியர் (Sports Editor), வெள்ளி மலர் ஆசிரியர், மகளிர் மலராசிரியர், சிறுவர் மலராசிரியர், இளைஞர் மலராசிரியர் என்று பல பெயர்களில் உதவி ஆசிரியர்கள் அழைக்கப்படுவார்கள்.• பங்களிப்புதுணை ஆசிரியர்தான் செய்திகளையும், பிறவற்றையும் பதிப்பிக்கும் வகையில் செப்பனிட்டுத் தருகின்றார். ஆசிரியரைச் செய்தித்தாள் என்ற கோபுரத்தின் கலசமாகக் கொண்டால் துணை ஆசிரியரை அடித்தளக் கல்லாகக் கருதலாம்.
4.2.1 முக்கியத்துவம்துணை ஆசிரியரைப் பற்றிக் குறிப்பிடுகையில் “அவர் ஒரு படைப்புக் கலைஞர்” என்று எம்.வி.காமத் வர்ணிக்கிறார்.
நார்த்கிளிஃப் (north cliffe) என்பவர், “செய்தியாளர்கள் செய்தித்தாளை எழுதுகின்றார்கள். துணையாசிரியர்கள் அதனை உருவாக்குகின்றார்கள்” என்கின்றார்.
“பத்திரிகை உலகின் மேல்மட்ட அறிவாளிகள்தான் துணை ஆசிரியர்கள். மக்களிடம் பெயர் பெற்றிருக்கும் செய்தித்தாளுக்குக் கவர்ச்சியையும், சுவையையும் அந்த அறிவார்ந்த குழுவினர் வழங்குகின்றனர். செய்தித்தாளின் நடையின் மேம்பாட்டையும் தரத்தையும் அவர்களே உருவாக்குகின்றனர்” என்று ரெங்கசாமி பார்த்தசாரதி குறிப்பிடுகின்றார்.
4.2.2 பணிகள்ஒரு செய்தித்தாளில் பணியாற்றுகின்ற துணை ஆசிரியருக்குப் பெயரும் புகழும் கிடைப்பதில்லை. அவர்களது பணிக்குரிய பெருமை எல்லாம் பத்திரிகை ஆசிரியரையே சேரும். ஆனால் துணை ஆசிரியர் செய்கின்ற பணி மிகவும் பொறுப்பானதாகும். விளையாட்டில் ஓர் அணியின் வெற்றி ஒவ்வொருவரையும் சார்ந்தே அமைகிறது. புகழ், அணித்தலைவருக்குப் போகலாம். ஒருவர் பொறுப்புடன் விளையாடா விட்டாலும் வெற்றி கிட்டாது. அதே போன்றுதான் ஒரு செய்தித்தாளை உருவாக்கும் பணி. இதில் துணை ஆசிரியரின் பணி பத்திரிகைக்கு ஆதாரமாக அமைகின்றது என்று உறுதியாய்க் கூறலாம்.
• பிற பணிகள்செய்தியாசிரியர் தருகின்ற பணிகளைச் சிறப்பாகக் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்துக் கொடுக்க வேண்டும். செய்தியாளர்கள் தரும் செய்திகளைச் செம்மைப்படுத்தி அச்சுக்கு அனுப்ப வேண்டும். செய்திக்குக் கொடுக்கக் கூடிய இடம் எவ்வளவு என்று முடிவு செய்பவர் இவர்தான் என்பதால் செய்தியின் முக்கியத்துக்கு ஏற்ப இடம் ஒதுக்க வேண்டும். செய்திகளைச் செம்மைப்படுத்தும் பொழுது வெட்டிச் சிதைத்து வடிவத்திற்குக் கொண்டு வருவதால் துணை ஆசிரியர்களைச் செய்திக் கொலைகாரர்கள் என்று நகைச்சுவைபடக் கூறுவதுண்டு.
எந்தச் செய்தியிலும் எந்தக் குழப்பமும் இல்லாதவாறும், அச்சில் சிக்கல் எதுவும் ஏற்படாதவாறும் பார்த்துக்கொள்ள வேண்டும். செய்தியின் முக்கிய அம்சங்களைச் சரிபார்த்துத் தவறு எதுவும் இல்லாதவாறும் பார்த்துக் கொள்ளவேண்டும். செய்திக்கு ஏற்பச் சரியான தலைப்பைக் கொடுப்பதுடன் வாசகர் எளிதில் புரிந்து கொள்ளும்படியும் பார்த்துக் கொள்ள வேண்டும்.
அச்சுப்படி திருத்தும் துணையாசிரியரும் செய்தியின் அம்சத்தைக் கவனமாகப் படித்துச் செய்தி எதுவும் விடுபட்டுள்ளதா என்று கவனித்துச் சரிசெய்த பின்பு அச்சிடலாம் என்ற குறிப்பினை எழுத வேண்டும். செய்தியில் எவையேனும் சட்டச் சிக்கல்கள் உள்ளனவா என்று பார்த்துக் கொள்ள வேண்டும். துணை ஆசிரியர் ஒரு சிறந்த படைப்பாளியாகவும் இருக்க வேண்டும். செய்திகளை எந்த அடிப்படையில் வெளியிடுவது என்பதனையும் இவரே தீர்மானிக்க வேண்டும்.
4.2.3 தகுதிகள்துணையாசிரியர்கள் பொதுவாகக் கீழ்க்காணும் தகுதிகளைக் கொண்டிருத்தல் சிறப்புடையதாகும்.
•நுட்பமான அறிவாற்றல் வேண்டும்.•பல்வேறு மொழிகளில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.•நாட்டின் நிலவரங்கள் நன்கு தெரிந்திருக்க வேண்டும்.•தான் பணிபுரியும் செய்தித்தாளின் கொள்கைகளை நன்கு அறிந்திருக்க வேண்டும்.•சட்டம், அரசியல் அமைப்பு, சமூக, பொருளாதாரச் சிக்கல்கள், இலக்கிய அறிவு, பொது அறிவு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.•செய்தியாளர்கள் அனுப்புகின்ற செய்திகளைக் கூட்டி, குறைத்து வெளியிடும் அறிவு பெற்றிருக்க வேண்டும்.•மக்களின் மனநிலைகளை அறிந்து செய்திகளை வெளியிட வேண்டும்.•நீண்ட அறிக்கையையும் சுருக்கமாக, முழுமையாக, தெளிவாகக் கொடுக்கும் ஆற்றல் பெற்றிருக்க வேண்டும்.•ஒரு செய்தி வாசகர்களிடம் ஏற்படுத்தக் கூடிய விளைவுகளை, அதை வெளியிடும் பொழுதே அறிந்தவராக இருக்க வேண்டும்.•செய்தி உண்மையானதுதானா என்று அறிந்து கொள்வதில் ஆர்வம் செலுத்த வேண்டும்.•துணை ஆசிரியர் நீண்ட நேரம் உழைக்கக் கூடிய உடல் உறுதி கொண்டவராக இருக்க வேண்டும்.•மனமுதிர்ச்சியும் தன்னம்பிக்கையும் கொண்டவராக இருக்க வேண்டும்.
4.2.4 கடமைகள்துணை ஆசிரியர் கீழ்க்காணும் கடமைகளை நிறைவேற்ற வேண்டும்:
•துணை ஆசிரியர் தனது பணியினைக் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்துத் தர வேண்டும்.•பல்வேறு இடங்களிலிருந்து வருகின்ற செய்திகளைச் செம்மைப் படுத்திச் சரியான முறையில் உருவாக்க வேண்டும். செய்தியின் தரத்திற்கு ஏற்பக் கூட்டியோ, குறைத்தோ செய்திகளை வெளியிட வேண்டும்.•கிடைக்கும் தகவலை எந்த அளவுக்குச் செய்தியாகப் பயன்படுத்தலாம் என்பதில் திறமை உடையவராக இருக்க வேண்டும். தகவல்களை அமைக்க வேண்டிய முறை பற்றி உணர்ந்திருக்க வேண்டும்.•செய்தியை அச்சுக்கு அனுப்பும் வரை கவனமாகச் செயல்பட வேண்டும். எச்செய்தியிலும் குழப்பம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.•செய்தியில் காலம், இடம், பட்டம், பெயர்கள் போன்றவற்றைச் சரிபார்க்க வேண்டும்.•செய்திகளுக்குச் சரியான தலைப்புகளை இட வேண்டும்.•செய்தியில் எழுத்துப் பிழைகள், கருத்துப் பிழைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.•சிக்கல்களுக்கு உரிய செய்திகளை (அவதூறு போன்றவை) நீக்கக் கவனமாக மேற்பார்வை செய்வது மிகவும் முக்கியமானது.•செய்திகளுக்குத் தகுந்த தலைப்புகளைத் தருவது, துணைத் தலைப்புகளைத் தருவது போன்றவற்றிலும் இவர் கவனம் செலுத்த வேண்டும்.
4.3 தொகுப்புரைநண்பர்களே! இதுவரை இப்பாடப் பகுதியில் செய்தித்தாளின் ஆசிரியர், துணை ஆசிரியர் ஆகியோர் எவ்வாறு பணிபுரிகிறார்கள் என்பதை அறிந்தீர்கள். பத்திரிகையின் முதுகெலும்பாக இருக்கும் இவர்களின் தகுதிகள், கடமைகள், பணிகள் குறித்து மீண்டும் நினைவு கூர்வது நன்மை பயக்கும்.
•செய்திக் களங்கள், செய்தி மூலங்கள் ஆகியவற்றிலிருந்து செய்திகள் முழுவடிவம் பெறாமல் வந்து சேரும். அவற்றை எல்லாம் சீர்செய்து செய்தியாக மாற்றும் பணியில் பலர் ஈடுபட்டிருந்தாலும் அவர்களை அன்புடன் அணைத்துச் செல்லும் ஓர் அணியின் தலைவன் போல ஆசிரியர் செயல்படுகிறார் என்பதை இப்பாடம் கூறுவதை உணரலாம்.•பல்வேறு பிரிவுகளில், துணை ஆசிரியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்படும் பணிகளைச் சிறப்பாக முடித்து, பத்திரிகை முன்னேற்றத்தில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது.•ஆசிரியர், துணை ஆசிரியர் ஆகியவர்களின் தகுதிகள், பணிகள், கடமைகள் ஆகியவற்றை விளக்கமாகவும், தெளிவாகவும் தெரிந்து கொள்ள முடிந்தது.•தலையங்கம் எழுதும் ஆசிரியர் குழுவில் துணை ஆசிரியர் எவ்வாறு அங்கம் வகிக்கிறார் என்பதையும் கற்க முடிந்தது.
http://www.tamilvu.org/ta/courses-degree-p204-p2042-html-p20424sy-31026
செய்தி எழுதுதலும் செம்மையாக்கமும்
இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
செய்தித்தாள் அலுவலகத்தில் பெறப்படும் செய்திகள் எவ்வாறு எழுதப்பட்டு, செம்மையாக்கம் செய்யப்படுகின்றன என்பதை இந்தப் பாடம் சொல்கிறது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
தினத்தந்தி செய்தித்தாளின் நிறுவனரான சி.பா. ஆதித்தனார் “பேச்சு வழக்கில் உள்ள தமிழைக் கொச்சை நீக்கி எழுத வேண்டும்” என்ற கொள்கையைக் கடைப்பிடித்தார். அதனாலேயே அப்பத்திரிகை கைவண்டி இழுப்பவருக்கும் புரியக் கூடியதாக அமைந்தது.
ஜான் ஹோஹன் பெர்க் என்பவர், “எளிமையைப் போன்றே தெளிவாக எழுதுவதும் இன்றிமையாதது. செய்தி எழுதுவது என்பது தெளிவாக எழுதுவது (News writing isclear writing)” என்கிறார். இவ்வாறு எளிமையாகவும், தெளிவாகவும், சுருக்கமாகவும் செய்திகளைக் கூறுவதன் மூலமே இதழ்களின் இடச்சிக்கல், வாசகரின் படிக்கும் நேரச்சிக்கல் ஆகியவற்றிற்குச் செய்தியாளர்களும், செம்மையாக்கம் செய்வோரும் தீர்வு காண்கிறார்கள்.
செய்தியின் மையக் கருத்து அல்லது தலைமைக் கருத்து செய்தியின் தலைப்பில் இடம்பெறும். அதனை அடுத்து அமைவது தேதி வரி அல்லது நாள் வரி (Date line) என்பதாகும். இதில் நிகழ்ச்சி நடைபெற்ற நாளும், செய்தி வெளியாகும் ஊரின் பெயரும் தரப்படும். அடுத்து செய்தியின் சாரத்தைக் கூறும் முகப்பு (Lead) என்பது அமைகிறது. முகப்பை அடுத்து, செய்திகள் விவரமாகத் தரப்படுகின்றன. இப்பகுதி முழுவதும் உடல் (body) எனப்படுகிறது.
முகப்பின் தொடக்கத்தில் எந்த ஊரில், என்ன நடந்தது என்பதைக் குறிக்கும் வகையில் நாள் வரி (Date Line) அமைக்க வேண்டும்.
முகப்பு (Lead) என்பது தலைப்பின் விளக்கமாக, செய்திகளின் சுருக்கமாக அமைய வேண்டும். அவை ஐந்து இலக்கணங்களைக் கொண்டு இருக்க வேண்டும்.
செய்தியின் கருத்தை வலியுறுத்தும் வகையில் சொற்றொடரைத் தொடங்க வேண்டும்.
அவசரமாகப் படித்துச் செல்லும் வாசகர், முகப்பைப் படித்தே முழுச் செய்தியையும் அறிந்து கொண்ட உணர்வை ஏற்படுத்தும் வகையில் முகப்பை அமைக்க வேண்டும்.
செய்திகளை எழுதும் முன்னர், மேற்கண்ட வினாக்களுக்கு விடை கிடைத்துள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். பின்னர் விவரங்களின் உண்மைத் தன்மையைச் சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
பெரும்பாலான பத்திரிகைகள், இணைப்பு முகப்பு அல்லது தொகுப்பு முகப்பைத்தான் கையாளும். காரணம் முக்கியச் செய்திகளை எளிமையாகச் சொல்ல முடியும்; அதனோடு மற்ற எல்லா முகப்புகளுக்கும் இதுவே அடிப்படையானதாக அமையும்.
இவ்வாறு செப்பனிட்ட பின்னர், செய்திகள் இயந்திரப் பகுதிக்கு அச்சிற்காக அனுப்பப்படுகின்றன.
மேலும் இப்பாடத்தில் என்னென்ன செய்திகளை அறிந்து கொண்டீர்கள் என்பதை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்திப் பாருங்கள்.
செய்தித்தாள் அலுவலகத்தில் பெறப்படும் செய்திகள் எவ்வாறு எழுதப்பட்டு, செம்மையாக்கம் செய்யப்படுகின்றன என்பதை இந்தப் பாடம் சொல்கிறது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
இந்தப் பாடத்தைப் படிப்பதால் நீங்கள் கீழ்க்காணும் திறன்களையும் பயன்களையும் பெறுவீர்கள்.
• செய்தி மூலங்கள், செய்தி நிறுவனங்கள், செய்திக்களங்கள் வாயிலாகப் பெறப்படும் செய்திகள் எவ்வாறு எழுதப்படுகின்றன என்பதை அறிவீர்கள்.
• செய்தித்தாளில் செய்தியின் தலைப்புகள் எந்த அளவிற்கு முக்கியத்துவம் பெறுகின்றன என்பதைத் தெரிந்து கொள்வீர்கள்.
• செய்தியின் கட்டமைப்பு என்றால் என்ன என்பதை விளக்கமாகப் புரிந்து கொள்வீர்கள்.
• செய்தியின் முகப்பு (Lead) மற்றும் அதன் வகைகளை அறிந்து கொள்வீர்கள்.
• செம்மையாக்கம் என்றால் என்ன, அது எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை நன்கு அறிவீர்கள்.
6.0 பாட முன்னுரை
அமெரிக்க இதழாளர் எச்.மார்னிஸ், செய்தி என்பதை “அவசர அவசரமாக நடைபெறும் வரலாறு” என்று குறிப்பிடுகிறார். இப்படிப்பட்ட செய்தியைச் சுமந்து வரும் செய்தித்தாளை எப்படிப் படித்தாலும், எவ்வளவு நேரம் படித்தாலும், செய்திகளைப் படித்துப் புரிந்து கொள்ள முடிவதற்குக் காரணம் அவற்றை எழுதும் முறைகளே.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு செய்தி நிறுவனத்திற்கும் பல்லாயிரக்கணக்கான செய்திகள் வந்தாலும் அவற்றை முழுமையாக வெளியிட முடியாது. இந்திய நாட்டுப் பத்திரிகைகள் எட்டு முதல் இருபது பக்கங்கள் வரை மட்டுமே கொண்டு வெளிவருகின்றன. இதனால் சில தேர்ந்தெடுக்கப்பட்ட செய்திகளையே, சுருக்கமாக, செய்தி இதழ்களில் வெளியிட முடிகிறது. மேலும் வாசகர்களாலும் குறிப்பிட்ட அளவு நேரமே இதழ்களைப் படிக்க ஒதுக்க முடிவதால், செய்தியின் மையக் கருத்துச் சிதையாமல் செய்தியாளர்களும், செம்மையாளர்களும் செய்திகளைச் சுருக்கித் தருகின்றனர்.
அவசரமான நேரங்களில் வாசகர்கள் செய்தித்தாளைப் படிப்பதால் அலங்கார நடை, குழப்பமான மிக நீண்ட வாக்கியங்கள், அகராதியில் அர்த்தம் தேட வேண்டிய சொற்கள் ஆகியவற்றை நீக்கி, மிக எளிதான ஒரு நடையைப் பத்திரிகையாளர் பின்பற்றுகின்றனர். இவ்வாறு பின்பற்றும் நடையைக் கொண்டு, எவ்வாறு செய்திகளை எழுதுகின்றனர், அவற்றை எவ்வாறு செம்மையாக்குகின்றனர் என்பவை பற்றிய கருத்துகள் இங்குத் தொகுத்துக் கூறப்படுகின்றன.
6.1 இதழியலில் மொழிநடை
இதழ்களின் நடை எளிமையாக இருக்க வேண்டும் என்பதில் திரு.வி.க. மிகவும் கவனமாக இருந்தார். தமிழ் ஆசிரியராக இருந்த அவர் தேசபக்தன் பத்திரிகைக்காக ஒரு தனி நடையை மேற்கொண்டார். எளிமையில் கருத்துகள் விளங்கும் என்று கருதி அம்முறையைப் பின்பற்றினார். எழுத்தாளர் கல்கியின் வெற்றியில் அவரது எளிய மொழி நடைக்கு முக்கியமான பங்குண்டு என்றால் அது மிகையன்று.தினத்தந்தி செய்தித்தாளின் நிறுவனரான சி.பா. ஆதித்தனார் “பேச்சு வழக்கில் உள்ள தமிழைக் கொச்சை நீக்கி எழுத வேண்டும்” என்ற கொள்கையைக் கடைப்பிடித்தார். அதனாலேயே அப்பத்திரிகை கைவண்டி இழுப்பவருக்கும் புரியக் கூடியதாக அமைந்தது.
ஜான் ஹோஹன் பெர்க் என்பவர், “எளிமையைப் போன்றே தெளிவாக எழுதுவதும் இன்றிமையாதது. செய்தி எழுதுவது என்பது தெளிவாக எழுதுவது (News writing isclear writing)” என்கிறார். இவ்வாறு எளிமையாகவும், தெளிவாகவும், சுருக்கமாகவும் செய்திகளைக் கூறுவதன் மூலமே இதழ்களின் இடச்சிக்கல், வாசகரின் படிக்கும் நேரச்சிக்கல் ஆகியவற்றிற்குச் செய்தியாளர்களும், செம்மையாக்கம் செய்வோரும் தீர்வு காண்கிறார்கள்.
6.2 செய்தியின் கட்டமைப்பு
நாளிதழ்களில் செய்திகளைப் படிக்கும் பொழுது அவற்றில் ஒரு திட்டவட்டமான அமைப்பு இருப்பதைக் காணலாம். ஒவ்வொரு செய்தியிலும் தலைப்பு, முகப்பு, உடல் என்ற மூன்று பகுதிகள் உள்ளன. இவற்றிற்குச் செய்தியின் கட்டமைப்பு என்று பெயரிடப்படுகிறது.செய்தியின் மையக் கருத்து அல்லது தலைமைக் கருத்து செய்தியின் தலைப்பில் இடம்பெறும். அதனை அடுத்து அமைவது தேதி வரி அல்லது நாள் வரி (Date line) என்பதாகும். இதில் நிகழ்ச்சி நடைபெற்ற நாளும், செய்தி வெளியாகும் ஊரின் பெயரும் தரப்படும். அடுத்து செய்தியின் சாரத்தைக் கூறும் முகப்பு (Lead) என்பது அமைகிறது. முகப்பை அடுத்து, செய்திகள் விவரமாகத் தரப்படுகின்றன. இப்பகுதி முழுவதும் உடல் (body) எனப்படுகிறது.
6.2.1 தலைப்பு
அவசரமாக ஓடிக் கொண்டிருக்கும் வாசகர்களைப் படிக்கத் தூண்டும் வகையில் தலைப்பு இருக்க வேண்டும். ஒரு நல்ல தலைப்பு செய்தியின் சாரத்தைக் கூறுவதாகவும், செய்தியை விளம்பரப் படுத்துவதாகவும், அழகுபடுத்துவதாகவும் அமைகிறது. அது, தலைப்பை மட்டும் படிக்கும் வாசகர்க்குச் செய்தியைச் சுருக்கித் தருகின்றது. மேலும் படிக்கக் கூடியவர்களைச் செய்தியை நோக்கிக் கவர்ந்து இழுக்கிறது. அத்துடன் தலைப்புகள் செய்தித்தாளுக்கு ஓர் ஆளுமையைத் தருகின்றன. ஒரு செய்தித்தாள் பரபரப்பாகச் செய்தியைத் தரக் கூடியதா? நிதானமாக எழுதக் கூடியதா? கட்சிச் சார்புடையதா? நடுவுநிலையானதா? என்றெல்லாம் தலைப்புகளைப் பார்த்தவுடன் புரிந்து கொள்ளலாம்.
• வகைகள்
தலைப்பு செய்தித்தாளின் பக்கத்திற்கு ஒரு வடிவத்தைக் கொடுத்து, படிக்கத் தூண்டுகிறது. தலைப்புக்கும் பலவடிவங்கள் உண்டு. அவை பற்றி அறிவோமா?
• நெற்றித் தலைப்பு (Banner)
செய்தித்தாளின் அனைத்துப் பத்திகளையும் இணைத்து முதன்மைத் தலைப்பாக அமைப்பர்.
• ஒரு வரித் தலைப்பு (Single Line headline)
ஒரே வரியில் அமையும் இத்தலைப்பு வாசகர்களை எளிதில் கவர்ந்துவிடும். எடுத்துக்காட்டு: யார் பிரதமர் என்பதே கேள்வி : ஜெ (தினமணி பக்.9 நாள் 12.03.2003)
• இரு வரித் தலைப்பு (Two Lines headline)
பெரும்பாலான செய்தித்தாள்கள், இரண்டு வரிகளில் அமையும். இவ்வகைத் தலைப்பினைப் பயன்படுத்துகின்றன. சான்று : இந்திரா காந்தி திறந்தநிலைப் பல்கலையுடன் தமிழ் இணையப் பல்கலை. ஒப்பந்தம். (தினமணி, 12.03.2004, பக்.11)
• பிரமிடு வகைத் தலைப்பு
இவ்வகைத் தலைப்பு ஓர் அழகிய வடிவமைப்பினைத் தரும். இவ்வகைத் தலைப்பினையும் பெரும்பாலான பத்திரிகைகள் பயன்படுத்துகின்றன. இவ்வகைத் தலைப்பு இரண்டு வகைப்படும்.
1) மூன்று வரிசைப் பிரமிடு முறை
சான்று : அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் மகளிர் தின விழா (தினமணி, 12.3.2004, பக்.2)
2) தலைகீழ்ப் பிரமிடு முறை
சான்று : தொலை நிலைக் கல்வித் தேர்வு முடிவுகள் வெளியீடு (தினமணி, 12.03.2004, பக்.3)
• தோள் தலைப்பு (Shoulder headline)
• இடது வரிசைத் தலைப்பு (Flush Left headline)
• வலது வரிசைத் தலைப்பு (Flush Right headline)
• ஓடு தலைப்பு (Run to headline)
• முகப்புக் கதைத் தலைப்பு (Lead story headline)
• பெட்டித் தலைப்பு (Boxed headline)
• இடது வரிசைத் தலைப்பு (Flush Left headline)
• வலது வரிசைத் தலைப்பு (Flush Right headline)
• ஓடு தலைப்பு (Run to headline)
• முகப்புக் கதைத் தலைப்பு (Lead story headline)
• பெட்டித் தலைப்பு (Boxed headline)
போன்று தலைப்புகள் பல வடிவங்களில் இருப்பினும் இவற்றை மிகவும் அரிதாகவே பயன்படுத்துகின்றனர்.
6.2.2 முகப்பு (lead)
தலைப்பிற்கும் செய்திக்கும் இடையில் அச்செய்தியினை எழுதியவர் பெயர் அமைந்திருக்கும். இதனை, பெயர் வரி (By-line) என்பர்.முகப்பின் தொடக்கத்தில் எந்த ஊரில், என்ன நடந்தது என்பதைக் குறிக்கும் வகையில் நாள் வரி (Date Line) அமைக்க வேண்டும்.
முகப்பு (Lead) என்பது தலைப்பின் விளக்கமாக, செய்திகளின் சுருக்கமாக அமைய வேண்டும். அவை ஐந்து இலக்கணங்களைக் கொண்டு இருக்க வேண்டும்.
• அறிவிக்கும் பணியைச் செய்வதாக இருக்க வேண்டும்.
• சுருக்கமாக இருக்க வேண்டும்.
• சொற்கள் எளிமையாக இருப்பதுடன் தெளிவாகவும் இருக்க வேண்டும்.
• நேரடியாகச் சொல்ல வேண்டும்.
• சுவைபடச் சொல்ல வேண்டும்.
• சுருக்கமாக இருக்க வேண்டும்.
• சொற்கள் எளிமையாக இருப்பதுடன் தெளிவாகவும் இருக்க வேண்டும்.
• நேரடியாகச் சொல்ல வேண்டும்.
• சுவைபடச் சொல்ல வேண்டும்.
• வகைகள்
முகப்பு (lead) எழுதுவதில் பலவகையுண்டு. அவை:
• இணைப்பு முகப்பு அல்லது தொகுப்பு முகப்பு (summary lead)
• மதிப்பீட்டு முகப்பு (value judgment lead)
• நாடக அமைப்பு முகப்பு (dramatic lead)
• முரண் முகப்பு (contrast lead)
• மேற்கோள் முகப்பு (quotation lead)
• சிறப்பு முகப்பு (key note lead)
• ஆர்வமூட்டும் முகப்பு (suspended interest lead)
• மதிப்பீட்டு முகப்பு (value judgment lead)
• நாடக அமைப்பு முகப்பு (dramatic lead)
• முரண் முகப்பு (contrast lead)
• மேற்கோள் முகப்பு (quotation lead)
• சிறப்பு முகப்பு (key note lead)
• ஆர்வமூட்டும் முகப்பு (suspended interest lead)
ஆகியனவாகும்.
செய்தியின் முக்கிய நிகழ்ச்சியைச் சுருக்கமாக அமைப்பதே முகப்பின் நோக்கம். ஏன், என்ன, எப்பொழுது, எங்கே, எப்படி, யார் என்ற கேள்விகளுக்கு விடையளிப்பதாக அது இருக்க வேண்டும்.செய்தியின் கருத்தை வலியுறுத்தும் வகையில் சொற்றொடரைத் தொடங்க வேண்டும்.
அவசரமாகப் படித்துச் செல்லும் வாசகர், முகப்பைப் படித்தே முழுச் செய்தியையும் அறிந்து கொண்ட உணர்வை ஏற்படுத்தும் வகையில் முகப்பை அமைக்க வேண்டும்.
செய்திகளை எழுதும் முன்னர், மேற்கண்ட வினாக்களுக்கு விடை கிடைத்துள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். பின்னர் விவரங்களின் உண்மைத் தன்மையைச் சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
பெரும்பாலான பத்திரிகைகள், இணைப்பு முகப்பு அல்லது தொகுப்பு முகப்பைத்தான் கையாளும். காரணம் முக்கியச் செய்திகளை எளிமையாகச் சொல்ல முடியும்; அதனோடு மற்ற எல்லா முகப்புகளுக்கும் இதுவே அடிப்படையானதாக அமையும்.
6.2.3 செய்தியின் உடற்பகுதி
இது முகப்பின் விரிவாக்கமாக இருத்தல் வேண்டும். முகப்பில் காணப்படும் செய்திகளை விளக்கிக் கூறுவதாகவும், கூடுதலான விவரங்களை அளிப்பதாகவும் இருக்க வேண்டும். ஏன், எவ்வாறு, எப்பொழுது, எப்படி என்று விளக்கிக் கூறுவதாகவும் அமைய வேண்டும். இதில் முக்கியமான செய்திகளை முதலிலும், குறைந்த முக்கியத்துவம் உள்ள செய்திகளை இறுதியிலும் சொல்ல வேண்டும். இடப் பற்றாக்குறையின் காரணமாகக் கடைசிப் பத்திகளை நீக்க நேரிடலாம். அதனால் முக்கியமான விவரங்களை முதலிலேயே சொல்லி விடுவது சிறந்தது.
