பணமதிப்பு நீக்கம்
பண மதிப்பு நீக்கத்திற்கு முன்,புழக்கத்தில் இருந்த தொகை.ரூ.15.40 இலட்சம் கோடி.பணமதிப்பு நீக்கத்திற்குப் பிறகு ரிசர்வ் வங்கிக்கு வந்த தொகை ரூ.15.28 இலட்சம் கோடி.அப்படியானால்,கறுப்புப் பணம் எனும் ஊழல் பணம் என்ன ஆனது?இத்தகைய பணமதிப்பு நீக்கம் என்னும் அரசின் முதிர்ச்சியற்ற,பக்குவமற்ற நடவடிக்கைக்கு,பொது மக்களும்,வணிகர்களும் கொடுத்த விலை அதிகம்!நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தார்கள்.நடுவீதிக்கு வந்த குடும்பங்கள் பல கோடி!பண மதிப்பு நீக்க காலத்தில், வங்கிகள் முன்பு கால் கடுக்க நின்ற மக்கள் பல கோடி!.இதற்கெல்லாம் காரணமானவர் பிரதமர் மோடி!அன்றாட வேலைக்குச் சென்று,ஒரு வேளை பசியாறுவோர்,வேலை ஏதுமின்றி பட்டினியாய் கிடந்தது பல நாட்கள்!சிறு தொழில்கள் முடங்கின!நாடு முழுவதும் வங்கிகளும்,மக்களும் ஒரே திசை நோக்கி பயணம் செய்ய வைக்கப் பட்டனர் அது ரொக்கப் பரிவர்த்தனையைத் தவிர்த்து,ரொக்கமில்லா ஆன்லைன் பரிவர்த்தனைக்கு மாற நிர்பந்திக்கப் பட்டனர்.தேச நலன் கருதி,வரிசையில் நில்லுங்கள் என்றார்கள்.பொதுமக்கள் நாமெல்லாம் வரிசையில் நிற்க,பெருமுதலாளிகளும்,பெருவணிக நிறுவனங்களும் இலாபத்திற்கு மேல் இலாபம் குவித்தார்கள்.இதனையெல்லாம்,மக்களே,நீங்கள் மறந்துவிடாதீர்கள்,இவர்கள்தான் நவீன ஜனநாயகத் தோற்றத்தில் காட்சி தரும்,"சர்வாதிகாரிகள்."-தகவல் உபயம்,"தி இந்து"தமிழ்.திங்கள்,செப்டம்பர் 3,2018.
Comments
Post a Comment