தாட்கோ கடனுதவி

தாட்கோ கடனுதவி.
"தாட்கோ" மூலம் SC/ST மக்களுக்கு சுயமாக தொழில் தொடங்க ஒரு குடும்பத்திற்கு ரூபாய்.7,50,000 வரை 30% மானியத்துடன் கூடிய தனிநபருக்கான கடனுதவி அளிக்கப்படுகிறது. இண்டர்நெட் மூலமாக விண்ணப்பிக்க சொல்லியிருப்பதால் பெரும்பான்மையான SC/ST மக்களுக்கு இந்த செய்தி போய் சேரவில்லை எனவும் விண்ணப்பித்தலில் வழிமுறை தெரியவில்லை என்பதாலும் தகுதியுடைய பலர் விண்ணப்பிக்காமல் விட்டுவிடுகின்றனர்.
அரசு ஒதுக்கும் பணத்தை கொஞ்சம்கூட மீதிவைக்காமல் அனைவரும் விண்ணப்பித்து “கடைசிவரை முயற்சிசெய்து” பயனடையுங்கள்.
எனவே தகுதியுள்ள 55 வயதிற்கு உட்பட்ட அனைத்து SC/ST மக்களும் விண்ணப்பித்து பலனை அடையும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தேவையான ஆவணங்கள்:
1. ஒரு போட்டோ
2. ஆதார் அட்டை
3. குடும்ப அட்டை
4. வாக்காளர் அட்டை
5. சாதி சான்றிதழ்
6. வருமான சான்றிதழ் (குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 1 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்)
7. கல்வி சான்றிதழ் (படிக்காதவர்களும் விண்ணப்பிக்கலாம்)
8. ஓட்டுநர் உரிமம். பேட்ஜ் அவசியம் ( இது வாகன கடன் விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டும்)
9. கொட்டேஷன்
10. திட்ட அறிக்கை
இவை அனைத்து சான்றிதழ்களையும் ஸ்கேன் செய்து அப்லோட் செய்ய வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி என்று ஏதுமில்லை. எப்போது வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்.

Comments

Popular posts from this blog

தமிழகத்தில் சாதிகள் வரலாறு

ஊடகத்துறை Media

தமிழர்களின் கலை தொகுப்பு - அங்கள பரமேஸ்வரி