• செய்தியின் முடிவுரை
செய்தியின் கடைசிப் பத்தியைச் செய்தியின் முடிவு என்ற வகையில் அமைக்க வேண்டும்.
6.3 செய்திகளை எழுதுதல்
செய்திகளை எழுதும் போது கீழ்க்குறிப்பிடும் செயல்முறைகளைப் பின்பற்ற வேண்டுவது அவசியமாகும்.
1) செய்திகளை எழுதும் பொழுது எளிய சொற்களைப் பயன்படுத்த வேண்டும். தெளிவற்ற கருத்துகளைக் கூறக் கூடாது.
2) சிக்கலான பொருள்களை வாசகர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் எழுத வேண்டும்.
3) தேவைக்கு அதிகமாகச் சொற்களையோ, தொடர்களையோ பயன்படுத்தக் கூடாது.
4) தொடர்புடைய சொற்களையே பயன்படுத்த வேண்டும். நிகழ் காலத்திலோ இறந்த காலத்திலோ செய்திகளை எழுதிக் கொண்டு இருந்தால், அந்தக் காலங்களை மாற்றி எழுதிவிடாமல் கவனமாக எழுத வேண்டும்.
5. எதிர்மறையில் கூறுவதைத் தவிர்க்க வேண்டும்.
6) பெரும்பாலும் செய்வினை வாக்கியங்களாகவே அமைக்க வேண்டும்.
7) அனைவருக்கும் தெரிந்த சொல் சுருக்கங்களையே பயன்படுத்த வேண்டும். உதாரணம் : ஐ.நா.சபை ; ஈ.வெ.ரா போன்றவை.
8) எழுத்துப் பிழைகள், வாக்கியப் பிழைகள் இல்லாமல் எழுத வேண்டும்.
9) எழுதுபவரின் சொந்தக் கருத்தோ, அவரது சுய உணர்ச்சிகளோ, எழுதும் செய்தியில் இடம்பெற்று விடக் கூடாது.
10) செய்திகளைச் சிறு சிறு பத்திகளாக அமைப்பது சாலச் சிறந்தது.
11. துணைத் தலைப்புகள் கொடுத்து எழுதுவது சிறந்தது.
6.4 செம்மையாக்கம் (Editing)
செய்தித்தாளுக்கு வரும் எழுத்துப் படிகளைத் (copy) தேர்ந்தெடுத்து, அச்சிடுவதற்குத் தகுந்தாற் போல் மாற்றி அமைப்பதை செம்மையாக்கம் (Editing) என்பர்.
6.4.1 கவனத்தில் கொள்ள வேண்டியவை
செம்மையாக்கம் செய்யும் பொழுது கவனத்தில் கொள்ள வேண்டியவை கீழே குறிப்பிடப் பெறுகின்றன.
• எழுத்துப் படியில் உள்ள விவரங்கள் சரியானவையா என்பதைச் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். அதில் வரும் பெயர்கள், நேரங்கள், இடங்கள் ஆகியவை சரியாக இல்லாவிட்டால் அவற்றைச் சீர் செய்ய வேண்டும்.
• பிறர் மனம் வருந்தக் கூடிய சொற்கள், செய்திகள், அவதூறான செய்திகள், தொடர்கள் ஆகியவற்றை அகற்றி விடவேண்டும்.
• எழுத்துப் பிழை, வாக்கியப் பிழை, இலக்கணப் பிழை ஆகியவற்றைத் திருத்த வேண்டும்.
• தெளிவில்லாத பத்திகளை நீக்கி விட்டுப் புரியும்படி எழுத வேண்டும்.
• செய்தியில் நிருபரின் கோபங்கள், உணர்ச்சிகள், சொந்தக் கருத்துகள் இருந்தால் அவற்றை நீக்க வேண்டும்.
• செய்தித்தாளுக்குரிய மரபுகள் பின்பற்றப்பட்டு உள்ளனவா என்பதைப் பார்க்க வேண்டும்.
• செய்தியின் முக்கியத்துவத்திற்குத் தகுந்தாற் போல், அது செய்தித்தாளில் எந்தப் பக்கத்தில் எந்த இடத்தில் அமைய வேண்டும் எனக் குறிக்க வேண்டும்.
• செய்தியைச் செப்பனிட்ட பின்னர் அதற்குத் தலைப்புக் கொடுக்க வேண்டும். அத்தலைப்பு வாசகர் மனங்களைக் கவர்ந்து படிக்கத் தூண்டும் வகையில் இருக்க வேண்டும். இந்த தலைப்புத்தான் செய்தித்தாளுக்கு அழகைக் கொடுக்கிறது.
• செய்திகளைச் செப்பனிடும் பொழுது கலைச்சொற்கள் வாசகர்களுக்குப் புரியாது என்று ஆசிரியர் நினைத்தால், அவற்றை அவர் எளிமைப் படுத்தித் தர வேண்டும். எந்தெந்தச் செய்தியை எந்தெந்த எழுத்து அளவில் வெளியிடுவது, எப்படிப் பத்திகளாகப் பிரித்து எழுதுவது, செம்மையாக்கக் குறியீடுகளை எங்கெங்கு எப்படிப் பயன்படுத்துவது என்னும் விதிமுறைகளை எல்லாம் சரியாகப் பின்பற்ற வேண்டும்.
6.5 தொகுப்புரை
நண்பர்களே! இதுவரை செய்திக் களங்களில் இருந்து பெறப்படும் செய்திகள் எவ்வாறு எழுதப்படுகின்றன என்பதை அறிந்திருப்பீர்கள். மேலும் இப்பாடத்தில் என்னென்ன செய்திகளை அறிந்து கொண்டீர்கள் என்பதை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்திப் பாருங்கள்.
• செய்தியின் கட்டமைப்பாகிய தலைப்பு, முகப்பு, உடற்பகுதி ஆகியன பற்றி விரிவாக அறிந்து கொள்ள முடிந்தது.
• செய்தியைச் செம்மையாக்கம் செய்கிற பொழுது கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சங்கள் குறித்தும் விளக்கமாக அறிந்து கொண்டோம்.
• செய்திகளை எழுதும் பொழுது கவனிக்க வேண்டிய விதிகளையும் விவரமாக அறிய முடிந்தது.
ஊடக பாடமும் அதன் சார்ந்த ஊக்கப்டுத்தப்படாத கேள்விகளும்?
ஊடகம் என்றால் ஏன்ன? நாளேடுகளில் அல்லது ஊடகத்துறையில் பணிபுரிபவர்கள் எப்படி பணியாற்ற வேண்டும் அதற்கு அவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி என்ன? தகவலை எப்படி செய்தியாக மாற்றுதல் மேலும் செய்தியின் உட்புற வெளிபுற சாரம்சங்கள் என்ன? செய்தி துறையில் அனுபவம் ஒன்றே போதுமா? மருத்துவம், தொழிற்நுட்பம் சார்ந்த படிப்புகளை போல் விருப்பம் சார்ந்த (professional) தொழிற்பண்புடைய வேலை தானா இதழியல் ? மற்றவர்களை கவரும் வண்ணம் பேசவும் எழுதவும் தெரிந்தால் போதுமா ? என்றெல்லாம் ஊடகத்துறையில் பணியாற்ற நினைக்கும் பலருக்கு வரும் சந்தேக கேள்விகள். நான் இந்த கட்டுரையில் கட்டமைக்கப்பட்ட ஊடக சூழலில் ஊடகம் படித்த மாணவனின் சில ஆய்வு சார்ந்த உண்மைகளை பகிரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
• செய்திக்கும் தகவலுக்கும் இடையிலான வேறுபாட்டினை அமைப்பு சார்ந்த ஊடக நிறுவனங்கள் எப்படி வரவேற்கின்றன?
• புரிதல் என்பது வெறும் வார்த்தை விளையாட்டா?
• அடுக்கு மொழியும், ஆழ்ந்த சிந்தனையும் கூவி விற்க போதுமானவையா?
• தமிழக ஊடகங்களின் நிறம் சார்ந்த செய்தி தொகுப்பின் நிலைப்பாடு என்ன?
• ஊடகத்தில் பணியபுரிய அங்கு வேலை பார்ப்பவரின் உறவினராக இருந்தால் போதுமா?
• ஊடகம் என்பது திறமை சார்ந்து வியக்க வைக்கும் வேடிக்கை கூத்தா?
.
ஒரு கட்டமைக்கப்பட்ட செய்தி நிறுவனத்தில் வேலை செய்ய வேண்டுமானால் மேற்சொன்ன அனைத்தில் ஒன்றிலாவது தகுதி பெற்றிருக்க வேண்டும், இல்லையெனில் யாரும் விலை கொடுத்து வாங்கமாட்டார்கள் என்பது தமிழக ஊடக சூழலில் அனைவரும் அறிந்த உண்மை. இதழியலுக்கும் தொடர்பியலுக்கும் இடையிலான புரிதலை சமூக ஆய்வுக்கு உட்படுத்தாதவன் தன்னை ”ஊடகவியலாளர் ”அல்லது ”பத்திரிக்கையாளர்” என்று சொல்ல தகுதியற்றவன். ஒரு சிலர் தனக்கு அனுபவம் இருக்கிறது, தான் 10 வருடமாக பல கட்டமைக்கப்பட்ட நிறுவனத்தில் வேலை செய்திருக்கிறேன் எனக்கு நன்றாக செய்தியினை வடிவமைக்க தெரியும் என்று சொல்வதிலும் எந்த பிரயோசனமும் இல்லை ,அதற்கு முதலில் நிகழ்வுகளுக்கும் செய்திக்கும் இடையிலான தகவலை சமூக சார்ந்த பிரச்சனைகளில் தொடர்புபடுத்தி அதன் முக்கியத்துவத்தை விரைவில் காரணப்படுத்தி கொள்ளும் வேகமும் விவேகமும் வேண்டும். இப்படி அவனால் தொடர்வுபடுத்தி செய்தியினை அறிந்து எழுத அல்லது பேசமுடியும் என்றால் அவர் தன்னை ஊடகவியலாளர் என்று சொல்லி கொள்வதில் தவறேதும் இல்லை என்பது ஊடகம் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டு வரும் ஊடக ஆய்வாளர்களின் கருத்தாக இருக்கிறது.
இன்றைய தமிழக ஊடக சூழல், நிறம் நிறைந்த பத்திரிக்கயாளர்களையும் ஊடகவியலாளர்களை அடையாளபடுத்தும் வண்ணத்து பூச்சிகளாக அலைந்து இருப்பதையும் இல்லாததையும் வார்த்தைகளால் வர்ணையூட்டும் மேடைபேச்சுகளாக பார்க்க முடியும். தகவல் பரிமாற்றம் எப்படி படிப்படியாக செய்தியின் ஆழத்தை தூர்வாருகிறது என்பதனை இங்கு இறுக்க கூடிய ஊடக வண்ணத்துபூச்சிகளின் செயல்பாடுகளை கொண்டு விவரித்திட முடியும்.
.
ஒரு கட்டமைக்கப்பட்ட செய்தி நிறுவனத்தில் வேலை செய்ய வேண்டுமானால் மேற்சொன்ன அனைத்தில் ஒன்றிலாவது தகுதி பெற்றிருக்க வேண்டும், இல்லையெனில் யாரும் விலை கொடுத்து வாங்கமாட்டார்கள் என்பது தமிழக ஊடக சூழலில் அனைவரும் அறிந்த உண்மை. இதழியலுக்கும் தொடர்பியலுக்கும் இடையிலான புரிதலை சமூக ஆய்வுக்கு உட்படுத்தாதவன் தன்னை ”ஊடகவியலாளர் ”அல்லது ”பத்திரிக்கையாளர்” என்று சொல்ல தகுதியற்றவன். ஒரு சிலர் தனக்கு அனுபவம் இருக்கிறது, தான் 10 வருடமாக பல கட்டமைக்கப்பட்ட நிறுவனத்தில் வேலை செய்திருக்கிறேன் எனக்கு நன்றாக செய்தியினை வடிவமைக்க தெரியும் என்று சொல்வதிலும் எந்த பிரயோசனமும் இல்லை ,அதற்கு முதலில் நிகழ்வுகளுக்கும் செய்திக்கும் இடையிலான தகவலை சமூக சார்ந்த பிரச்சனைகளில் தொடர்புபடுத்தி அதன் முக்கியத்துவத்தை விரைவில் காரணப்படுத்தி கொள்ளும் வேகமும் விவேகமும் வேண்டும். இப்படி அவனால் தொடர்வுபடுத்தி செய்தியினை அறிந்து எழுத அல்லது பேசமுடியும் என்றால் அவர் தன்னை ஊடகவியலாளர் என்று சொல்லி கொள்வதில் தவறேதும் இல்லை என்பது ஊடகம் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டு வரும் ஊடக ஆய்வாளர்களின் கருத்தாக இருக்கிறது.
இன்றைய தமிழக ஊடக சூழல், நிறம் நிறைந்த பத்திரிக்கயாளர்களையும் ஊடகவியலாளர்களை அடையாளபடுத்தும் வண்ணத்து பூச்சிகளாக அலைந்து இருப்பதையும் இல்லாததையும் வார்த்தைகளால் வர்ணையூட்டும் மேடைபேச்சுகளாக பார்க்க முடியும். தகவல் பரிமாற்றம் எப்படி படிப்படியாக செய்தியின் ஆழத்தை தூர்வாருகிறது என்பதனை இங்கு இறுக்க கூடிய ஊடக வண்ணத்துபூச்சிகளின் செயல்பாடுகளை கொண்டு விவரித்திட முடியும்.
· நிகழ்வு என்ன?
· செய்தியாளரின் சேகரிக்கும் பணி,
· நிகழ்வு குறித்து நேரடியாக பார்த்தோரிடமிடருந்து வினவுதல்,
· தடயம் சார்ந்த தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்துதல் தவறாமல் அதனை உறுதி செய்தல்,
· அதன் உண்மை நிகழ்வுகளை துறை சார்ந்த அதிகாரிகளிடம் உறுதி படுத்துதல்,
· செய்தி சேகரிக்கும் முன்பே நாம் செல்லக்கூடிய பகுதி மக்களின் நிலைப்பாடு,
· முன்னதாக அந்த பகுதியில் நடந்த சம்பவங்களை ஆய்வுக்கு உட்படுத்துதல்,
· முன்னதாக அந்த பகுதியில் நடந்த சம்பவங்களை ஆய்வுக்கு உட்படுத்துதல்,
· சேகரித்த தகவல்களை எப்படி அதன் முக்கியதுவம் கொண்டு செய்தியாக்குதல் என்பதெல்லாம் ஒரு செய்தியாளரின் அடிப்படை முக்கியம்.
தமிழக ஊடக சூழலில் வடிவமைத்தல் என்பது காலம் காலமாக ஒரே மாதிரியாகத்தான் அமைய பெற்றிருக்கும் எடுத்துகாட்டாக ஒரு விபத்து நிகழ்வினை செய்தியாக பதிவு செய்ய முயலும் போது விபத்து நடந்த பகுதி, நேரம், பலியானவர்கள் எண்ணிக்கையை தவிர அந்த செய்தியின் சாரம்சம் அதாவது விபத்து நடந்தவிதம் அனைத்து விபத்து நிகழ்வு செய்திக்கும் பொருந்தும் வண்ணம் எழுதுவார்கள். செய்தியாளர் தகவலை சேகரிக்க மட்டும் செல்லக்கூடாது மாறாக செய்தியினை மற்ற நிகழ்வுகளுடன் ஒப்பீட்டு பார்க்க கூடிய தைரியமும், துணிச்சலும், சமூக பொருப்பும் வேண்டும் என்பதனை எனது துறை சார்ந்த சென்னை பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஒரு போது தவறியதில்லை இது போன்ற ஊடக சூழல் தமிழகத்தில் இல்லை என்ற ஏமாற்றம் என்னில் அதிகம் இருந்தாலும் அதற்கான வாய்ப்புகளை அனுதினமும் எண்ணியபடி தூங்காமலிருந்த நாட்களையும் நான் எண்ணிபார்க்கிறேன்.
அமைப்பு சார்ந்த ஊடக தளத்தில் எப்படி ஒருவரின் திறமையை மதிப்பிடுகிறார்கள் என்பது எனக்கு எப்போதுமே கேள்வி குறிதான், குறிப்பாக நாம் வியக்கும் சிலரும் தன்னை இது போன்ற அமைப்புகளுக்குள் வேறு வழியின்றி எளிதில் அடிமையாக்கி கொள்கிறார்கள் என்பது சிறு வருத்தம் அளிக்க கூடிய ஒரு நிகழ்வாகவே எண்ண வேண்டியிருக்கிறது.
தமிழகத்தில் எத்தனையோ சமூகம் சார்ந்த நிகழ்வினை படிப்போரும், காண்போரும் எளிதில் புரிந்து கொள்வதற்கேற்ப பணியாற்றிய ஊடகவியலாளர்களின் எழுத்தும் குரலும் தமிழுக்கும் பெருமை சேர்ப்பவையாக இருந்திருக்கிறது அதற்கு எடுத்துக்காட்டாக சுப்பிரமணிய பாரதியார், ஜி.சுப்பிரமணிய ஜயர், டி.எஸ். சொக்கலிங்கம், எஸ்.பி ஆதித்தன், வி.கல்யான சுந்தர முதலியார் போன்றவர்கள் செய்தியின் பரிமானம் தெரிந்தவர்களாக இருந்ததன் விளைவு மக்கள் அவர்கள் எழுதியவற்றையும், பேசியவற்றையும் கேட்டு அதற்கேற்ப செய்தியினை மக்கள் தெளிவுற அறிந்து கொண்டார்கள். மேற் சொன்ன அனைவரும் தன் சுய லாபத்திற்காகவும் பாதுகாப்பிற்காகவும் கட்டமைக்கப்பட்ட ஊடக சூழலை உருவாக்க நினைத்ததில்லை. தொலைக்காட்சிகளில் விளம்பரம் ஒளிபரப்பபடுவது தவறு என நான் குறிப்பிடவில்லை. முடிந்தால் விளம்பரங்களை ஒரளவு தனிக்கை செய்யலாம், ஆனால் செய்தி ஒளிபரப்பும் நேரத்தில் எப்படி செய்தியை நேர்த்தியான முறையில் உண்மை வெளிப்படும் வண்ணம் ஆய்வுக்கு உட்படுத்தி வெளியிட செய்வது என்பது பற்றி ஆராயவேண்டும் என்பதே எனது கருத்து.
சென்னையில் வெளிவரும் தினத்தந்தி நாளிதழை ஏன் அமெரிக்காவில் வசிக்கும் ஒர் அமெரிக்கர் இணையத்திலோ அல்லது கடைகளில் வாங்கியோ படிப்பதில்லை ஆனால் அமெரிக்க அரசியலை சரிவர தெரிந்து கொள்ளாத நாம் ஏன் அமெரிக்காவில் வெளியாகும் நுயார்க் டைம்ஸ் நாழிதளை தேடிபடிக்கிறோம்?.
ஊடகம் ஏன் மத கருத்துகளை தனி இதழாகவும், தொடர் நிகழ்ச்சியாகவும் நான் வாங்கும் செய்தி இதழில் அல்லது பார்க்கும் தொலைக்காட்சி பெட்டியிலோ ஒளிபரப்புகிறது?.
தமிழகத்தில் ஒளிபரப்பாகும் 45 தொலைக்காட்சி அலை வரிசையில் மக்கள் விரும்பி பார்க்கும் தொலைக்காட்சி நிகழ்வுகள் குறைந்து விட்ட போதும் எப்படி அவைகள் அதிக பொருட் செலவில் நடத்தபடுகின்றன?.
ஊடகம், இதழ் என்ற பெயரில் நடத்தப்படும் சாதிய மற்றும் சமூக இதழ்கள் நமக்கு சொல்வதென்ன?.
ஊடகத்தின் முதலாளியாகவும் , பங்குதார்களாகவும் இருப்பவர்கள் எதைச்சார்ந்து இயங்குகிறார்கள், சமூக பொருப்பினை உணர்ந்தவர்களா அல்லது அவர்களின் பின்புல வருவாய் தலம் என்ன?
ஊடகத்துறையில் பணியாற்றும் ஊடகவியலாளர்கள் இவர்களுக்கு செய்யும் சேவைகள் என்ன?.
ஊடகத்துறையில் பணியாற்றுவோர் ஊடகத்தினை எப்படி தங்களுக்கு ஏற்றவாறு பயன்படுத்தி கொள்கிறார்கள்?.
ஊடகவியலாளர்கள் தங்களை எப்படி சமூகத்துடன் இனைத்து கொள்வதிலும், கட்சி சார்ந்த தனது சித்தாந்த கொள்கையினை வகுத்து கொள்வதிலும் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதெல்லாம் நாம் அவ்வப்போது நமக்கு நாமே கேட்க வேண்டிய கேள்விகள்.
ஊடகம் என்ற சூழலில் பணியாற்றும் அனைவரும் நிகழ்வு, தகவல், தடயம், இவை அனைத்தையும் சமூக ஆய்வுக்கு உட்படுத்தும் போது செய்தியின் தன்மையையும் அதன் உண்மை நிலையையும் அடையாளம் கண்டு கொள்ள முடியும் என்பது ஆய்வு சார்ந்த எதார்த்தம்.
ஸ்டீபன் . வி
source எம்மவர் செய்தித் தளம் Facebook group
ஸ்டீபன் . வி
மனதுக்கு ஆர்வத்தை தூண்டி, மகிழ்ச்சியையும், பணி திருப்தியையும் தருவது பத்திரிக்கையாளர் பணி. மேலும் தனி அந்தஸ்தைக் கொண்ட பணியாகவும் இது விளங்குகிறது. சமூகத்தில் நிகழும் சம்பவங்களை சேகரித்து, அதை மக்களிடம் பரப்பும் பெரும் பணியை பத்திரிக்கையாளர்கள் செய்கிறார்கள். ஆங்கிலத்தில் மீடியாத்துறை என்றும், தமிழில் ஊடகத்துறை என்றும் அழைக்கப்படும் இந்த பத்திரிகை துறை, அச்சு ஊடகம் மற்றும் எலக்ட்ரானிக் ஊடகம் என்ற இரு பெரும் பிரிவுகளாக உள்ளது. இந்த இரு பிரிவுகளிலும் ஏராளமான பணி வாய்ப்புகள் உள்ளன.
பத்திரிக்கையாளர் தொழிலுக்கு தேவைப்படும் மனோநிலை, பண்பு மற்றும் பொறுப்பு ஆகியவைப் பற்றியும் விரிவாக அலசலாம். தனிப்பட்ட பண்புகள்: ஒருவர் நல்ல பத்திரிக்கையாளராக இருக்க வேண்டுமெனில், அவருக்கு ஆர்வம், நெகிழ்வுத்தன்மை, நல்ல ஆளுமை, தெளிவான சிந்தனை, செய்தித்தாள், வார இதழ் போன்றவற்றில் நல்ல மொழியில் எழுதும் திறன் போன்றவை இருக்க வேண்டும்.
பத்திரிகை துறையில் இருக்கும் பல பதவிகளுக்கு ஏற்றவாறு பலவித தகுதிகள் தேவைப்படுகின்றன. ஒரு பத்திரிகை அலுவலகத்தில் முதன்மை ஆசிரியர், உதவியாசிரியர், நிருபர், பணியாளர் போன்ற பல பொறுப்புகள் உள்ளன. பத்திரிகை செய்தியில் அரசியல், சர்வதேச செய்திகள், கல்வி, பிராந்திய செய்திகள், குற்றம், விளையாட்டு, சினிமா, வணிகம், சட்டம், தொழில் போன்ற பல பிரிவுகள் உள்ளன.
நீங்கள் உதவி ஆசிரியர், நிருபர் ஆகியோரைப் போலல்லாமல், சிறப்பு கட்டுரை எழுதுபவராக இருக்கலாம். ஒரு சிறந்த பத்திரிக்கையாளராக இருப்பதற்கு, தேவைப்படும் மொழியில் நல்ல பேச்சு மற்றும் எழுத்து திறன் அவசியம். மேலும் சுய நெறிமுறைகளை வகுத்துக் கொண்டவராகவும், எது குறித்தும் விமர்சனம் செய்யும் அளவிற்கு மனப்பாங்கு உடையவராகவும் இருத்தல் வேண்டும். இந்த துறையில் தேவைப்படும் இன்னொரு முக்கிய திறன் என்னவெனில், எது ஒரு செய்தி மற்றும் எது ஒரு செய்தியல்ல என்று பிரித்தறியும் திறன்தான்.
உங்களை சுற்றி மற்றும் தொலைவில் என்ன நடக்கிறது என்பதை பற்றிய ஆர்வம், கவனிப்பு மற்றும் விழிப்புணர்வு போன்றவையும் முக்கிய தகுதியாகும். மேலும் மனித இனத்தின்பாலான உங்களின் அன்பு, சமூகத்தின் மீதான அக்கறை, தேசப்பற்று போன்றவற்றை முறையாக வெளிப்படுத்துவதும் உங்களின் மதிப்பினை கூட்டும். ஒரு நல்ல நிருபருக்கு உடல் மற்றும் மனரீதியான வலிமை மற்றும் விழிப்புணர்வு தேவை. மேலும் உண்மை எது என்பதைக் ஆய்வுசெய்து கண்டறிய ஒரு வழக்கறிஞரை வைத்துக்கொள்வதும் தேவையாகிறது. பணி பொறுப்பு
* மக்களிடம் பேசி அவர்களை பேட்டி எடுப்பதன் மூலமும், சம்பவங்களை தொகுப்பதன் மூலமும் ஒரு பத்திரிக்கையாளர் செய்திகளையும், தகவல்களையும் பெற வேண்டும்.
* ஒரு கட்டுரைக்கான பின்னணி தகவலை அமைப்பதற்கு, அதுசம்பந்தமான ஆய்வை மேற்கொள்ள வேண்டும்.
* ஒரு செய்தி அல்லது கட்டுரையை வெளியிடும் முன்பாக அதை மதிப்பிட வேண்டும் அல்லது தேவையான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.
* பிரவுச்சர், செய்தி கடிதங்கள் மற்றும் அறிக்கைகளை எழுதவும், திருத்தவும் வேண்டும்.
* உரைகளை எழுத வேண்டும் மற்றும் மீடியா வெளியீடுகளை தயாரிக்க வேண்டும்.
பணி வகைகள்: ஒரு தரமான செய்தித்தாளை வெளியிடும் நிறுவனம் என்னென்ன வகையான பொறுப்புகளில் ஆட்களை வைத்திருக்கும் என்ற விரிவான அலசல் தரப்பட்டுள்ளது.
செய்திக் குழு:
முதன்மை செய்தி ஆசிரியர்: ஒட்டுமொத்த செய்திக் குழுவின் தலைவர் இந்த முதன்மை செய்தி ஆசிரியர்தான். அனைத்து செய்தி அம்சங்களையும் சேகரித்தல், தேர்ந்தெடுத்தல் மற்றும் வழங்குதல் போன்ற அனைத்து வேலைகளையும் அவர் மேற்பார்வை செய்கிறார். மேலும் பலவித பதிப்புகள் கொண்ட செய்தித்தாள்களுக்கு அந்தந்த பதிப்புகளுக்கு பொறுப்பாக ரெசிடண்ட் எடிட்டர் என்று தனித்தனி செய்தி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருப்பார்கள். அந்தந்த பதிப்புகளுக்கு அவர்களே பொறுப்பாவார்கள். முதன்மை செய்தி ஆசிரியர் என்பவர் பட்டதாரியாக இருப்பது மட்டுமின்றி, அனுபவம் மற்றும் ஆர்வத்தின் மூலமாக நன்கு படித்த நபராகவும், நாட்டில் நடந்த மற்றும் நடக்கும் சிறிய மற்றும் பெரிய அரசியல் சம்பவங்களைப் பற்றி நுணுக்கமான மற்றும் தெளிவான அறிவு மற்றும் அலசல் கொண்டவராக இருக்க வேண்டும்.
செய்தி ஆசிரியர்கள்: முதன்மை ஆசிரியரின் வலது கையாக இருப்பவர் இந்த செய்தி ஆசிரியர். அடுத்த நாள் செய்தித்தாள் பதிப்பில் வரக்கூடிய செய்திகள் எவை என்பதை சேகரித்து முடிவு செய்வது இவரின் முக்கியப் பணி. பல இடங்களிலிருந்து செய்தி திரட்டி தருபவர்களின் நெட்வொர்க் மற்றும் வேறு செய்தி கிடைக்கும் மூலங்கள் ஆகியவற்றை கட்டுப்படுத்துவது இவரின் முக்கியப் பணி. விரைவில் முடிவெடுக்கும் திறன் பெற்றவராகவும், நல்ல தலைமைத்துவ பண்புடையவராகவும் இவர் இருக்க வேண்டும். இந்த பதவியைப் பெற ஒருவர் பட்டதாரியாகவும், போதுமான பணி அனுபவம் பெற்றவராகவும் இருக்க வேண்டும்.
