ஏடிஎம் மிஷினில் பணம் இல்லாமல் இருப்பதும் ஒரு வகையான சேவை குறைபாடு தான்..
ஏடிஎம் மிஷினில் பணம் இல்லாமல் இருப்பதும் ஒரு வகையான சேவை குறைபாடு தான்..
இதற்கும் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யலாம்.. சமீபத்தில் ராய்ப்பூர் நுகர்வோர் நீதிமன்றம் ஏடிஎம்-இல் போதிய பணம் இருப்பு வைக்காததற்காக SBI வங்கிக்கு ரூ.2,500/- அபராதம் விதித்துள்ளது.. மேலும் குறைந்தபட்ச இருப்பு தொகை இல்லாததற்காக வாடிக்கையாளர்களுக்கு வங்கிகளால் அபராதம் விதிக்கப்படும்போது, வங்கிகளும் போதிய இருப்புத் தொகையை ஏடிஎம் மிஷினில் வைத்திருக்கவில்லை என்றால் அபராதம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளது...
நீங்கள் எந்த வங்கியில் கணக்கு வைத்திருந்தாலும், நீங்கள் உபயோகிக்கும் ஏடிஎம் மிஷின் எந்த வங்கியை சார்ந்ததோ அதன் மீதே வழக்கு தொடுக்கலாம்..
எடுத்துக்காட்டாக, நீங்கள் இந்தியன் வங்கியில் கணக்கு வைத்துள்ளீர்கள்.. ஆக்சிஸ் வங்கியின் ஏடிஎம் மிஷினில் பணம் எடுக்க முயற்சிக்கிறீர்கள்.. ஆனால் போதிய பணம் ஏடிஎம் மிஷினில் இல்லை.. இந்த நிலையில் நீங்கள் ஆக்சிஸ் வங்கியின் மீதே சேவை குறைபாட்டிற்காக வழக்கு தாக்கல் செய்யலாம்... ஆக்சிஸ் வங்கி, இவர் எனது வாடிக்கையாளர் இல்லை என்று கூற முடியாது.. காரணம், நீங்கள் அந்த வங்கியின் ஏடிஎம் மிஷினை பயன்படுத்திய போதே அதன் சேவையை பெறவும் உரிமை கொண்டுள்ளீர்கள்...
எனவே அடுத்த டீமானிடிசேஷன் வந்தால் வங்கிகளை வச்சு செய்யலாம்...
தகவல் உதவி: Nambi Gautham
அப்படியா? Prasanna Kumar Sundar
Source Face book Raja melaiyur
Comments
Post a Comment