#மத்திய #மாநில #அரசுக்கு #கடும் #கண்டனங்களை தெரிவிக்கிறோம்:

#மத்திய #மாநில #அரசுக்கு #கடும் #கண்டனங்களை தெரிவிக்கிறோம்:

உலகம் முழுக்கக் காலத்தைப் பகுத்துக் கூறும் முறை - கி.மு. கி.பி.!
இது உலக நாடுகள் அனைத்தும் நடைமுறைப்படுத்தி வருகின்ற ஒரு காலப் பகுப்பு முறை!
இறையரசா் கிறிஸ்து பிறந்த ஆண்டிலிருந்து, இம்முறை வழக்காகி வருகிறது! நேற்று வரை தமிழகத்திலும் இதுவே நடைமுறையில் இருந்து வந்தது!
ஆனால் இன்று...
பொ.ஆ.மு.
பொ.ஆ.பி.
என்று மாற்றப்பட்டுள்ளன!
புதிய பாடத்திட்டம் எனச் சொல்லி அறிமுகப்படுத்திய பாட நூல்களில்...
கி.மு. கி.பி என வழக்கமான காலப் பகுப்பு முறை மறைக்கடிக்கப்பட்டுப், பொது ஆண்டுக்கு முன் (பொ.ஆ.மு) &
பொது ஆண்டுக்குப் பின் (பொ.ஆ.பி)
எனக் குறிப்பிடப்பட்டுள்ளன!
எப்படியாவது கிறிஸ்து எனும் பெயரை வரலாற்றிலிருந்த அகற்ற வேண்டும் எனும் முனைப்பு!
ஒன்றைப் புாிந்து கொள்ளுங்கள்!!
கிறிஸ்து எனும் நாலெழுத்து வரலாற்றை யாராலும் மறைக்கடிக்க முடியாது!
காலம் இவற்றைத்
துடைத்தெறியும்! மறைக்கடிப்புகளை
உடைத்தெறியும்!
புரட்சி வரலாறு
படைத்தெறியும்!
கிறிஸ்து பிறந்தது முதல் மாறியது காலப் பகுப்பு முறை
மட்டுமல்ல.. வாழியல் முறை, நாகரீகம், பண்பாடு கலாச்சாரம் என எல்லாமே மாறின!
பிறந்தது கிறிஸ்து மட்டுமல்ல...
புதுப் புரட்சி
புதுச் சிந்தனை
புதுத் தத்துவாா்த்தம்
போன்றவையும்
சோ்ந்தே பிறந்தன!
எல்லாம்
புதிதாயின!
காலம் எப்படி மாறினாலும், எல்லாக் காலத்துக்கும், எல்லா மக்களுக்கும் பொருந்தும் சித்தாந்தங்களை வகுத்துச் சொன்னவா் கிறிஸ்து!
கிறிஸ்து எனும் பெயரின்றி வரலாறே ஒருபோதும் எழுதவியலாது!
#கிறிஸ்துவே
#வரலாறு!
ஆம்...
#கிறிஸ்துவே வரலாற்றின் மையப்புள்ளி! அந்த மையப்புள்ளியில் இருந்து பிரிவதே காலமுறை! அது... கி.மு. கி.பி. என்றே அழைக்கப்பட வேண்டும்!
ஏனெனில்...
#இயேசுவே
#உலக_வரலாற்றின்
#மையப்_புள்ளி!
தமிழகத்தில் 6 மற்றும் 9 வகுப்பு  வரலாறு  பாடத்தில் இவர்கள் மாற்று திட்டம், பிஞ்சு நெஞ்சில் நஞ்சை விதைக்கும் செயல்.
வரலாற்றை மாற்ற முயற்சி செய்கிறார்கள்..
இதற்கு முன் வரலாற்றை மாற்ற நினைத்தவர்கள் என்ன ஆனார்கள் என்பதை உலகம் அறியும்.

Comments

Popular posts from this blog

தமிழகத்தில் சாதிகள் வரலாறு

ஊடகத்துறை Media

தமிழர்களின் கலை தொகுப்பு - அங்கள பரமேஸ்வரி