துணை ஆசிரியர்கள் மற்றும் முதன்மை உதவி ஆசிரியர்கள்: இவர்களின் பணி செய்தி ஆசிரியர்களின் பணியை ஒத்தது, அதேசமயம் ஒரு எல்லைக்கு உட்பட்டது. இந்த பணியில் சேர்வதற்கு ஒருவர் பட்டதாரியாகவும், போதுமான அனுபவம் கொண்டவராகவும் இருக்க வேண்டும். அவர்களுக்கு சிறப்பாகவும், ஆழமாகவும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.
முதன்மை உதவி ஆசிரியர் என்பவர், தனக்கு கீழுள்ள பல்வேறு துணை ஆசிரியர்களுக்கு பணிகளை பிரித்துக் கொடுத்து, அவர்களை ஒருங்கிணைத்து கண்காணிக்கிறார். உதவி ஆசிரியர்கள்: ஒவ்வொரு செய்தித்தாள் அலுவலகத்திலும் கணிசமான அளவில் உதவி ஆசிரியர்கள் இருப்பார்கள். செய்தித்தாளுக்கு வரும் அனைத்து செய்திகளையும் வகைப்படுத்தி தேர்ந்தெடுக்கிறார்கள். ஒரு செய்தியின் மொழிநடையை சிறப்பாக்கி, பிழைகளை சரிப்படுத்தி, தேவையற்றப் பகுதிகளை நீக்கும் வேலையை உதவி ஆசிரியர் செய்வார். எனவே அவருக்கு பகுப்பாய்வு திறனும், விரைவாக புரிந்துகொள்ளும் ஆற்றலும் இருக்க வேண்டும். அதேசமயத்தில் அவர் ஷிப்ட் முறையில் பணிபுரியவும் தயாராக இருக்க வேண்டும்.
நிருபர்கள் மற்றும் சிறப்பு செய்தி வழங்குனர்கள்: ஒரு செய்தித்தாளின் கண்கள் மற்றும் காதுகளாக நிருபர்கள் கருதப்படுகிறார்கள். செய்திகளை மோப்பம் பிடிக்கும் திறமை அவரிடம் இருக்க வேண்டும். அவர் பிறருடன் எளிதில் நெருங்கிப் பழகும் தன்மை உள்ளவராகவும், பல நிலைகளிலிருந்து செய்திகளைப் பெரும் வகையில் ஆட்கள் தொடர்புடையவராகவும் இருக்க வேண்டும். நிருபருக்கு நன்றாக எழுதும் திறமையும் இருக்க வேண்டும். அவர் தன்னை சுய ஒழுக்கம் உள்ளவராகவும், சுய கட்டுப்பாடு உள்ளவராகவும் மாற்றிக்கொள்ள வேண்டும். அறிவுத்திறன், பகுப்பாய்வு திறன், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, அமைதியான மனோநிலை போன்றவை ஒரு நல்ல நிருபருக்கு தேவையான குணாதிசயங்கள். சில குறிப்பிட்ட நோக்கங்களுக்காக நியமிக்கப்பட்ட நிருபர்களே, சிறப்பு செய்தி வழங்குனர்கள்(ஸ்பெஷல் கரஸ்பான்டன்ட்) எனப்படுகின்றனர். மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்றம் மற்றும் அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய முக்கிய செய்திகளை வழங்குவது இவர்களின் பணி. நிருபராக இருந்து போதிய அனுபவம் பெற்றவர்களே, சிறப்பு செய்தி வழங்குநர்களாக ஆக முடியும்.
விமர்சகர்கள்: ஒருவர் செய்தி விமர்சகராக ஆகவேண்டுமெனில், குறைந்தபட்சம் குறிப்பிட்ட துறையிலாவது நன்கு விஷயம் தெரிந்தவராக இருக்க வேண்டும். இதில் பல பிரிவுகள் உள்ளன. ஒருவர் அரசியல் விமர்சகராகவோ, விளையாட்டு விமர்சகராகவோ மற்றும் சினிமா விமர்சகராகவோ இருக்கலாம். எந்த துறையாக இருந்தாலும் அந்த துறையில் ஆழமான அறிவு பெற்றிருக்க வேண்டும்.
இந்த பொறுப்புகளை தவிர, செய்தித்தாள் நிறுவனங்களில் வேறு பல பொறுப்புகளும் உள்ளன. அவை, * லீடர் ரைட்டர், ட்ரெய்னீ ரைட்டர், செய்தி போட்டோகிராப்பர்கள், சர்குலேஷன் மேனேஜர், சர்குலேஷன் எக்சிகியூடிவ், விளம்பர மேனேஜர், விளம்பர எக்சிகியூடிவ், நிர்வாக மேலாளர், சீனியர் கிளார்க், கிளார்க், அக்கவுண்ட்ஸ் மேனேஜர், கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர், பிரிண்டிங் மெஷின் ஆப்பரேட்டர், லைப்ரரியன் மற்றும் ஆய்வாளர்கள்.
வானொலி மற்றும் தொலைக்காட்சி துறை: மீடியா துறையில் தொலைக்காட்சி மற்றும் வானொலி ஆகியவை முக்கியப் பங்கு வகிப்பதுடன், ஏராளமான மீடியா சம்பந்தப்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்பை தருகிறது. சாத்தியப்பட்ட இடத்திற்குள் நுட்பத்தை கொண்டுவருவதே இத்துறைகளுக்கு தேவைப்படும் முக்கிய திறமையாகும். வானொலி மற்றும் தொலைக்காட்சியில் நிருபராக இருப்பவருக்கு சிறப்பான எழுத்து திறன் இருக்க வேண்டும். ஒரு தொலைக்காட்சி நிருபர் அடிக்கடி கேமராவுடனும், குழுவுடனும் பயணம் செய்ய வேண்டியுள்ளது. செய்தி கொடுக்க வேண்டிய விஷயத்தை தேர்ந்தெடுப்பது, பின்னணியை தேர்ந்தெடுப்பது, செய்தி எழுதுதல் மற்றும் செய்தியை கேமராவில் கொண்டு வருதல் ஆகியவற்றுக்கு அவர்தான் பொறுப்பு.
இத்துறையில் கிடைக்கும் சம்பளம்: ஊடகத் துறையில் பொதுவாக நல்ல சம்பளம் தரப்படுகிறது என்றாலும், சம்பள விகிதம் நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபடுகிறது. பெரிய நகரங்களில் பணிபுரியும் பயிற்சி காலத்திலுள்ள ஊடகவியலாளர் 6 மாதங்கள் முடிந்த பிறகு ரூ.10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை பெறுகிறார்கள். பெரிய நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு துணை ஆசிரியர் மற்றும் சீனியர் நிருபர் ரூ.25 ஆயிரம் முதல் ரூ. 35 ஆயிரம் வரை பெறுகிறார்கள். தேசிய நாளிதழ்களில் பணிபுரியும் செய்தி ஆசிரியர்கள் ரூ.1.5 லட்சம் முதல் 2 லட்சம் வரை மாத ஊதியமாக பெறுகிறார்கள்.
படிப்பு மற்றும் பயிற்சிகள்: நீங்கள் ஒரு சிறந்த ஊடகவியலாளர் ஆக விரும்பினால், அதற்கு முறையான பயிற்சி பெற வேண்டும். தற்போது அதிகளவிலான பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் ஊடகத்துறை சம்பந்தமான பயிற்சிகளை அளிக்கின்றன. இந்த துறையைப் பொறுத்தவரை, ஒருவர் என்னதான் பட்டப்படிப்பு படித்து பயிற்சி எடுத்தாலும், சுவாரஸ்யமாகவும், சிறப்பாகவும் செய்திகளை எழுதும் மற்றும் உருவாக்கும் திறமையை பெற்றிருக்க வேண்டும்.
பள்ளி படிப்பை முடித்தவுடன் இளநிலை பட்டப் படிப்புகள் மற்றும் அதன்பிறகான முதுநிலை பட்டப் படிப்புகள், முதுநிலை டிப்ளமோ படிப்புகள் போன்றவை பல கல்வி நிறுவனங்களால் வழங்கப்படுகின்றன.
ஊடகம் சம்பந்தமாக இருக்கும் படிப்பின் வகைகள்:
* ஜர்னலிசம்/மாஸ் கம்யூனிகேஷன் துறையில் இளநிலை பட்டப் படிப்பு
* பி.ஏ.(ஹானர்ஸ்) ஜர்னலிசம்
* 3 வருட பி.ஏ.(ஹானர்ஸ்) ஹிந்தி பத்ரகரிதா
* பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வழங்கும் ஜர்னலிச சான்றிதழ் படிப்புகள் (பள்ளி படிப்பிற்கு பிறகு)
* எம்.ஏ. ஜர்னலிசம்/மாஸ் கம்யூனிகேஷன் இந்த படிப்புகளை பல புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வழங்குகின்றன.
கருத்தியலை கட்டமைப்பதில் ஊடகவியலின் முதன்மைப் பாத்திரம்
கருத்தியலை கட்டமைப்பதில் ஊடகவியலின் முதன்மைப் பாத்திரம்
கருத்தை கட்டமைப்பதும், கட்டமைக்கப்பட்ட கருத்தை பதிவுசெய்வதும் கடத்துவதும் காவிச் செல்வதும் பரப்புவதும் ஊடகவியல் முக்கியமான பணி என்று சொல்லலாம்.
கருத்து என்கிற போது அது ஏற்கனவே உள்ள ஒரு பொருளின் பிரதிபலிப்பால் ஒரு மனிதனுடைய சிந்தனையில் உருவெடுத்து ஒருசெயற்பாட்டின் மூலம் இறுதி செய்யப்பட்டு நடைமுறைப் படுத்தப்படுகின்ற போது முழுமையடைகிறது.
(‘கருத்து என்பது முதல் வந்தது. கடவுளால் படைக்கப்பட்டது. கருத்திலிருந்தே பொருள் வந்தது’ என்ற கருத்து முதல் வாதச் சிந்தனைக்குள் சிக்கிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன்.)
உதாரணமாக சொந்த வீடு என்ற ஒரு கருத்து ஒருவருக்கு இருக்குமானால் ஏற்கணவே தங்களுக்கென்று சொந்த வீட்டை வைத்திருக்கும் பலரைப் பார்த்தால் ஏற்பட்ட பிரதிபலிப்பு அவரது மனதிலே சொந்த வீடு கட்டவேண்டும் அந்த எண்ணக் கருவை உருவாக்குகிறது.
உண்மையிலேயே அவர் அந்தக் கருத்துக்கு செயல் வடிவம் கொடுத்து ஓரு வீட்டுக்குச் சொந்தக்காரனாகின்ற போதுதான் அது முழுமையடைகிறது.இங்கே ஏற்கனவே உள்ள சொந்த வீடு என்ற எண்ணக் கரு சொந்த வீடு தனக்கு வேண்டும் என்ற ஒரு மனிதனால் செயல்வடிவப் படுத்தப்படுகின்ற போது அந்தக் கருத்து இன்னும் வலுப் பெறுகிறது.
ஆனால் அதேவேளை எதிர்பாராத விதமாக நடக்கும் சில சம்பவங்களும் புதிய கருத்தை தோற்றுவிப்பதுண்டு;.
உதாரணமாக கடலில் அலையடிக்கும் என்பதும் சதாரணமாக எல்லாருக்கும் தெரிந்த ஒரு விடயம்;. அதே கடல் அலை ஊரையே அழிக்கும் என்பதும், ஆயிரக்கணக்கான உயிர்களைக் காவு கொள்ளும் என்பதும் சுனாமி வந்து பேராழிவை உண்டாக்கிய பின்பு தான் பலருக்குத் தெரியவந்தது.இங்கே எதிர் பாராமல் நடந்த ஒரு செயலில் இருந்து ஒரு புதிய கருத்துப் பிறக்கிறது.இதிலே ஊடகவியலுக்கு என்ன பணி என்ற கேள்வி எழலாம்?
கருத்தை கட்டமைப்பதும், கட்டமைக்கப்பட்ட கருத்தை பதிவுசெய்வதும் கடத்துவதும் காவிச் செல்வதும் பரப்புவதும் ஊடகவியல் முக்கியமான பணி என்று சொல்லலாம்.
கருத்து என்கிற போது அது ஏற்கனவே உள்ள ஒரு பொருளின் பிரதிபலிப்பால் ஒரு மனிதனுடைய சிந்தனையில் உருவெடுத்து ஒருசெயற்பாட்டின் மூலம் இறுதி செய்யப்பட்டு நடைமுறைப் படுத்தப்படுகின்ற போது முழுமையடைகிறது.
(‘கருத்து என்பது முதல் வந்தது. கடவுளால் படைக்கப்பட்டது. கருத்திலிருந்தே பொருள் வந்தது’ என்ற கருத்து முதல் வாதச் சிந்தனைக்குள் சிக்கிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன்.)
உதாரணமாக சொந்த வீடு என்ற ஒரு கருத்து ஒருவருக்கு இருக்குமானால் ஏற்கணவே தங்களுக்கென்று சொந்த வீட்டை வைத்திருக்கும் பலரைப் பார்த்தால் ஏற்பட்ட பிரதிபலிப்பு அவரது மனதிலே சொந்த வீடு கட்டவேண்டும் அந்த எண்ணக் கருவை உருவாக்குகிறது.
உண்மையிலேயே அவர் அந்தக் கருத்துக்கு செயல் வடிவம் கொடுத்து ஓரு வீட்டுக்குச் சொந்தக்காரனாகின்ற போதுதான் அது முழுமையடைகிறது.இங்கே ஏற்கனவே உள்ள சொந்த வீடு என்ற எண்ணக் கரு சொந்த வீடு தனக்கு வேண்டும் என்ற ஒரு மனிதனால் செயல்வடிவப் படுத்தப்படுகின்ற போது அந்தக் கருத்து இன்னும் வலுப் பெறுகிறது.
ஆனால் அதேவேளை எதிர்பாராத விதமாக நடக்கும் சில சம்பவங்களும் புதிய கருத்தை தோற்றுவிப்பதுண்டு;.
உதாரணமாக கடலில் அலையடிக்கும் என்பதும் சதாரணமாக எல்லாருக்கும் தெரிந்த ஒரு விடயம்;. அதே கடல் அலை ஊரையே அழிக்கும் என்பதும், ஆயிரக்கணக்கான உயிர்களைக் காவு கொள்ளும் என்பதும் சுனாமி வந்து பேராழிவை உண்டாக்கிய பின்பு தான் பலருக்குத் தெரியவந்தது.இங்கே எதிர் பாராமல் நடந்த ஒரு செயலில் இருந்து ஒரு புதிய கருத்துப் பிறக்கிறது.இதிலே ஊடகவியலுக்கு என்ன பணி என்ற கேள்வி எழலாம்?
மீழ்நிகழ்த்தல்
ஒரு சம்பவம் அல்லது செயல் ஒரு குறிப்பிட்ட இடத்திலோ அல்லது ஒரு வட்டாரத்திலோ புதிதாக நிகழ்கின்ற போது அதை ஊடகங்கள் தான் ஒரு செய்தியாகவோ, ஒரு புதினமாகவோ, அல்லது ஒரு கலைத்துவம் மிக்க படைப்பாக அதற்கு ஒரு வடிவம் கொடுத்து அதை தேசிய மட்டத்தில் அல்லது உலகளவில் மறு நிகழ்தலுக்கு உள்ளாக்குகின்றன. ஒரு குறிப்பிட்ட இடத்திலோ அல்லது ஒரு வட்டாரத்திலோ ஏற்கணவே நிகழ்ந்த அல்லது நிகழ்ந்துகொண்டிருக்கிற ஒரு செயலை அல்லது சம்பவத்தை ஊடகங்கள் பதிவு செய்து மறு நிகழ்த்தலுக்கு உள்ளாக்காது விட்டால் அந்தச் செயலும் அந்தச் சம்பவமும் நிகழ்ந்ததற்கான சான்றுகளும் தடயங்களும் அவை நடந்த அந்தக் களத்தோடு நின்று அழிந்து போய்விடும்.
குறிப்பாகச் சொன்னால் ஒரு சம்பவம் அல்லது ஒரு செயல் இயற்கையாக நிகழ்ந்தாலும் அல்லது செயற்கையாக நிகழ்த்தப்பட்டாலும், அது நிகழ்ந்ததாக அல்லது நிகழ்த்தப்பட்டதாக அதற்கு அடையாளமும் வடிவமும் கொடுப்பது ஊடகங்கள் தான்.
2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 ம் திகதி எமது தாயகத்தை சுனாமி தாக்கிய போது பிரான்சில் நான் செய்தி ஆசிரியராக பணிபுரிந்த தொலைக்காட்சி பணிமனையிலிருந்து அதிகாலை நான்கு மணிக்கு ‘கடல்கொந்தழித்து ஊருக்குள் புகுந்துவிட்டது விசேட செய்தி ஒளிபரப்ப வேண்டும் உடனே வாருங்கள்’ என்று தெலைபேசி மூலம் தகவல் தெரிவித்தார்கள்.
‘மார்கழி மாதம் வடபகுதி கடலிலே பாரிய அலை அடிப்பதும் கொந்தளிப்பதும் வழக்கம் தானே’ என்ற சொல்லிவிட்டு நான் இருந்துவிட்டேன்.
சுனாமி அலைகளைப்பற்றி ஏற்கணவே ஓரளவு அறிந்திருந்தாலும் எமது அறிவுக்கெட்டிய காலகட்டத்தில் எமது பிரதேசத்தில் அது நிகழாததால் அதனுடய கோரம் அதனால் ஏற்படும் பாதிப்பு என்பவற்றை அப்போது என்னால் உணர முடியவில்லை.
மீண்டும் ஒரு 15 நிமிடத்தின் பின்னர் மீண்டும் தொலைக்காட்சி நிலையத்திலிருந்து ‘கடலலை ஊருக்குள் புகுந்து ஆட்களை கொண்டு போய்விட்டது. நிறையப் பேர் உயிரிழந்துவிட்டார்கள்.’ என்று கூறிய போது எழுந்து சென்று பிரெஞ்சு தொலைக்காட்சிகளையும் இணையத் தளங்களையும் பார்த்த போது தான் அந்த நிகழ்வின் கொடூரம் அதன் செய்திப் பெறுமதி எனக்குத் தெரிய வந்தது.
அதாவது சுனாமி; தாக்கியது என்ற நிகழ்வு தகவலாக வந்து செவிப்புலனூடாக ஏற்படுத்திய தாக்கத்தை விட ஊடகங்கள் அந்த அவலத்தை பதிவு செய்து மறுநிகழ்த்தலுக்கு உள்ளாக்கியதால் ஏற்பட்ட தாக்கம் அதிகமாக இருந்தது. குறிப்பாகச் சொல்வதானால் சுனாமி தாக்குதல் என்ற இயற்கையின் கொடூரத்தை, ஊடகங்கள் பதிவு செய்து மக்களுக்கு மீளநிகழ்த்திக் காண்பித்ததன் மூலம் தான் அது ஒரு பேரழிவு என்பது உலகத்திற்கு தெரியவந்தது.
குறிப்பாகச் சொன்னால் ஒரு சம்பவம் அல்லது ஒரு செயல் இயற்கையாக நிகழ்ந்தாலும் அல்லது செயற்கையாக நிகழ்த்தப்பட்டாலும், அது நிகழ்ந்ததாக அல்லது நிகழ்த்தப்பட்டதாக அதற்கு அடையாளமும் வடிவமும் கொடுப்பது ஊடகங்கள் தான்.
2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 ம் திகதி எமது தாயகத்தை சுனாமி தாக்கிய போது பிரான்சில் நான் செய்தி ஆசிரியராக பணிபுரிந்த தொலைக்காட்சி பணிமனையிலிருந்து அதிகாலை நான்கு மணிக்கு ‘கடல்கொந்தழித்து ஊருக்குள் புகுந்துவிட்டது விசேட செய்தி ஒளிபரப்ப வேண்டும் உடனே வாருங்கள்’ என்று தெலைபேசி மூலம் தகவல் தெரிவித்தார்கள்.
‘மார்கழி மாதம் வடபகுதி கடலிலே பாரிய அலை அடிப்பதும் கொந்தளிப்பதும் வழக்கம் தானே’ என்ற சொல்லிவிட்டு நான் இருந்துவிட்டேன்.
சுனாமி அலைகளைப்பற்றி ஏற்கணவே ஓரளவு அறிந்திருந்தாலும் எமது அறிவுக்கெட்டிய காலகட்டத்தில் எமது பிரதேசத்தில் அது நிகழாததால் அதனுடய கோரம் அதனால் ஏற்படும் பாதிப்பு என்பவற்றை அப்போது என்னால் உணர முடியவில்லை.
மீண்டும் ஒரு 15 நிமிடத்தின் பின்னர் மீண்டும் தொலைக்காட்சி நிலையத்திலிருந்து ‘கடலலை ஊருக்குள் புகுந்து ஆட்களை கொண்டு போய்விட்டது. நிறையப் பேர் உயிரிழந்துவிட்டார்கள்.’ என்று கூறிய போது எழுந்து சென்று பிரெஞ்சு தொலைக்காட்சிகளையும் இணையத் தளங்களையும் பார்த்த போது தான் அந்த நிகழ்வின் கொடூரம் அதன் செய்திப் பெறுமதி எனக்குத் தெரிய வந்தது.
அதாவது சுனாமி; தாக்கியது என்ற நிகழ்வு தகவலாக வந்து செவிப்புலனூடாக ஏற்படுத்திய தாக்கத்தை விட ஊடகங்கள் அந்த அவலத்தை பதிவு செய்து மறுநிகழ்த்தலுக்கு உள்ளாக்கியதால் ஏற்பட்ட தாக்கம் அதிகமாக இருந்தது. குறிப்பாகச் சொல்வதானால் சுனாமி தாக்குதல் என்ற இயற்கையின் கொடூரத்தை, ஊடகங்கள் பதிவு செய்து மக்களுக்கு மீளநிகழ்த்திக் காண்பித்ததன் மூலம் தான் அது ஒரு பேரழிவு என்பது உலகத்திற்கு தெரியவந்தது.
சொந்தவீடும் சுனாமி அனர்த்தமும்
மேலே குறிப்பிட்ட ‘சொந்தவீடு’, ‘சுனாமி அனர்த்தம்’ ஆகிய இரண்டு விடயங்களிலும் கருத்தியலை தீர்மானிப்பதில் ஊடகங்கள் எப்படி தீர்மானகரமான சக்கதியாக விளங்குகின்றன என்பதைப் பார்ப்போம்.
‘வீடு’ என்பது உலகம் முழுவதிலுமுள்ள மக்களுக்கான அடிப்படைத் தேவைகளில் ஒன்று. உலக மக்கள் தொகையில் சுமார் மூன்றில் ஒரு பகுதியினர் வீடற்றவர்களாக இருக்கிறார்கள்.யுத்தம் மற்றும் இயற்கை பேரனர்த்தங்கள் போன்றவற்றால்; வீடற்றவர்கள் ஆக்கப்பட்டவர்களையும் இதில் அடக்கலாம்.
இலங்கை இந்தியா ஆபிரிக்கா போன்ற வெப்ப வலயப் பிரதேச நாடுகளில் வீடில்லாமல் தெருவேரங்களிலும் மரநிழல்களிலும் பொது மண்டபங்களிலும் அதிக மக்கள் வாழ்கின்றார்கள். ஆனால். ஐரோப்பா கனடா போன்ற குளிர் வலைய நாடுகளில் அவ்வாறு மக்கள் வாழமுடியாது.அங்கே உறைபனிக் குளிரை தாக்குப்பிடித்து உயிர் வாழ்வதற்கு வீடு என்பது அத்தியாவசியமானது.அந்த நாடுகளில் நூற்றக்கு 98 வீதமான மக்களுக்கு வீடிருக்கிறது. வீடற்ற ஒரு சிறு பகுதியினர் கூட குளிர்காலத்தில் அரசாங்க காப்பகங்களில் தங்க வைக்கப்படுகிறார்கள்.
குறிப்பாகச் சொல்வதானால் ஐரோப்பா மற்றும் கனடாவில் வீடில்லாமல் ஒரு மனிதன் தெருவோரத்திலோ மரநிழலின் கீழேயோ தொடர்ந்து இருக்க முடியாது. எனவே அங்குள்ள மக்களுக்கு வீடென்பது முதன்மைத் தேவைகளில் ஒன்றாகும். ஆனால் அங்கே வசிக்கும் அநேகமான மக்களுக்கு சொந்த வீடு கிடையாது. அவர்கள் வாடகை வீடுகளிலேதான் வசிக்கிறார்கள்.அந்த மக்களுக்கு சொந்த வீடு வாங்குவதென்பது ஒரு கனவு போன்றதாகும்.அந்தக் கனவை ஊடகங்கள் நனவாக்குகின்றன.
றியல் எஸ்டேட் எனப்படும் வீட்டுமனை விற்பனை என்பது மேற்குலகில் வளர்ச்சிபெற்ற ஒரு தொழில்துறையாகும். இதற்கென்ற பல நிறுவனங்கள் இருக்கின்றன. இந்த நிறுவனங்கள் பற்றிய கவர்ச்சிகரமான விளம்பரங்கள் ஊடகங்களால் மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லப்படுகின்றன.’மலிவான விலையில் தரமான வீடு, நீங்கள் அதிக வாடகைப்பணம் செலுத்துகின்றீர்களா? கவலையை விடுங்கள் அதைவிட குறைந்த பணத்தை மாதாந்தம் செலுத்தி ஒரு வீட்டை உங்களுக்கு சொந்தமாக்கிக் கொள்ளுங்கள், இரண்டு அல்லது மூன்ற படுக்கை அறைகள்,தளபாட மயப்படுத்தப்பட்ட வரவேற்பறை, நவின சாதனங்களுடன் கூடிய குளியலறை, கழிப்பறைகள், முற்றிலும் நவீன சாதனங்கள் பொருத்தப்பட்ட சமையலறை, தளபாடங்களுடன் கூடிய விசாலமான சாப்பட்டுக் கூடம், விசாலமான கார் தரிப்பிடம், விசாலமான தோட்டம்’ என்றெல்லாம் அறிக்கையிடப்படும் போது சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற கனவையுடைய ஒரு மனிதன் அதை நோக்கி இழுக்கப்படுகின்றான்.
வீடென்றால் ஆடம்பர வசதிகளுடன் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை அந்த மனிதனுடைய சிந்தனைத் தளத்திலே ஊடகங்கள் திட்டமிட்டு புகுத்தி விடுகின்றன. சொந்த வீடு வாங்குவதற்காக அவன் வங்கியில் வட்டிக்கு கடன் எடுக்கும் போது இத்தகைய உபரி ஆடம்பொருட்களுக்கும் சேர்த்தே கடன் வாங்கும் நிலைக்கு அவனையறியாமலே அவன் தள்ளப்படுகிறான். சொந்த வீடு என்ற அடிப்படை தேவைக் கூடாக அவன் ஆடம்பரப்பொருட்களுக்கான நுகர்வோனாக மாற்றப்படுகின்றான்.
இங்கே வீட்டுமனை விற்பனைத் தொழிலில் ஈடுபடும் நிறுவனங்கள் ஒரு தரப்பாகவும் நுகர்வோர் மறுதரப்பாகவும் இருந்தாலும் இந்த இரண்டு தரப்பையும் சந்திக்க வைக்கின்ற முதன்மைச் சக்தியாக ஊடகங்கள் தான் இருந்திருக்கின்றன்.
குறிப்பாகச் சொல்வதானால் சொந்த வீடு என்பது என்ற ஒரு அடிப்படைக் கருத்துக்கு அது இப்படித்தான் இருக்கவேண்டும் அடையாளத்தை கொடுக்கின்ற வேலையை ஊடகங்கள் செய்கின்றன.
‘வீடு’ என்பது உலகம் முழுவதிலுமுள்ள மக்களுக்கான அடிப்படைத் தேவைகளில் ஒன்று. உலக மக்கள் தொகையில் சுமார் மூன்றில் ஒரு பகுதியினர் வீடற்றவர்களாக இருக்கிறார்கள்.யுத்தம் மற்றும் இயற்கை பேரனர்த்தங்கள் போன்றவற்றால்; வீடற்றவர்கள் ஆக்கப்பட்டவர்களையும் இதில் அடக்கலாம்.
இலங்கை இந்தியா ஆபிரிக்கா போன்ற வெப்ப வலயப் பிரதேச நாடுகளில் வீடில்லாமல் தெருவேரங்களிலும் மரநிழல்களிலும் பொது மண்டபங்களிலும் அதிக மக்கள் வாழ்கின்றார்கள். ஆனால். ஐரோப்பா கனடா போன்ற குளிர் வலைய நாடுகளில் அவ்வாறு மக்கள் வாழமுடியாது.அங்கே உறைபனிக் குளிரை தாக்குப்பிடித்து உயிர் வாழ்வதற்கு வீடு என்பது அத்தியாவசியமானது.அந்த நாடுகளில் நூற்றக்கு 98 வீதமான மக்களுக்கு வீடிருக்கிறது. வீடற்ற ஒரு சிறு பகுதியினர் கூட குளிர்காலத்தில் அரசாங்க காப்பகங்களில் தங்க வைக்கப்படுகிறார்கள்.
