மேற்குத் தொடர்ச்சி மலை - திரை விமர்சனம் சினிமா விமர்சனம்

கரு : "மேற்குத்தொடர்ச்சிமலை " பகுதிவாசிகளின் அன்றைய இன்றைய கஷ்ட , நஷ்டங்களே இப்படக்கரு.
கதை: "மேற்குத்தொடர்ச்சிமலை" தமிழக கேரள எல்லையோர மலை பிரதேசத்தில் ஏலக்காய் எஸ்டேட் முதலாளிகளுக்கு ரொம்பவும் விசுவாசமாக வாழ்ந்து மடிந்த தொழிலாளியின் மகன் ரங்கு எனும் ரங்கசாமி. அப்பாவை இழந்து அம்மாவுடன் வசிக்கும் ரங்கு ., அவரது அப்பா மாதிரியே முதலாளி விசுவாசிதான் என்றாலும் ., சொந்தமாக காடு கழனிவாங்கி ., அதில் விவசாயம் பார்க்க வேண்டுமென்ற ஆசையும் கொண்டு நிலம் நீச்சி... வாங்கினால் தான் கல்யாணம் காட்சி என்று வம்பாடுபட்டு உழைக்கிறார். ஆனால், ரங்குவின் நிலம் , நீச்சி ...கனவு விதிவசத்தால் தட்டி தட்டிப் போக ., ஊரும் , உறவும் ., உன் அப்பன் இப்படி நினைத்திருந்தால் நீ ... பிறந்திருக்க முடியுமா.. ? எனக் கேட்டு ., ரங்குவிற்கு உறவுப்பெண் ஈஸ்வரியை திருமணம் செய்துவைத்து சம்சாரியாக்கி., அழகு பார்க்க., குழந்தை குட்டி ... என குடும்பஸ்தனான ரங்கு
தன் ஆசைகனவுப்படி ., சொந்த நிலம் வாங்கி பயிர் செய்து முன்னுக்கு வந்தாரா? அல்லது நல்லவர்கள் போன்ற நயவஞ்சகர்களால் நடு வீதிக்கு வந்தாரா ...? என்பதே ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ படத்தின் கதையும் , களமும்.
காட்சிப்படுத்தல் : நடிகர் விஜய் சேதுபதி., தான் ,நடிக்காமல் தயாரிக்க மட்டும் செய்திட., கதைக்கேற்ற புதுமுகங்கள் ஆண்டனி,
காயத்ரி கிருஷ்ணா ஜோடியுடன் எண்ணற்ற ஏரியவாசிகள் இணைந்து வாழ்த்து காட்டிட., தேனி ஈஸ்வர் ஓளிப்பதிவில், இளையராஜா இசையில், லெனின் பாரதி இயக்கத்தில் உழைக்கும் மக்களின் வாழ்வியல் அனுபவமாக பல்வேறு நாடுகளின் பட விழாக்கள் பலவற்றிலும் பங்கேற்று பரிசுகள் , விருதுகள் பெற்ற பெருமைகள் புடைசூழ இன்று வெளி வந்திருக்கும் "மேற்குத்தொடர்ச்சிமலை."
படத்தில் ., கதையுடன் கம்யூனிஸம் , கேப்டலிசம் , விளை நிலங்களை விழுங்கும் விதை , உரம், வின்ட் மில்லிச விஞ்ஞானம்...என எல்லாவற்றையும் ஹாஸ்யமாகவும்,சுவாரஸ்யமாகவும் காட்சிப்படுத்தி , மிக மிக யதார்த்தமாகவும் பேசியிருக்கிறது மொத்தப்படமும்!!
கதாநாயகர் :கதையின் நாயகர் ரங்கு எனும் ரங்கசாமியாக ஆண்டனி அசத்தல் . ஏற்கனவே இவரை ஒன்றிரண்டு படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் பார்த்திருந்தாலும் இந்தப் படத்தில் கதையின் நாயகராக யதார்த்த நடிப்பில் பின்னி பெடலெடுத்து இருக்கிறார் மனிதர்
கதை நாயகி : ரங்குவின் மனைவி ஈஸ்வரியாக காயத்ரி கிருஷ்ணா., அசல் கிராமத்து பெண்ணாக கலக்கியிருக்கிறார் கலக்கி.
