பழைய வரலாறு தெரிந்து கொள்ளுவோமா

பழைய வரலாறு தெரிந்து கொள்ளுவோமா

செய்தி :- மும்பை திராவிடர் கழக , திரு. கண்ணன் 

முதல் இட ஒதுக்கீடு..

டாக்டர் சுப்பராயன் அமைச்சரவையில் இருந்த, முத்தையா (முதலியார்) 1928 அக்டோபர் மாதத்தில் தனது பத்திரப் பதிவு இலாகாவில் ஆட்களைத் தேர்வு செய்யும் போது கீழ் கண்ட விகிதத்தில் இருக்க வேண்டும் என சட்டம் இயற்றினார்.. 

இது தான் அதிகாரபூர்வ முதல் இடஒதுக்கீடு.. 


அதன்படி, வேலைக்கு தேர்வு செய்யும் ஒவ்வொரு 12 பேரிலும்,


பார்ப்பனரல்லாத இந்துக்கள் -5

பார்ப்பனர்கள்  -2

முகமதியர்கள்  -2

ஐரோப்பிய ஆங்கில, இந்திய கிறிஸ்தவர்  -2
தாழ்த்தப்பட்டவர்கள்               -1

ஆக, -12

எவ்வளவு பேர் தேர்ந்தெடுக்கப் பட்டாலும் இந்த முறை தான் பின்பற்றப்பட வேண்டும் என்பது விதியாயிற்று.. இது பின்னர் மாகாண அரசாங்கத்தின் அனைத்து துறைகளுக்கும் விரிவு படுத்தப்பட்டது..  "சுதேசமித்தரன் பத்திரிக்கை" 8.11.1928 ல், முத்தையா (முதலியார்) அக்கிரமம் செய்து விட்டார்.

 இது சட்ட விரோதம், வகுப்புப் பித்தம் தலைக்கேறிவிட்டதா? என்று எழுதியது.. என்பது உங்களுக்கு தெரியுமா?

Comments

Popular posts from this blog

தமிழகத்தில் சாதிகள் வரலாறு

ஊடகத்துறை Media

தமிழர்களின் கலை தொகுப்பு - அங்கள பரமேஸ்வரி