குறிப்பாகச் சொல்வதானால் ஐரோப்பா மற்றும் கனடாவில் வீடில்லாமல் ஒரு மனிதன் தெருவோரத்திலோ மரநிழலின் கீழேயோ தொடர்ந்து இருக்க முடியாது. எனவே அங்குள்ள மக்களுக்கு வீடென்பது முதன்மைத் தேவைகளில் ஒன்றாகும். ஆனால் அங்கே வசிக்கும் அநேகமான மக்களுக்கு சொந்த வீடு கிடையாது. அவர்கள் வாடகை வீடுகளிலேதான் வசிக்கிறார்கள்.அந்த மக்களுக்கு சொந்த வீடு வாங்குவதென்பது ஒரு கனவு போன்றதாகும்.அந்தக் கனவை ஊடகங்கள் நனவாக்குகின்றன.
றியல் எஸ்டேட் எனப்படும் வீட்டுமனை விற்பனை என்பது மேற்குலகில் வளர்ச்சிபெற்ற ஒரு தொழில்துறையாகும். இதற்கென்ற பல நிறுவனங்கள் இருக்கின்றன. இந்த நிறுவனங்கள் பற்றிய கவர்ச்சிகரமான விளம்பரங்கள் ஊடகங்களால் மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லப்படுகின்றன.’மலிவான விலையில் தரமான வீடு, நீங்கள் அதிக வாடகைப்பணம் செலுத்துகின்றீர்களா? கவலையை விடுங்கள் அதைவிட குறைந்த பணத்தை மாதாந்தம் செலுத்தி ஒரு வீட்டை உங்களுக்கு சொந்தமாக்கிக் கொள்ளுங்கள், இரண்டு அல்லது மூன்ற படுக்கை அறைகள்,தளபாட மயப்படுத்தப்பட்ட வரவேற்பறை, நவின சாதனங்களுடன் கூடிய குளியலறை, கழிப்பறைகள், முற்றிலும் நவீன சாதனங்கள் பொருத்தப்பட்ட சமையலறை, தளபாடங்களுடன் கூடிய விசாலமான சாப்பட்டுக் கூடம், விசாலமான கார் தரிப்பிடம், விசாலமான தோட்டம்’ என்றெல்லாம் அறிக்கையிடப்படும் போது சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற கனவையுடைய ஒரு மனிதன் அதை நோக்கி இழுக்கப்படுகின்றான்.
வீடென்றால் ஆடம்பர வசதிகளுடன் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை அந்த மனிதனுடைய சிந்தனைத் தளத்திலே ஊடகங்கள் திட்டமிட்டு புகுத்தி விடுகின்றன. சொந்த வீடு வாங்குவதற்காக அவன் வங்கியில் வட்டிக்கு கடன் எடுக்கும் போது இத்தகைய உபரி ஆடம்பொருட்களுக்கும் சேர்த்தே கடன் வாங்கும் நிலைக்கு அவனையறியாமலே அவன் தள்ளப்படுகிறான். சொந்த வீடு என்ற அடிப்படை தேவைக் கூடாக அவன் ஆடம்பரப்பொருட்களுக்கான நுகர்வோனாக மாற்றப்படுகின்றான்.
இங்கே வீட்டுமனை விற்பனைத் தொழிலில் ஈடுபடும் நிறுவனங்கள் ஒரு தரப்பாகவும் நுகர்வோர் மறுதரப்பாகவும் இருந்தாலும் இந்த இரண்டு தரப்பையும் சந்திக்க வைக்கின்ற முதன்மைச் சக்தியாக ஊடகங்கள் தான் இருந்திருக்கின்றன்.
குறிப்பாகச் சொல்வதானால் சொந்த வீடு என்பது என்ற ஒரு அடிப்படைக் கருத்துக்கு அது இப்படித்தான் இருக்கவேண்டும் அடையாளத்தை கொடுக்கின்ற வேலையை ஊடகங்கள் செய்கின்றன.
சுனாமியும் கடல்கோளும் ஆழிப்பேரலையும்
அடுத்து சுனாமி பேரழிவு நிகழ்ந்த போது இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய இயற்கை அனர்த்தம் என்ற வகையில் அனைத்து ஊடகங்களுமே அதை பதிவு செய்து உலகமயப்படுத்தியிருந்தன.
இவ்வாறு இந்த விடயம் உலக மயப்படுத்தப்பட்ட போது சுனாமி என்ற அந்த ஜப்பானியச் சொல் ஊடாக ஜப்பானிய மொழியும் ஜப்பானிய வரலாறும் கூட உலகமயப் படுத்தப்பட்டது.
எதோ இந்தப் பேரழிவு என்பது ஜப்பானில் தான் முதல் முதலாக நிகழ்ந்தது போலவும் ஜப்பானியர்கள் தான் அதைக் கண்டுபிடித்து அதற்கு பெயர் வைத்தது போலவும் அனைத்து ஊடகங்களும் ஒரு வரலாற்றப் புனைவைச் செய்து கொண்டிருந்தன.
வரலாற்றில் உலகின் பல இடங்களில் இந்த அனர்த்தம் நிகழ்ந்ததாகப் பதிவுகள் இருந்தாலும்,சுனாமி என்ற ஐப்பானிய சொல் இந்தப் பேரனர்த்தத்துக்கான துறைசார் குறியீட்டுச் சொல்லாக அங்கீகரிக்கப்பட்டதன் மூலம் ஜப்பானிய மக்கள் தங்களுடைய வரலாற்றையும், தங்களுடைய கருத்தியலையும், மொழியின் ஆளுமையையும் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். அதாவது ‘சுனாமி’ என்ற ஒரு சிறிய சொல்லுக் கூடாக ஜப்பானின் வரலாறு மீட்கப்பட்டது. அந்தச் சொல்லுக்கான அர்த்தம் என்று என்ன என்று கண்டுபிடிப்பதற்காக ஜப்பானியர்களுடைய கருத்தியலும் ஜப்பானிய மொழியினுடைய ஆளுமையும் மறு வாசிப்புக்கு உட்படுத்தப்பட்டன.
தமிழர்களுடைய மிக நீண்ட நெடிய வரலாற்றிலே, இவ்வாறான பேரனர்த்தம் பல தடவைகள் நிகழ்ந்ததற்கான பல தடயங்கள் இருக்கிருக்கின்றன. ‘பஃறுளி ஆற்றுடன் பன்மலையடுக்கத்து குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள’ என்ற சிலப்பதிகார குறிப்பும், காவிரிப்பூம் பட்டணம், ஏழ் பனை நாடு ஏழ்தொங்கநாடு முதலான பல நாடுகள் கடலால் கொள்ளப்பட்டதற்கான சங்க இலக்கியக் குறிப்புகளும் இந்தப் பேரனர்த்தத்தை உணர்த்தும் சான்றுகளாக இருக்கின்றன. ‘கடல்கோள்’ என்ற பதம் இந்தப் பேரழிவைக் குறிக்கும் குறியீட்டுப் பெயராக சங்க இலக்கியங்களிலே பயன் படுத்தப் பட்டதற்கான சான்றுகள் நிறைய இருக்கின்றன.
2004 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 திகதி இந்தப் பேரழிவு நிகழ்ந்ததும் தமிழ் வரலாற்று ஆர்வலர்களும், வரலாற்றுத் தளத்தில் நின்று சிந்தித்த சில தமிழ் ஊடகங்களும், சுனாமி என்ற ஜப்பானிய சொல்லுக்குப் பதிலீடாக ‘கடல்கோள்’ என்ற இந்த சொல்லை பயன்படுத்த முற்பட்டபோது, இன்னொரு பகுதியினர் அந்தச் சொல் தவறு என்று எதிர்ப்புத் தெரிவித்தனர்.
‘கடல்கோள் என்பது கடல் வந்து முழுமையாக ஒரு நாட்டை ஒரு பிரதேசத்தை முற்காக அழித்ததைத் தான் குறிப்பது’ என்றும் ‘தற்போது ஏற்பட்ட பேரழிவு ஒரு நாட்டையோ ஒரு பிரதேசத்தையோ முற்றாக அழிக்கவில்லை. அதனால் இதற்கு ஆழிப்பேரலை என்ற புதிய பெயரை வைக்கலாம்’ என்றும் அவர்கள் அதற்கு ஒரு புதிய கருத்தில் வடிவத்தைக் கொடுத்து அதற்கான குறியீட்டுப் பெயரையும் உருவாக்கினார்கள். இன்று பல தமிழ் ஊடகங்கள் ‘ஆழிப் பேரலை’ என்ற இந்தப் பதத்தைத் தான் பயன் படுத்துகின்றன.
உண்மையில் ஒரு சொல் ஒரு இனத்தின் வரலாற்றை எப்படிப் புரட்டிப் போடுகிறது அல்லது சிதைக்கிறது அல்லது மறுதலிக்கிறது என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணமாகும்;.
ஏனென்றால் ஒரு சொல்லுக்குரிய அர்த்தம் என்பது அந்தச் சொல்லைக் கட்டமைக்கின்ற மொழிக்கூடாகவும் அதனுடைய வரலாற்றக்கூடாகவும் தான் கொள்ளப்படுகிறது. அதாவது மொழியும் மொழியினுடைய வரலாறும் தான் ஒரு சொல்லுக்கு அர்த்தம் கொடுக்கின்றன. மொழிக்கு அப்பால் அர்த்தம் என்பது தனியாகக் கிடையாது.
உதாரணமாக தடம், வடம், குடம், படம், மடம் என்ற தமிழ் சொற்களை எடுத்துக் கொண்டால் இவை அனைத்தும் ‘டம்’ என்ற விகுதியைக் கொண்டு முடிகின்றன. த,வ,கு,ப,ம என்று தொடங்கும் உயிர்மெய் எழுத்துக்கள் தான் ஒன்றிலிருந்து மற்றதை வேறுபடுத்துகின்றன.ஆனால் இந்த எழுத்துக்களுக்கு தனியான அர்த்தம் கிடையாது.
தடம், வடம், குடம், படம், மடம் என்றால் என்ன என்பதை தமிழ் மொழியிலுள்ள பல சொற்கூட்டங்களை வைத்துக் கொண்டும் அந்தச் சொற் கூட்டங்களை கட்டமைத்து ஒழுங்குபடுத்திய மொழியினுடைய வரலாற்றை வைத்துக் கொண்டும் தான் இவற்றுக்கான அர்த்தம் கொள்ளப்படுகிறது.
கடல்கோள் என்றால் கடல் பொங்கி வந்து ஒரு நாட்டை முழுமையாக அழிக்கின்ற செயல் என்றும் சுனாமிக்கு அது பொருந்தாது என்றும் சொல்வதானது வரலாற்றுப் பார்வையற்ற அல்லது தமிழ் மொழியின் வரலாற்றை மூடிமறைக்கின்ற ஒரு செலாகத் தான் பார்க்க வேண்டும்.
இவ்வாறு இந்த விடயம் உலக மயப்படுத்தப்பட்ட போது சுனாமி என்ற அந்த ஜப்பானியச் சொல் ஊடாக ஜப்பானிய மொழியும் ஜப்பானிய வரலாறும் கூட உலகமயப் படுத்தப்பட்டது.
எதோ இந்தப் பேரழிவு என்பது ஜப்பானில் தான் முதல் முதலாக நிகழ்ந்தது போலவும் ஜப்பானியர்கள் தான் அதைக் கண்டுபிடித்து அதற்கு பெயர் வைத்தது போலவும் அனைத்து ஊடகங்களும் ஒரு வரலாற்றப் புனைவைச் செய்து கொண்டிருந்தன.
வரலாற்றில் உலகின் பல இடங்களில் இந்த அனர்த்தம் நிகழ்ந்ததாகப் பதிவுகள் இருந்தாலும்,சுனாமி என்ற ஐப்பானிய சொல் இந்தப் பேரனர்த்தத்துக்கான துறைசார் குறியீட்டுச் சொல்லாக அங்கீகரிக்கப்பட்டதன் மூலம் ஜப்பானிய மக்கள் தங்களுடைய வரலாற்றையும், தங்களுடைய கருத்தியலையும், மொழியின் ஆளுமையையும் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். அதாவது ‘சுனாமி’ என்ற ஒரு சிறிய சொல்லுக் கூடாக ஜப்பானின் வரலாறு மீட்கப்பட்டது. அந்தச் சொல்லுக்கான அர்த்தம் என்று என்ன என்று கண்டுபிடிப்பதற்காக ஜப்பானியர்களுடைய கருத்தியலும் ஜப்பானிய மொழியினுடைய ஆளுமையும் மறு வாசிப்புக்கு உட்படுத்தப்பட்டன.
தமிழர்களுடைய மிக நீண்ட நெடிய வரலாற்றிலே, இவ்வாறான பேரனர்த்தம் பல தடவைகள் நிகழ்ந்ததற்கான பல தடயங்கள் இருக்கிருக்கின்றன. ‘பஃறுளி ஆற்றுடன் பன்மலையடுக்கத்து குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள’ என்ற சிலப்பதிகார குறிப்பும், காவிரிப்பூம் பட்டணம், ஏழ் பனை நாடு ஏழ்தொங்கநாடு முதலான பல நாடுகள் கடலால் கொள்ளப்பட்டதற்கான சங்க இலக்கியக் குறிப்புகளும் இந்தப் பேரனர்த்தத்தை உணர்த்தும் சான்றுகளாக இருக்கின்றன. ‘கடல்கோள்’ என்ற பதம் இந்தப் பேரழிவைக் குறிக்கும் குறியீட்டுப் பெயராக சங்க இலக்கியங்களிலே பயன் படுத்தப் பட்டதற்கான சான்றுகள் நிறைய இருக்கின்றன.
2004 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 திகதி இந்தப் பேரழிவு நிகழ்ந்ததும் தமிழ் வரலாற்று ஆர்வலர்களும், வரலாற்றுத் தளத்தில் நின்று சிந்தித்த சில தமிழ் ஊடகங்களும், சுனாமி என்ற ஜப்பானிய சொல்லுக்குப் பதிலீடாக ‘கடல்கோள்’ என்ற இந்த சொல்லை பயன்படுத்த முற்பட்டபோது, இன்னொரு பகுதியினர் அந்தச் சொல் தவறு என்று எதிர்ப்புத் தெரிவித்தனர்.
‘கடல்கோள் என்பது கடல் வந்து முழுமையாக ஒரு நாட்டை ஒரு பிரதேசத்தை முற்காக அழித்ததைத் தான் குறிப்பது’ என்றும் ‘தற்போது ஏற்பட்ட பேரழிவு ஒரு நாட்டையோ ஒரு பிரதேசத்தையோ முற்றாக அழிக்கவில்லை. அதனால் இதற்கு ஆழிப்பேரலை என்ற புதிய பெயரை வைக்கலாம்’ என்றும் அவர்கள் அதற்கு ஒரு புதிய கருத்தில் வடிவத்தைக் கொடுத்து அதற்கான குறியீட்டுப் பெயரையும் உருவாக்கினார்கள். இன்று பல தமிழ் ஊடகங்கள் ‘ஆழிப் பேரலை’ என்ற இந்தப் பதத்தைத் தான் பயன் படுத்துகின்றன.
உண்மையில் ஒரு சொல் ஒரு இனத்தின் வரலாற்றை எப்படிப் புரட்டிப் போடுகிறது அல்லது சிதைக்கிறது அல்லது மறுதலிக்கிறது என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணமாகும்;.
ஏனென்றால் ஒரு சொல்லுக்குரிய அர்த்தம் என்பது அந்தச் சொல்லைக் கட்டமைக்கின்ற மொழிக்கூடாகவும் அதனுடைய வரலாற்றக்கூடாகவும் தான் கொள்ளப்படுகிறது. அதாவது மொழியும் மொழியினுடைய வரலாறும் தான் ஒரு சொல்லுக்கு அர்த்தம் கொடுக்கின்றன. மொழிக்கு அப்பால் அர்த்தம் என்பது தனியாகக் கிடையாது.
உதாரணமாக தடம், வடம், குடம், படம், மடம் என்ற தமிழ் சொற்களை எடுத்துக் கொண்டால் இவை அனைத்தும் ‘டம்’ என்ற விகுதியைக் கொண்டு முடிகின்றன. த,வ,கு,ப,ம என்று தொடங்கும் உயிர்மெய் எழுத்துக்கள் தான் ஒன்றிலிருந்து மற்றதை வேறுபடுத்துகின்றன.ஆனால் இந்த எழுத்துக்களுக்கு தனியான அர்த்தம் கிடையாது.
தடம், வடம், குடம், படம், மடம் என்றால் என்ன என்பதை தமிழ் மொழியிலுள்ள பல சொற்கூட்டங்களை வைத்துக் கொண்டும் அந்தச் சொற் கூட்டங்களை கட்டமைத்து ஒழுங்குபடுத்திய மொழியினுடைய வரலாற்றை வைத்துக் கொண்டும் தான் இவற்றுக்கான அர்த்தம் கொள்ளப்படுகிறது.
கடல்கோள் என்றால் கடல் பொங்கி வந்து ஒரு நாட்டை முழுமையாக அழிக்கின்ற செயல் என்றும் சுனாமிக்கு அது பொருந்தாது என்றும் சொல்வதானது வரலாற்றுப் பார்வையற்ற அல்லது தமிழ் மொழியின் வரலாற்றை மூடிமறைக்கின்ற ஒரு செலாகத் தான் பார்க்க வேண்டும்.
புவிஅதிர்வும் சுனாமியும்
பூகம்பம்,பூவியதிர்வு,நிலநடுக்கம் என்ற இந்த மூன்று சொற்களும் உலகில் அடிக்கடி நடக்கும் ஒரு இயற்கை பேரனர்த்தை குறிப்பவையாகும். வெள்வேறு தளங்களில் இந்தச் சொற்கள் பாவிக்கப்பட்டாலும் இவற்றுக்குரிய அர்த்தம் என்பது ஒன்று தான் என்பது தமிழ் மக்களுக்குத் தெரியும். இந்தப் பூகம்பம் அல்லது நில நடுக்கம் என்பது றிக்டர் மானி என்ற அளவுகோலால் அளவிடப்படுகிறது. இது 5.8 அல்லது 5.9 மேல் செல்லும் போது கட்டிங்களை தகர்த்தும் பூமி பிளந்து உள்வாங்கியும் மிகப் பெரிய பேரனர்த்தம் நிகழ்கிறது.
ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளில் இவற்றிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கான தடுப்பு முறைகள் கட்டிடங்களை அமைக்கும் போது கடைப்பிடிக்கப்படுவதால் இந்தப் பேரனர்த்தத்தின் போது எற்படுத்தப்படும் உயிரிழப்புகள் குறைக்கப்படுகின்றன. ஆனால் மூன்றாம் உலக நாடுகளில் இந்தப் பேரனர்த்தம் ஏற்படும் போது பாரிய உயிரழிவுகளும் சொத்தழிவுகளும் ஏற்படுகின்றன.
இதற்காக பாரிய உயிரழிவும் சொத்தழிவும் ஏற்பட்டால் தான் பூகம்பம் என்றும் அவ்வாறு ஏற்படாததை பூமி ஆடியது என்றும் சொல்வதில்லை.கட்டிடங்களில் சிறிய வெடிப்புக்களை ஏற்படுத்தும் சிறிய அதிர்வுகள் கூட பூகம்பம் என்றுதான் சொல்லப்படுகின்றன. றிக்டர் அளவில் 9.க்கு மேல் பதிவாகும் மிகப்பெரிய அதிர்வும் 1 ஆகப் பதிவாகும் மிகச் சிறிய அதிர்வும் கூட பூகம்பம் என்று தான் சொல்லப்படுகின்றன.
கடல்கோள் என்பதும் கடலுக்கடியில் ஏற்படும் மிகப் பெரிய நில அதிர்வால் ஏற்படும் சக்தி அலைகள் அல்லது அதிர்வலைகள் கடலை அமுக்கித் தள்ளி தரைப் பகுதியில் மிகப் பெரிய பேரழிவை ஏற்படுத்துவதையே குறிக்கிறது. கடலுக்கடியில் ஏற்படும் நிலஅதிர்வின் வீச்சத்தைப் பொறுத்து ஒரு நிலப்பரப்பே அழிவதும் நிலப்பரப்பிலுள்ள மக்கள் அழிவதும் நிகழ்கிறது.
கடல் வந்து ஒரு நிலப்பரப்பை முற்றாக அழிப்பதற்கு கடலுக்கடியில் நிகழும் நில நடுக்கத்தையும்,தரைப்பகுதியல் ஏற்படும் நில நடுக்கத்தையும் தவிர விஞ்ஞான ரீதியாக வேறெந்தக் காரணமும் இல்லை.
எனவே ஒரு நிலப்பரப்பை முழுமையாக அழித்தால் தான் அது கடல்கோள் என்றும், இல்லையென்றால் அது ஆழிப்பேரலை என்றும் குறிப்பிடுவது தமிழர்களது வரலாற்றை மறைக்க வேண்டும் என்ற உள்நோக்கம் கொண்ட தவறான செயலாகும்.
‘ஆழிப் பேரலை’ என்றால் கடலில் எழுந்த பேரலை என்று பொதுவாக அர்த்தங் கொள்ளப்படுகிறது. இந்தப் பேரலை ஒரு புயற்காற்றால் -கடலில் ஏற்பட்ட ஒரு ஒரு பெரிய தாழ்வமுக்கத்தால் கூட ஏற்பட முடியும். இந்த அலைகளுக்கும் கடலுக்கடியில் எற்படும் நிலநடுக்கம் எற்படுத்தும் பேரலைகளுக்கும் இடையில் மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது.
சுனாமி என்ற ஜப்பானிய மொழியில் அழைக்கப்படுவதை (நேரடியாகவோ அல்லது ஆங்கில மொழி வழியாகவே) ஜப்பானிய மொழியல் மற்றும் கருத்தியல் தளத்தினுடாக பார்த்து ‘ஆழிப்பேரலை’ என்று மாற்றீட வைத்துள்ளதும், ‘கடல்கோள்’ என்று இதனை தமிழ் தளத்திலும் தமிழ்மொழியின் வரலாற்றுக்கூடாகவும் பார்த்தவர்களுடைய கருத்து காலத்துக்க ஒவ்வாததென்று சிறுமைப்பட்டிருப்பதும் கருத்திலை கட்டமைப்பதில் ஊடகத் துறை எவ்வளவு முதன்மை பாத்திரம் வகிக்கிறது என்பதற்கு சிறந்த எடுத்துக் காட்டாகும்.
00000
வானொலி ஊடகங்களின் நீட்சியும் நேயர்களின் வகிபாகமும் -– எஸ்.எழில்வேந்தன்ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளில் இவற்றிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கான தடுப்பு முறைகள் கட்டிடங்களை அமைக்கும் போது கடைப்பிடிக்கப்படுவதால் இந்தப் பேரனர்த்தத்தின் போது எற்படுத்தப்படும் உயிரிழப்புகள் குறைக்கப்படுகின்றன. ஆனால் மூன்றாம் உலக நாடுகளில் இந்தப் பேரனர்த்தம் ஏற்படும் போது பாரிய உயிரழிவுகளும் சொத்தழிவுகளும் ஏற்படுகின்றன.
இதற்காக பாரிய உயிரழிவும் சொத்தழிவும் ஏற்பட்டால் தான் பூகம்பம் என்றும் அவ்வாறு ஏற்படாததை பூமி ஆடியது என்றும் சொல்வதில்லை.கட்டிடங்களில் சிறிய வெடிப்புக்களை ஏற்படுத்தும் சிறிய அதிர்வுகள் கூட பூகம்பம் என்றுதான் சொல்லப்படுகின்றன. றிக்டர் அளவில் 9.க்கு மேல் பதிவாகும் மிகப்பெரிய அதிர்வும் 1 ஆகப் பதிவாகும் மிகச் சிறிய அதிர்வும் கூட பூகம்பம் என்று தான் சொல்லப்படுகின்றன.
கடல்கோள் என்பதும் கடலுக்கடியில் ஏற்படும் மிகப் பெரிய நில அதிர்வால் ஏற்படும் சக்தி அலைகள் அல்லது அதிர்வலைகள் கடலை அமுக்கித் தள்ளி தரைப் பகுதியில் மிகப் பெரிய பேரழிவை ஏற்படுத்துவதையே குறிக்கிறது. கடலுக்கடியில் ஏற்படும் நிலஅதிர்வின் வீச்சத்தைப் பொறுத்து ஒரு நிலப்பரப்பே அழிவதும் நிலப்பரப்பிலுள்ள மக்கள் அழிவதும் நிகழ்கிறது.
கடல் வந்து ஒரு நிலப்பரப்பை முற்றாக அழிப்பதற்கு கடலுக்கடியில் நிகழும் நில நடுக்கத்தையும்,தரைப்பகுதியல் ஏற்படும் நில நடுக்கத்தையும் தவிர விஞ்ஞான ரீதியாக வேறெந்தக் காரணமும் இல்லை.
எனவே ஒரு நிலப்பரப்பை முழுமையாக அழித்தால் தான் அது கடல்கோள் என்றும், இல்லையென்றால் அது ஆழிப்பேரலை என்றும் குறிப்பிடுவது தமிழர்களது வரலாற்றை மறைக்க வேண்டும் என்ற உள்நோக்கம் கொண்ட தவறான செயலாகும்.
‘ஆழிப் பேரலை’ என்றால் கடலில் எழுந்த பேரலை என்று பொதுவாக அர்த்தங் கொள்ளப்படுகிறது. இந்தப் பேரலை ஒரு புயற்காற்றால் -கடலில் ஏற்பட்ட ஒரு ஒரு பெரிய தாழ்வமுக்கத்தால் கூட ஏற்பட முடியும். இந்த அலைகளுக்கும் கடலுக்கடியில் எற்படும் நிலநடுக்கம் எற்படுத்தும் பேரலைகளுக்கும் இடையில் மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது.
சுனாமி என்ற ஜப்பானிய மொழியில் அழைக்கப்படுவதை (நேரடியாகவோ அல்லது ஆங்கில மொழி வழியாகவே) ஜப்பானிய மொழியல் மற்றும் கருத்தியல் தளத்தினுடாக பார்த்து ‘ஆழிப்பேரலை’ என்று மாற்றீட வைத்துள்ளதும், ‘கடல்கோள்’ என்று இதனை தமிழ் தளத்திலும் தமிழ்மொழியின் வரலாற்றுக்கூடாகவும் பார்த்தவர்களுடைய கருத்து காலத்துக்க ஒவ்வாததென்று சிறுமைப்பட்டிருப்பதும் கருத்திலை கட்டமைப்பதில் ஊடகத் துறை எவ்வளவு முதன்மை பாத்திரம் வகிக்கிறது என்பதற்கு சிறந்த எடுத்துக் காட்டாகும்.
00000
அண்மையில் எனது ஊடக நண்பர் ஒருவரின் நூல்வெளியீடொன்று மெல்பேனில் இடம்பெற்றபோது அதில் கலந்துகொண்ட இலக்கிய நண்பர் ஒருவர் “வானொலிகள் நகரவில்லை” என்ற குற்றச்சாட்டை வெளிப்படையாக மேடையில் தெரிவித்ததாக நண்பர்கள் கூறக்கேட்டேன். நகரவில்லையெனில் அது பக்க வாட்டிலா அல்லது மேல்நோக்கியா என அவரேதும் கூறினாரா என அவர்களிடம் நான் பதிலுக்குக் கேட்டேன்.
அண்மைக்காலமாக வானொலி ஊடகத்தைச் சாராத பல அன்பர்கள் பொத்தாம்பொதுவில் இவ்வாறான குற்றச்சாட்டுகளை பொதுவெளியில் முன்வைத்து வருகின்றனர். கடந்த சுமார் 4 தசாப்த காலமாக வானொலி மற்றும் தொலக்காட்சித் துறையில் ஈடுபட்டு வருகின்ற ஒருவன் என்ற ரீதியில் இந்தக் குற்றச்சாட்டுக்கு பதில் கூறவேண்டிய கடப்பாடு எனக்கு இருப்பதாக உணர்கிறேன். இவ்வாறான குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்களின் அளவுகோல் எது என்ற கேள்வி என் முன்னே வந்து நிற்கின்றது. குறிப்பாக புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்தே இத்தகைய குற்றச்சாட்டுகள் எழுகின்றன என்ற ஓர் அடிப்படை உண்மையையும் நாம் இந்தச் சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. வானொலி தொடர்பான இந்தக் குற்றச்சாட்டுகள் எழுவதற்கான பின்னணி என்ன என்பதை நாம் முதலில் பார்க்கவேண்டியுள்ளது.