பிற நட்சத்திரங்கள் :ஒரு படத்தின் சிறந்த நடிகர்கள் தேர்வே அப்படம் பாதி வெற்றி பெற்றதற்கு சமம் .... என்று சொல்லுவார்கள். ஆனால், இந்த படத்தில் அதுவே முழு வெற்றியாக அமைந்திருக்கிறது... என்றால் மிகையல்ல .
இப்படத்தில் இடம் பெற்றுள்ள மேற்படி நாயகர் , நாயகி மாதிரியே ., தொழிலாளிகளுக்காக போராடும் கம்யூனிச சகோவாக வரும் அபு வாலாயாங்குளம் , ஏல எஸ்டேட் கொடூர இளம் முதலாளி ரவி யாக ஆறு பாலா , கங்காணி அந்தோணி வாத்தியார் , கணக்குப் பிள்ளை- சுடலை , ஊத்துராசா - ரமேஷ் , வனக்காளி - பாண்டி ,கிறுக்குகிழவி - பாண்டியம்மா , அடிவார டிபன் கடை - சொர்ணம், சுருளி - சுமித் ... உள்ளிட்ட எல்லா பாத்திரங்களிலும் கிட்டத்தட்ட மேற்குத் தொடர்ச்சி மலையில் வாழ்பவர்களை வைத்தே படமாக்கி இருக்கிறார்கள்... என்பது சிறப்பு
இது ,இந்த படத்தில் நடித்த கதாபாத்திரங்கள் அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ... எனும் எண்ணத்தை ரசிகனுக்குள் காட்சிகள் விரியும் ஆரம்ப கட்டத்திலேயே ஏற்படுத்தி விடுகிறது.இதனால் சிறு சிறு கதாபாத்திரங்கள் கூட நம் மனதில்பதிகிறார்கள். ஆக மொத்தத்தில் ,இதில் நடித்த கதாபாத்திரங்கள் அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்... என்று சொல்வதை விட வாழ்ந்திருக்கிறார்கள் என்பதே நிஜம்!
தொழில் நுட்பகலைஞர்கள் : தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு அருமையான ஓவியப்பதிவு .இவரது கேமரா மொத்தமும் யதார்த்தமான பதிவாக படம் முழுக்க ரசிகனை மெய்சிலிர்க்க வைத்திருக்கிறது.
இளையராஜாவின் இசை படத்திற்கு பெரும் பலம். இவரது இசை வழக்கம் போல கிராமிய கதைக்கேற்ற மெல்லிசை மிரட்டல் . "கேட்காத வாத்தியம் கேட்குது ஊரான ஊருக்குள்ள ... "., "அந்தரத்தில் தொங்குதம்மா ஏழை வாழ்ககை....." உள்ளிட்ட பாடல்களும்... படத்திற்கு கூடுதல் பலம் .
பலம் : இயல்பான கதையும் , படத்தில் நடித்திருக்கும் யதார்த்தமான நடிகர்களும்.
பலவீனம் : பெரும்பாலான இடங்களில் வசனங்களில் அந்த ஏரியா மொழி எளிதில் புரியாது இருப்பது பலவீனம் .
இயக்கம் : இயக்குனர் லெனின் பாரதி.,
அன்று, "மேற்குத் தொடர்ச்சி மலை "யின் அடிவாரத்தில் இருந்து மலைக்கு மேல் நடந்தே மக்கள் சென்று வந்த காலம் முதல்., இன்று சாலை போட்டு, சகலவித வாகனங்களும் சென்று வரும் காலம் வரைக்குமான காலகட்டத்து சம்பவங்களை மிக யதார்த்தமாக , அழகாக படமாக்கி இயக்கி இருக்கிறார் .
இப்படத்தை திரையில் பார்க்கும் போது, கதையோடு ஒன்றி பார்ப்பவர்களையும் பயணிக்க வைத்திருக்கிறார். காட்சிக்கு காட்சி ,மேற்குத் தொடர்ச்சி மலையில் நாம் வாழ்ந்தது போல் உணர்வை ஏற்படுத்தி இருக்கிறார் இயக்குனர். .. என்றால் மிகையல்ல!
