கடைசியா பராசக்தி கதையும் தலைவர் எழுதியது இல்லையா ?

கடைசியா  பராசக்தி கதையும்  தலைவர் எழுதியது இல்லையா ?
=-=-=

பராசக்தி பட வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த நேரம் அது ஜீவாவைக் காண நாலைந்து பேர் வந்தார்கள். வந்தவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஜீவா எழுதிய ஒரு சிறுகதையை பழுப்பேறிய அந்தப் பழைய பத்திரிக்கையுடன் கொண்டு வந்திருந்தனர். அந்தக் கதையின் சாரமும், நாடு கடந்த தமிழ்க் குடும்பம் அங்கு சிதறுண்டு போய் விடுகிறது. மூன்று சகோதரர்களும், ஒரு சகோதரியும் நாடு திரும்பிய பின் அலைவதை மையமாகக் கொண்ட கதைதான் சாயல் இருக்கிறது. பெயர்கள் மாறியிருக்கின்றன.
வந்தவரில் ஒருவர் அதை வைத்து ஜீவா வழக்குப் போடலாம் என்றும் வெற்றி கிட்டும் என்றார்.
இன்னொருவர் படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதால் தயாரிப்பாளர் வழக்கைத் தவிர்க்க சமரசத்துக்கு வருவார். பணமும் தரக்கூடும் என்றார்.
வழக்கா எதற்கு என்றார் ஜீவா. உங்கள் கதையை திருடியிருக்கிறார்களே சும்மா விடலாமா என்று பொரிந்து தள்ளினார்.
இது நீங்கள் சொல்கிறபடி 20, 25 வருடங்களுக்கு முன்பு நான் எழுதியிருக்கிறேன். எனக்கே மறந்து போய்விட்டது. இது நாங்கள் பெரியார் வீட்டில் தங்கியிருந்து சமதர்மப் பகுத்தறிவு பிரச்சாரம் செய்த காலம். அதுசமயம் பொழுது போக்காக எதையாவது எழுதிக்கொண்டே இருப்போம். அந்தக் காலத்தில் எழுதிய கதைதான் இது. இதை எதற்கு எழுதினேன். மக்கள் படிக்க வேண்டும் என்பதற்காகத்தானே. அப்போது அதை நூறு பேர் படித்திருக்கலாம். எழுதியவனும் மறந்துவிட்டேன். படித்தவர்களும் மறந்திருப்பார்கள்.
இப்பொழுது அதை யாரோ ஒருவர் தேடிப் பிடித்து, தூசித் தட்டி, புதுப்பித்து, பல லட்சம் பேர் பார்க்கிறார் போல படமாக்கிவிட்டார்கள் என்றால் அவர்களுக்கு மாலையல்லவா போட வேண்டும். நான் முப்பது வருடங்களுக்கு முன்பு ஒரு கத்தி செய்து வீட்டில் ஓர் அடுக்கில் போட்டு விட்டேன்.
அது துருப்பிடித்து இற்றுப் போயிருக்கும். அதை என் மகனோ, பேரனோ எடுத்து தீட்டி பளபளவென்று ஆக்கி பயன் படுத்தினால் மகிழ்ச்சி அடைவதா ? தட்டிப் பறிப்பதா ?
வழக்குப் போட முடியாது. விழா நடத்தி வாழ்த்துச் சொல்ல வேண்டும். இதில் திமுக, கருணாநிதி என்பதால் வழக்குப் போடு உடன்படுவேன் என எதிர்பார்க்காதீர்கள். விட்டுவிடுங்கள் என்றார் ஜீவா.
#படித்தது.
இன்று பொதுவுடைமைவாதி ஜீவாவின் பிறந்த தினம்.
#ஜீவா #

Comments

Popular posts from this blog

தமிழகத்தில் சாதிகள் வரலாறு

ஊடகத்துறை Media

தமிழர்களின் கலை தொகுப்பு - அங்கள பரமேஸ்வரி