புலம்பெயர்ந்த நாடுகளில் ஆரம்பிக்கப்பட்ட வானொலிகளின் பின்னணிகள் எவையெனப் பார்க்கும்போது அடிப்படையில் அவற்றை ஆரம்பித்தவர்கள் இவற்றை ஒரு வர்த்தக முயற்சியாகவே ஆரம்பித்தனர் எனத் தெரிகிறது. பணம் பண்ணவேண்டும் அல்லது புகழடையவேண்டுமென்ற ஓர் ஆதார நோக்கையே கொண்டு ஆரம்பிக்கப்பட்டவையாக இந்த வானொலிகளை நான் காண்கிறேன். பலசரக்குகளை விற்கும் பல்பொருள் அங்காடிக்கும் அல்லது ஸ்பைஸ் ஷொப்பிற்கும் வானொலி நிலையத்திற்குமிடையில் இவற்றை ஆரம்பித்தவர்கள் பெரிய வித்தியாசத்தைக்காண்பிப்பதாக எனக்குத் தெரியவில்லை. வானொலி தொடர்பான அரைகுறை அறிவுடையவர்கள் அல்லது பகுதிநேரமாக நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துக்கொண்டவர்கள் அல்லது வேறு இலக்கிய முயற்சிகளில் ஈடுபட்டு அவற்றின்மூலம் புகழடைய முடியாதவர்கள் என பலதரப்பட்டவர்கள் வானொலிகளை ஆரம்பித்து அல்லது அவற்றில் இணைந்து தங்களுடைய சுய விருப்பு வெறுப்புகளை வெளிக்காட்டும் சாதனமாக அவற்றைப் பயன்படுத்தினர், பயன்படுத்திவருகின்றனர்,
ஏன் வானொலியில் பிறந்தநாள் வாழ்த்து மரண அறிவித்தல் கொடுப்பதற்காக இலங்கை வானொலிப் படிகளை மிதித்தவர்கள்கூட பின்னர் இலங்கை வானொலி புகழ்.. இன்னார் எனக் கூச்சமின்றிக் கூறியே ஒலிபரப்பு நிலையங்களை ஆரம்பித்த சோகமான சம்பவங்களும் அரங்கேறியுள்ளன. இன்று பல ஒலிபரப்பு நிலையங்கள் இவ்வாறு ஒலிபரப்புப் பயிற்சியற்றவர்களால் நடத்தப்படுவது கவலைக்குரியதே.
இப்படி சிறுதொழில் முயற்சிகளாக உருவான வானொலிகளை வைத்துக்கொண்டு வானொலி என்றால் இப்படித்தான் இருக்குமென்ற ஒரு கருதுகோளின் அடிப்படையில் வானொலிகள் முன்னோக்கி நகரவில்லையென குற்றஞ்சுமத்துவது ஏற்புடையதா என்ற கேள்வியை நான் முன்வைக்க விரும்புகிறேன்.
வானொலி என்ற ஊடகம் அறிவூட்டல், தகவல் தருதல், களிப்பூட்டல் என்ற மூன்று அடிப்படை நோக்கங்களைக் கொண்டவை என்ற கருதுகோள் ஒரு காலத்தில் சொல்லப்பட்டது. உலகளாவிய சில வானொலிகள் இந்தப் பாரம்பரியக் கருதுகோள்களின் அடிப்படையிலேயே இன்றைக்கும் இயங்குகின்றன. ஆனால், இன்று வானொலி Infotainment என்ற தகவல்சார் களிப்பூட்டல் என்ற புதிய கருதுகோளுடன் இயங்கத்துவங்கியுள்ளது. அதுவே மக்களைப் பெரிதும் கவர்ந்துமுள்ளது. ஒருகாலத்தில் களிப்பூட்டலுக்காக பொது மகன் ஒருவன் வானொலியையே நம்பியிருந்த நிலை மாறி இன்று தொழில்நுட்ப வளர்ச்சிகாரணமாக உள்ளங்கையிலேயே ஓராயிரம் பொழுதுபோக்கு அம்சங்களைக் காவித்திரிகிற நிலையை நாம் எட்டிவிட்டோம். எனவே இன்று வெறுமனே பொழுதுபோக்கிற்காக வானொலியைச் செவிமடுக்கும் நிலையில் மக்கள் இல்லை.
ஆனால், குறிப்பாக தமிழ் வானொலிகள் இன்றைக்கும் பொழுதுபோக்கிற்காகப் பயன்படுத்தப்படுவது கவலைதருகிறது. அதுவும் புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழர்கள் டொலருக்கும் பவுன்சுக்கும் ஆலாய்ப் பறந்துகொண்டிருக்கும் இந்தச்சூழலில் எமது பெரும்பான்மையான வானொலிகளின் நேயர்கள் யார் என்று ஆராய்ந்து பார்த்தால் குறிப்பாக அவர்கள் மூத்த பிரஜைகளாகவே உள்ளனர் என்ற உண்மைவெளிவருகிறது.
புலம்பெயர் தேசங்களில், வளர்ந்தவர்கள் பணந்தேடி ஓடிக்கொண்டே இருக்கவும், இளந்தலை முறையினர் தமிழைப் பேசவே தயங்குகின்ற ஒரு சூழலிலும் எங்களது நேயர்களில் பெரும்பான்மையானோர் மூத்த பிரஜைகளாகவே உள்ளனர் என்ற நிதர்சனத்தை நாங்கள் ஒதுக்கிவிட முடியாது. எனவே இந்த வானொலிகள் பெரும்பாலும் மூத்த பிரஜைகளை இலக்குவைத்து அவர்களை திருப்திப்படுத்தவும் மகிழ்ச்சிப்படுத்தவும் உரையாடவும் தமது நிகழ்ச்சிகளை வடிவமைத்துக்கொள்கின்றன. யுத்த சூழ்நிலையால் புலம்பெயர்ந்து வாழும் மூத்த பிரஜைகள் சமூகத்தினர் தமது வீடு, சமூகம், அரசியல் ரீதியான அழுத்தங்களையும் உளைச்சல்களையும் தீர்க்கும் வடிகால்களாக இந்த வானொலிகளைப் பயன்படுத்துவது வானொலிகளை ஒரு பழங்கால சூழ்நிலைக்கு தள்ளிவிட்டுள்ளது என்ற உண்மையை நாம் ஒத்துக்கொள்ளவே வேண்டியுள்ளது.
இதற்குமப்பால் எமது தமிழர்களுக்கேயுரிய போட்டி பொறாமைத் தன்மை காரணமாக போட்டி வானொலிகள் உருவாவதும் அதன் காரணமாக புகைச்சல்கள் ஏற்படுவதும் இவற்றின் விளைவாக ஒருவரை ஒருவர் எவ்வளவு தரக்குறைவாக வசைபாடமுடியுமோ அவ்வளவுக்கு வசைபாடுவதும் எல்லாநாடுகளிலும் தொடர்கின்றன. குறிப்பிட்டளவு தமிழ் மக்கள் வாழும் புலம்பெயர் தேசங்களில் தம்மைச் சந்தைப்படுத்த இந்த வானொலி நிலையங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள், அவர்களது நிகழ்ச்சியின் தரத்தை உயர்த்துவதில் காட்டப்படுவதில்லை என்ற கவலைக்குரிய செய்தியையும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
இந்தப் பின்னணியில் வைத்து வானொலி ஊடகம் நீட்சிபெற்றுள்ளதா என்ற கேள்வியை நாம் அலசவேண்டிய நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளோம். உலகளாவிய ரீதியில் இலங்கைத் தமிழ் வானொலிகளுக்கும் அவற்றின் ஒலிபரப்பாளர்களுக்குமுள்ள மதிப்பும் மரியாதையும் இன்றும் தொடர்ந்தவண்ணமேயுள்ளன, உலகளாவிய ரீதியில் – பீபீசீ தமிழ் சேவை உட்பட – பல தமிழ் வானொலிகளை ஆரம்பித்தவர்கள் இலங்கை ஒலிபரப்பாளர்களே. எனவே ஒப்பீட்டளவில் இலங்கை வானொலிகளை நாம் ஒரு தர நிர்ணயத்திற்கான சான்று மாதிரிகளாக வைத்துக்கொண்டு பார்த்தால் வானொலிகள் இன்று காலத்தின் போக்குக்கேற்ப மரபையும் அனுசரித்து நகர்ந்துகொண்டுள்ளன என்ற உண்மையை நான் இங்கு சொல்வேன். குறிப்பாக ஓராண்டுக்கு முன்னர்தான் நான் இந்த நாட்டுக்குப் புலம்பெயர்ந்தேன் . அதுவரை நான் வானொலியில் பணியாற்றிக்கொண்டிருந்தேன். எனவே நான் சம்பந்தப்பட்ட சில வானொலி நிகழ்ச்சிகளின் அடிப்படையில் கவனித்த சில விஷயங்களை வைத்து எனது சில அவதானிப்புகளை உங்கள் முன் வைக்க விரும்புகிறேன்.
தினமும் 2 மணிநேரம் பத்திரிகைச் செய்திகளின்மீதான கண்ணோட்ட நிகழ்ச்சி ஒலிபரப்பானபோது மக்கள் ஏனைய வர்த்தக ரீதியிலான, பொழுதுபோக்கான, வானொலி நிகழ்ச்சிகளை ஒதுக்கிவிட்டு பத்திரிகைச் செய்திக் கண்ணோட்ட நிகழ்ச்சியைக் கேட்குமளவுக்கு சூழ்நிலை மாற்றமடைந்தது. சினிமாப்பாடல்களை ஒலிபரப்புவதோடு நின்றுவிடாமல் அந்தப் பாடல்களிலுள்ள கருத்துகள், சொற்கள், தகவல்கள், தமிழின் சிறப்புகளை கொண்டு வினாக்களை உருவாக்கி நேயர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டபோது அது பலத்த வரவேற்பைப் பெற்றது. விரும்பிக் கேட்கும் சினிமாப்பாடல்களை ஒலிபரப்புவதற்கு முன்னர் ஒலிபரப்ப அதற்குப் பொருத்தமான கவிதைகளை எழுதியனுப்பக்கேட்டபோது கவிதைகள் மலைபோல் குவிந்தன. சட்டத்தை மக்களுக்கு விளக்கும் நோக்குடன் ஒலிபரப்பப்பட்ட ‘நீதியின் பார்வையில்’ என்ற நிகழ்ச்சிக்கு விளம்பர அனுசரணையாளர்கள் தேடிவந்து நிதி உதவி செய்தனர். விவசாயத் தகவல்கள் முகத்தார் வீடு என்ற நாடகமூலமும், மெல்லிசைப் பாடல்கள் மூலமும் மக்களிடம் எடுத்துச்செல்லப்பட்டன. மக்கள் அவற்றை ரசித்துக் கேட்டதுடன் பயனுமடைந்தார்கள். சிறுவர் நிகழ்ச்சிகளை சிறுவர்கள் மட்டுமன்றி முதியவர்களும் கேட்டுமகிழ்ந்தனர். சிறுதொழில் முயற்சியாளர்களை இலக்குவைத்து நடத்தப்பட்ட ஒரு நிகழ்ச்சிக்கு வெளிநாட்டு முகவர் நிறுவனமொன்று அனுசரணை வழங்கியது. இப்படி வானொலி, சமூகத்தின் சகல தரப்பினரையும் சகல வயதினரையும் அரவணைத்துக்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளைப் படைத்துக்கொண்டிருக்கின்றன. அவற்றை மக்கள் ரசித்துக்கொண்டுமுள்ளனர். 90 இன் நடுப்பகுதியில் இலங்கையில் பணம்படைத்த முதலாளிகள் தங்கள் மற்றுமொரு வர்த்தக முயற்சியாக ஆரம்பித்த தனியார் வானொலிகள்கூட இதன்போக்கையே பின்பற்றிச் செல்வதும் இங்கு குறிப்பிடத்தக்கதே. இவ்வாறு தமது சமூகத்தின் தேவைகளை அறிந்து அதன் வளர்ச்சிக்காக புதிய முயற்சிகளைப் படைக்கும் ஒலிபரப்பாளர்கள் இன்றும் நம் மத்தியில் இருக்கிறார்கள்.
ஆனால், வானொலிகளின் ஒலிபரப்பு 24 மணி நேரமாக விஸ்தரிக்கப்பட்டதுபோல எல்லா ஒலிபரப்பாளர்களின் அறிவு நிலையும் விஸ்தரிக்கப்படவில்லை என்பதே இன்று பலராலும் முன்வைக்கப்படும் ஒரு குற்றச்சாட்டு. அதுமட்டுமன்றி அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் சினிமாப் பாடல்களும் சினிமாத் தகவல்களுமே. அவர்களது அதிகபட்ச வாசிப்பு தமிழக வாராந்தரிகளுடன் மட்டுப்பட்டுவிட்டது. எத்தனையோ பெயர்களுடன் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பானாலும் அத்தனையும் சினிமாப்பாடல்களே. சினிமாப்பாடல்களில்கூட மறைந்துகிடக்கும் நல்ல விஷயங்களைப் பிரித்துத்தர அவர்களுக்குத் தெரியவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் அவர்களை நோக்கி முன்வைக்கப்படுகின்றன. இது ஓரளவு உண்மைதான். உலகளாவிய ரீதியில் தற்போதைய தமிழ் வானொலிச்சூழல் கவலைதரும் ஒன்றாகவே மாறிவிட்டது என்ற குற்றச்சாட்டை மறுப்பதற்கில்லை. வானொலிகள் தென் இந்தியத் திரை உலகப் பிரமுகங்களின் பிறந்தநாளை யார் சிறப்பாகக் கொண்டாடுவது என்பதில் போட்டி போட்டுக் கொண்டு செயலாற்றுகின்றன. அவை தென் இந்திய அல்லது இந்தியத் திரைத் தகவல் களஞ்சியங்களாக மாறிவிட்டன. மட்டுமன்றி தென்னிந்தியச் சஞ்சிகைகளின் வாசிப்பு அரங்காகவும் மாற்றம் பெற்றுவிட்டன. மொழி, உச்சரிப்பு, என்பவை தொடர்பான எவ்வித பிரஞ்ஞையுமின்றி, ஒலிபரப்பாளர்கள் தாம் நினைத்ததை நினைத்தபடி பேசிவிட்டுப் போகும் ஒரு நிலை தோன்றிவிட்டது.

ஓர் ஒலிபரப்பாளர் ஒரு பெண் நேயரிடம் “உங்களுக்கு எத்தனை பிள்ளைகள்?” எனக்கேட்கிறார். நேயரும் “ஒரு பிள்ளை. ஒரே மகன்” என்கிறார். ஒலிபரப்பாளரின் அடுத்த கேள்வி “ உங்களுக்குத் திருமணமாகி விட்டதா?” . கர்ணனின் தாயார் குந்திதேவியுடனா இந்த அறிவிப்பாளர் உரையாடிக்கொண்டிருக்கிறார் என்று எனக்கோ பலத்த சந்தேகம்.. இப்படிப் பல உதாரணங்களைச் சொல்வேன்.
எழுவாய் பயனிலை இல்லாத வசனங்களும் பன்மையில் ஆரம்பித்து ஒருமையில் முடியும் வசனங்களும் தாராளமாகவே காற்றலை ஏறுகின்றன. ல, ள, ழ பேதங்கள் கிடையாது. ன, ண, ந வித்தியாசம் தெரியாது. ந் ‘, ‘ற்’ போன்ற எழுத்துக்கள் தமிழில் இருப்பதே சிலருக்குத் தெரியாது. இது இவ்வாறிருக்க குற்றியலுகர, இகரங்கள் பற்றியெல்லாம் இவர்கள் தெரிந்து வைத்திருப்பார்கள் என்று எதிர்ப்பார்ப்பது அதிகப்படி.
இலங்கை இனப் பிரச்சினை எமக்கு எத்தனையோ பாதிப்புகளை ஏற்படுத்தியிருந்தாலும் இன்று உலகெங்கும் நல்ல தமிழ் ஒலிக்கவும் வழி வகுத்துவிட்டது என்ற உண்மையை நாம் மறப்பதற்கில்லை. ஆனால் அவற்றை நடத்துபவர்கள் அல்லது பணியாற்றுகின்றவர்கள் வானொலிகளின் பண்பை அறியாதவர்களாக இருப்பதே கவலையளிக்கிறது. தமிழ் நாட்டு வானொலிகள் பற்றி நான் ஒன்றுமே கூறவரவில்லை . தமிழ் தொலைக்காட்சிகள்மீது சுமத்தப்படும் அத்தனை குற்றச்சாட்டுகளையும் இவர்கள்மீதும் சுமத்தலாமா தெரியவில்லை.
நேயர்களின் பங்களிப்பு அல்லது நேயர்கள் விரும்பிக் கேட்கும் விஷயங்களை ஒலிபரப்பும் நிலைக்குச் சென்றுள்ள ஒலிபரப்பாளர்கள் தங்களின் நிகழ்ச்சியின் தரம்பற்றி அக்கறை கொள்கின்றனரா? இதுதான் இன்று எம்மத்தியில் தொக்கிநிற்கும் ஒருபெரும் கேள்வி. இந்த விஷயத்தில் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டுவது தவிர்க்கமுடியாததொன்றாகிவிடுகிறது. தங்களது நேயர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க விரும்பும் சில ஒலிபரப்பாளர்கள் நேயர்களின் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப செயற்பட வேண்டிய கட்டாயத்துள் தள்ளப்பட்டுவிடுகின்றனர். ஆனால், எனது ஒலி ஒளிபரப்பு அனுபவங்களின் அடிப்படையில் எனக்குத் தெரிந்த ஒரு விஷயம் அல்லது நான் கண்டறிந்த ஒரு விஷயம், நாம் தரமான நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கினால், விருப்பமில்லாத நேயர்களையும் உங்கள் பக்கம் இழுத்துவிடலாம். நேயர்கள் என்ற குதிரைகளின் கடிவாளம் ஒலிபரப்பாளர்கள் என்ற ஜொக்கிகளின் கைகளிலேயே உள்ளன. சரியாக அவற்றைப் பிடித்துக்கொண்டால் உங்கள் பயணம் சுலபமாக அமையும்.
அவுஸ்திரேலியாவை ஒரு மாதிரியாக எடுத்துப் பார்த்தால் இங்கு தமிழில் ஒலிபரப்புச் செய்கின்ற ஒலிபரப்பாளர்களில் ஒரு சிலர் மட்டும் இலங்கையில் அதிக பட்சமாக பகுதிநேர அறிவிப்பாளர்களாக இருந்துள்ளனர். அந்த அனுபவத்தோடு தாங்கள் தங்கள் மனதுக்குப் பிடித்த சில விஷயங்களையும் சேர்த்துக்கொண்டு புதிய வானொலிக்கலாசாரத்தை உருவாக்கியுள்ளனர். நேயர்கள் இதுதான் வானொலிக் கலாசாரமென நம்பி அப்படியான ஒரு புதிய ஒலிபரப்புச் சூழலுக்குள் தள்ளப்பட்டுள்ளனர். ஒரு வானொலி நிலையத்தின் உரிமையாளர், தன்னிடம் பணிபுரியும் ஒலிபரப்பாளர்களிடம் “நீங்கள் ஏதேனும் வானலையில் தவறாகக் கூறிவிட்டால் அதற்காக மன்னிப்புக் கோரவேண்டாம். நேயர்கள் இதையெல்லாம் கவனிக்க மாட்டார்கள். நீங்களே மன்னிப்புக் கேட்டு ஏன் உங்களை நீங்களே காட்டிக்கொடுக்கவேண்டும்” எனப் புதிய ஒலிபரப்புப் பாடம் நடத்துமளவுக்கு இங்கு அந்தக்கலாசாரம் மாற்றமடைந்துள்ளது.
எனவே இத்தகையோரின் செயற்பாடுகளால் வானொலிகள் நகரவில்லையென்றது போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்தும் முன்வைக்கப்படுவது தொடருமென்றே நான் நம்புகிறேன். இவற்றைத் தவிர்ப்பதற்கு வானொலி தொடர்பான முழுமையான அறிவுள்ளவர்களின் செயற்பாடுகள் அறிவூட்டல்கள் புலம்பெயர்தேசத் தமிழ் வானொலிகளுக்குத் தேவையென்ற ஒரு சூழல் உருவாகியுள்ளதை நாம் அனைவரும் ஏற்றுக்கொண்டேயாகவேண்டும்.
பாடலுக்கோ இசைக்கோ களிப்பூட்டலுக்கோ முக்கியத்துவமின்றி ஒலிபரப்புச் செய்யலாமா என்று கேட்பீர்கள். கிரிக்கெட் ஆட்டம்பற்றிய நேர்முகவர்ணனையை வானொலியில் 6 மணிநேரம் பாடலின்றியே தொடர்ந்து கேட்பவர்கள் இல்லையா? ‘A Man with the Golden Microphone’, ‘Golden tonsil’ என்றெல்லாம் அழைக்கப்பட்ட John Laws என்ற அவுஸ்திரேலிய ஒலிபரப்பாளரைப்பற்றி இங்கு குறிப்பிடுவது பொருத்தமானதே. 2007 நவம்பர் மாதம், தனது 71வது வயதில் ஓய்வுபெறும் வரை, 54 ஆண்டுகளாக நடத்திவந்த வெறும் பேச்சையே அடிப்படையாகக் கொண்ட (talkback) வானொலி நிகழ்ச்சி, நேயர்கள் மத்தியில் புகழ்பெற்ற வானொலி நிகழ்ச்சியாகும். அவரின் எல்லா நிகழ்ச்சிகளும் காத்திரமான விடயதானங்களைக் கொண்டவை. 2003ல் ஒலிபரப்பு வாழ்வில் John Laws 50 ஆண்டுகளைப் பூர்த்திசெய்தபோது, அவர் பணியாற்றிய 2UE வானொலி நிலையம் 10,000 அவுஸ்திரேலிய டொலர் பெறுமதியான தங்கமுலாம் பூசப்பட்ட ஒலிவாங்கியொன்றை அவருக்கு பரிசளித்து மகிழ்ந்தது. இதற்கு முன்னரும் 40 வருட ஒலிபரப்பு வாழ்வைப் பூர்த்தி செய்தபோதும் அவருக்கு இவ்வாறே தங்கமுலாம் பூசப்பட்ட ஒலிவாங்கியொன்று பரிசளிக்கப்பட்டிருந்தது. அவ்வளவு தூரம் அவரது நிகழ்ச்சி புகழ்பெற்றிருந்தது. அதேபோல் அவரது நிகழ்ச்சி, அவர் பணியாற்றிய நிலையத்திற்குப் பெரும் புகழையும், வருமானத்தையும் ஈட்டித்தந்தது.
அமெரிக்காவிலும் ஒரு வானொலி அவரது நிகழ்ச்சியை சமகாலத்தில் பெற்று ஒலிபரப்பியது. இவ்வளவுக்கும் அவர் தன்னை ஓர் ஊடகவியலாளன் என்று அழைத்துக்கொண்டதில்லை. எப்போதும் தன்னை களிப்பூட்டுபவராகவே அறிமுகப்படுத்துவார். அதாவது தனது பேச்சு நிகழ்ச்சி நேயர்களுக்குக் களிப்பூட்டும் என்பதில் அவருக்கு அசைக்கமுடியாத நம்பிக்கையிருந்தது. அவுஸ்திரேலியாவிலேயே அதிகூடிய சம்பளம் வாங்கிய ஒலிபரப்பாளர் அவர் என்பது வேறு விஷயம்.
( பிற்குறிப்பு: அவுஸ்திரேலியா கன்பராவில் அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கமும் கன்பரா கலை இலக்கிய வட்டமும் இணைந்து அண்மையில் நடத்திய கலை – இலக்கியம் 2016 நிகழ்ச்சியில் நடந்த கருத்தரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட உரை )
( பிற்குறிப்பு: அவுஸ்திரேலியா கன்பராவில் அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கமும் கன்பரா கலை இலக்கிய வட்டமும் இணைந்து அண்மையில் நடத்திய கலை – இலக்கியம் 2016 நிகழ்ச்சியில் நடந்த கருத்தரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட உரை )
நான் .. ஊடகம் …. இன்னும் சில…
இது எனது 50வது பதிவு, மிக மிக நீண்ட கால இடைவேளைகளை எனது பதிவுகள் எடுத்துக் கொள்வதால் சுமார் மூன்று வருடங்களில் என்னால் 50 பதிவுகளையே எழுதி கிழிக்க முடிந்துள்ளது. இந்த பதிவு என்னை பற்றியதும் எனது ஊடகப் பயணம் பற்றியதும் மட்டுமே.
99ம் ஆண்டு முழு நேர ஒலிபரப்பு ஊடகவியலாளனாய் எனது பயணம் ஆரம்பித்தது. 12 வருடங்கள் ஊடகப்பரப்பில் வெவ்வேறு தளங்களில் பயணித்திருக்கின்றேன். ஒலிபரப்பளான், செய்தியாளன், விளம்பரப் பிரதி எழுத்தாளன், பத்திரிகை உதவி ஆசிரியர், செய்திப் பணிப்பாளர், நவீன ஊடக முகாமையாளர் என வெவ்வேறு பணிகளில் ,பணிச் சூழல்களில் இயங்கி வந்துள்ளேன்.
இந்த பயணம் நானாகவே விரும்பி ஏற்றுக் கொண்ட பயணம். துயரங்கள், துரோகங்கள், காட்டிக் கொடுப்புகள் கழுத்தறுப்புகள் என பல முனைக்கத்திகள் குத்திக் கிழிக்க காத்திருக்கும் ஊடகத்துறையில் நான் எவரையும் எந்த சந்தர்ப்பத்திலும் எதற்காகவும் காயப்படுத்தாமல் முன் நகர்ந்திருக்கின்றேன் என்பதையே பெருமையாகவும் மகிழ்வாகவும் கருதுகின்றேன். சில சந்தரப்பங்களில் சந்தர்ப்பவாதங்கள் என்னை பந்தாடிய போதும் என்னால் எவரும் பாதிக்கப்படக் கூடாது என்ற கொள்கையில் மாற்றமின்றி நிலைத்திருந்தேன் அதில் வெற்றியும் பெற்றிருக்கின்றேன்.
வாழ்கையின் ஒவ்வொரு படிகளையும் மிகுந்த சிரமங்களுடனேயே நான் ஏறிக் கடந்திருக்கின்றேன்.ஊடகமல்லாத வேறு துறையை தேர்ந்திருந்தால் சில வேளைகளில் சிரமமற்ற வாழ்வு வாய்திருக்குமோ என்றும் நான் எண்ணியதில்லை.
என்னைப் பொறுத்தவரையில் ஊடகவியல் என்பது ஒரு தவம் .வெறுமனே ஊடகம் வாயிலாக பிரபல்யம் பெறுவது தான் இலக்காக இருந்திருந்தால் எங்காவது ஒர் இடத்தில் குட்டையாக தேங்கியிருப்பேன். ஊடகத்துறையின் பல்வேறு பரிமாணங்களையும் தேடியறியும் ஆர்வத்தில் அலைந்துகொண்டிருப்பவனாகவே என்னை நான் காண்கின்றேன். இந்த பயணம் தேடல்கள் நிறைந்தது புதிது புதிதாய் விடயங்களை அறிந்து என்னை புதுப்பிக்க இது உதவியாய் இருக்கின்றது.
சமகால அரசியல் ,ஊடகத்துறையின் புதிய முயற்சிகள், சமூக ஊடகப் போக்குகள், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் போன்ற விடயப்பரப்புகள் எனது கவன ஈர்பான்கள், இவை தொடர்பில் தேடிக்கற்பதில் வாசிப்பதில் அதிக அக்கறை கொண்டவன்.
99ம் அண்டு சூரியனில் பகுதி நேர ஒலிபரப்பாளனாய் ஆரம்பித்த எனது உடகப் பயணம் பின்னர் அங்கு நிரந்தர ஒலிபரப்பாளன் நிலை வரை உயர்ந்தது. மிகக் குறுகிய காலத்தில் எனக்கு அடையான்தை ஏற்படுத்தி தந்த நேற்றைய காற்று இன்றும் எனது நேசத்திறக்குரியது.
அதேகாலத்தில் செய்திப்பிரிவினருடன் எனது நெருக்கம் அதிகரிக்கவும் ஒலிப்பரப்பு ஊடகவியலாளன் என்ற நிலை குறித்த அக்கறை என்னுள் அதிகரித்தது அதன் பலனாக சூரியன் செய்திப்பிரிவின் “சூரியப் பார்வைகள்” என்ற வாராந்த சஞ்சிகையினை தயாரிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்து அதன் ஊடாகவே எனது ஊடகப் பயணம் வேறு பரிமாணத்தை அடைந்தது. வெறுமனே ஒலிவாங்கிக்கு முன்னால் இருந்து பாடல்களை ஒலிபரப்பி கதை சொல்வதன் மீதான ஆர்வம் குறைவடைந்து வாளொலி ஊடகம் மூலமாக மக்களுக்கு பயன் தரும் வைகயிலான் செய்திப் பரிமாற்றத்தை நவீன முறையில் மேற்கொள்வது குறித்து அதிகம் கவனம் செலத்தினேன்.
2006ம் ஆண்டு நண்பர் வியாசாவின் அறிமுகத்தினால் இன்ரநியூஸ் எனும் அமெரிக்காவை தளமாக கொண்டியங்கிய ஊடக நிறுவனத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பத்தில் சொல்லப்பட்டாத மக்களின் கதைகளை பேசும் நிகழ்சியினை தாரித்து வழங்கியதோடு பிராந்திய ஊடகவியலாளர்களுக்கான ஊடகங்களில் நவீன தொழில் நுட்ப பயன்பாடு குறித்த பயிற்சிகளையும் வழங்கினோம்.