இப்படத்தை அங்கு வாழ்ந்தவர்கள், வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் பதிவாகத்தான் அணுக முடியும். அந்த ஊர் மக்களின் நேர்மை, ஒருத்தருக்கொருவர் உதவுவது, அவர்களின் உண்மைத் தன்மை , அவர்களது நக்கல் , நையாண்டி ...என சிறந்த அனுபவமாக படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் என்றால் மிகையல்ல!
அவற்றுக்கு உதாரணமாக, ரங்கசாமியின் அம்மாவுக்கு தேங்காய் கொடுத்து விடும் கேரளா பெண்மணி ,"ஒன்னு கழுதை சாகணும் இல்ல நான் சாகனும் .... உனக்கு வயசாச்சு கழுதையை கட்டிக்கிட்டே சாகப்போறே .... எனும் சுமைதூக்கியிடம் மற்றொரு சுமை தூக்கி .,உன் தங்கச்சியை கேட்டுப்பாரு .... " என்பதும் . "ஒப்பன்லாம் இடம் வாங்கணும்னு நினைச்சிருந்தா நீ பொறந்திருப்பியாடா.." ," 3 ஏலக்காய் 300 மல்லிகைப் பூ .....", 'காம' நெடி வசனக்காட்சிகளும்., உள்ளிட்ட கலவையான காட்சிகளை சொல்லலாம்!
பைனல் "பன்ச் " : '‘மேற்குத் தொடர்ச்சி மலை’ - 'ரசிகர்களும் ,ரசித்தால்., வெற்றி மலை!"
======================================================================
"ஏந்தம்பி, எப்பிடி இந்த மலைல தினமும் ஏறி எறங்குறீங்க?"
"என்னணே பண்றது எங்க பொழப்பு அப்பிடி!" இந்த வசனமும், படத்தின் முக்கியமான இடத்தில் வரும் அந்தரத்தில் தொங்குதம்மா பாடலும் போதும் படம் எதை சொல்ல வருகிறது எனப் புரிந்துகொள்ள. படத்தின் இறுதியில் உலகமெங்கும் குறுக்கும் நெடுக்குமாக விரவிக்கிடக்கும் நிலமற்ற உழைக்கும் மக்களுக்கு சமர்ப்பணம் செய்யப்படுகிறது படம். ஆரம்பத்திலிருந்து அது காட்ட நினைப்பதும், சொல்லப் பதைபதைப்பதும் அதைத்தான். முதலில் நன்றி சொல்ல வேண்டியது, இப்படத்தை தயாரிக்க மனமுவந்து வந்த விஜய் சேதுபதிக்குதான். தமிழில் மிக முக்கியமான சினிமாவைத் தயாரித்ததற்கு, வாழ்த்துகளும் அன்பும்.
ரங்கு, வனகாளி, சாக்கோ, பொன்னம்மா, கங்காணி, கிறுக்குக் கிழவி, கேத்ரா, ஈஸ்வரி, ரவி, ஊத்து ராசா, அடிவாரம் பாக்கியம், சுருளி என படம் முழுக்க எத்தனை எத்தனை முகங்கள், அவர்களுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கும் கதைகள் எல்லாமும் நம்மையும் கைபிடித்து மேற்குத் தொடர்ச்சி மலையின் உச்சிக்கும், அடிவாரத்திற்குமாய் பயணிக்கச் செய்கிறது. வழக்கமான படமாக இருந்தால் இன்னது கதை, இன்னது திரைக்கதை, இன்னது வேலைக்காகவில்லை என எதையாவது சொல்ல வேண்டியிருக்கும். இது அப்படியல்ல என்பது மிகப் பெரிய இளைப்பாறலாக இருக்கிறது. அப்படியான படம் ஒன்றை பார்ப்பது, பார்ப்பது மட்டுமல்ல நல்ல சினிமாவுடனான சந்திப்பு என்றுதான் சொல்வேன். ரங்கசாமிக்கு (ஆண்டனி) தான் வசிக்கும் ஊரில் தனக்கு என சொந்தமாக இடம்வேண்டும் என்பதற்காக உழைக்கிறான், எங்ககாலத்துல இந்நேரத்துக்கு நாலு நட போயிட்டு வந்திருப்போம்டா என சுமை தூக்கிச் செல்லும் வனகாளி (பாண்டி) கதாபாத்திரம் அத்தனை சுவாரஸ்யமான ஒன்று. அவர் சொல்லும் ஒரு கதையில் இருக்கும் பெருமிதம், பின்பு ஓரிடத்தில் "எல்லாப்பயலும் மல மாதிரி நம்புனேன், மல மாதிரி நம்புனேன்னு சொல்லுவாய்ங்க, நான் இந்த மலயதான நம்புனேன். என்னையவே ஏச்சுப்புட்டீள்ல" எனக் கலங்குவதுமாக மனதில் நின்றுவிடுகிறார். சகாவு சாக்கோ (அபு வளயாங்குலம்) பேசும் உரிமைகள், அதைத் தட்டிப் பறிக்க நினைக்கும் ரவியின் (ஆறுபாலா) அதிகாரம், நன்றியாய் இருப்பது மாதிரியே மக்களை சுரண்டும் லோகு, அப்பனுக்கு பட்ட கடனை மகனிடமாவது அளித்து நன்றிகாட்ட நினைக்கும் மீரான் என எத்தனை வித மனிதர்கள்.
