பிராமணர், வெள்ளாளர்களை எதிர்த்த " வெங்கடாசல நாயகர் "

பிராமணர், வெள்ளாளர்களை எதிர்த்த " வெங்கடாசல நாயகர் "

நாத்திகம், சுயமரியாதை போன்ற கருத்துகளை தமிழ்நாட்டில் முதன்முதலில் உருவாக்கியவர் ,1799 ஆம் ஆண்டில் பிறந்தவராகக் கருதப்படும் அத்திப்பாக்கம் வெங்கடாசல நாயகர் தான் தந்தை பெரியாருக்கு வழிகாட்டியாக இருந்தவர் ஆகும்.


காலா படத்தில் ரஜினிகாந்தின் பாத்திரம் நில உரிமையை காப்பாற்றுவதாக காட்டப்படும். ஆனால், உண்மையாகவே வன்னியர்களின் பூர்வீக நில உரிமையை காப்பாற்றுவதற்காக பெரும்பாடு பட்டவர் அத்திப்பாக்கம் வெங்கடாசல நாயகர் ஆகும். 


வட தமிழ்நாட்டில் மன்னவேடு என்கிற பெயரில் பெரும்பாலான கிராமங்கள், அந்த கிராமங்களில் வசித்த வன்னியர்களின் சொத்தாக இருந்தது. ஆங்கிலேயே ஆட்சியாளர்கள் பட்டா முறையை கொண்டுவந்த போது, அவர்களுக்கு நெருக்கமாக இருந்தவர்கள் - பிராமணர், வெள்ளாளர், நாயுடு, ரெட்டி சமூகத்தவர்களின் பெயர்களில் இந்த நிலங்களை மாற்றி எழுதிக்கொண்டனர் என குற்றம் சாட்டினார் அத்திப்பாக்கம் வெங்கடாசல நாயகர். 


இதனை சுட்டிக்காட்டி 1872-ல் "பாயக்காரிகளுக்கும் மிராசுதாரர்களுக்கும் உண்டாகியிருக்கிற விவாதம்" என்கிற நூலை அவர் எழுதியுள்ளார், அவரது 1882-க்கு பின்னர் வந்த கட்டுரைகள் 'பார்ப்பாரும் வெளாளரும் பறித்துக்கொண்ட வன்னியரின் மன்னவேடு ஊர்கள்' என்கிற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது.


இவ்வாறு நில உரிமைக்காக பெரும் போராட்டத்தை தனிமனிதராக நடத்தியவர் அத்திப்பாக்கம் வெங்கடாசல நாயகர். லண்டனில் வெளிவந்த ஆங்கில பத்திரிகைகளில் இதனை செய்தியாக வெளியிட செய்து, பிரிட்டிஷ் மகாராணியே விசாரணைக் குழுவை அனுப்பும் அளவுக்கு போராடினார் அவர். ஆனால், விசாரணைக்கு முதல் நாள் கூத்து பார்த்து, குடியில் மூழ்கி, அக்காலத்திலேயே வன்னியர்கள் சாட்சி சொல்லவராத கொடுமையும் நடந்தது. (அத்திப்பாக்கம் வெங்கடாசல நாயகரின் போராட்டம் - வன்னியர்களின் ஆதரவு இல்லாததால் தோல்வியில் முடிந்தது).


தகவல் :- இணையத்தளம்

Comments

  1. Font colour is not good... unable to read it... Please change the colour

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தமிழகத்தில் சாதிகள் வரலாறு

ஊடகத்துறை Media

தமிழர்களின் கலை தொகுப்பு - அங்கள பரமேஸ்வரி