மேற்குத் தொடர்ச்சி மலை - திரை விமர்சனம் சினிமா விமர்சனம்
மேற்குத் தொடர்ச்சி மலை - திரை விமர்சனம் சினிமா விமர்சனம் கரு : "மேற்குத்தொடர்ச்சிமலை " பகுதிவாசிகளின் அன்றைய இன்றைய கஷ்ட , நஷ்டங்களே இப்படக்கரு. கதை: "மேற்குத்தொடர்ச்சிமலை" தமிழக கேரள எல்லையோர மலை பிரதேசத்தில் ஏலக்காய் எஸ்டேட் முதலாளிகளுக்கு ரொம்பவும் விசுவாசமாக வாழ்ந்து மடிந்த தொழிலாளியின் மகன் ரங்கு எனும் ரங்கசாமி. அப்பாவை இழந்து அம்மாவுடன் வசிக்கும் ரங்கு ., அவரது அப்பா மாதிரியே முதலாளி விசுவாசிதான் என்றாலும் ., சொந்தமாக காடு கழனிவாங்கி ., அதில் விவசாயம் பார்க்க வேண்டுமென்ற ஆசையும் கொண்டு நிலம் நீச்சி... வாங்கினால் தான் கல்யாணம் காட்சி என்று வம்பாடுபட்டு உழைக்கிறார். ஆனால், ரங்குவின் நிலம் , நீச்சி ...கனவு விதிவசத்தால் தட்டி தட்டிப் போக ., ஊரும் , உறவும் ., உன் அப்பன் இப்படி நினைத்திருந்தால் நீ ... பிறந்திருக்க முடியுமா.. ? எனக் கேட்டு ., ரங்குவிற்கு உறவுப்பெண் ஈஸ்வரியை திருமணம் செய்துவைத்து சம்சாரியாக்கி., அழகு பார்க்க., குழந்தை குட்டி ... என குடும்பஸ்தனான ரங்கு தன் ஆசைகனவுப்படி ., சொந்த நிலம் வாங்கி பயிர் செய்து முன்னுக்கு வந்தாரா? அல்லது நல்லவர்கள் போன்...