ரங்கு என்கிற ரங்கசாமியின் கதாபாத்திரத்தை மையமாக வைத்துப் பார்த்தால் ஒரு கதை பிடிபட வாய்ப்பு உண்டு. ஆனால், படம் சொல்ல நினைப்பது எந்த கதையையும் அல்ல. ஏற்ற, இறக்கத்தில் தோளிலும், சமவெளியில் தலையிலும் காலம் முழுக்க வாழ்க்கையிலும் அவர்கள் தூக்கி சுமந்தே ஆகவேண்டிய சுமைகள் பற்றியும், அவர்களின் அறியாமை, சுற்றி நடக்கும் வியாபாரம், அரசியல் பேச நினைக்கிறது படம். நாங்க எல்லாம் எவ்வளவு பாவம் தெரியுமா என்பதாக இல்லாமல், விளிம்பு நிலை மனிதர்கள், கடைநிலை தொழிலாளி என தடிமனான வார்த்தை ஏதும் இல்லாமலே அவற்றைப் புரிய வைப்பது சவாலானது. அவர்களின் இயல்புக்கு நுழைய முற்பட்டதும், சந்தோஷம், சேட்டைகள், எல்லாவற்றையும் கலந்தே சொன்னதும் படத்தின் வலிமை. எளிமையான வசனங்கள் மூலம் அந்த வழக்கு சொற்களையும் அனுமதித்தது யாரின் ஏற்பாடு எனத் தெரியவில்லை. ஊருக்கு ஒருஎட்டு போய் வந்தது போல உணர்வைத் தருகிறது அவர்களின் உரையாடல். வசனகர்த்தா ராசி தங்கதுரைக்கு வாழ்த்துகள்.
படத்தின் நிறைய கதாபாத்திரங்கள் அந்த மண்ணுக்குறியவர்களே என்பதின் அழுத்தம் கதைக்குப் பெரும் வலிமை. எல்லா கதாபாத்திரங்களும் தங்கள் பங்கை நிறைவாக செய்திருக்கிறார்கள். எப்போதும் மென்சோகம் படிந்த முகத்துடன் வந்து, "அந்தா தெரியிது பார் அதான்டா நம்ம நிலம்" என சொல்லும் போது ரங்குவாக நடித்திருக்கும் ஆண்டனியின் முகத்தில் காணும் ஒளியை நல்ல நடிப்பு என்று மட்டும் சொல்லி குறுக்கிவிட முடியாது. அது போலவேதான் ஆறுபாலாவோ, காயத்ரி கிருஷ்ணனோ, வனகாளியாக வந்து மிரட்டும் பாண்டியோ, இப்போ என்னை கிண்டல் பண்ணுங்கடா என்று கெஞ்சும் கங்காணியோ எல்லோரின் நடிப்பும்.
மலையின் எழுச்சியோ, மழையின் வீழ்ச்சியோ, அந்த மனிதர்களின் வாழ்வியலும் அதோடு சார்ந்ததாகத்தான் இருந்தது. அது போலவே தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு உள்ளுக்குள் கலந்திருந்ததை உணர முடிந்தது. அவர்களின் குதூகலமும், வாழ்க்கை பிரட்டும் துன்பமும், நம்பிக்கையும் இசையாக வெளிப்பட்டதில், பல இடங்களில் மௌனத்தை ஒலிக்கவிட்டதில் என கதையுடன் ஒன்றியிருக்கிறது இளையராஜாவின் இசை. குறிப்பாய் அந்தரத்தில் தொங்குதம்மா பாடல் ஒலிக்கும் இடம் வேறுவகை உணர்வு. தேங்கல் ஏதும் இல்லாமல் காசிவிஸ்வநாதனின் படத்தொகுப்பும், படத்தின் உள்ளே எந்த துருத்தலும் இல்லாத ஜெயசந்திரனின் கலை இயக்கமும் வியப்புதான்.