பின்னர் மீண்டும் வாழ்வோம் என்ற பெயரிலான திட்டம் ஆரம்பிக்கப்பட்டு. உள்நாட்டு போரில் இடம்பெயர்ந்த மக்களின் மனிதாபிமானத் தேவைகளை பற்றிய தகவல்களை பரிமாறும் நோக்கில் சுமார் இரண்டு வருடங்களாக வானொலி பத்திரிகை இணையம் என வெவ்வேறு ஊடகப் பரப்புகளில் பயணம் செய்யது. இந்த திட்டத்தின் செய்திப் பணிப்பாளராக நான் பணியாற்றியமை வாழ்வின் மறக்க முடியாத தருணம். எங்கள் மக்களின் வாழ்வின் அவலங்களை அவர்களுக்கான மனிதாபிமான தேவைகளைனிள் அவசியங்களை அரசாங்கத்திற்கும் வெளிநாடுகளுக்கும் உதவி வழங்குனர்களிக்கம் எடுத்துச் சொல்வதே அந்த நிகழ்சியின் பிராதான நோக்கம். கரணம் தப்பினால் மரணம் என்ற வகையிலலேயே மனிதாபிமான செய்தியிடல் நிலவியது. ஒரு ஊடகப் போராளியாய் எனது அணியுடன் நான் மேற்கொண்ட அந்த பயணம் உண்மையில் எனக்குள் ஏராளமான மாற்றங்களை ஏற்படுத்தியதுடன் ஊடகம் தொடர்பான பார்வைப் பரப்பயைும் விசாலித்துள்ளது.
மனிதாபிமான செய்தியிடல் என்பது இங்கு பெரிதும் கவனம் பெறாத பிரிவாகவே காணப்படுகின்றமை கவலைக்குரியது. எனது கலாநிதிப் படத்திற்கான ஆய்வாக நான் எடுத்துக்கொள்ள எண்ணியுள்ள விடயங்களில் இது முதலிடம் பெறுவதற்கு காரணமும் அதுவே.
என்னைப் பற்றிய இந்த பகிர்வில் இதனைப் பேசலாமா வேண்டாமா என்று பலதடவை சிந்த்தித்த பின்னர் இந்த பகுதியை எழுதுகின்றேன் . கணனித்துறையின் விஞ்ஞானமானியும், முகாமைத்துவ முதுமானியும் எனக்கான கல்வித் தகைமைகளாக கொண்டுள்ள ஊடகவியலாளன் என்பதில் பெருமையடைபவன். இது தற்புகழ்சியாக சிலவேளை சித்தரிக்கப்படலாம் ஆனால் ஊடகத்துறையில் முழுநேரமாக இயங்கி வரும் நான் இந்த அடைவு மட்டங்களை எட்டியமை பெருமைப் படக் கூடிதென்றே கருதுகின்றேன். நான் சார்நதுள்ள ஊடகத்துறையில் கலாநிதி பட்டம் பெற வெண்டும் என்பதே எனது அடுத்த இலக்கு. அதற்கான முன்முனைப்புகளை தற்போதுமேற்கொண்டு வருகின்றேன்.இதனை நான் இங்கு பதவி செய்வதன் நோக்கம் என்னை பற்றி பெருமை பேசுவதற்கல்ல மாறாக ஊடகத் துறையில் இயங்குபவர்கள் உயர் கல்வி தகைமைகளை அடைய வேண்டும் அதன் ஊடாக இலங்கையின் தமிழ் ஊடகத்துறை தனது நிலையை உயர்த்த வேண்டும் எனும் ஆசைவெளிப்பாடே. என்னுடன் நெருங்கி பழகி வரும் ஊடக நண்பர்கள் அனைவரிடமும் இதனை நான் அடிக்கடி வலியுறுத்தி வருகின்றேன்.
இலங்கையைப் பொறுத்தவரை எனது சிற்றறிவிற்கு எட்டியவரை நவீன ஊடகத்திற்கான தனியான பிரிவினை முதலில் ஆரம்பித்துள்ள நிறுவனம் எம்.ரி.வியாகவே இருக்க வேண்டும். ஊடகத்துறையின் எதிர்காலம் நவீன் ஊடக செயற்பாடுகளால் அதிகம் செல்வாக்கு செலுத்தப்படும் என்பதை முன்னுணர்ந்தமையால் எமது நிறுவனத்தின் தலைமை இதனை ஆரம்பிப்பதற்கு தீர்மானித்திருந்தது. இணைய வழி ஊடகச் செயற்பாடுகள் , சமூக வலைத்தளங்கள், செல்லிடப் பேசிகளின் ஊடான செய்திப் பரிமாற்றம் என இந்த துறையின் பரப்பு தொடர்ந்தும் விசாலித்து வருகின்றது. தினமும் நடைபெறும் மாற்றங்களை கவனிப்பதும் அதன் தாக்கங்கள் எதிர்காலப் போக்ககுகள் குறித்து ஆராய்வதுமாக எனது பணி சவால்மிக்கதாகவே தொடர்கின்றது.
சிலர் வானொலி அறிவிப்பாளானக நான் தொடரவில்லை என்பதால் ஊடகத்துறையை விட்டு நான் ஓடி ஒழித்துக்கொண்டதாக கருதலாம் அனால் உண்மை நிலை அதுவல்ல என்பதை புரியவைப்பதற்கும் கடந்த 12 வருடங்களாக நான் வெவ்வேறு தளங்களில் ஊடகத்துறையில் பயணித்துக் கொண்டே இருக்கின்றேன் என்பதையும் பதிவு செய்ய வேண்டும் என்பதே அந்த பதிவின் நோக்கம்.
பதிவுகளாக எழுதிப் பகிர்வதற்கு எராளமன விடயங்கள் இருந்தாலும் தற்போதுள்ள பணிச் சுமை காரணமாக பதிவெழுத முடியாத நிலை இன்னும் தொடர்கின்றது. சமூக ஊடகங்கள் ஊடான சந்தைப்படுத்தல் , நவீன ஊடகத்தின் வளா்ச்சிப் போக்குகள் , சர்வதேச அரசியல் என சில பரப்புகளில் எழுத வேண்டும் என்று தீர்மானித்துள்ளேன்.
டிஜிட்டல் ஊடகத்தின் சவால்கள் : நியூயோர்க் டைம்ஸ் இணையப் பத்திரிகை ஆசிரியர் நேர்காணல்
நியூயோர்க் டைம்ஸ் இதழின் பப்ளிக் எடிட்டராக பணியாற்றிய கடந்த நான்கு ஆண்டுகளில் ஊடக நெறிமுறைகள் குறித்து மார்கரெட் சலைவன் எழுப்பிய கடினமான கேள்விகள் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் மட்டுமின்றி உலகமெங்கும் உள்ள ஊடக அலுவலகங்களில் பல்வேறு விவாதங்களை உருவாக்கியது.

வரும் மே மாதத்தில், மார்கரெட் சலைவன் வாஷிங்க்டன் போஸ்ட் பத்திரிக்கையில் ஊடக பத்தி எழுத்தாளராக சேர உள்ளார். அது குறித்து, நியார்க் டைம்ஸின் பதிப்பாளர் ஆர்தர் சல்ஸ்பெர்கர் தனது அலுவலக பணியார்களுக்கு தகவல் தெரிவிக்கும் போது, “ஒரு புதிய காலகட்டத்தின் வழிகாட்டியாக தனது புதிய பதவியில் மார்கரெட் திகழ்வார்” என்றார்.
இன்னும் சில வாரங்களில் புதிய பொறுப்பை ஏற்க உள்ள மார்கரெட் சலைவன் கொடுத்த பேட்டி இது.
கேள்வி: நியூ யார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் நான்கு ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளீர்கள். இது தான் நீங்கள் மிகவும் விருப்பப்பட்ட பணியா ? இப்போது நான்கு ஆண்டுகள் நிறைவடைந்த பிறகு எப்படி உணர்கிறீர்கள், புதிதாக என்ன கற்றுள்ளீர்கள் ?
* இப் பொறுப்பில் இருந்ததற்காக நான் மிகவும் பெருமையடைகிறேன். அதைத் தான் இப்போது என்னால் உணர முடிகிறது. அதே நேரம் எனது வளர்ச்சிக்கும் உதவியது. குறிப்பாக தனிப்பட்ட முறையில் பாரம்பரியமிக்க பத்திரிக்கையான நியூ யார்க் டைம்ஸில் பணி புரியக் கிடைத்த இந்த வாய்ப்பு எனக்கு மிக முக்கியமானது, காரணம் இங்கே தலை சிறந்த பத்திரிக்கையாளர்கள் உள்ளனர், எப்போதும் புதிய புதிய விசயங்களை நாங்கள் இங்கே உருவாக்குகிறோம்.
அதே நேரம் ஊடகம் என்பது அச்சில் இருந்து இருந்து டிஜிட்டல் ஊடகமாக மாறும் இந்த காலகட்டத்தில் நான் இங்கு பணியாற்றியது முக்கியமானது. நான் முன்பே கூறியிருக்கிறேன், 2012 இல் நான் இங்கு பணிக்கு வரும் போது ஒரு செய்தி தாள் பத்திரிக்கையில் பணிக்கு சேர்வதைப் போலத் தான் உணர்ந்தேன். காரணம் நான் முன்னர் பணியாற்றிய செய்தித்தாள் பத்திரிக்கை அலுவலகங்களில் வழக்கமாக நடப்பதைப் போன்ற முதல் பக்க கூட்டம், விளையாட்டுச் செய்தி பண்பாட்டுச் செய்தி என்று தான் இங்கும் இருந்தது.
ஆனால் இப்போது அப்படியல்ல நியூ யார்க் டைம்ஸ் ஒரு முழுமையான டிஜிட்டல் ஊடக நிறுவனம். செய்திதாளின் அளவு இப்போது குறைந்துவிட்டது. கண்டிப்பாக இப்போதும் நியூ யார்க் டைம்ஸ் மிக முக்கியமான செய்தித் தாள். ஆனாலும் அதையும் தாண்டி, அதிவிரைவுச் செய்திகள், சமூக வலைதளம், வாசகர்களுடனான உறவு என்று இணைய ஊடகத்தில் புதிய களங்களில் முன்னணியில் நிற்கிறது, இவை புதியவை. அதே நேரம் மிகுந்த உற்சாகத்தையும் தருகிறது.
ஊடகத்தில் நிகழும் இந்த மாற்றங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறது.
கேள்வி: இந்த புதிய மாற்றத்தில் பங்கு கொள்வதை எப்படி உணர்கிறீர்கள் ? பாரம்பரியமாக அச்சு ஊடகத்தில் இருக்கும் ஒரு நிறுவனம் டிஜிட்டல் ஊடகமாக மாறும் போதோ விரிவடையும் போதோ பல்வேறு மட்டங்களில் இருந்து அழுத்தங்கள் வருமே ?
இந்த மாற்றத்தில் இது தான் மிகவும் சுவாரசியமான பகுதியா என்று என்னால் இப்போது சொல்ல முடியாது. காரணம் மாற்றத்தின் நடுவே இப்போது நின்று கொண்டிருக்கிறோம். ஆனால் ஒன்றைச் சொல்ல முடியும், இந்த மாற்றம் மிக வேகமாக நடந்து கொண்டிருக்கிறது. ஒரு செய்தியை அச்சில் ஏற்றுவதை விட இணையத்தில் அல்லது செல்போனில் பதிவது என்பது செய்தித்துறையை பொறுத்தவரை மிகப்பெரிய மாற்றம். முன்பைப் போல் இப்போது இல்லை. இது மிக சுவாரசியமானது.
இந்த மாற்றத்தில் இது தான் மிகவும் சுவாரசியமான பகுதியா என்று என்னால் இப்போது சொல்ல முடியாது. காரணம் மாற்றத்தின் நடுவே இப்போது நின்று கொண்டிருக்கிறோம். ஆனால் ஒன்றைச் சொல்ல முடியும், இந்த மாற்றம் மிக வேகமாக நடந்து கொண்டிருக்கிறது. ஒரு செய்தியை அச்சில் ஏற்றுவதை விட இணையத்தில் அல்லது செல்போனில் பதிவது என்பது செய்தித்துறையை பொறுத்தவரை மிகப்பெரிய மாற்றம். முன்பைப் போல் இப்போது இல்லை. இது மிக சுவாரசியமானது.
ஒரு கட்டுரை இப்போது எனது வலைப்பூவில் தயாராக உள்ளது. இன்னும் ஒரு மணி நேரத்தில் ஒரு சொடுக்கில் இந்த கட்டுரையை உலகத்தில் எந்த மூலையில் இருந்தும் எவராலும் படிக்க முடியும்.
இந்த பணியில் பல கடினமான நாட்களையும் அனுபவங்களையும் கடந்து வந்துள்ளேன். எப்போதும் நியூ யார்க் டைம்ஸ் பத்திரிக்கைக்கு ஆதரவாக நான் பேசுவதில்லை அதனாலே பல இடர்களை சந்தித்துள்ளேன். அவை எனக்கு பெரும் சவால்களாக இருந்துள்ளது. யாராவது நான் பத்திரிக்கைக்கு ஆதரவாக நடந்து கொள்கிறேன் என்று சொன்னால் அது என்னை அவமானப்படுத்துவதைப் போல உணர்வேன். எனது பணி வாசகர்களின் பக்கம் இருந்து பத்திரிக்கையைப் பார்ப்பது. நான் வாசகர்களின் பிரதிநிதி. என்னால் முடிந்த அதற்கு நெருக்கமாகவே இருந்துள்ளேன்.
ஆனால் பாருங்கள் நான் நியூ யார்க் டைம்ஸின் அலுவலகத்தில் உள்ளேன். எனது உதவியாளார் டைம்ஸின் ஊழியர். என்னைச் சுற்றிலும் டைம்ஸ் நிறுவனத்தின் ஊழியர்கள். நான் ஒரே சமயத்தில் வெளியாளாகவும் ஊழியராகவும் இருக்கிறேன். இது மிகுந்த மனச்சோர்வை அளிக்கும், எப்போதும்.
கேள்வி: இன்றைய டிஜிட்டல் மீடியா உருவாக்கும் எதிர்பார்ப்புகள் நிருபர்கள் மற்றும் செய்தியாசிரியர்களிடம் புதிய ஒருவகை அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இது போன்ற அழுத்தங்கள் அச்சு ஊடகத்தில் மிக நீண்ட பாரம்பரியம் கொண்ட நியூ யார்க் டைம்ஸ் போன்ற பத்திரிகைள் வெளியிடும் செய்திகளின் தரத்தை பாதிக்கும் என்று எண்ணுகிறீர்களா?
இந்த அழுத்தங்கள் செய்திகளின் தரத்தை பாதிக்கிறது என்று சொல்லமுடியாது. ஆனால், நமது நடைமுறைகளை பாதிக்கிறது. நியூயார்க் டைம்ஸின் பாரம்பரிய நடைமுறைகளில் இருந்து சில நேரங்களில் இப்போது மாறுபடுகிறோம். உதாரணத்திற்கு நான் இப்போது எனது ஒரு கட்டுரை தயாராகி இணையத்தில் பதிவேற்றும் போது, வாசகர்கள் அறியாமலேயே அதனுள் தேவையான மாற்றங்களை செய்தியாசிரியர்கள் செய்து கொள்கிறார்கள்.
அச்சு ஊடகத்தில் இது சாத்தியமில்லை. ஒரு செய்தியில் மாற்றம் செய்ய வேண்டுமென்றால் அடுத்தநாள் வரை காத்திருக்க வேண்டும். என்னுடன் பணியாற்றும் செய்தியாசிரியரிடம் பேசிக்கொண்டிருக்கும் போது அவர் சொன்னார், “இப்படியான சமகாலத் தொழிற்நுட்பம் என்பது நமக்கு கிடத்த வரம் மற்றும் சாபம்”. ஆமாம், இதனால் பல நன்மைகள் உண்டு அதே நேரம் இதனால் பிரச்சனைகளும் உண்டு. எல்லா இடங்களிலும் மேடும் பள்ளமும் உண்டு அல்லவா.
நியூயார்க் டைம்ஸ் மட்டுமல்ல ஒவ்வொரு மதிப்புமிக்க பத்திரிகையும் முதல் செய்தி என்பதை விட, சரியான செய்தி என்பதற்குத் தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். மிகுந்த போட்டிமிக்க இணையச் செய்திச் சேவையில் மூன்று அல்லது நான்கு மணி நேர தாமதம் என்பது சரியல்ல. அதனால், செய்திகளை வேகமாக வழங்க அதிக அழுத்தம் இருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை.
சமீபத்தில், அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி மறைந்தபோது, அவரது மரணச் செய்தி உறுதிபடுத்தப்பட்ட பின்னரே வெளியிடப்பட்டது. அது வதந்தியாக இருந்துவிடக்கூடாது என்பதில் மிகுந்த அக்கறை எடுத்துக்கொண்டோம். அச்செய்தியை தாமதமாக வெளியிட்ட மிகப்பெரிய பத்திரிக்கைகளில் ஒன்று நியூ யார்க் டைம்ஸ். ஒரு வேளை நீதிபதி இறக்காத போது அவர் இறந்துவிட்டார் என்று இணையத்தில் செய்தியாக்கி இருந்தால் அது மிகப்பெரிய பிரச்சனையாக ஆகியிருக்கும். அதனால் முக்கியச் செய்திகளுக்கு அதிக அக்கறை எடுத்துக்கொள்ளுதல் முதன்மையானது.
கேள்வி: நீங்கள் சமீபத்தில் எழுதிய கட்டுரை ஒன்றில் அதிகாரப்பூர்வமற்ற தகவல்களின் அடிப்படையில் செய்தி வெளியிடுவதைக் கடுமையாகச் சாடியிருந்தீர்கள். சமீப காலங்களில் இப்போக்கு அதிகமாகி வருவதாக எண்ணுகிறீர்களா?
இல்லை, இது நீண்ட காலமாக இருந்து வரும் நடைமுறைதான். இது குறித்து எப்போது நான் பேசினாலும் ஒன்றை முக்கியமாகச் சொல்லிவிடுவேன். எப்போதும் எல்லாமும் வெளிப்படையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. சில நேரங்களில் சில செய்திகளை வெளியிடும் போது அதில் தொடர்புடையவர்கள் பற்றிய தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட வேண்டியுள்ளது.
இல்லை, இது நீண்ட காலமாக இருந்து வரும் நடைமுறைதான். இது குறித்து எப்போது நான் பேசினாலும் ஒன்றை முக்கியமாகச் சொல்லிவிடுவேன். எப்போதும் எல்லாமும் வெளிப்படையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. சில நேரங்களில் சில செய்திகளை வெளியிடும் போது அதில் தொடர்புடையவர்கள் பற்றிய தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட வேண்டியுள்ளது.
ஆனால், அதே நேரம் அதிகாரப்பூர்வத் தகவல்களின் அடிப்படையில் வரும் செய்திகளை அளவிற்கு மீறி உபயோகப்படுத்தலும் இங்கு உள்ளது.
கேள்வி: தேர்தல்களில் பத்திரிகைகள் வேட்பாளர்களை ஆதரிப்பதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
கேள்வி: தேர்தல்களில் பத்திரிகைகள் வேட்பாளர்களை ஆதரிப்பதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
அமெரிக்க பத்திரிக்கைகள் தேர்தலின் பொது ஏதேனும் ஒரு வேட்பாளரை ஆதரித்து செய்தி வெளியிடுகிறார்கள். சமீபத்தில் ஹிலாரி கிளின்டனை நியூயார்க் டைம்ஸ் ஆதரித்தது. இந்தியாவில் இப்படி நிகழ்வது மிக அரிது.
இது நீண்டகாலமாக இங்கு இருந்து வரும் நடைமுறை. இதை தலையங்கத்தில் செயல்படுத்துகிறோம்.இதை நியூ யார்க் டைம்ஸ் எப்படிப் பார்க்கிறது என்றால், ஒரு வேட்பாளரோடு உரையாடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி அவர்களிடம் கேள்விகளை எழுப்ப முடிகிறது. அவர்களை புரிந்து கொள்ள முடிகிறது. அதன் பயனாக சில முடிவுகளுக்கு வர முடியும். அதனால் இதை வாசகர்களுக்குச் செய்யும் சேவையாக கருதுகிறோம்.
சில வாசகர்கள் இதை விரும்பாமலும் இருக்கலாம். அவர்களுக்கு நான் செய்திகளை தரும் ஒரு நடுநிலையாளராக இருக்க வேண்டும். அரசியலைத் தழுவாதிர்கள் என்று அவர்கள் சொல்லலாம். அவர்களுக்கு நியூ யார்க் டைம்ஸ் தரும் பதில் என்பது, தலையங்கம் மட்டுமே அரசியல் சார்புடையதாக இருக்கும். ஆனால் செய்திகள் எப்போதும் நடுநிலையாகத் தான் இருக்கும்.
கேள்வி: நீங்கள் நியூ யார்க் டைம்ஸ்க்கு ஆதாரவாக இருப்பதை விட வாசகரின் பிரதிநிதியாக இருப்பதில் மிகுந்த கவனம் எடுத்துக்கொள்வதாகச் சொன்னீர்கள். அச்சில் இருந்து டிஜிட்டலாக ஊடகம் மாறி வரும் இன்றைய சூழ்நிலையில், பப்ளிக் எடிட்டர் என்ற முறையில் வாசகர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் ?
இது குறித்து பொதுவான சில விஷயங்களை என்னால் சொல்ல முடியும். பலர் சந்தா செலுத்தி நியூ யார்க் டைம்ஸ் இணையச் செய்திகள் படிக்கிறார்கள். அவர்கள் எதிர்பார்ப்பது, செய்திகள் உயர்ந்த தரத்துடனும் உண்மையாகவும் இருக்க வேண்டும் என்பது தான். பக்கச் சார்பான செய்திகளை அவர்கள் விரும்புவதில்லை, அவை அரசியல் செய்தியாக இருந்தாலும், மத்திய கிழக்கு செய்தியாக இருந்தாலும்.
தமிழில்- சரவணன் கன்னியாரி
நன்றி: TheWire.com
நன்றி: TheWire.com
பேனா போராளிகள் மரணிப்பதில்லை விதைக்கப்படுகின்றனர். மீண்டும் எழுவர் - வி.தேவராஜ்
ஊடகத்துறையினரே நாம் ஒன்றிணைந்தால் எழுவோம். ஒன்றிணையாவிட்டால் வீழ்வோம். எழுவதா? வீழ்வதா? ஊடகத்துறையினரே குறிப்பாக தமிழ் ஊடகத்துறையினரே சிந்தித்து முடிவெடுங்கள். இனந் தெரியாத நபர்களும் கண்ணுக்குத் தெரியாத துப்பாக்கிதாரிகளும் மர்ம நபர்களும் நிரையில் இல்லை என்பது உண்மைதான். ஆனால் அந்த இடத்தை ஊடகக் காவலர்களும் தமிழ்த் தேசியத்தின் இன்றைய கர்த்தாக்களும் ஏகபோகமாக்கிக் கொண்டுள்ளனர் என சிரேஸ்ட பத்திரிகை ஆசிரியரான வி.தேவராஜ் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம் யாழ் ஊடக அமையம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் ஊடக சுதந்திரத்துக்கான செயற்பாட்டுக்குழுவின் ஒத்துழைப்புடன் மட்டக்களப்பிலுள்ள இலங்கை செஞ்சிலுவைச் சங்க மண்டபத்தில் நடத்தப்பட்ட மறைந்த ஊடகவியலாளர் ஐ.நடேசனின் 12ஆவது ஆண்டு நினைவு நிகழ்வில் நினைவுரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவருடைய நினைவுரையில் தொடர்ந்து உரையாற்றிய வி.தேவராஜ்,
நடேசா நீ இன்று எம்மிடம் இல்லை. 2004 மே 31ஆம் திகதி நீ மரணித்து விட்டதாகக் கூறுகின்றனர். ஆனால் நீ மரணித்ததாக நானோ உன்னை நேசிக்கின்ற நண்பர்களோ நம்புவதற்குத் தயாராக இல்லை. நீ இன்னும் எம்முடன் இருப்பதாகவே நினைக்கின்றோம், உணர்கின்றோம். ஆனால் நெஞ்சு கனக்கின்றது. மீண்டும் துயில் எழுந்து வர மாட்டாயா என மனம் ஏங்குகின்றது. உன்னுடன் பழகிய நாட்கள் பசு மரத்தாணி போல் நெஞ்சில் ஆழப் பதிந்துள்ளது.
ஆனால் அந்த இறுதிக் கணம். நீ என்னைச் சந்தித்தது இன்னும் என் கண் முன் நிழலாடிக் கொண்டிருக்கின்றது.
இறுதியாக நான் உன்னைச் சந்தித்த போது உன்னில் காணும் வழமையான கலகலப்பு, பேச்சு இவை அனைத்தையும் தொலைத்து விட்டு கனத்த நெஞ்சுடன் காணப்பட்டாய். உனது இந்த நிலை சற்று என்னைத் தடுமாற வைத்தது.
ஊருக்குப் போகாதே. கொழும்பிலேயே நின்று வேலை செய்வதற்கான ஒழுங்குகளை மேற்கொள்கின்றேன் என்று பல முறை வற்புறுத்தினேன்.
முதலில் சரி என்று கூறிய நீ, சற்றும் எதிர் பாராமல் ஊருக்குப் போய் விட்டு வந்து விடுகிறேன் என்று பிடிவாதமாக நின்று அவசரமாகக் கிளம்பியும் விட்டாய். நீ மீண்டும் வருவாய் என்ற எதிர் பார்ப்புடன் உன்னை வழி அனுப்பி வைத்தேன். அதுதான் எமது இறுதி சந்திப்பு என நான் நினைக்கவில்லை. ஆனால் இறுதிச் சந்திப்பாகவே அந்தச் சந்திப்பு அமைந்து விட்டது.
கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த நீ அவசரமாக தொலைபேசியில் தொடர்பு கொண்டாய், ‘உங்களது நண்பன் தம்பையாவைச் சுட்டு விட்டார்கள்’ என்று பதை பதைத்துக் கூறினாய். யாழ் பல்கலைக்கழக எனது சகபாடியான குமாரவேல் தம்பையாவின் கொலைச் செய்தி என்னை நிலை தடுமாற வைத்தது. இரத்தத்தை உறைய வைத்தது.
நண்பன் தம்பையாவின் கொலைச் செய்தி கேட்டுத் தடுமாறிய நிலையிலும் உனக்கும் நண்பனின் நிலை உருவாகி விடக் கூடாது என்று என் மனதில் பெரும் போராட்டம் எழுந்தது. ‘நீ எங்கு நிற்கின்றாய்’ என நான் வினாவினேன். நீ வெலிக்கந்தையில் நிற்பதாகக் கூறினாய். கொழும்புக்குத் திரும்பிவிடு என்று மன்றாடினேன். நீயோ ஊருக்குப் போய் விட்டு வருகின்றேன் என்று கூறிச் சென்று விட்டாய்
நண்பன் தம்பையாவை இழந்த சோக மூட்டம் விலகும் முன்பே உனது கொலை குறித்த செய்தி ஒரு கிழமைக்குள் வந்து என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
நண்பன் தம்பையாவின் கொலைச் செய்திக்கூடே நீ கவனமாக இரு. உன்னைப் பாதுகாத்துக் கொள்வதில் அக்கறை காட்டு என்று கூறிய போது ‘பத்திரிகையாளன் மீது கை வைக்க மாட்டார்கள்’ என்று உன் மீது குறி வைத்திருந்த கோழைகள் பற்றி அறியாது நம்பிக்கை வெளியிட்டாய்.
ஒரு சில தினங்களுக்குள் உனது உயிரைப் பறித்தெடுக்கக் காத்திருந்த கொலையாளிகளை அறியாமலேயே இருந்து விட்டாய்.
நண்பர் சிவராம் அடிக்கடி கூறும் வார்த்தை மண்டையில் போட்டு விடுவார்கள். ஆனால் எப்பொழுது மண்டையில் போடுவார்கள் என்று தெரியாது. மண்டையில் போடுவதற்கு முன் முடிந்ததைச் செய்து விட வேண்டும் எனக் கூறி வேகமாகக் காரியமாற்றினார்.
அதே போல் நீயும் எங்களை எப்போதாவது மண்டையில் போட்டு விடுவார்கள். அவ்வாறு போடப்பட்டால் யார் யாருடைய கொலையைச் செய்தியாக வடிப்பது என்பதுதான் மாறுபடும். ஆனால் நாமும் ஒரு நாள் செய்தியாக, கட்டுரையின் கருப் பொருளாகப் போய் விடுவோம் என்பது மட்டும் உண்மை என அடிக்கடி கதைக்கும் போது கூறுவாய்.
நான் செத்தாலும் பரவாயில்லை. புற முதுகில் சூடு பட்டுச் சாகக் கூடாது. நெஞ்சில் குண்டு பாய்ந்து வித்தாக விதைக்கப்படுவதையே விரும்புகின்றேன் என்றும் அடிக்கடி பகிடியாகக் கூறுவாய். அது பகிடி அல்ல உண்மை என்பதை உனது மரணத்தின் கோலம் பதிவு செய்து விட்டது. நீ இன்னொரு விடயத்தையும் பகிடியாகக் கூறுவாய், பத்திரிகையாளன் குறிப்பாகத் தமிழ்ப் பத்திரிகையாளன் மரணித்தாலோ அது செய்தியாக ஒரு கிழமை உலா வரும். பிறகு மறந்து விடுவார்கள். மறந்து விடுவது மரணித்த பத்திரிகையாளனை மாத்திரமல்ல, அவனது குடும்பத்தையும் தான். மரணித்த அந்தப் பத்திரிகையாளன் இல்லாது அவனது குடும்பம் சோகத்தில் மாத்திரமல்ல பொருளாதாரத்திலும் மீள முடியாத நிலையை அடைந்து விடும்.
