உண்மையான ஆசிரியர் தினம் எப்போது ?.

ஆசிரியர்கள், காவடி தூக்கி, கால் கை பிடித்துப் பெறும் பட்டங்களுக்கு (விருதுகளுக்கு) அலையாமல், பாவாணரைப் போல், பாவேந்தரைப் போல்  உண்மைக்கும் நேர்மைக்கும் போராடி அதன் எதிர்வினையால் அதிகாரத் தரப்பினால் கொடுக்கப்படும் குற்றக் குறிப்பாணைகள், பணி நீக்கங்களையே பட்டங்களாக ஏற்றுக் கொள்ளம் மனநிலையை  வளர்த்துக்கொள்ள வேண்டும்.

பார்ப்பனனாகப் பிறந்ததனால்  இராதாகிருட்டிணனைப் பார்ப்பனக் கூட்டங்கள் குடியரசுத் தலைவராக ஆக்கின. அவன் இந்த நாட்டுக்காகவோ, மக்களுக்காகவோ ஒரு துரும்பு ஈகம்கூட செய்தவனல்லன்.  ஓர் ஆசிரியராக இருந்து, அறிவியலடிப்படையில் தமிழ் மொழியின் உலக மொழி முதன்மையை நிலை நிறுத்தியதற்காகப் பணியை இழந்தவர் தமிழ் நாட்டில் பிறந்த மொழிஞாயிறு பாவாணர்.  இந்தி எதிர்ப்புப் போராட்ட காலத்தில் தற்கொலைப் போராட்டம் நடத்திய இளைஞர்களை உணர்ச்சி வயப்பட்டவர்கள் என்று, அன்றைய தில்லிப் பார்ப்பனிய மேலாதிக்கவாதிகள் கூறியபோது, தீக்குளித்துத் தற்கொலைப் போராட்டம் நடத்தி உயிர் நீத்தவர் தமிழ்நாட்டு ஆசிரியர் வீரப்பன். இவர்கள்தான் ஆசிரிய இனத்தின் முன்னோடிகள். பார்ப்பன நேரு பிறந்த நாள் குழந்தைகள் நாள், பார்ப்பன இராதாகிருட்டிணன் பிறந்த நாள்  ஆசிரியர்  நாள். தமிழர்களுக்கு தன்மான உணர்வு குறைவாக இருப்பதனால் உலக அளவில் மொழிப் போராட்டத்தில் ஆயிரம் பேர்வரை (கணக்கு மறைக்கப்பட்டது) உயிர் நீத்த தமிழரின் ஈக நாள் உலகத் தாய்மொழி நாளாக இடம்பெறவில்லை.  ஆசிரியர்கள் தனக்குத்தானே ஆசிரியர் நாள் என்று பீத்திக்கொள்வது அருவருப்பானது, கேவளமானது.  வளாகத்தில் படித்து முடித்து வெளியே சென்றபின் மாணவர்கள் கொண்டாடும்படியாக நடக்க வேண்டியது ஆசிரியரின் கடமை. சிறந்த மதிப்பெண் பெற வைப்பது கூலிக்கு அடிக்கும் மார் அவ்வளவுதான். மாணவனை  குமுகாய (சமூக ) உணர்வு உள்ளவனாக ஆக்குவதும், இழப்புகளைச் சந்தித்து எதிர் நீச்சல் போடும் திறன் பெற்றவனாக ஆக்குவதும், பள்ளியில் கொடுக்கும் பற்றுமுறிக்கு (பில்) மேல் கட்டணம் பெறும் ஆசிரியர், தலைமை ஆசிரியர்களுக்கு எதிராக நின்று சட்டத்திற்கு உட்பட்டு போராடுகின்ற திறனைக் கற்றுக் கொடுப்பதிலும் ஆசிரியர்கள் முன்னிற்க வேண்டும். மாணவர்கள்  குமுகாய உணர்வு உள்ளவராக வருவதற்கு, முன் சான்றாக ஆசிரியர்கள் நிற்க வேண்டும். மாணவர்களுக்கான உட்கட்டமைப்புகளைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல் பஞ்சப்படிக்காக மட்டுமே போராடும் இழிநிலை ஆசிரியர்களைப் புறக்கணித்து, தூய ஆசிரியர்களைத் தேடிச் செல்லும் மனநிலையை மாணவர்களிடம் தோற்றுவிக்க வேண்டும்.

ஈசங்கரநாராயணன், முதுகலைத் தமிழாசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, நடுக்கல்லூர், திருநெல்வேலி மாவட்டம் 9965868 114

Comments

Popular posts from this blog

தமிழகத்தில் சாதிகள் வரலாறு

ஊடகத்துறை Media

தமிழர்களின் கலை தொகுப்பு - அங்கள பரமேஸ்வரி