எந்த விதத்திலும் வணிக காரணிகளை உள்ளே சேர்க்காமல், எடுத்துக் கொண்டதை மட்டுமே சொல்லத் துணிந்த இயக்குநர் லெனின் பாரதிக்கு பெரிய நன்றிகளும், வாழ்த்துகளும். பார்த்துக் கொண்டிருப்பதை உணர வைப்பது எல்லோருக்கும் கை கூடிவிடாது. இதில் அது நிகழ்கிறது. நிலத்துக்காக போராடும் ரங்கு முடிவில் சென்று சேரும் இடம், மலையே வாழ்க்கை என வாழும் வனகாளியின் முடிவும் மனதுக்குள் கனம் சேர்க்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலையின் சங்கிலித் தொடர் போன்ற பகுதிகள் எல்லாவற்றுக்குமான பிணைப்பு மனிதர்கள். மேம்போக்கான பார்வையில் இடைவேளைக்குப் பிறகான காட்சிகளில் படம் எங்கோ தொடங்கி விலகுவதாக தோன்றலாம், அந்த வாழ்வியல் அந்நியமாகக் கூட படலாம்.
ஆனால், அவர்களின் உலகை, அவர்களின் பாதிப்புகளை, வாழ்வது உச்சியே என்றாலும் கால் நழுவும் பள்ளத்திற்கு அருகான ஜீவிதம்தான் அவர்களது எனக் காட்டுவதே படம். யாருடைய வாழ்வு என்ன ஆகிறது என எதையும் கணக்கில் கொள்ளாத முரட்டுத்தனமான திட்டங்கள் எதற்கு?, மக்களின் வாழ்வாதாரத்தையே பறிப்பது எப்படி மேம்பாடாகும்? எனவும் கேள்வியை முன் வைக்கிறது படம். சுருக்கமாக சொல்வதென்றால் தவிர்க்கக் கூடாத தமிழ் சினிமா இது.
====================================================================

அன்று, "

சினிமா ஓர் உலகப் பொதுமொழி என்பார்கள். அதில் வெகு சில படங்கள் மட்டுமே நமக்கு ஒரு வாழ்வியல் அனுபவத்தைப் பரிசாக அளிக்கும். படம் முடிந்து வெளியே வரும்போது உள்ளே கனம் அதிகமாகி நம் எடை அதிகரிக்கும். அதன் மாந்தர்களும் நம்மோடு உரையாடிக்கொண்டே நடைபோடுவது போன்ற பிரமை ஏற்படும். 'மேற்குத் தொடர்ச்சி மலை' அப்படியான ஒரு படம்.
உலகமெங்கும் குறுக்கும் நெடுக்குமாக விரவிக்கிடக்கும் அத்தனை உழைக்கும் மக்களுக்கும் ஒரே ஒரு குறிக்கோள்தான் - 'காணி நிலம் வேண்டும், அதில் பாதம் புதைய நடந்து திளைக்க வேண்டும்.' மேற்குத் தொடர்ச்சி மலைச்சாரலில் வசிக்கும் ரெங்கசாமிக்கும் அதுதான் குறிக்கோள். விடியற்காலை 4 மணிக்கு எழுந்து விடுவிடுவென மலையேறி மூட்டை ஏலக்காயை நாலு நடை சுமந்து வந்து சேர்த்து கிடைக்கும் பணத்தில்தான் தன் கனவை நிறைவேற்ற வேண்டும். ஆசையைத்தூண்டி அருகில் வந்தவுடன் மறைந்துபோகும் பாலை கானல் நீர்போல ஒவ்வொரு தடவையும் அவரின் லட்சியம் நிறைவேறாமல் தள்ளிக்கொண்டே போகிறது. அது இறுதியாக ஈடேறியதா இல்லையா என்பதுதான் கதை.