இது பற்றி எவருமே கவலைப்படுவதில்லை என்பது தான் உனது ஆதங்கம். உனது ஆதங்கத்தை உனது மரணத்தின் பின் உலகத்தில் முன் வைக்கின்றேன். உனது கொலைச் செய்தி கேட்டவுடன் மட்டக்களப்பு பத்திரிக்கை ஒன்றுடன் தொடர்பு கொண்டேன். நடேசன் கொலை செய்யப்படுவதற்கு பத்து நிமிடங்களுக்கு முன்புதான் நான் சந்தித்தேன். எனக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வந்து எனது நெஞ்சில் கையை வைத்து டுமில் என்று கூறி விட்டு சென்றவன் சுடப்பட்டு விட்டானாம் என நா தளதளக்கக் கூறினார். நடேசா, கடந்த வாரம் உனது இரு கட்டுரைகளையும் பிரசுரத்துக்கென தயார்படுத்திக் கொண்டிருந்தேன். அந்த இரு கட்டுரைகளிலுமே ஒரு ஆவேசம் ஆர்ப்பரித்தது. தம்பையா பற்றித் தேனாடான் என்ற புனை பெயரில் நீ எழுதிய கட்டுரை இப்படி ஆரம்பிக்கின்றது.
கிழக்குப் பல்கலைக்கழகப் பொருளியற்துறைத் தலைவர் குமாரவேலு தம்பையா ஆயுததாரிகளால் கோழைத்தனமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்குள் துளிர் விட்டு விஸ்வரூபம் எடுத்துள்ள முரண்பாடுகளின் விளைவாக இடம்பெற்று வரும் தொடர்ச்சியான ஆயுத வன்முறைகளின் உச்சமாக கல்விமான் ஒருவரின் உயிர் காவு கொள்ளப்பட்டிருக்கின்றது என்று தொடரும் அந்தக் கட்டுரையில் நிராயுதபாணிகளை நோக்கி துப்பாக்கிகள் நீளுவதை மக்கள் சக்தி தடுத்து நிறுத்த தயங்குமானால் எந்த வீட்டுக்குள்ளும் துப்பாக்கி நீளும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உனது மற்றொரு கட்டுரையில் மட்டக்களப்பு மாவட்டம் மீண்டும் கலங்கிய குட்டையாக உள்ளது. கருணாவின் பெயரைப் பயன்படுத்தி சில தரப்பினரும் மீன் பிடிக்க முற்படலாம் என்ற சந்தேகமும் பலமாக உள்ளது. எது எப்படியிருந்தாலும் பகடைக் காய்களாவது தமிழ் மக்களே என்று குறிப்பிட்டுள்ள நீ அந்தக் கட்டுரையில் மேலும் குறிப்பிடுகையில், மட்டக்களப்பில் 60 நாட்களில் 20 வன்முறைச் சம்பவங்கள், 35 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கிழக்கு மாகாண வன்முறைகளைக் கட்டுப்படுத்துவது என்ற அடிப்படையில் கருணாவுக்கு நெருக்கமான மேஜர் ஜெனரல் சாந்த கோட்டே கொடே நியமிக்கப்பட்டிருப்பதும் பல்வேறு ஐயங்களை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது என்றும் தொடர்கின்றாய்.
ஒட்டுமொத்தத்தில் நடேசனே நீயும் செய்தியாக, கட்டுரையின் கருப் பொருளாக மாத்திரம் ஆகிவிடவில்லை. நிராயுதபாணிகளை நோக்கி துப்பாக்கி நீட்டப்படக் கூடாது, தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று குரல் கொடுத்த நிராயுதபாணியான உன் மீதும் துப்பாக்கி திருப்பப்பட்டு விட்டது. போர்க் காலத்தில் தான் நிராயுதபாணிகளை, பத்திரிகையாளர்களை, புத்திஜீவிகளை இழந்தோம். ஆனால் அந்த இழப்புக்கள் போர் நிறுத்த அமைதி காலத்திலும் தொடர்ந்தது விசனத்துக்குரியது.
அன்று மயில்வாகனம் நிமலராஜன், இன்று ஐயாத்துரை நடேசன் இடையில் பல அச்சுறுத்தல்கள், அடிதடிகள், சிறைவாசம் என பல்வேறுபட்ட இன்னல்களுக்கு முகம் கொடுத்தமை வரலாற்றுப் பதிவுகளாக உள்ளன. இவை அனைத்துமே தமிழ் ஊடகத் துறையினர் மீது பாய்ச்சப்பட்ட பயங்கரவாத ஒளிப் பாய்ச்சலின் விளைவாக எழுந்ததாகும்.
தமிழ் ஊடகத்துறை சார்ந்தோர் மீது ஒன்றில் புலி முத்திரை குத்தப்படுகிறது. அல்லது பயங்கரவாத பட்டம் சூட்டப்படுகின்றது. அல்லது விடுதலைப் புலிகளுக்கான உளவாளி என்ற நாமம் இடப்படுகின்றது.
இவையனைத்துமே தமிழ் ஊடகவியலாளர்கள் இலங்கை வரலாற்றில் மறைக்கப்பட்ட தமிழர்களின் வரலாற்றுப் பக்கங்களை பயங்கரவாதமாகத் திரிபுபடுத்தப்படும் தமிழ் மக்கள் மீதான அடக்கு, ஒடுக்கு முறைகளின் உண்மை பக்கங்களை உலகுக்குப் படம் பிடித்துக் காட்டி பறைசாற்றுவதன் எதிரொலியாக விளைந்த விளைவாகும்.
நவாலி தேவாலயத்தில் அடைக்கலம் தேடியவர்கள் மீது விழுந்த குண்டுக்கும் நாகர் கோவிலில் பாடசாலை மீது விழுந்த குண்டுக்கும் பலியான பள்ளிச் சிறார்களும் பயங்கரவாதிகளாகத் தெரிவது போன்றே தமிழ் ஊடகத்துறையினரும் பயங்கரவாதிகளாக அல்லது பயங்கரவாதத்துக்குத் துணை போகின்றவர்களாக சித்திரிக்கப்பட்டனர்.
மயில்வாகனம் நிமலராஜன் மீதும் ஐயாத்துரை நடேசன் மற்றும் சிவராம் மீதும் பாய்ந்த குண்டுகள் பலியாக்க நினைத்தது அவர்களது உயிர்களை மாத்திரமல்ல தமிழ்த் தேசியத்தின் மீதும் தமிழர் போராட்டத்தின் மீதும் கொண்டுள்ள பற்றுதலை, அக்கறையை திசை திருப்பிக் கொண்டு ஒன்றில் சும்மா இருங்கள் அல்லது ஒதுங்கிக் கொள்ளுங்கள் அல்லது நாட்டை விட்டு வெளியேறி விடுங்கள் என்ற செய்தியை ஒட்டுமொத்தமாக அனைத்து தமிழ் ஊடகவியலாளர்களுக்கும் விடுவிக்கப்பட்ட அச்சுறுத்தலாகவுமே அமைந்தது.
கருத்துச் சுதந்திரத்திற்கு துப்பாக்கி மூலமான கொலைதான் பரிசு எனின் இந்த மண்ணின் கருத்துச் சுதந்திரத்திற்கான தர்மம் தலையெடுக்க வழியில்லாது போய்விடும். ஆனால் நிமலராஜன், நடேசன் போன்றோரது தியாகம் இந்த மண்ணில் அநியாயம், அக்கிரமம், கொலைகள் என்பவற்றுக்கும் அப்பால் கருத்துச் சுதந்திரம் சற்றேனும் தலை நிமிர்ந்து நிற்க வழி சமைத்துள்ளது.
ஆனால் இன்று இனந் தெரியாத நபர்களும் கண்ணுக்குத் தெரியாத துப்பாக்கிதாரிகளும் மர்ம நபர்களும் நிரையில் இல்லை என்பது உண்மைதான்.
ஆனால் அந்த இடத்தை ஊடகக் காவலர்களும் தமிழ்த் தேசியத்தின் இன்றைய கர்த்தாக்களும் ஏகபோகமாக்கிக் கொண்டுள்ளனர்.
தமிழ்த் தேசியம் பற்றிப் பேசாதீர்கள். தமிழர் உரிமைகள் குறித்து எழுதாதீர்கள் என்பதுதான் இனந் தெரியாத நபர்களின் செய்தியாக இருந்தது.
ஆனால் இன்று அந்த யுகம் போய் தமிழ்த் தலைமைகளும் ஊடகக் காவலர்களும் தமிழ்த் தேசியத்திற்கு புதிய வரைவிலக்கணம் வகுத்து அந்த வட்டத்துக்குள் ஊடகத்துறையினர் நிற்க வேண்டும் என்ற எழுதாத மரபை, கட்டுப்பாட்டை விதித்துள்ளனர்.
இதனைக் கடைப்பிடிக்க மறுப்போர் தமிழர் நலன்களுக்கு எதிரானவர்கள் என தூக்கப்படுகின்றனர் அல்லது ஊடகத்துறையில் இருந்து மிக இலாபகமாக அகற்றப்படுகின்றனர். எழுத்துக்கள் முடக்கப்படுகின்றன.
இதற்கும் மசியாதவர்கள் ஊடகத் துறையை விட்டு வெளியேறுவதற்கான காரியங்கள் நடைபெறுகின்றன அல்லது நாட்டை விட்டு வெளியேறுமாறு சகபாடிகள் மூலம் அச்சுறுத்தப்படுகின்றனர் அல்லது தனியார் துறையினரை ஏவி புலனாய்வு மேற்கொள்கின்றனர். அத்துடன் சம்பந்தப்பட்ட ஊடகவியலாளனின் வீட்டுக்கு பொது மலசல கூடங்களில் இருந்து சிறு நீர் அள்ளி வந்து நாளாந்தம் அபிஷேகம் செய்யப்படுகின்றது.
இது நவீன இனந்தெரியாத நபர்களின் கைங்கரியமாக உள்ளது.
தமிழ்த் தேசியத்திற்காக தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளுக்காக, ஊடக தர்மத்திற்காக நீ உனது உயிரைத் தியாகம் செய்தாய். உன்னைப் போலவே சிவராம், சுகிர்தராஜ், சுப்ரமணியம் மற்றும் நிமலராஜன் போன்றோரும் தமது உயிரைத் தியாகம் செய்தனர்.
நீங்கள், நான் உட்பட எமது பயணம் புனிதப் பயணம் எனக் கருதிச் செயற்பட்டோமோ அதனை நமக்குத் தெரியாமலேயே ஊடக நிறுவனங்கள் அதைப் பணமாக்கிக் கொண்டது மாத்திரமல்ல தமிழ் மக்கள் மத்தியில் நிரந்தர இடத்தைப் பிடித்துக் கொள்வதற்கும் தமது விநியோகத்தைப் பெருக்கிக் கொள்வதற்கும் எம்மை எமது ஊடகப் பயணத்தைப் பயன்படுத்திக் கொண்டன என்ற உண்மையை இன்றைய நிகழ்கால உண்மைகள் உணர்த்தி நிற்கின்றன.
இன்று ஊடக நிறுவனங்களுக்குத் தேவைப்படுவது அரசியல் செல்வாக்கு. இதற்காக தமிழ்த் தேசியத்திற்கு மாற்று இலக்கணம் வகுக்கப்பட்டு ஊடக அரசியல் நடத்தப்படுகின்றது.
உன் போன்றோர்களின் தியாகத்தின் மேல் கட்டியெழுப்பப்பட்டுள்ள ‘பொய்மை தேசியத்திற்காகவா’ உயிர்த் தியாகங்கள் பயன்படுகின்றன என்பதை நினைக்கும் போது எம் முன் வெறும் சூனியமே விரிந்து கிடக்கின்றது.
ஊடக அரசியல் இன்று தமிழ்த் தலைமைகளுடன் கை கோர்த்துப் பயணிக்கின்றது. தமிழ்த் தலைமைகளுக்கும் பாரம்பரிய தமிழ்த் தேசியம் தேவைப்படவில்லை. தமது சமாளிப்பு அரசியலுக்கு சாதகமான அடக்கி, அமர்த்தி வாசிக்கப்படும் தமிழ்த் தேசியமே தேவைப்படுகின்றது.
நல்லாட்சியைப் பாதுகாப்பதன் மூலம் அயல் நாட்டினதும் சர்வதேச நலன்களுக்கும் குந்தகம் விளைவிக்காத ஒருவித சமாளிப்பு தமிழ்த் தேசியத்தைக் கொண்டு நடத்தும் அரசியல் செய்ய வேண்டிய தேவை தமிழ்த் தலைமைகளுக்கு உள்ளது. இந்த வரலாற்றுத் துரோகத்தை அச்சு ஊடக நிறுவனங்களும் தமிழ்த் தலைமைகளும் மிகக் கச்சிதமாக நிறைவேற்றி வருகின்றன.
2005 ஆம் ஆண்டு நண்பன் சிவராமின் படுகொலைக்குப் பின் துரத்திய வெள்ளை வான், மோட்டார் சைக்கிள், அநாமதேய தொலைபேசி அழைப்புக்களை அலட்சியம் செய்து இலங்கை மண்ணிலேயே இருந்திருந்தால் உன் போன்றோரது நிலைதான் எனக்கும் ஏற்பட்டிருக்கும்.
அந்த நெருக்கடியான வேளையில் எனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள என்னை நானே தயார்படுத்த வேண்டியிருந்தது. வெளிநாட்டுப் பயணத்துக்கான ஒழுங்குகளையும் பணத்தையும் நானே ஏற்பாடு செய்ய வேண்டியிருந்தது. இவை அனைத்தையும் செய்து எனது உயிரைக் காப்பாற்ற வேண்டிய தார்மீக பொறுப்பைக் கொண்டவர்கள் காட்டிய அலட்சியம், அக்கறையீனம் என்னை நானே காப்பாற்றிக் கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டேன்.
எனது உயிரைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பினைக் கொண்டவர்கள் என்னை நோக்கி உதிர்த்த வாசகம் இதுதான், வெளிநாட்டில் புகலிடம் பெறுவதற்காக அச்சுறுத்தல் இருப்பதாக கூறுகின்றேன் என்பதே அது. இது சஞ்சிகை ஒன்றில் வெளிவந்தது.
உயிர் அச்சுறுத்தல் காரணமாக இரு முறை நாட்டை விட்டு நான் வெளியேறினேன். ஆனால் எந்த ஒரு நாட்டிலும் புகலிடம் கோரவில்லை. வெளிநாடுகளில் தங்குவதற்கும் நான் முயற்சிக்கவில்லை.
இன்று நான் உங்கள் முன் நின்று உரையாற்றுவதற்கு உயிருடன் இருக்கின்றேன் என்றால் அதற்கு இரு நிறுவனங்கள் காரணமாக இருந்துள்ளன.
முதலாவது, சு.ளு.கு – பரிசில் இருந்து இயங்கி வரும் எல்லைகள் அற்ற பத்திரிகையாளர் அமைப்பு எனது பாதுகாப்பு குறித்தும் எனக்குள்ள அச்சுறுத்தல் குறித்தும் அறிக்கை வெளியிட்டு எனது உயிருக்கு உத்தரவாதம் பெற்றுக் கொடுத்தது.
இரண்டாவது, என்னைப் பாதுகாப்பதில் இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் பெரும் பங்காற்றியது. இந்த இரு நிறுவனங்களுக்கும் நான் என்றும் நன்றியுடையவனாவேன்.
எல்லைகள் அற்ற பத்திரிகையாளர் அமைப்பின் அறிக்கை வெளிவந்த பின் கொழும்பில் உள்ள ஒரு ஊடக நிறுவனத்தில் பணியாற்றும் ஒரு பத்திரிகை ஆசிரியர் என்னுடன் தொடர்பு கொண்டு சகல விபரங்களையும் பெற்றுக் கொண்ட பின் மீண்டும் அச்சுறுத்தல் வந்தால் தனக்கு அறிவிக்குமாறு கூறினார்.
அதே நபர் எல்லைகள் அற்ற பத்திரிகையாளர் அமைப்புடன் தொடர்பு கொண்டு வெளிநாடுகளில் புகலிடம் பெறுவதற்காகவே இவ்வாறு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறுகின்றனர். அதனால் இனிமேல் இலங்கை தொடர்பாக அறிக்கை வெளியிடுவதற்கு முன் தன்னைக் கலந்தாலோசிக்குமாறு கேட்டுக் கொண்டாராம். இதனை இங்கு குறிப்பிடுவதற்குக் காரணம் உள்ளது.
அதாவது ஊடகத்துறையினரின் மத்தியில் எந்தளவுக்கு சக பத்திரிகையாளன் குறித்த கரிசனை, அக்கறை உள்ளது என்பதற்கப்பால் ஊடகத்துறை சார்ந்தோரே தமக்கிடையே ஒற்றுமையின்றி தம்மைத் தாமே வெட்டிச் சாய்த்துக் கொள்கின்றனர் என்பதைச் சுட்டிக்காட்டவே ஆகும்.
இந்த அபாயகரமான நிலை ஊடகத்துறையினர் மத்தியில் தொடர்ந்தும் இருப்பது எந்த வகையிலும் ஆரோக்கியமான சூழலை உருவாக்காது.
எனவே தான் நான், ‘இறைவா நான் எனது எதிரிகளைப் பார்த்துக் கொள்கின்றேன் நீ எனது நண்பர்களைப் பார்த்துக் கொள்’ என எனது பத்தி ஒன்றில் இறைவனிடம் மன்றாட்டமாகக் கேட்டுக் கொண்டேன்.
ஏனெனில் ஊடக நிறுவனங்களும் ஊடகத்துறை நண்பர்களும் மிகவும் கசப்பான அனுபவங்களையே இன்று வரை எனக்குக் கொடுத்து வருகின்றனர்.
எனது எழுத்துக்களையோ நூல் உருவில் கொண்டு வர எடுத்த முயற்சிகள் கூடத் தகர்க்கப்பட்டன. உயிருடன் வாழ வேண்டுமென்றால் ஊடகத்துறையை விட்டு விலகி விடு, நாட்டை விட்டு வெளியேறு என்பதுதான் நடேசன், சிவராம் போன்றவர்களுக்கு இனந்தெரியாத நபர்களின் செய்தியாக இருந்தது. இதனையும் மீறி ஊடகப் பயணம் மேற்கொண்ட போது அவர்கள் கொலைக் களத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.
ஆனால் இன்றும் அதே செய்தி வேறு வடிவில் ஊடகத்துறை சார்ந்தோருக்குக் குறிப்பாக அச்சு ஊடகத்துறையினருக்கு விடுக்கப்படுகின்றது.
இனந் தெரியாத நபர்கள் போய் அந்த இடத்தை குறிப்பாக அச்சு ஊடக நிறுவனங்களும் தமிழ் பேசும் தலைமைகளும் கையேற்று தமக்கு வசதியான ஏற்ற ஊடக அரசியல் கலாசாரம் முன்னெடுக்கப்படுகின்றது.
ஆனால் ஊடகத்துறை சார்ந்தோர் தாம் “நலம் அடிக்கப்பட்டவர்களாக” இருப்பதை அறிந்தும் அறியாது உள்ளனர்.
இதற்கும் அப்பால் தமிழ் பேசும் தலைமைகளும் ஊடக நிறுவனங்களும் ஊடகத்துறையினரையே கூர் வாளாகத் தீட்டி ஊடகத்துறை சகாக்களை வெட்டி வீழ்த்துகின்றனர் என்பதையும் ஊடகத்துறை சார்ந்தோர் அறிந்தும் அறியாதவர்கள் போல் கோடரிக் காம்பாக துணை போய்க் கொண்டிருக்கின்றனர் என்ற கசப்பான விடயத்தையும் இங்கு பதிவு செய்ய விரும்புகின்றேன்.
இதனை எதிர்கொள்ளும் நிலையிலான திராணி தமிழ் ஊடகத்துறையினரிடம் இல்லையென்பது துரதிஷ்டமே.
இன்று தனது சகாக்களுக்கு நடைபெறுவது நாளை அவர்களுக்கு வராது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. தமிழ் ஊடகத்துறையில் கோலொச்சுகின்ற ஒற்றுமை இன்மைதான் படுகொலை செய்யப்பட்ட தமது சகாக்களுக்காக நீதி கேட்டு உரத்து குரல் எழுப்ப முடியாது உள்ளது.
போர் முற்றுப் பெற்று அமைதி திரும்பி விட்டது என்ற மாயைக்குள் ஊடகத்துறையும் பயணிக்க முடியாது.
ஊடகத்துறையினரே நாம் ஒன்றிணைந்தால் எழுவோம். ஒன்றிணையாவிட்டால் வீழ்வோம். எழுவதா? வீழ்வதா? ஊடகத்துறையினரே குறிப்பாக தமிழ் ஊடகத்துறையினரே சிந்தித்து முடிவெடுங்கள் என தனது உரையை நிறைவு செய்துள்ளார்
நமது நிகழ்ச்சி நிரலைத் தீர்மானிக்கும் “ஊடக மாபியா” – என்.சரவணன்
“சுடர் ஒளி” பத்திரிகையின் 15 ஆண்டு நிறைவை முன்னிட்டு வெளியிடப்பட்ட விசேட பதிப்புக்கு “ஊடகம்” குறித்த ஒரு கட்டுரையொன்று கேட்டுக்கொண்டதற்கிணங்க எழுதிய கட்டுரை. மனதில் குடைந்துகொண்டிருந்த விடயங்கள் பலவற்றை எழுத ஒரு வாய்ப்பாக இந்தக் கட்டுரையை பயன்படுத்திக்கொண்டேன். ஆனால் அக்கட்டுரையின் உயிர் பிரித்தெடுக்கப்பட்டு சிறிதாக்கி வெறும் ஜடத்தை பிரசுரித்து விட்டார்கள் (எழுதியவற்றில் மூன்றில் ஒருபகுதி). என்னிடம் கட்டுரையைக் கேட்ட நண்பர்களுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. அதேவேளை இந்தக் கட்டுரையை எதற்காக எழுதினேனோ அந்த கார்பரேட் மாபியாத்தனமே இதனை கொத்தி வெட்டியதிலும் நிகழ்ந்திருகிறது என்பதை வெட்டிய பகுதிகளைப் பார்த்தால் நீங்களே புரிந்துகொள்வீர்கள்.
“தெரிவிப்பது நாங்கள்…!
தீர்மானிப்பது நீங்கள்!”
இப்படியான ஊடக விளம்பரங்களை நாங்கள் பார்த்திருப்போம். மேம்போக்கில் ஆஹா நமது தெரிவுக்காக அக்கறையுடன் செய்தி தருபவர்களா இவர்கள் என்கிற பூரிப்பு வரும் அளவுக்கு அந்த விளம்பரங்களை நாம் கடந்திருப்போம்.
இதில் எந்தளவு உண்மை இருக்கிறது? தெரிவிக்கப்பட்டவற்றைக் கொண்டு தீர்மானிக்கிறோமா அல்லது தீர்மானிக்கப்பட்டவற்றைத் தான் பெறுகிறோமா? உண்மையைச் சொல்லப்போனால் தீர்மானிக்கப்பட்டவற்றைத் தான் பின்னர் நுகர்வோர் பெற்றுகொள்ளுகின்றனர் என்பதே கசப்பான உண்மை. மேம்போக்கில் இந்த கருத்தை எவராலும் மறுக்கவும் இயலும். ஆனால் இதன் பின்னால் உள்ள ஆழ்ந்த நுண்ணரசியலை நாம் ஆராய வேண்டும்.
இன்று உலகிலுள்ள பெரும்போக்கு (mainstream) ஊடகங்கள் பல ஊடகவியலாளர்களிடம் இல்லை. அது கார்ப்பரேட்டுகளிடமும், வியாபார, அரசியல், அதிகாரத்துவ சக்திகளிடமே உள்ளது. ஆக தீர்மானிக்கும் சக்திகளாக ஊடகவியலாளர்கள் இல்லை. அதற்கு அன்றாட உதாரணங்கள் எத்தனையோ ஊடகவியலாளர்களால் கூற முடியும். ஆக தகவலும், கருத்தும் நம்மிடம் எங்கே இருக்கிறது. அது கட்டுபடுத்தப்பட்டது. ஆதிக்க தரப்பிடம் சிக்கியுள்ள ஊடகத்துறையை அந்த ஆதிக்கத தரப்பு நேரடியாக தணிக்கை செய்ய வேண்டுமென்பதில்லை அவர்களின் தேவையை உணர்ந்து தாமே ஒரு வகை சுயதணிக்கைகளுக்கு உடபடுத்தித் தான் இன்று ஊடகவியலாளர்கள் இயங்கும் நிலை. அவர்களின் இருப்புக்கு வேறு வழி இல்லை என்றே கூறினால் அது மிக இல்லை.
ஊடகவியலாளர்கள் ஊடக நெறிக்கு மாத்திரம் கட்டுப்பட்டவர்கள் அல்லர். தாம் சம்பளம் வாங்கும் எஜமானர்களின் விதிக்கும் நெறிகளுக்கும் தவிர்க்கமுடியாதபடி கட்டுபட்டவர்களே.
இன்று எது மக்களுக்குத தேவையோ, எதை மக்களுக்கு வழங்கவேண்டுமோ அதைக் கொடுப்பதிலும் பார்க்க, “எதைத் தம்மால் கொடுக்க முடியுமோ” அதைக் கொடுக்கும் நிலை உருவாகியுள்ளது. லட்சிய ஊடக படைப்புகளுக்கு பதிலாக, தமது இயலுமைக்கு உட்பட்ட விடயங்களுடன் மட்டுபடுத்திக்கொண்ட ஊடகவியலாளர்கள் உருவாக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலை மாற்றப்பட வேண்டும். இலங்கையில் உள்ள ஊடக அமைப்புகள் கூட தமது உரிமைகளுக்காக அரச அதிகாரத்திற்கு எதிராக போராடும் அளவுக்கு ஊடக நிறுவனங்களில் தமது கருத்துச் சுதந்திரத்துக்காகப் போராடும் நிலை இல்லையே ஏன் என்கிற கேள்வியை இங்கு எழுப்ப வேண்டியிருக்கிறது. தாம் சுயதணிக்கையுடன் பணி புரிகிறார்களா இல்லையா என்பதை இதய சுத்தியுடன் சுய விசாரணை செய்துகொள்ளவேண்டும்.
தகவல்கள், தரவுகள் என்பன செய்தியாகி அவை கருத்துருவாகி சித்தாந்த உருவாக்கத்துக்கும், சிந்தனையுருவாக்கத்துக்கும் வித்திடுகிறது. இந்த போக்கில் தகவல்களும் தரவுகளும் மிகவும் அடிப்படையானவை. ஆக முதல் கோணல் முற்றிலும் கோணலுமாக ஆகின்றதென்றால் தகவல் உறுதியானதாகவும், உண்மையானதாகவும் இருக்க வேண்டும் என்பது முன்நிபந்தனை.
எந்த தகவல் வழங்கப்படவேண்டும், எது தவிர்க்கப்படவேண்டும், எது எப்படி திரிக்கப்படவேண்டும், எது மட்டுறுத்தபடவேண்டும் போன்றவற்றை தீர்மானிப்பதில் செல்வாக்கு செலுத்தும் காரணிகளையும், காரணகர்த்தாக்களையும் நாம் பகுத்தறிய வேண்டியிருக்கிறது.
சராசரி நாளாந்த செய்திப் பத்திரிகைகளை மக்கள் அந்த தகவல்களுக்காகவே காத்திருக்கிறார்கள். ஆக சிந்தனாவுருவாக்கத்துக்கும், பகுப்பாய்வுகளுக்கும், மதிப்பீடுகளுக்கும் தலையாய இந்த தகவல்கள் யாரிடம் இருக்கிறது? யார் கட்டுபடுத்துகிறார்கள்? யார் தீர்மானிக்கிறார்கள்? எதை வெளியிடுவது எதைத் தவிர்ப்பது எவரிடம் சேர்ப்பிப்பது (விற்பது) என்பதை தீர்மானிப்பது யார்? இதில் ஊடகவியலாளர்களின் பாத்திரமென்ன, ஊடக நிறுவனங்களின் நிர்வாகத்தின் (எஜமானர்களின் ஏவலாளர்கள்) பாத்திரமென்ன? போன்ற கேள்விகளை நாம் எழுப்ப வேண்டியிருக்கிறது.
ஒரு காலத்தில் தேசியவாதம் ஊடகங்களில் விலைபோகக்கூடிய சிறந்த சரக்காக இருப்பதும் இன்னொரு சீசனில் தேசியவாதத்தை மறுப்பதே விலைபோகின்ற சரக்காகவும் ஆகிவிடுகிறது. இங்கு செய்தி, தகவல், கருத்து என்பன பல சந்தர்ப்பங்களில் சந்தையில் உள்ள கேள்வியை நிறைவு செய்யும் சரக்காக ஆக்கப்பட்டு விடுகிறது. இது அச்சு ஊடககங்களுக்கு மாத்திரமல்ல, இலத்திரனியல் மற்றும் இணைய ஊடகங்களுக்கும் அதிகம் பொருந்தும்.
