தீண்டாதவர்களென்றால் யார்?.

 மநுமக்களில் தீண்டாதவர்களென்றால் யார். 

அயோத்திதாசர் சிந்தனைகள் 27.
பக்கம்  686

மநுமக்களில் தீண்டாதவர்களென்றால் யார்.

பூர்வ நீதி சாஸ்திரங்கள் யாரைத் தீண்டக்கூடாதென்றுக் கூறுகிற தென்னில், வஞ்சகர்களைத் தீண்டப்படாது, உறவாடி குடிகெடுப் போரைத் தீண்டப்படாது, கொலைஞர்களைத் தீண்டப்படாது, அவர்களது தெரிசனமுங் காணப்படாதென வரைந்துள்ளார்கள். பெருந்திரட்டு தன்னெஞ்சந் தனக்குச் சான்றதுவாகத் தத்துவனன் குணராதே வன்னெஞ்சனாகிக் கூடமே புரிவோன் / வஞ்சகக் கூற்றினுங் கொடி யோன் பன்னுங் காலவன்றன் றெரிசனம் பரிசம் / பழுதுநீரைய வேதுவுமாம் புன்னெஞ்சாலவனும் போய்நர கெய்தி / பூமியுள்ளளவு மேறானால். இவற்றை அநுசரித்து வைத்திய சாஸ்திரிகள் யாரைத் தீண்டப் படாதென்று கூறுகின்றார்களென்னில், குஷ்டரோகிகளையும், விஷபேதி கண்டவர்களையும், விஷமாறி கண்டவர்களையும் நெருங்கவும்படாது தீண்டவும்படாது என வரைந்து வைத்திருக்கின்றார்கள். இத்தகைய செயலே மதுகுல ஒழுக்கத்திற்கும்செயலுக்கும் விவேக மிகுத்தோர் கருத்திற்கும் பொருந்தியதாகும். அங்ங்னமின்றி இத்தேசத்துப் பூர்வக் குடிகளும், விவேகமிகுத்தவர்களும் எக்காலும் தேகத்தை வருத்தி சம்பாதித்துப் புசிக்கக்கூடிய ரோஷ முடையவர்களுமாகிய அறுபது லட்சங் குடிகளை தீண்டாதவர்களென்பது விவேகக்குறைவும் பொறாமெய் மிகுதியுமேயாம். காரணம் ஒர் குஷ்டரோகி தன்னை உயர்ந்தசாதியோனென சொல்லிக்கொண்டு சுகதேகியைக் கண்டவுடன் அவனைத் தீண்டாதவனென்று விலகுவானாயின் சுகதேகியை குஷ்டரோகி தீண்டலாகாதென்று விலகினானா அன்றேல், சுகதேசி குஷ்டரோகியை, தீண்டலாகாதென்று விலகினானா என்பதை சீர்தூக்கி ஆலோசிக்குங்கால் குஷ்டரோகி பெரியசாதியென்று சொல்லிக்கொள்ளுவோனாயிருப்பினும் அவனை ஒர்சுகதேகி அணுகவுமாட்டான் தீண்டவுமாட்டானென்பது திண்ணம். இதற்குப் பகரமாய் பார்ப்பார்களென்போர் வீட்டில் சகலரும் புசிக்கலாமென்று ஏற்படுத்தி வைத்துக்கொண்டிருந்த போதிலும் அவ்வீட்டுப் பார்ப்பான் குஷ்டரோகியாயிருப்பானாயின் அவன்ை தெரிந்தோர் அவ்வீட்டிற்குப் போகவுமாட்டார்கள், அவனிடம் பலகாரங்களை வாங்கி புசிக்கவுமாட்டார்கள். இஃது சாதியால் விலகியச் செயலா, குஷ்டத்தால் விலகியச்செயலா. அவன்வீட்டுள் செல்லாதற்கும், புசிக்காததற்கும், தீண்டாததற்கும் குஷ்டமே காரணமாயிருக்கின்றதன்றி பெரியசாதியெனப் பெயர் வைத்திருப்பினும் பிரயோசன மில்லையென்பதே பிரத்தியட்சமாகும். ஒர் மனிதன் தன்னைபிராமணனென்று உயர்த்திக்கொண்டு சாதித்தலைவனா யிருப்பினும் அவனிடம் குடி, விபச்சாரம், களவு முதலிய துற்செயல்கள் நிறைந்திருக்குமாயின் அவனை பிராமணனென்று எண்ணி சகலர் வீட்டிலும்சேர்ப்பார்களோ, சகலரும் அவனை நெருங்குவார்களோ, ஒருக்காலும் சேர்க்கவுமாட்டார்கள், நெருங்கவுமாட்டார்கள். இவற்றிற்கு சாதி காரணமா, செயல் காரணமாவென நோக்குங்கால் தீண்டுவோர் தீண்டப்படாதோர் என்பதற்கு அவனவன் செயலும் ரோகமுமே காரணமன்றி சாதி காரணமல்ல என்பது பரக்க விளங்கும். ஆதலின் சாதியென்னும் பொய்ம்மொழியால் ஒருவனைத் தீண்டலாகாதென்பது பொய், பொய்யேய்ாம். அவனவன் துற்செயல்களினாலும் அவனவனுக்குத் தோன்றியுள்ளக் கொடிய ரோகங்களினாலும் தீண்டலாகாதென்பது மெய், மெய், மெய்யேயாம். இங்ங்ணமிருக்க சிலக் கூட்டத்தோர் தங்கள் பொறாமெய் மிகுதியால் றுகோடிக்கு மேற்பட்ட மதுமக்களை தீண்டாதவர்களென்று கூறித் ప్లేస్గి శ్రీ அதன் காரணம் யாதென்பீரேல் கூறுதும், இந்திரதேயமெங்கணும் புத்த தன்மம் நிறைந்திருந்தகாலத்தில் சில அன்னியநாட்டார் இத்தேசத்தில் குடியேறி புத்தசங்க அறஹத்துக்களாம் அந்தணர்களைப்போல் வேஷமிட்டுக்கொண்டு சொற்ப சகட பாஷையாம்

Comments

Popular posts from this blog

தமிழகத்தில் சாதிகள் வரலாறு

ஊடகத்துறை Media

தமிழர்களின் கலை தொகுப்பு - அங்கள பரமேஸ்வரி