இதுமட்டும்தான் கதையா என்றால்... இல்லை. மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒவ்வொரு முகடும் ஆயிரக்கணக்கான கதைகளைத் தாங்கி நிற்பதைப்போல இந்தப் படமும் ஏராளமான கதைகளைப் புதைத்து வைத்திருக்கிறது. படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் தேர்ந்த கதைசொல்லிகளாக இருக்கிறார்கள். வீம்பாக இளவட்டங்களுடன் போட்டிப் போட்டு மூட்டை தூக்கும் வனகாளியிடம் ஒரு பெரு மழைநாளில் மலையேறிய கதை இருக்கிறது. மூளை பிசகி மரங்களுக்கு ஊடாகப் புலம்பித் திரியும் கிறுக்குக் கிழவியிடம் யானைகள் பற்றிய யாருக்கும் தெரியாத ஒரு ரகசியமிருக்கிறது. தினமும் எஸ்டேட்டுக்கு சுமை ஏற்றிச் செல்லும் கிழவரின் பொக்கைவாய் பற்களுக்கிடையில் கழுதைக்கும் மலைப்பாதைக்கும் இடையேயான ஒரு காதல்கதை இருக்கிறது. இந்த மண்ணும் மலையும் மாந்தர்களும்தான் மேற்குத் தொடர்ச்சிமலையை மறக்க முடியாத அனுபவமாக்குகிறார்கள்.
ரெங்கசாமியாக நடித்திருக்கும் ஆண்டனிக்கு இந்தப் படம் பெருமைமிகு விசிட்டிங் கார்டு. கொஞ்ச நாள்களாக நிலவிவந்த யதார்த்த கிராமத்து ஹீரோவுக்கான வெற்றிடத்தை இயல்பாக நிரப்புகிறார். அவர் தவிர, படத்தில் முகம்காட்டும் அத்தனை பேரும் ஹீரோக்கள்தான். 'என்னா மாமா' என வெட்கத்தில் சிணுங்கும் காயத்ரி, 'இதே சும்மாவிடக்கூடாது சகாவே' என நெஞ்சை நிமிர்த்தும் கம்யூனிஸ்ட் சாக்கோ, 'என் புருஷன் பேரெல்லாம் வாயால சொல்ல மாட்டேன்' என அந்த வயதிலும் தயங்கும் பொன்னம்மா, 'இன்னிக்குத்தான்டா உனக்காக நீ மூட்டை தூக்குற' என நெகிழும் கங்காணி... இப்படி எக்கச்சக்கமான பேர் நகமும் சதையுமாக மலைப்புறத்து வாழ்வியலை நம் கண்முன் நிறுத்துகிறார்கள். டைட்டில் கார்டில் கோடங்கிபட்டி பொண்ணுத்தாயி, தேவாரம் சொர்ணம் என வாசிப்பதற்கே வித்தியாசமாக இருக்கிறது. அநேகமாக அதிக ஹீரோக்கள் நடித்த படம் இதுவாகத்தான் இருக்கும்.
தேனி ஈஸ்வர் குறிஞ்சி பூப்பதுபோலத்தான் படங்கள் செய்வார். அதிலும் குறிஞ்சிப் பரப்பென்றால் உடல், பொருள், ஆவி எல்லாவற்றையும் பனியில் கரையக் கொடுத்துவிடுவார்போல! ஆரம்பக் காட்சிகளுக்குப் பின் கதை நிஜத்தில் நம்மைச் சுற்றி நடப்பதுபோலவே இருக்கிறது. அவ்வளவு தத்ரூபம்! சாக்கோவை பார்க்கத் தூரத்து மரத்திலிருந்து ஒருவர் கயிறுவழியே இறங்கி ஆளுயுர புதர்களுக்கு மத்தியில் நடந்து மேடேறும் அந்த ஒரு காட்சியில் அவ்வளவு அழுத்தம். படம் முழுக்க இப்படியான காட்சிகள் நிறைய இருக்கின்றன. 'பேரன்புகள்' தேனி ஈஸ்வர்!