தமது நலன்களுக்குட்பட்ட விடயங்களையும் வாசகர்களின் ஜனரஞ்சக அலைவரிசையையும் ஒருங்கிணைத்து (syncronize) அதற்கொப்ப இயங்கும் ஊடகத்துறையே இன்று உள்ளது. வாசகர்களின் ஜனரஞ்சக தேவை என்பது ஏற்கெனவே இதே ஊடகங்களால் புனையப்பெற்றவை என்பதிலிருந்து இதனை நாம் விளங்கிக்கொள்வது அவசியம்.
இன்றைய மக்களின் சுதந்திரமான சிந்தனைக்கு அச்சுறுத்தலாக ஆகியிருக்கிறது இந்தப் போக்கு. இந்தபோக்கைத் தான் நாம் ஒரு வகையில் ஊடக பயங்கரவாதம் என்கிறோம். வலுவான மாற்று ஊடகங்கள் உருவாக்கப்படாத வரை, பலப்படுத்தப்படாத வரையில், இந்த ஊடக பயங்கரவாதம் ஒரு போதும் முடிவுக்கு வரப்போவதில்லை.
ஊடகங்களால் தாம் எவ்வாறு வழிநடத்தப்படுகிறோம் என்கிற நுண்ணரசியலைப் பற்றி ஊடகங்களை நுகர்வோர் கூட போதிய புரிதலை உணர முடியாதளவுக்கு வைத்திருப்பது தான் இன்றைய ஊடக உலகம் கண்டுள்ள மகத்தான வெற்றி.
ஊடகம் இன்று நம்மையெல்லாம் வழிநடத்துகிறது. நம்மை வழிநடத்துகிறது என்று கூறப்படுவதன் அர்த்தம் இன்றைய எமது சிந்தனைகளை தீர்மானிப்பதாக அது ஆகிவிட்டிருக்கிறது. இன்றைய பெரும்போக்கு (mainstream) எது என்று தீர்மானிக்கும் சக்தியாக அது ஆகிவிட்டிருக்கிறது. பிற்போக்கு ஆதிக்க சித்தாந்தங்களை பெருங்கதையாடல்களாக ஆக்கி அவற்றை நிலைநிறுத்தும் கருவியாக இது ஆகிவிட்டிருக்கிறது.
ஊடகத்தை யார் கொண்டிருக்கிறாரோ அவரிடம் – அச்சக்தியிடம் மனித நடத்தையை கட்டுப்படுத்தும் அதிகாரம் இருக்கிறதென்று கூறலாம். ஊடகத்தை கொண்டிருப்பவர் அல்லது கொண்டிருக்கும் சக்தியிடமே சிந்தனையை மட்டுப்படுத்தும், கட்டுப்படுத்தும், வழிநடத்தும் சக்தி உண்டு. இவ்வாதத்துக்கு மறுப்பு கூறும் சாரார் இதனை, இன்னும் ஊடகம் சென்றடையாத பின்தங்கிய நாடுகளில்’ பின்தங்கிய கிராமங்கள் அதிகமுள்ள உலக சமுதாயத்தில் இக்கருத்து எப்படி சரியாகும் என வினவுவர். ஆனால் பின்தங்கச் செய்யப்பட்ட சமுதாயங்களில் நிச்சயம் ஊடகம் நேரடியாக சென்றடைய வேண்டுமென்பதில்லை. அந்த சமுதாயங்களை அதிகாரம் செலுத்துகின்ற சமூக, பொருளாதார, அரசியல், பண்பாட்டம்சங்கள் இந்த ஊடகங்களால் ஏலவே வழிநடத்தப்பட்டிருக்கும். ஆக, இன்று இந்த ஊடகம் வழிநடத்தாத எந்த சமூகமும் உலகில் இல்லை. ஊடகம் இன்று சகலவற்றையும் தீர்மானிக்கின்ற முக்கிய கருவியாக ஆகிவிட்டிருக்கிறது. இன்றைய ஊடகங்களை தன்னகத்தே கொண்டிருக்கும் அதிகாரத்துவ சக்திகள், தமது அதிகாரத்தை நிலைநாட்ட ஊடகங்களை மிகவும் தந்திரமாகவும் நுட்பமாகவும் கையாண்டு வருகின்றன. ஏற்கெனவே புரையோடிப் போயிருக்கின்ற அதிகாரத்துவ சிந்தனைகளை, ஆதிக்க சிந்தனைகளை, உறுதியாக பலப்படுத்துவதில் இந்த கைதேர்ந்த ஊடகங்களைக் கையாள்கின்றன.
ஆதிக்க பிற்போக்கு சிந்தனைகளையும், மரபார்ந்த அதிகார ஐதீகங்களையும் மீளுறுதி செய்கின்ற வகையில் அதன் சித்தாந்த மேலாதிக்கத்தை இந்த ஊடகங்களைக் கொண்டே இன்று உலகம் முழுவதுமாக அதிகார சக்திகள் செய்து வருகின்றன. ஆதிக்க சித்தாந்தங்களை ஜனரஞ்சகமாக நிலைநாட்டுவதிலும் மூளைச்சலவை செய்து அடிபணிய வைக்கும் முயற்சியிலும் இந்த ஊடகங்களை மிகவும் நுட்பமாக பயன்படுத்தி வருகின்றன.
நோம் சொம்ஸ்கி இதனை தொடர்பூடக பயங்கரவாதம் (Media Terrorism) என்கிறார். இந்தப் போக்கை ஆராய்கின்ற இன்னும் சில சமூகவியலாளர்கள் இதனை தொடர்பூடாக மாபியா (Media Mafia) என்றும் ஊடக வன்முறை (Media Violation) என்றும் குறிப்பிடுகின்றனர். ஒட்டுமொத்தத்தில் இந்த ஊடகங்கள் இன்று ”அதிகாரத்துவத்தின் கருவிகளாக” (Media as a Weapon of power ) பயன்படுத்தப்படுகின்றன.
போர்க்கருவியாக ஊடகம்
வர்க்கம், பால்வாதம், இனவாதம், வயதுத்துவம், பதவி, சாதியம், நிறவாதம் என பல்வேறு வடிவங்களிலும் நிலவுகின்ற ஆதிக்க உறவுகள், அதிகாரத்துவமாக தொடர்ந்தும் நிலைபெற அவற்றிற்கு நியாயம் கற்பிக்கப்பட வேண்டும். “மதத்தின்” பெயரால், ”தூய்மை”யின் பெயரால் இந்த கற்பிதங்கள் குறித்து மூலைச்சலவை மிகுந்த சித்தாந்த மோதிக்கத்தை நிலைநாட்டியே ஆகவேண்டும்.
இப்படி கருத்தேற்றம் செய்யப்பட்ட கற்பிதங்களை நிலைநாட்டுவதில் ஊடகம் முக்கிய பங்காற்றி வருகின்றன. இந்த வகையில் ஊடகம் பற்றிய நமது பார்வை எளிமைப்படுத்தப்பட்டே இருக்கின்றன. குறைத்து மதிப்பிடப்படுகின்றன. ஊடகம் நம்மை ஒன்றும் செய்து விடமுடியாது என்கின்ற மாயையில் இருத்தப்பட்டுள்ளோம். எனவே தான் ஊடகத்தின் வடிவம், பண்பு, அதன் திசைவழி என்பன குறித்து அவ்வளவாக எம்மத்தியில் அக்கறை கிடையாது.
ஒரு தொலைக்காட்சி நிறுவனம் 30 வினாடிகள் கொண்ட ஒரு விளம்பரத்துக்கு சராசரியாக எவ்வளவு அறவிடப்படுகிறது என்பதைத் தெரிந்தால் அசந்து போவோம். ஒரு தடவைக்கு இவ்வளவு அறவிடப்படுகிறதென்றால் எத்தனை முறை குறிப்பிட்ட விளம்பரம் வருகின்றது? அப்படியெனில் எவ்வளவு தொகை ஆகிறது? நம்மீது அது எந்த விளைவையும் ஏற்படுத்தப் போவதில்லையென்றால் ஒரு நிறுவனம் ஏன் இவ்வளவு தொகையை அவ்விளம்பரத்துக்கென ஒதுக்குகிறது? அவ்வாறெனில் விளம்பரம் எவ்வாறு எம்மில் பிரதிபலிக்கின்றது? என்ன விளைவை ஏற்படுத்துகிறது?
இன்று சகல தளங்களிலும் தகவல்களுக்கும், தரவுகளுக்கும் பெரும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. அது போலவே தகவல்களை களஞ்சியப்படுத்துவதற்கும் அவற்றைத் சந்தைப்படுத்துவதற்காவும் உலக அளவில் பாரிய பல்தேசிய கம்பனிகள் இயங்குகின்றன. தரவுகள், தகவல்கள் பரப்பப்படுவதற்கு – சந்தைபடுத்துவதற்கு முன்னரே அதன் நுகர்வோர் யார் என்பது இந்த தகவல் முதலாளிகளால் தீர்மானிக்கப்பட்டு விடுகின்றது. ஆக, தகவல் தொழில்நுட்பத்தின் மீது மூலதனம் பாரிய அளவு ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்கிறது.
தரவுகளையும், தகவல்களையும் சித்தாந்த சுமையேற்றி பரப்புகின்ற பணியை சகல ஆதிக்க சக்திகளும் மேற்கொண்டுவருகின்றன. அதற்கேற்றபடி அதன் வடிவம், வரிசை, உள்ளடக்கம், பண்பு என்பன கட்டமைக்கப்பட்டுவிடுகின்றன. இத்தகவல்களை வழங்குகின்ற சாதனமாக, சகலவற்றையும் தீர்மானிக்கும் சக்தியாக இந்த ஊடகங்கள் தோன்றி, வளர்ந்து, ஊடுருவி, வியாபித்திருக்கின்றது. ஆதிக்க சக்திகள் தமது அதிகாரத்துவத்தை தக்கவைக்க, அதனை விரிவுபடுத்த மிகக் கனமாக தகவல்களை உற்பத்தி செய்து, உற்பத்தி செய்யப்பட்ட அத்தகவலை அரசியல்மயப்படுத்தி’ கருத்தேற்றம் செய்து அல்லது புனைந்து, திரிபுபடுத்தி, பெருப்பித்து, சிறுப்பித்து சந்தைக்கு விடுகின்றன.
இதற்காக இரண்டு வகை பிரதான தந்திரோபாயங்களை அது அணுகும். முதலாவது, சந்தையில் ஏற்கெனவே கேள்வி அதிகம் (ஏற்கெனவே புரையோடிப்போயுள்ள ஆதிக்கக் கருத்துக்கள்) எதற்குண்டு என பார்த்து அந்த இடைவெளியை நிரப்புவது. இரண்டாவது, தம்மால் சந்தைப்படுத்த விரும்புகின்ற புதிய செய்திகளை கருத்தாக்கங்களை, புனைவுகளை சந்தைக்கு விட்டு சமூகத்தை அதற்கு பழக்கப்படுத்துவது, போதைகொள்ளச் செய்வது.
இந்த நூற்றாண்டின் அறிவைக் கட்டுப்படுத்தும் மிகப்பெரும் தீர்மானிக்கும் சக்தியாக ஊடகம் (media) மாறியிருக்கிறது. சமீப காலமாக சமூக ஊடகங்களின் செல்வாக்கு பாரம்பரிய ஊடக போக்கை புரட்டிப்போடத் தொடங்கியிருக்கிறது. ஒரு வகையில் கட்டற்ற கருத்துப் பரிமாறலுக்கான வெளியையும், பஞ்சமற்ற தகவல் வெளியை ஏற்படுத்தியதாக ஒரு மாயத்தோற்றத்தை அது தருகிறது. அதேவேளை ஆதிக்க தரப்பிடமே அதன் நெம்புகோல் தொடர்ந்தும் இருக்கிறது. தகவல்களையும், தரவுகளையும் கருத்தாக்கமாக மாற்றித்தரும் செயன்முறை ஆதிக்க மற்றும் அடக்குமுறைகுள்ளாகும் சக்திகளுக்கிடையேயான ஒரு போராக தொடர்ந்தும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.
கூகிள் ஒரு முன்னுதாரணம்
இன்று உலகளாவிய ரீதியில் தகவல் ஏகபோகத்தையும், கருத்து ஏகபோகத்தையும் படிப்படியாக பறித்து, அறிவுத்துறை ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது கூகிள். இலவச சேவைகளை பலவற்றை வழங்கிவருதற்கூடாக உலகின் பெருவாரியோனரை கூகிளின் அடிமையாக ஆக்கி வைத்திருக்கிறது. தாம் அடிமைப்பட்டு இருக்கிறோம் என்பதை விளங்கியவர்கள் கூட தன் சேவைகளிலிருந்து விலக முடியாதபடி ஒரு உலகத்தை உருவாக்கி ஆக்கிரமித்து வருகிறது. அதன் வளர்ச்சிப்போக்கு ஒருபுறம் இலவசங்களுக்கு அடிமையான அப்பாவி நுகர்வோருக்கு வசதியாக இருந்தாலும் மறுபுறம் வோட்டு கேட்காமலேயே உலகை கட்டுபடுத்துகின்ற அதிகாரியாக தம்மை ஆக்கியுள்ளது கூகிள் என்றால் அது மிகையில்லை.
இது குறித்து சிவா சத்தியநாதன் என்கிற அமெரிக்கர் எழுதிய “The Googlization of Everything” நூல் மிகவும் பரபரப்பாக பேசப்படுகிறது. அனைத்தும் கூகிள்மயமாகிவருவதன் ஆபத்தை அவர் நான்கு வருடங்களுக்கு எழுதிய நூல் நவீன ஊடகத்துறை குறித்த ஆய்வுகளுக்கு மிகவும் முக்கியமான ஒன்று. கூடவே கூகிள் தேடிபொறி இயந்திரத்தின் ( search engine) எகபோகத்தையும் தன்வசமாக்கியுள்ள கூகிள் உலகில் வலைத்தளங்களை வைத்திருப்போருக்கு கொடுத்திருக்கும் SEO (search engine optimization) நிபந்தனைகளின் மூலம் அவற்றின் எல்லைகளையும் வரையறுக்கிறது. அந்த நிபந்தனைகளை எற்பவர்களையே தமது தேடுபொறி இயந்திரத்தில் உரிய இடத்தை வழங்கமுடியும் என்கிற ஆணை கூர்ந்து கவனிக்கத்தக்கது.
அதிகாரம், பணம் போன்ற ஆதிக்க, அதிகார வர்க்க, ஏகபோக, முதலாளித்துவ சக்திகளின் கூட்டுத் தேவையை நிறைவு செய்வதன் மூலம் இலாபம் சம்பாதிப்பதே கூகிளின் அடிப்படை நெறி. இதில் மக்கள் நலன் என்பது வெறும் கண்துடைப்பே.
ஊடக முதலாளிகளின் நலன்களுக்குட்பட்ட விடயங்களையும் வாசகர்களின் ஜனரஞ்சக அலைவரிசையையும் ஒருங்கிணைத்து (syncronize) அதற்கொப்ப இயங்கும் ஊடகத்துறையே இன்று உள்ளது. வாசகர்களின் ஜனரஞ்சக தேவை என்பது ஏற்கெனவே இதே ஊடகங்களின் புனைவுகளுக்கு ஆட்பட்டவை என்பதிலிருந்து இதனை நாம் விளங்கிக்கொள்வது அவசியம்.
இன்றைய மக்களின் சுதந்திரமான சிந்தனைக்கு அச்சுறுத்தலாக ஆகியிருக்கிறது இந்தப் போக்கு. இந்தபோக்கைத் தான் நாம் ஒரு வகையில் ஊடக பயங்கரவாதம் என்கிறோம். வலுவான மாற்று ஊடகங்கள் உருவாக்கப்படாத வரை, பலப்படுத்தப்படாத வரையில், இந்த ஊடக பயங்கரவாதம் ஒரு போதும் முடிவுக்கு வரப்போவதில்லை.
நன்றி – சுடரொளி
ஆரோக்கியமான ஊடகச் சூழலின் அவசியம்
கனகலிங்கம் கோபிகிருஷ்ணா
உலக பத்திரிகைச் சுதந்திர தினம், நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் மே 3ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் இத்தினம், இவ்வாண்டும் வந்து போயிருக்கிறது. மகளிர் தினம், சிறுவர் தினம், விசேட தேவையுடையோர் தினம் போல, இதுவும் ஒரு தினம். ஆண்டின் ஒரு நாளில், அத்தினம் குறித்த கலந்துரையாடல்கள் மட்டுப்படுத்தப்படும் ஒன்றாக மாறிவிடக்கூடாது. இவ்வாறான தினங்கள் மூலம், அவற்றைப் பற்றிய கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டு, ஆண்டு முழுவதும் அவை தொடர வேண்டும்.
ஜனநாயகத்தின் 4 பிரதான தூண்கள் என்று சொல்லப்படுபவற்றில், நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்கம், நீதித்துறை, ஊடகங்கள் என, 4ஆவது இடத்திலேயே ஊடகங்கள் வருகின்ற போதிலும், அதற்கு மேலுள்ள 3 தூண்களும் சரியாகச் செயற்படுகின்றனவா என்பதைக் கண்காணித்து, மக்களுக்கு அறிவிக்கும் முக்கியமான பொறுப்பு, ஊடகங்களுக்கு உண்டு. ஊடகங்கள் என்று வரும் போது, வழக்கமான பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், வானொலிகள் போன்ற பெருந்திரள் ஊடங்களைத் தாண்டி, இணையத்தில் காணப்படும் செய்தித் தளங்களும் சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல்களும் கூட, ஊடகங்கள் என்ற வகைக்குள்ளேயே அடங்குகின்றன.
இந்த ஊடகங்களால் கட்டியெழுப்பப்படும் ஆரோக்கியமான சூழலே, ஆரோக்கியமான ஜனநாயகத்தையும் ஆரோக்கியமான சமூகங்களையும் கட்டியெழுப்ப முடியும். ஆனால், இன்றைய காலகட்டத்தில், உலகத்திலும் சரி, இலங்கையிலும் சரி, ஆரோக்கியமான ஊடகச் சூழல் நிலவுகிறதா என்ற கேள்வி, முக்கியமாக எழுப்பப்பட வேண்டிய ஒன்றாக இருக்கிறது. எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பினால், கடந்த புதன்கிழமை (26) வெளியிடப்பட்ட, ஊடகச் சுதந்திரச் சுட்டி, இது பற்றிய கலந்துரையாடலுக்கு முக்கியமானது. ஐக்கிய அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, உலகம் முழுவதிலும், ஊடகச் சுதந்திரமென்பது ஆபத்துக்கு உள்ளாகியுள்ளதாக, அதன்போது குறிப்பிடப்பட்டது.
இந்தச் சுட்டியில், இலங்கைக்கு 141ஆவது இடம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டும், இதே இடத்தில் தான் இலங்கை காணப்பட்டது. மேற்கத்தேய நாடுகள், தங்களை முன்னிலைப்படுத்துவதற்கான தகவலே இதுவென, இலகுவாகக் கூறிவிட்டுக் கடந்துபோக முடியும். ஆனால், உச்சபட்ச ஊடகச் சுதந்திரம் காணப்படுகிறது என நாம் எண்ணும் ஐக்கிய இராச்சியம், 40ஆவது இடத்தில் காணப்படுகிறது; ஐக்கிய அமெரிக்கா, 43ஆவது இடத்தில் காணப்படுகிறது. இலங்கையை விட உக்ரேன், ஆப்கானிஸ்தான், நேபாளம், பிரேஸில், மத்திய ஆபிரிக்கக் குடியரசு, மாலி, மாலைதீவுகள், பிலிப்பைன்ஸ், சிம்பாப்வே, கமரூன், மியான்மார், வெனிசுவேலா போன்ற, உள்நாட்டுப் போர் அல்லது உள்நாட்டுக் குழப்பங்கள் நிலவும் நாடுகள், சிறப்பான ஊடகச் சுதந்திரத்தைக் கொண்டுள்ளன என்பது, இங்குள்ள நிலைமையை இலகுவாக வெளிக்காட்டுகிறது.
ஊடகங்களுக்கு ஓரளவு சுதந்திரத்தை வழங்கக்கூடியது எனக் கருதப்படும் இந்த அரசாங்கம் வருவதற்கு முன்பாக, இலங்கையில் நிலைமை, 165ஆவது இடத்தில் காணப்பட்டது. எனவே, இந்த முன்னேற்றமென்பது முக்கியமானது என்ற போதிலும், 2015ஆம் ஆண்டிலிருந்து 2016ஆம் ஆண்டில் 24 இடங்கள் முன்னேறிய இலங்கை, 2016இலிருந்து 2017க்கு, எந்தவித முன்னேற்றத்தையும் வெளிப்படுத்தவில்லை என்பது கவலையானது.
இலங்கையின் அண்மைக்கால வரலாற்றில், எதிர்க்கட்சிகளாக இருக்கும் போது, ஊடகங்களினதும் மக்களினதும் உரிமைகளுக்காகப் போராடுவதும், ஆட்சிக்கு வந்த பின்னர், எதிர்க்கட்சிகளாக இருக்கும் போது, தவறானவை என்று சொன்னவற்றைச் செய்வதும் வழக்கமானது தான். எனவே, இதுவொன்றும் ஆச்சரியமளிப்பதாக இல்லை. இது இவ்வாறிருக்க, ஊடகச் சுதந்திரமென்பது இவ்வாறான நிலைமையில் இருக்கும் போது, ஆரோக்கியமான ஊடகச் சூழல் பற்றிய உரையாடல்களும் பாதிக்கப்படுவது வழக்கமானது. ஆனால், இதைத் தாண்டி, இருக்கின்ற சுதந்திரத்துக்குள், இருக்கின்ற வாய்ப்புகளுக்குள், ஆரோக்கியமான சூழலொன்றைக் கட்டியெழுப்புவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றனவா என்ற கேள்வி முக்கியமானது.
ஏற்கெனவே சொல்லப்பட்டதன்படி, ஊடகங்கள் என்பன, இணையவழிச் சேவைகளையும் உள்ளடக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளாகியுள்ளன. இது, பல வழிகளில், ஆரோக்கியமான நிலைமையை ஏற்படுத்தியிருக்கிறது. உடனுக்குடன் செய்திகளை வழங்க வேண்டிய நிலைமை; ஏதேனும் பிழை ஏற்பட்டால், உடனடியாகவே சுட்டிக்காட்டப்பட்டு, திருத்தக்கூடிய நிலைமை; கட்டுப்பாடின்றி, எத்தனை செய்திகளையும் பகிரக்கூடிய வசதி போன்றன, இதில் முக்கியமானவை. அத்தோடு, குறிப்பிட்ட ஒரு சிலருக்கு மாத்திரமே வரையறுக்கப்பட்டிருந்த ஊடகத் தொழிலை, அனைவருக்காகவும் இது திறந்து விட்டிருக்கிறது. இதன்மூலம், ஒரு குறிப்பிட்ட மேல்தட்டு வர்க்கங்களால் நடத்தப்பட்ட ஊடகத் தொழில், அனைவருக்கானதுமாக மாறியிருக்கிறது.
எனவே, செய்திகளைத் தணிக்கை செய்து, மறைக்க முடியாத நிலை உருவாகியிருக்கிறது. ஆனால், அனைவருக்குமாக ஊடகங்கள் மாறியமை தான், பிரச்சினையையும் உருவாக்கியிருக்கிறது. இணையத்தளச் செய்திகளில், ஊடக தர்மங்களைப் பற்றி கவலைப்படாமல், எதையும் பிரசுரிக்கக்கூடிய நிலைமை உருவாகியிருக்கிறது. ஆரோக்கியமான வழியில் இச்சுதந்திரம் பயன்படுத்தப்பட்டால், மாபெரும் மாற்றங்களை ஏற்படுத்த முடியும். மாறாக, தனிநபர்களையும் சமூகங்களையும் இலக்குவைத்து, செய்தியும் தகவல்களும் வெளியிடப்படுகின்றன. இவற்றின் காரணமாக, ஆரோக்கியமற்ற ஊடகச் சூழலொன்று ஏற்பட்டு, பெருந்திரள் ஊடகங்களும், அவ்வாறான உறுதிப்படுத்தப்படாத தகவல்களை வெளியிடும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது, கேள்வி – விநியோகம் என்ற கொள்கையில் அடிப்படையில் இடம்பெறுகின்றது. அவ்வாறான செய்திக்கு, மக்களின் ஆதரவு காரணமாக, அவ்வாறான செய்தியைப் பதிப்பிப்பதாக, ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த விடயம், இரண்டு தரப்பிலிருந்தும் ஆராயப்பட வேண்டியதொன்றாகும். ஒரு பக்கமாக, ஊடகங்களால் பிரசுரிக்கப்படும் பெறுமதியற்ற செய்திக்கும் உறுதிப்படுத்தப்படாத செய்திக்கும், மக்களிடத்தில் வரவேற்பு இருக்கின்றமை மறுக்க முடியாது. குறிப்பாக, இணையவழிச் செய்திகளில், இவ்வாறான நிலைமை, மிக அதிமாக இருக்கிறது. இப்போது அனைத்துமே, அதிக வருகைகள், அதிக வருமானம் என்றாகிப் போன பின்னர், அவ்வாறான செய்தியைப் பகிர்வதற்கு, ஊடக நிறுவனங்கள் முயல்வதில் ஆச்சரியமில்லை.
இந்நிலையைக் குறைக்க வேண்டுமாயின் அல்லது தடுத்து நிறுத்த வேண்டுமாயின், அவ்வாறான செய்தி வாசிப்பதை, மக்கள் நிறுத்துவது, இலகுவான தீர்வாக அமையும். கடினமாக உழைத்து, ஆராய்ந்து எழுதப்படுகின்ற செய்திக்கு, மக்களிடத்தில் வரவேற்பு அதிகமாக இருக்குமாயின், அவ்வாறான செய்தியை எழுத, ஊடகவியலாளர்கள் கட்டாயப்படுத்தப்படுவர். தற்போதைய சூழலில், அந்த நிலைமை இல்லை என்பதே உண்மையானது. மறுபக்கமாக, மக்கள் எதை விரும்புகிறார்கள் என்பதிலும் மக்களுக்கு எது தேவை என்பதிலும், தெளிவான நிலைப்பாட்டை, ஊடகங்கள் கொண்டிருக்க வேண்டும். வீதியில் மதுபோதையில் ஆட்டம் போட்ட முதியவரின் காணொளியென்பது, மக்களிடத்தில் அதிக வரவேற்பைப் பெறும் என்பதைப் போல, தற்போது அமைச்சரவையில் அங்கிகாரம் பெறப்பட்டுள்ள, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கொள்கை வரைவு பற்றிய முழுமையான செய்தி, மக்களுக்குத் தேவை என்பதையும், ஊடகங்கள் புரிந்துசெயற்பட வேண்டும்.
முதலாவது வகைச் செய்தியை மாத்திரம் வழங்கிக் கொண்டிருப்பது, தன்னைச் சுற்றியுள்ள சூழல் பற்றிய பிரக்ஞைகளற்ற பிரஜைகளை உருவாக்கவே வழிவகுக்கும். அந்தத் தவறை, ஊடகங்கள் புரியக்கூடாது. அடுத்ததாக, உலக மட்டத்திலும் சரி இலங்கையிலும் சரி, ஊடகவியலாளர்கள், போதிய ஊதியத்தைப் பெறாமை என்பது காணப்படுகிறது. இது, யதார்த்தமாக அமைந்திருக்கிறது. ஆரோக்கியமான ஊடகச் சூழல் கட்டியெழுப்பப்பட வேண்டுமாயின், இந்த நிலைமை மாற வேண்டும். வேறு தொழில் வாய்ப்புகளின்றி, ஊடகவியலைத் தேர்ந்தெடுக்கும் அவலம், தொடரக்கூடாது.
அதற்கு, ஊதியங்கள் அதிகரிக்கப்படுமாயின், திறமைவாய்ந்தவர்களை, இத்துறைக்குள் ஈர்க்க முடியும். மேம்போக்கான அறிவைக் கொண்டவர்களால், ஆழமான அர்த்தங்களைக் கொண்டுவரும் செய்தியை உருவாக்க முடியாது. இதற்கு, இலங்கையின் ஊடகவியல் பயிற்சிகளின் தரமும் உயர்த்தப்பட வேண்டும். ஊடகவியல் பயிற்சிகளின் முடிவில் வெளிவரும் ஒருவர், முழுநேர ஊடகவியலாளராகப் பணியாற்றக்கூடிய தரத்தைக் கொண்டிருக்கின்றமை, உறுதிப்படுத்தப்பட வேண்டும். இவைகள் அனைத்துமே, இலங்கையின் ஊடகவியல் துறையிலும் செய்தியை நுகர்வதிலும், ஏற்படுத்தப்பட வேண்டிய மாற்றங்களாக இருக்கின்றன. இதன்மூலமே, ஆரோக்கியமான ஊடகச் சூழலொன்று கட்டியெழுப்பப்பட்டு, கிடைக்கும் ஊடகச் சுதந்திரம், பயனுள்ள விதத்தில் பயன்படுத்தப்படுமென்பது யதார்த்தமாகும். ஊடகத்துறையில் காணப்படும் தவறுகளை, ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் உணராதவரை, எந்தவித முன்னேற்றங்களும் ஏற்படப் போவதில்லை என்பது, யதார்த்தமே.
Comments
Post a Comment