கதையின் கனத்தை மேலும் மேலும் ஏற்றுவதில் வெற்றிகொள்கிறது இசைஞானியின் இசை. சிறுதெய்வமான சாத்தானின் கோயிலில் நம் நரம்புகளில் தொற்றிக்கொள்ளும் அவரின் விரல்வித்தை இறுதியாக முதுகு காட்டி அமர்ந்திருக்கும் ரெங்கசாமியிடமிருந்து விடைபெறும்போது பூதாகரமாக ஆட்கொள்கிறது. ஒளிப்பதிவுக்கும் இசைக்கும் தன்னாலான நியாயம் செய்திருக்கிறார் எடிட்டர் காசிவிஸ்வநாதன். இத்தனை பேரையும் ஒன்றிணைத்து ஒரு நல்ல கதையைத் தயாரித்தமைக்காகத் தயாரிப்பாளர் விஜய்சேதுபதிக்கு தேங்க் யூ!
பெயருக்கேற்றாற்போல கதைகளினூடே ஒருதலைமுறையின் அரசியல் பேசுகிறார் இயக்குநர் லெனின் பாரதி. முன்னேறத் துடிக்கும் ஒடுக்கப்பட்ட பூர்வகுடி ஒரு பெரும் போராட்டத்துக்குப் பின் தொடங்கிய இடத்திலேயே வந்து நிற்க, பிழைக்க வந்த லோகு சுயநல முதலாளியாக ஆதிக்கம் செலுத்தும் வர்க்க அரசியல் முகத்திலறைகிறது. சாலைகள்தான் காட்டை அழிக்கும் முதல் வழி என்பதே நிதர்சனம். காட்டை மட்டுமல்ல, அதன் மாந்தர்களையும் சாலைகள் என்ன செய்யும் என சாக்கோ வழியாகப் பேசியிருக்கிறார். தொழிற்சங்கங்களை அழிக்க வஞ்சகமாகத் திட்டம் போட்டுவிட்டு, 'இப்ப எந்தா செய்யும் சகாவே?' என நக்கலாக சிரிக்கும் முதலாளித்துவத்தின் கோர முகமும் இந்தப் படத்தில் பல்லிளிக்கிறது.
இதைத்தாண்டி படத்தில் பாராட்ட ஒரு முக்கிய விஷயமிருக்கிறது. அது, எளியவர்களின் 'பேரன்பினாலான உலகம். வஞ்சனையில்லாமல் வாஞ்சையாக ஒருவருக்கொருவர் கைகொடுத்து தூக்கிவிடுவதும், மண்ணின் மணம் வீசும் நையாண்டியால் ஒருவரை ஒருவர் வாரிவிடுவதுமான அழகியல் நிச்சயம் இன்னொரு முறை நம்மை படம் பார்க்கவைக்கும்.
குறைகள் எனக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் தோன்றும் ஒரே விஷயம், ஆங்காங்கே தென்படும் செயற்கைத்தன்மை. ஒன்றிரண்டு கேரக்டர்கள் தவிர மற்றவற்றில் கேமராவுக்குப் பரிச்சயம் இல்லாதவர்கள் நடித்திருப்பதால் இந்த நாடகத்தன்மை என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. ’கமர்ஷியல் படங்களுக்கான கூறுகள் மிஸ்ஸாவது குறைதானே!’ எனச் சிலருக்குத் தோன்றலாம். ஆனால், இது நம்மிடையே உலாவும் மனிதர்களின் நிஜ வாழ்வியல். அதனால் மற்றுமொரு சினிமாவாக இதை எடைபோடாதிருத்தல் நலம்!
நாம் எல்லாருமே மேற்குத் தொடர்ச்சிமலைத் தொடரை ஒருமுறையாவது கடந்து வந்திருப்போம். குளுமையும் கொண்டாட்டமுமான கனவுப் பிரதேசமாகவே அதைப் பார்த்துப் போயிருப்போம். அடுத்த முறை அம்மலைத் தொடரைக் கடக்கும்போது கூர்ந்து கவனியுங்கள். ரத்தம் கக்கும் குரலில் வனகாளியின் இருமலும், 'எல்லாத்தையும் கொன்னுப்போட்ருவேன்' என்ற கிறுக்குக்கிழவியின் அலறலும் தூரத்து மரத்தில் சடசடத்துப் பறக்கும் ரெங்கசாமியின் வேட்டியும் உங்களுக்குத் தென்படக்கூடும். நிஜத்தில் அதுவும்தான் 'மேற்குத் தொடர்ச்சி மலை'!
Comments
Post a Comment